மாடிவீட்டுப் பாடையிலும்..
மரித்திருக்கின்றோம்!
ஏழை வீட்டுத் திருமணத்திலும்..
சிரித்திருக்கின்றோம்!
மலர்கள் சாதி என்றாலும்..
மனிதநேயம் உண்டு!
நல்லவேளை!
மனிதசாதியாய்
பிறக்கவில்லை!
------
வந்தர்க்கெல்லாம் ..
மணம் வீசுவோம்!
வண்டுகளுக்கு மட்டும்..
முந்தானை விரிப்போம்!
------
தாசிகளின் கூந்தலிலும்
தவமிருக்கும் எங்களுக்கு
விதவைக்கு மட்டும்..
விதிவிலக்கு ஏனோ..?
------
அரசியல் மாலைகளில்
ஆணவப்படுவதை விட..
ஆண்டவச் சன்னிதானத்தில்
அடிமைப்படவே விரும்புகிறோம்!
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
6 comments:
//தாசிகளின் கூந்தலிலும்
தவமிருக்கும் எங்களுக்கு
விதவைக்கு மட்டும்..
விதிவிலக்கு ஏனோ..?//
அருமையான வரிகள் .
உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்து வருகிறேன் ரசிகவ் ஞானியார் மிக அருமையாக உள்ளது..
உங்களுக்கு "வலைக்கவி" என்ற பட்டத்தை வழங்குகிறேன் :)
அப்பாடா, இந்த வாரத்துக்கான பட்டமளிப்பு கோட்டா முடிஞ்சு போச்சு! :)
//தாசிகளின் கூந்தலிலும்
தவமிருக்கும் எங்களுக்கு
விதவைக்கு மட்டும்..
விதிவிலக்கு ஏனோ..//
Super!!!
Thara.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
ஒரு சிறு முக்கியமற்ற அறிவிப்பு
தமிழ்மணம் சம்பந்தபட்ட நிரல்களை என் பதிவிலிருந்து நீக்கியிருக்கிறேன். காரணம் அவர்கள் என் பதிவை நானாகவே நீக்காவிட்டால், தனி விளக்கம் கொடுத்து நீக்க வேண்டிவரும். இதுவரை நான் எழுதியவை அர்த்தமின்றி போக வாய்ப்புள்ளது.
இந்த பதிவு இனி தமிழ்மணத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது தமிழ்மண நிர்வாகிகளைப் பொறுத்தது. அதே சமயம் என் பதிவில் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ள சில முல்லாக்களின் பதிவையும் நீக்க வேண்டும். நான் எழுதுவதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் எனக்கு எதிராக பின்னூட்டமிட்டு வருவதே இவர்களின் பழக்கமாக இருக்கிறது. இது போன்ற பதிவுகள் தேவையா?
அதே போல யாரெல்லாம் இந்த பதிவை தங்களுடைய பதிவுகளில் இணைப்பு கொடுக்கிறார்களோ அது அவரவர் விருப்பம். அவர்களது பதிவின் முகவரி இந்த பதிவில் இருக்கலாமா என்பது பற்றி பின்னூட்டத்தில் குறிப்பெழுதினால், அதனை இணைக்கிறேன். இது ஒரு ரெசிபுரோக்கல் மற்றும் வல்காரிட்டி இன் டினமினேசன் அடிப்படையில் செய்கிறேன்.
நேசகுமார், ஐனோமினொ என்ற பெயரிலும் நான் எழுதிவருவதால் என்னமோபோ என்ற என்பதிவை தொடர்வதில் பல தொழில்நுட்ப சிக்கலையும் மன உளைச்சலையும் சந்திக்கிறேன்.இந்த பதிவை எதிர்த்து எழுதுபவர்களது இணைய முகவரியை இந்த பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். (உதாரணத்துக்கு அபு முஹை, நல்லடியார், இறைநேசன், அப்துல் குத்தூஸ், அபு அதில் ஆசாத்). கொடுப்பதன் ஒரே காரணம், நான் எதனை எதிர்க்கிறேன் என்பதும், நான் எதிர்க்கும் விஷயத்தை முழுமையாக இந்த பதிவின் வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும். அபுமுஹை, நல்லடியார் போன்றோர் என்ன எழுதுகிறார்கள் என்பதை நன்றாக முழுமையாக படித்து விளங்கிக்கொண்டு இந்த என்னமோபோ பதிவை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்களது வார்த்தைகளை நான் திரிக்கிறேன் என்று வாசகர்கள் கருதினால், அதனைப் பற்றி எழுத அது வசதியாக இருக்கும்.
நான் இந்த முடிவை எடுக்கக் காரணம், இந்து மதத்தில் இருந்து கொண்டு, இஸ்லாத்தை மட்டும் திட்டித் தீர்ப்பதால் பிராமனர்கள், எந்த சிரமமும் இன்றி வருணாசிரமத்தை தினிக்கிறார்கள்.காஞ்சி சங்கராச்சாரியின் வீழ்ச்சிக்கு பின்னும் பிராமனீயம் ஒழியாது என நேசகுமாராகிய நான் கருதுவதால் பல்சுவை விசயங்கள் மட்டும் இனி எழுதப்போகிறேன். ஜெயமோகனை மதிக்கிறேன். அதுவும் என் ஊர்க்காரன் என்பதால்.
புலிப்பாண்டியும் நானும் சேர்ந்துதான் இதுவரை எழுதி வந்தோம்.இதற்கான நிதியுதவிகளை நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நாகர்கோவில் RSS மூலம் ஏற்பாடு செய்திருந்தார். தற்போது அவரே எழுத ஆரம்பித்து விட்டதால் அத்தகைய உதவிகளை எதிர் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆதாயம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனால்தான் புலிப்பாண்டியை தவிர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் என் நிலையை புரிந்து கொள்ளவில்லை.
மற்றபடி, இந்த பதிவை படிப்பவர்களுக்கு, இந்த பதிவை படிக்க நான் கொடுக்கும் கஷ்டத்தை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்மணம் என்ற ஒரே இடத்தில் பார்த்து எளிதில் இந்த இணைப்புக்கு வந்து படிப்பது வசதியானதுதான். ஆனால், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நான் எந்த குழப்பத்தையும் தர விரும்பவில்லை. முடிந்தால் படியுங்கள். இல்லையேல் உதாசீனம் செய்துவிட்டு போங்கள். ஆயிரம் வருடங்களாக புரிந்து கொள்ளாததை இந்த நிமிடமேவா புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?
நான் வேறெந்த பதிவிலும் பின்னூட்டம் எழுதுவதில்லை. இதுவே என் கடைசி பின்னூட்டம். அதுவும் சுய விளக்கமாகவே.நேசகுமார், புலிப்பாண்டி எழுதியவை போலி பின்னூட்டம் என்று எனக்கு தோன்றினால் அதுவும் நீக்கப்படும். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டங்கள் நீக்கப்படும். எரிதங்கள் நீக்கப்படும். (எனக்கு நேரமிருந்தால்).
வலைக்கவி பட்டமெல்லாம் வேண்டாம் நண்பா அப்புறம் தலைக்கணம் வந்துவிடும்
நான் சாதாரண கவியாகவே இருந்துவிட்டுப்போகிறேன்.
விமர்சித்த ஈஸ்வர் தாரா சண்முகி அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
i am reading your poems
very nice,
avamaanam, yemaatram, valigal
ithai patri oru kavithai vendum
nagore ismail
Post a Comment