Thursday, August 18, 2005

ஒரு கல்லூரியின் கலைவிழா

பல்கலைகழகத்தில் நடைபெற்றது கல்லூரியின் கலைவிழா-

கலர்கலராய் உடையணிந்து ...
ஆங்காங்கே அழகாக மிக அழகாக திரைச்சீலைகள்
( ஹைய்யா மாணவிகள்னு சொல்வேன்னு பார்த்தீங்களா)..

மேக்கப் எல்லாம் முடிந்தது ( நிலவுக்கு எதுக்குப்பா மேக்கப்?)

"இப்பொழுது சதக்கத்துல்லா அப்பா கல்லூரி" - மைக்கில் அறிவிப்பு வருகிறது..

கைதட்டல் பலமாய் கேட்கிறது ( அதாங்க எங்க சார்பா மத்த காலேஜ் பசங்களையும் கூட்டிவந்தோம்ல)


கலைநிகழ்ச்சி ஆரம்பிக்கிறது


அரியணையில் யாருப்பா அது அட கிறுக்கன் பிஏ லிட் மாணவன் ராஜா

ராஜா சப்தமிடுகிறான்.

"அழைத்து வாருங்கள் அந்த திருடனை"

கைகள் கட்டியபடி பராசக்தி சிவாஜியின் தோரணையில் காதரும் சுடலையும் ஒரு மாணவனை இழுத்து வருகிறார்கள். யாருப்பா அது அட நான்

"அழைத்து வரவில்லை மன்னா திருத்திக்கொள்ளுங்கள் இழுத்து வந்துள்ளார்கள் "- நான்

"நீ இந்த தடவை அரியர்ஸ் வைக்கவில்லை என உம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
ஒத்துக்கொள்கிறாயா.."
- ராஜா

"என்மீது குற்றமில்லை..என் பிட்டின் குற்றம் அது".. - நான்

"மடையா திமிராக பேசாதே பிட்டை தூக்கிலிட முடியுமா?..
உனக்குதான் தூக்கு தண்டனை ..சொல் உன் கடைசி ஆசை என்ன? - "
ராஜா


"என் கடைசி ஆசை எனக்கு திருமணம் நடக்க வேண்டும்; மன்னா "- நான்

"சாகற நேரத்தில கூட திமிரா உனக்கு சரி சரி ஏற்றுக்கொள்கிறோம் ..இதோ இந்தக்கூட்டத்திலிருந்து யாரையாவது தேர்ந்தெடுத்துக்கொள் "- என்று கூட்டமாய் அமர்ந்திருந்த மாணவிகளை பார்த்து கைகாட்டுகிறான்

(மாணவிகள் மத்தியில் சலசலப்பு )

நான் மேடையின் நுனிக்குச் சென்று மாணவிகளின் கூட்டத்தை அங்கும் இங்கும் தேடும் சாக்கில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

("அய்யோ நம்மள கைகாட்டிருவானோ "என்ற பயத்தில் ஒவ்வொரு மாணவிகளும் பயத்தில்
முகம் வெளிறிக்கொண்டிருந்தார்கள்)

( "இதான் சாக்குன்னு பார்த்துக்கிட்டே இருக்கான் பாரேன் "- கூட்டத்திலிருந்து கமெண்ட்ஸ்)


நான் மீண்டும் மன்னர் அரியணையில் மூக்கை நோண்டிக்கொண்டிருந்த ராஜாவை நோக்கி செல்கிறேன்.

"என்ன யாரையாவது தேரந்தெடுத்துவிட்டாயா ? "- ராஜா

"இல்லை மன்னா என்னை சீக்கிரம் தூக்கில் இட்டு விடுங்கள்"

( அவ்வளவுதான் மாணவர்கள் பக்கத்தில் இருந்து விசில் - கைதட்டல்கள் பறந்தன.. மாணவிகள் முகம்தான் பாவம் வெளிறிப்போய்விட்டது )


-ரசிகவ் ஞானியார்-

3 comments:

ஏஜண்ட் NJ said...

லொள்ளுத் திலகமே... :-))

ஒருவேளை அதெல்லாம்
மேக்கப் இல்லாத நிலவுகளோ!!

கலை said...

நல்லா இருக்கு. லொள்ளுத்தான் கொஞ்சம் கூடிப்போச்சு. :)

பத்ம ப்ரியா said...

//(மாணவிகள் மத்தியில் சலசலப்பு )

நான் மேடையின் நுனிக்குச் சென்று மாணவிகளின் கூட்டத்தை அங்கும் இங்கும் தேடும் சாக்கில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

("அய்யோ நம்மள கைகாட்டிருவானோ "என்ற பயத்தில் ஒவ்வொரு மாணவிகளும் பயத்தில்
முகம் வெளிறிக்கொண்டிருந்தார்கள்//

நீங்கள் பார்த்த பார்வையிலேயே அனைத்து மாணவிகளும் செத்து ஸ்வர்கம் போயிருப்பார்கள்.. அதை புரிந்து கொண்ட நீங்கள் உடனே உங்களை தூக்கில் இட சொல்லிவிட்டீர்கள்..சரியா

தேன் கூடு