Thursday, June 30, 2005

ஒரு காதல் ஞாபகம்பா

நேற்று திருநெல்வேலி டவுணில் இருக்கும் அருணகிரி தியேட்டரில் உள்ளம் கேட்குதே படம் பார்ப்பதற்காக நண்பர்களுடன் சென்றேன்.

கல்லூரியில் படித்த பழைய நண்பர்களுக்குள் ஏற்பட்டு மறைகின்ற காதல் - தோல்வி – காலத்தின் சுழற்சியில் அவர்களின் பயணம் என்று படம் ஒரு கவித்துவமாக என் பழைய கல்லூரியை ஞாபகப்படுத்துவதாக இருந்தது.


இடைவேளையில் ஒரு கனத்த மனதுடன் வெளியே வந்தபோது

அட நம்ம ஆன்டனி - ( பி ஏ ஆங்கிலம் லிட்)

"டேய் ஆன்டனி எப்படிடா இருக்க "– நான்

ஒரு மாதிரியாய் உற்று பார்த்தான்..

"என்னடா மறந்துட்டியா "– நான்

"டேய் ஞானி மாப்ள எப்படிடா இருக்க" - சுதாரித்து விட்டு கத்தினான்

"சாரி சாரி சாரிடா ஆறு வருஷத்துக்கு முந்தி பார்த்தது டா அதான் குழம்பிட்டேன்..இப்ப க்ளாஸ் போட்டு தாடியெல்லாம் வச்சு என்னடா ஆளே மாறிட்ட.. "– ஆன்டனி

"நீ கூடத்தான் ரொம்ப மாறிட்ட அப்புறம் சொல்லுடா எப்படி போது வாழ்க்கை? "– நான்

"ஏதோ போகுதுடா..இப்ப உழவர்சந்தை பக்கம் ஒரு இண்டர்நெட் சென்டர வச்சிருக்கேன்டா
நீ என்னடா பண்ற"

"நான் துபாய்ல இருக்கன்டா இப்ப லீவுல வந்துறுக்கேன்"

"படத்த பார்க்கும்போது நம்ம காலேஜ் ஞாபகம்தாண்டா "– நான்

"ம் ம் ஒரு மாதிpரி சோகமா இருக்கு..அதுல வர்ற மாதிரி ஒரு காதல் ஜோடி சக்ஸஸ் ஆயிருக்குடா..யார் தெரியுமா? ஜெயச்சந்திரன் - சிவகாமி"

சந்தோஷ மிகுதியில்

"டேய் உண்மையா அவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்களா..ரொம்ப சந்தோஷம்டா "– நான்

"ஆமாண்டா பெற்றோர் ஒப்புதலுடன் ஒண்ணு சேர்ந்துட்டாங்கடா.. இப்ப அவன் கோயம்புத்தூர்ல செட்டில்டா "- ஆன்டனி

மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது

"டேய் அவன் செல் நம்பர் இருக்கா "

"ம் தரண்டா "– செல்போனை நோண்டி ஒரு வழியாய் எடுத்துதந்தான்

"ஓகே டா பார்ப்போம் டா பை.."

மறுபடியும் படம் ஆரம்பித்தது. எனக்கோ என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி போனேன்.

__________________________________________________

யார் இந்த ஜெயச்சந்திரன் - சிவகாமி ? மனசு தியேட்டரிலிருந்து வெளியே குதித்து காலங்களில் பயணித்து 1996 ம் வருடம் நோக்கி ஓடியது.

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம்தான் ஆயிருக்கும்

1996 ம் வருடம் அந்த ஒற்றை பேருந்து சதக்கல்லூரியிலிருந்து மார்க்கட் வழியாக ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு

காலிப்பயல்களையும்
காதல்களையும்
சுமந்துகொண்டு
பயணித்துக்கொண்டிருக்கிறது.


நானும் மஸ்தானும் அந்த பேருந்தின் பெண்கள் இருக்கையின் எதிர்ப்புறம் கடலை சாகுபடி செய்துகொண்டே இருக்க…

"டேய் மஸ்தான் அங்க பாரு அந்த பொண்ணு சிவகாமி தானே அவ பி எஸ் ஸி கெமிஸ்ட்ரி படிக்கிறாடா..அவளுக்கு மார்க்கட்தான் வீடு போல" – நான்

"ஆமா அவளா அவ வீடு மார்கட்ல இந்த இடத்துலதான இருக்கு" - என்று ஒரு குறிப்பிட்ட இடம் சொன்னான்

"அடப்பாவி இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும் சொல்லவேயில்ல.. "– நான்

"நீ கேட்கவேயில்லயே.".- நக்கலடித்தான்

அதோ அதோ நம்ப ஜெயச்சந்திரன் அவளுக்கு பின் சீட்டில் வியர்க்க வியர்க்க சுற்றுமுற்றும் திருட்டு முழியோடு அமர்ந்திருந்தான்

ஜெயச்சந்திரன்

கொஞ்சம் உயரமாக மாநிறத்துடன் செங்கோட்டையில் பள்ளி படிப்பை முடித்து இங்கு சதக் கல்லூpயில் விடுதியில் தங்கி பிஏ ஆங்கிலம் லிட் படிப்பதற்காக வந்திருப்பவன்

செங்கோட்டையிலிருந்து அவனை
காலம் அழைத்து வந்ததா
இல்லை
காதல் அழைத்து வந்ததா என தெரியவில்லை?


அவன் திருட்டு முழியோடு அமர்ந்திருந்ததால் ஒரு சந்தேகம்..

"டேய் மஸ்தான் அங்க பாருடா அந்த பையன..அவன் நம்ம காலேஜ்தானே.."

"ஆமாடா அவன் ஆங்கிலம் லிட் மாணவன்டா.."

"ஹலோ நீங்க சதக் காலேஜ்தானே.. "– நான்

அவன் திரும்பி பார்த்து "ஆமா " என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டான். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் மேலும் பேச முடியவில்லை..

பேருந்து மார்கட்டை நெருங்கி கொண்டிருக்கிறது.. அவன் மெல்ல ஒரு கடிதத்தை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தயாராக வைத்திருக்கிறான்..

நான் கவனித்து விட்டேன்.."டேய் மஸ்தான் அங்க பாரேன் அவன "– கிசுகிசுத்தேன்

முன்சீட்டிலிருக்கும் சிவகாமியின் மடியில் வைத்துவிட்டு அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் முன்னே இறங்கி விடுகிறான்.

"அட காலேஜ் தொடங்கியே ஒரு வாரம்தான் ஆகுது…அதுக்குள்ள பாருடா லவ் லட்டர "– நான் வயிற்றெரிச்சலில் சொன்னேன்.

கவனிக்க ஆரம்பித்தோம் …

கடிதம் அவன் வைத்ததை அவள் உணர்ந்து கொண்டாலும் பயந்து கொண்டே அதனை மடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் தட்டிவிட்டுவிட்டு அவள் நிறுத்தம் வந்ததால் இறங்க தயாராகி விட்டாள். ஒரு லிட்டருக்கும் மேல் அவளுக்கு வியர்வை வழிந்துகொண்டிருந்தது
அவள் முகம் அழுகின்ற நிலையில் இருந்தது

( முதல்ல இப்படித்தான் பொண்ணுக அழுகிற மாதிரி இருக்கும் ஆனால் கடைசியில் அழப்போறது பையன்க தான்பா )

பக்கத்தில் ஒரு பாட்டி

"யம்மா யம்மா ஒரு பேப்பர் கீழே விழுந்துடுச்சும்மா " என கத்திக்கொண்டிருக்க அலட்சியப்படுத்திவிட்டு இறங்கி விட்டாள்

"பாட்டி அந்த பேப்பர கொடுங்க ..அந்தபொண்ணு எங்க க்ளாஸ்தான் நாங்க நாளைக்கு கொடுக்கிறோம்;.."- நான்

அந்தபாட்டிக்கு கொஞ்சம் கொழுப்பு

"இல்ல இல்ல வேண்டாம்..நானே கொடுத்திடறேன் " மடித்து கை இடுக்கில் வைத்துக்கொண்டாள்

மாட்டிக்கொண்டது
ஒரு காதலும் கடிதமும்
அந்த பாட்டியின் கை இடுக்கில்


ஜெயச்சந்திரனிடம் நேரடியாக கேட்பது நாகரீகமில்லையாததால் விட்டுவிட்டோம்…

------------------------------------------------------------------------------------------

அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து தமிழ் வகுப்பு; நடந்து முடிந்து எல்லா வகுப்பு மாணவர்களும் எங்கள் வகுப்பிலிருந்து சென்றுகொண்டிருக்க

அந்த சிவகாமியும் அவளது தோழியும் கடைசியாக செல்கிறார்கள்

நான் அவர்களது பின்னால் பெண்கள் போல நடந்து செல்ல அவர்கள் திரும்பி பார்க்கும் போது திரும்பிகொள்வேன்.

"ஏடி பின்னால பாரேன் ஞானியார் நம்மள கிண்டல்பண்ணி நடந்து காட்டுறான்டி "- சிவகாமி

"விடுடி திரும்பிபார்த்தோம்னா அவ்வளவுதான் ஓ ன்னு கத்திருவாங்க .."

"இல்லடி நாம பிரின்ஸிபால்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணணும்.. "- சிவகாமி

"ச்சே விடுடி சும்மா ஜாலிக்குதானே பண்றாங்க…"

பேச்சுக்களின் சலசலப்புக்கிடையே சிவகாமி உட்பட அவ தோழிகள் சிலர் முறைத்தபடியும் சிரித்தபடியும் சென்றார்கள்.

------------------------------------------------------------------------------------------

மறுநாள் கல்லூரியிலிருந்து பேருந்து ஜங்ஷன் நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்க..அந்த சிவகாமியும் அவளது தோழிகளும் முன்னால்…

நான் நண்பன் ராஜாவுடன் கடைசி சீட்டில் …

யதேச்சையாகஎடுத்துவிட்டேன் பாட்டை. என் சோக கதையை கேளு என்ற மெட்டில்பஸ்ஸின் ஓரத்தில் தாளம் போட தயாராகிவிட்டனர் நண்பர்கள்

என் சோக கதையை கேளு
தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே ( மாணவர்கள் ஒத்து ஊதினார்கள் )

கேட்டாக்க கண்ணீர் வரும்
எங்க நிலைமை

இந்த காலேஜ் பொண்ண நம்பி
மேலப்பாளையம் தாண்டி வந்தோம்…

என் சோக…
என் சோக கதையை கேளு
தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

( திருப்பி பார்த்து முறைத்தார்கள் அந்த சிவகாமியும் அவள் தோழிகளும் )

ஆனால் நான் யாரையும் குறிப்பிட்டு பாடவில்லை..ஆனால் அவள் தன்னை நோக்கி பாடுவதாக நினைத்துக்கொண்டாள் போல..

-------------------------------------------------------------------------------

மறுநாள் ஒரு மதிய இடைவேளை ..சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவிக்கொண்டிருக்க

"டேய் ஞானி எப்படிடா இருக்க" – ஜெயச்சந்திரன்

"என்னடா அதிசயமா இருக்கு இந்தப்பக்கம் .."

"இல்ல மாப்ள உன்கிட்ட கொஞ்சம் பேசணும் - "
-ஜெயச்சந்திரன்
அவனுடன் வெளியே வந்தேன் . கல்லூரி வராண்டாவின் படிக்கட்டு அருகே அழைத்து வந்து

"டேய் உன் மேல ஒரு கம்ப்ளைன்ட் டா"

"என்ன?"

"இல்லடா நீ அந்த பிஎஸ்ஸி கெமிஸட்ரி பொண்ணு சிவகாமிய கிண்டல் பண்ணிணதா சொன்னாங்க..வேண்டான்டா விட்ருடா.."

"நான் யாரயும் குறிப்பிட்டு பண்ணலடா..ஆமா அவ மேல மட்டும் என்ன உனக்கு கரிசனம்."

"டேய் புரிஞ்சுக்கடா மாப்ள நான் அவள லவ் பண்றேன்டா"

"அப்படிபோடு ..டேய் எனக்கும் தெரியும்.. பிரின்ஸ்பாலுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணப்போறேன்னு சொன்னாள நீதான் அவ பிரின்ஸ்பால்னு தெரியும்டா எனக்கு…"

( காதல் ஒருவனை
பிரின்ஸ்பாலாகாவும் ஆக்கும்
பிச்சைக்காரனாகவும் ஆக்கும் )


"சரி சரி நடத்துடா…அவ்வளவுதான சரி விட்டுறு..நான் இனிம கிண்டல் பண்ணல"

"தேங்ஸ்டா… "

------------------------------------------------------------------------------------------

அதன்பிறகு அவர்களை பற்றி அரசல் புரசலா கேள்விகள் - செய்திகள் - காதல் தோல்வி – வெற்றி – பிரச்சனை – வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு என புரளிகள் கிளம்பிகொண்டிருந்தன.
இடையில் ஜெயச்சந்தின் வந்து காதல் கவிதை எல்லாம் வாங்கிச் சென்றான்

( சொந்தமாய்
கவிதை எழுதத்தெரியாதவன்
காதலிக்க லாயக்கில்லை!
உண்மையாய்
காதல் கொண்டவனுக்கு
கவிதை ஒரு கைப்பிள்ளை

காதல் கவிதை
கடன்வாங்கியவர்களின்
காதல் வெற்றிதான் - எனது
கவிதை வெற்றியும்!
)


---------------------------------------------------------------------------------

மீண்டும் மனசு கல்லூரி காலத்திலிருந்து திரும்பி வந்து அருணகிரி தியேட்டர் திரும்பி வந்து
உள்ளம் கேட்குதே படத்தில் லயித்துப்போனது.

அந்த படத்தில் ஷாம் பேசிய வசனம்

கல்லூரி பருவத்தில கேலி கிண்டல் பண்றது - ஒருவர் தன்மீது ஆசை வைத்திருப்பாரா என்று தெரியாமல் ஆசையை அவர்களிடம் சொல்லி விடுதல் - இப்படி விளையாட்டு தனமான காதல் - கேலி- கிண்டல் எல்லாம் கல்லூரி முடிந்து பிரியும் தருவாயில்தான் தெரிகிறது. வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானதுன்னு..அதனால் கடைசி வரைக்கும் கல்லூரி பருவத்திலேயே இருந்துவிடக்கூடாதான்னு கல்லூரி வாழ்க்கைய அனுபவிச்ச ஒவ்வொரு
மனசும்; ஏங்கிட்டுதான் இருக்குது….உலகம் ரொம்ப சின்னதுதான் ..நாம மறுபடியும் எங்கேயாவது சந்தித்துக்கொண்டால் அப்ப வாய் ஊமையாகிவிடும் ..கண்ணீர்தான் பேசும்..
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது என் காதுகளில் அது எவ்வளவு நிஜம்..


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Wednesday, June 29, 2005

என்னடா காதல் இது?

இன்று காலையில் தினத்தந்தியை திறந்தேன் ஒரு சோகமான செய்தி.

பட்டதாரி பெண்ணை காதலித்து கற்பழித்து கொன்ற வாலிபர் கைது :

தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 24 வயது பட்டதாரி பெண் வீட்டை விட்டு காதலனோடு ஓடினாள். அவள் காதலன் அவளை அழைத்து சென்று கொல்லம் விடுதியில் வைத்து அவளை கற்பழித்து கொலைசெய்து விட்டு அவளுடைய 40 பவுன் நகையையும் பறித்துகொண்ட காதலன் கைது.

என்ற செய்தியை படித்தவுடன் மனசுக்குள் சுர்ரென்று அந்நியன் மாதிரி ஒரு கோபம். என்னடா காதல் இது? ச்சே ..அந்த காதலனை சவுதியில கொடுக்கிற தண்டனைய போல தலையை எடுக்ககூடாது. என்ன திமிர் அவனுக்கு..?

தான் ஆண் என்ற திமிர்.களவு செய்கையில் ஈடுபட்டால் தன்னை விட பெண்மைக்குதான் பாதிப்பு என்ற

ஆண்மையின்
அதிகாரத்துஷ்பிரயோகம்..


அவனை காதலன் என்று போடாதீர்கள் பத்திரிக்கையாளர்களே..அது காதலுக்கும் உண்மையாய் காதலிப்பவர்களுக்கும் அசிங்கம்.

அந்தபெண்ணுக்கும் அறிவு எங்கே போச்சு? எந்த நம்பிக்கையில் அவனை காதலிக்கிறாள்..? அட பொண்ணுங்களுக்கு ஏம்பா இப்படி அறிவு போகுது. ஒருத்தன் வீட்டை விட்டு ஓடி வான்னு கூப்பிட்டா போயிடறதா…அதுவும் நகையோட..


சரி அந்தபைணன்தான் ஓடி வான்னு கூப்புடுறான்..நகையை கொண்டுட்டா ஓடுறது. ஏன் காதலிக் தெரிஞ்ச அந்த நாய்க்கு பொண்டாட்டிய வச்சு காப்பாத்த வக்கில்லயா...?

என்னோட நிஜம் என்ற கவிதை ஒண்ணு ஞாபகம் வருது

"கட்டிய சேலையோடு வாடி"
என்கிறது உதடு
"கொஞ்சம்
கட்டுப்பணத்தோடும் வாயேன் "- என
கதறுகிறது மனசு.


அதுக்குத்தான் சொன்னேன்..
காதலிக்கும்போது அன்பு - மனசு - இதயம் - பீச் - பார்க் - தியேட்டர்..அப்படி ஜாலியான வார்த்தைகள்தான் காதில் விழும்..வாழ்க்கைன்னு வரும்போதுதான் தெரியும். வீட்டு வரி - கரண்ட் பில் - வாடகை - இதெல்லாம் இருக்குதுன்னு..

அட காதலிங்கம்மா வேண்டாம்னு சொல்லல...ஆனா வீட்டை விட்டு ஓடுறது ரொம்ப அசிங்கம்மா..அது சுயநலம் இல்லையா? சரி வீட்டுல எதிர்த்தாங்களா..போராடுங்க. .. போராடுங்க..போராடிகிட்டே இருங்க....

அந்தப்பெண்ணோட தந்தைக்கு எந்த அளவுக்கு வலி இருந்திருக்கும்?
காதலியின் பார்வையில் இருந்து சிந்திக்க வேண்டாம்
காதலனின் பார்வையில் இருந்து சிந்திக்க வேண்டாம்
அந்த பெண்ணின் தந்தை - அண்ணன் பார்வையில் இருந்து சிந்தியுங்கள்.

சினிமாவுல வர்ற காதல் எல்லாம் ஓடிப்போகறது வரை காட்டானுங்க..அதுக்கு பிறகு என்ன நடக்குதுன்னு காட்டுங்கப்பா..?

ஓடிப்போனவளுக்கு அக்கா தங்கைன்னு இருந்தா அவங்களுக்கு மாப்பிள்ள அமையறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

"அந்த பொண்ணா! அவ தங்கச்சி எவனோடவோ ஓடிப்போனா..இவ மட்டும் எப்படி இருப்பா?"

போன்ற கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிடும். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை அமைவது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா இப்பொழுது? நிச்சயம் பண்ணப்பட்ட பிறகும் கூட அந்தப் பெண்ணைப்பற்றி கிளம்பிய வதந்திகளால் எத்தனையோ திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இது தேவையா..? எவனோ ஒருவனுக்காக சகோதரிகளின் வாழ்க்கையை நடுத்தெருவில் விடுவது பச்சை பொறுக்கிதனம் இல்லையா...

இதெல்லாம் விடுங்க அந்தப்பெண்ணோட தந்தையை நினைச்சு பாருங்க...? பார்த்து பார்த்து பொண்ணை வளர்த்து படிக்க வச்சு அவ அழகுக்கு அவ விரும்புற நகையை போட்டு ...இப்படி எல்லாம் செஞ்ச பொண்ணுக்கு ஓடிப்போகும்போது ..சமுதாயத்தில அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும்..அதுமட்டுமில்ல அவரு போட்ட நகையும் |சேர்த்து எடுத்துட்டு போயிடுறாங்க... எவ்வளவு பாடுபட்டு அந்த நகையை சேர்த்திருப்பாரு அவரு..?

இந்த காலத்துல பொண்ண பெத்து வளர்க்கிறதுன்கிறது சாதாரண விசயமில்ல..

கண்ணாடி சில்லின் மீது நின்று கொண்டு
கபடி ஆடுவதை போன்றது.


ரொம்ப கவனமா இருக்கணும். கொஞ்சம் பிசகுனாலும் அவ்வளவுதான்...

இதுக்குத்தான் பெண்களே ...நவநாகரீக போதையில் ஆபாசமாய் ஆடை அணியாதீர்கள்...அது கயவர்களின் காம இச்சைக்கு தூண்டுகோலாய் அமையும். காதலன் என்ற உரிமை இருக்கட்டும். அவனை தொட்டு பேசுவதற்கு தயவுசெய்து அனுமதிக்காதீர்கள். அப்படி தொட்டு பேசுவதைதான் அவன் விரும்புகிறான் என்றால்..அவன் காதலன் அல்ல..சைத்தான்...

அவன் தொட்டு பேசுவதை விரும்புகிறான் என்றால் அவன் தங்கையோ அல்லது அக்காவோ எவனுடனாவது தொட்டு பேசுவதை பார்க்க நேரிட்டால் அவன் மனம் என்ன பாடு படும்...?
இந்த கவிதையில் உள்ளது போல தனக்கென்று வந்தால்தான் தெரியும் காய்ச்சலும் காதலும்.


ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்
கடைவீதியில்
கலாச்சாரத்தை விற்கின்ற
ரோமியோக்களே!

உங்களை நோக்கி
ஒரு
பட்டாம்பூச்சி பேசுகிறேன்

நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்

பேருந்தில்
கணக்கு நோட்டை
கொடுக்கும் சாக்கில்
கையைப் பிடித்தும் கிள்ளலாம்

நாங்கள்
நடந்துவரும் வீதியிலே
நக்கலடித்தும் செல்லலாம்

இந்தியா வீசிய
இராக்கெட்டை விடவும் வேகமாக
காகித அம்பும் வீசலாம்

தனியே வரும் பெண்களிடம்
தரக்குறைவாய் பேசலாம்

நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்

ஐ லவ் யு சொல்லதவள் மீது
ஆசிட்டும் ஊற்றலாம்

எங்கள் கூட்டத்தினுள்
பைக்கில் நுழைந்து
பதறவும் வைக்கலாம்

பின்னால் வந்து
ஹாரன் அடித்து
அலற வைக்கலாம்.

சிட்டி பெண்ணின் உடையைகண்டு
சீட்டி அடித்து விளையாடலாம்

எது வேண்டுமானாலும் செய்யலாம்
கல்லூரிக்குச் சென்ற உன்
தங்கையின் ஞாபகம்
தலைதூக்காதவரை

நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்.


- ரசிகவ் ஞானியார்


இந்த நாகரீக உலகில் நான் சொல்வது தவறுகள் போல தெரியலாம். ஆனால் சிந்தித்து பாருங்கள் உண்மை புலப்படும்

ஆபாசமாய் ஆடை அணிய வேண்டாம்
ஆண் நட்பை எல்லைக்குள் வைத்திருங்கள்.
காதலனை தொட்டு பேச அனுமதிக்க வேண்டாம்.

டேட்டிங் -
அது
விபச்சாரத்தின்
ஹைக்கூ...
...

இப்படி கூறினால் உடனே பெண்மைக்கு எதிராய் பேசுவதாக குதிக்க வேண்டாம். சிந்தித்து பாருங்கள்.


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Monday, June 27, 2005

பிகு

பிகு

புதிதாய் வாங்கும்
பேனாக்கள் எல்லாம்...
உன் பெயர் எழுதி
அழகு பார்ப்பதும்...

நிலவைப் பார்க்கும்
நிமிடங்களில் எல்லாம்
நீ வந்து
நினைவைக் கலைப்பதும்.

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாவாய் வந்த...
உன் வருகையும்.

தினம் தினம்
நீ கொடுத்த கடிதத்தை
படித்து ,படித்து கண்கலங்குவதும்

என் பழைய டைரியில்
உன் புதிய புகைப்படம்..
ஒளித்துவைப்பதும்

பீச்சில்...பார்க்கில்
ஜோடிகளைக்
காணும்பொழுதெல்லாம்
தனியாய் செல்லும் நான்..
தவித்த தவிப்பும்

எவனோ...எவளோ...
பைக்கில்
பக்கம் அமர்ந்து
செல்லும்பொழுது
நான் பதறிய பதறலும்

மாறிப்போன உன்
முகவரியைக் கண்டறிய...
உன்
பக்கத்து வீட்டுக்காரனை
பிராண்டிய பிராண்டலும்

நண்பர்களின் காதலிகள் பற்றி
கிண்டலடித்து விளையாடும்பொழுது நீ
அடிக்கடி என் இதயத்தில்வந்து...
சடுகுடு ஆடிச்செல்வதும்

இப்படி
அவஸ்தை நிமிடங்களிலையே...
ஆயுள் கழிவதைவிட
நீ காதலை சொல்லியபொழுதே
பிகு செய்யாமல்
உன்னை...
காதலித்துத் தொலைத்திருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்

அம்மாமாமாமாமாமா

அர்த்தம்
"சாப்பிடுடா சாப்பிடமாட்டேன்''
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'

- உதறிவிட்டு ஓடினேன்

சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது

- ரசிகவ் ஞானியார்

Sunday, June 26, 2005

கத்தரி வெயிலில் காதல்

சென்னையில் கண்ட ஒரு சுவாரசியமான காதல் காட்சியை உங்களுக்கு தருகிறேன் கேளுங்களேன்.

எனக்கு ஒரு சந்தேகம் காதலர்கள் சந்தித்துகொண்டால் அப்படி என்னதான் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொள்வார்களோ?

காலை 10.30 மணி அந்த நுங்கம்பாக்கம் மின்சார இரயில் நிறுத்துமிடம்..
அதோ ஒரு காதல் ஜோடி..அவன் அறிமுக நாயகர்களின் சாயலில் இருந்தான்..அவள் நவநாகரீக சென்னை பெண்..கண்ணாடி அணிந்த குஷ்பு மாதிரி இருந்தாள். தொட்டுப் பேசுகின்ற நாகரீகத்திலேயே தெரிந்தது அவர்கள் காதலர்களாம்.

சென்னை சென்டிரல் - தாம்பரம் இரயில்களும் கடந்துகொண்டிருக்கிறது

சென்னை தாம்பரம் - சென்டிரல் இரயில்களும் கடந்துகொண்டிருக்கிறது

அவர்கள் கிளம்பவதாய் தெரியவில்லை. மெல்ல பக்கம் சென்றேன்.புத்தகத்தை கையில் வைத்து படிப்பது போன்ற பாவ்லாவுடன் என்ன பேசுகிறார்கள் காதைதீட்டி கவனிக்க ஆரம்பித்தேன்.

அட என்னப்பா மௌனமாக இருக்கிறார்கள்..பேச்சையே காணோம்..அவன் அவள் கண்கள் பார்க்கின்றான்..அவள் சிரிக்கிறாள். அட போராடிச்சுட்டுப்பா
( லூசா இருக்குமோ?...லூசாப்பா நீ )

காதலும் ஒரு செஸ் விளையாட்டுதான்.
விளையாடுபவர்களுக்கு
மட்டும்தான்
லாபம்.
பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான்
பாவம்.

அட ஏதோ பேசுகிறார்கள்... கவனிக்க ஆரம்பித்தேன்.

நீருக்கு அணைக்கட்டு
பார்த்திருக்கிறோம்.
காற்றுக்கு அணைக்கட்டு யாரேனும்
கண்டதுண்டா?
நான் கண்டுவிட்டேன். இதோ இருவரின் கை கைகளின் பின்னுதல்தான் அது.

இதா இருவரின் கைகளின் பின்னுதலில் காற்று நுழையமுயன்று தோற்றுபோய் திருப்பி என் முகத்தில் வந்தது பலமாய் வீசியது.


( என்ன அசிங்கண்டா இது தொடுதல் இல்லாவிட்டால் காதல் என்ன செத்துவிடுமா?..)

"டேய் உன் செல்போனை கொஞ்சம் கொடு" - அவள்"எதுக்குடி " - அவன்

"நான் ஒண்ணும் போன் பண்ணமாட்டேன்..தாடா கஞ்சப்பிஸ்னாரி.."- பறித்துவிடுகிறாள்

டயல்டு காலை நோண்டுகிறாள்...

"எப்பவுமே டயல்டு கால்ல முத கால் என்கால்தான் "- செல்லமாய் கேட்கிறாள்

அவன் மௌனமாய் சிரிக்கிறான்.

( அட மடப்பயலே நான் உன் நிலையில் இருந்தா என்ன சொல்லுவேன் தெரியுமா?

காதலித்துப்பார்
முதல் டயல்டுகாலும் அவள்தான்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்

என்று வழிந்துவிட்டு விடுவேன் ஒரு டயலாக்

என்
சிம்கார்டுக்கு
ஜீவன் கொடுப்பதே
உன் அழைப்புகள்தான்டி


என்று சொல்லி காதலை தீவிரப்படுத்துவேன்.. என்னடா காதலிக்கிறீங்க போங்கடா )


"நான்காவது டயல்டு நம்பர்ல டேய் யாருடா அது ப்ரியா "- அவள்
( ஆரம்பிச்சாச்சுப்பா சந்தேகம் )

"அட அது என் கலிக் மா.. போன் போடுறேன் பேசுறியா? "
- செல்ல கோபத்துடன் அவன் போன் போட முயற்சிக்க

"வேண்டாம்டா ...சாரி சும்மாதான் கேட்டேன் "- அவள் தடுக்க முயற்சிக்க

ஒரே ஜாலிதான் போங்க...

"என்னடா நகத்துல இவ்வளவு அழுக்கு இருக்கு..."

"கையை கொடு..."

"வேண்டாம் மா..நான் நாளைக்கு எடுக்குறேன்.."

ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு சிறு ஆயுதம் எடுத்து நக அழுக்கை எடுக்கிறாள்.

காதல்
அழகை கொடுக்கும்
அழுக்கையும் எடுக்கும்
( அழுகையும் கொடுக்குமுங்கோ )


( முதல்ல நகத்துல அழுக்கை எடுப்பாங்க - அப்புறம் முகத்தையே மறந்திடுவாங்கடோய் )

நான் கவனிப்பதை அவள் கவனித்துவிட்டாள் போல...ஒரு மாதிரியாய் ஏறிட்டு பார்க்க...நாகரீகம் கருதி நான் கொஞ்சம் ஒதுங்கிகொண்டேன்....

அட அடிக்கிற வெயில்ல எப்படிப்பா உங்களுக்கு காதல் வருது..

எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் காதலர்களை மட்டும் கவனிக்க மாட்டானோ?
அந்த நெருப்பு இருக்கைகள் எப்படித்தான் அவர்களுக்கு மட்டும் பூங்காவாய் தெரிகிறதோ தெரியவில்லை?


சென்னையில் காதல்தான் எத்துணை விதமாய்

இரயில்பெட்டியின்
கடைசி இருக்கையில்
இடித்துக்கொண்டு
ஒரு காதல்

பீச்சில் கடும்வெயிலில்
குடைகளால் மறைத்துக்கொண்டு
ஒரு காதல்

பேருந்து நிலையத்தில்
ஒரு ஓரமாய்
ஒளிந்துகொண்டு
ஒரு காதல்

பைக்கில்
முக்காடு போட்டுக்கொண்டு
ஒரு காதல்


அட இந்த
கத்தரி வெயிலில் - எப்படியப்பா
காதல் வருகிறது?


யாராவது சொல்லுங்கப்பா..? அப்படி என்னதான் பேசுவாங்க வெயிலடிக்கறது கூட தெரியாம..யாருக்காவது காதல் அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்..தெரிஞ்சா சொல்லுங்ககககககககககககககககககககககககக


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

எம் சி ஏ - ஆட்டோகிராப்

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]


என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுiர்கிறது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்....
ஆட்டோகிராப்...
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
றநநம-நனெ ல் சந்தித்துக்கொண்டாலும் இது
ளுவசழபெ ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)


ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்.
விதைக்காமலையே முளைத்த கடலைகள்.
கிண்டலுடனே கடந்த பீரியடு.
சில காதலின் வளர்ச்சிகள்.
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது.
ஜோசப்புக்கு பெண் பார்த்தது
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது.
டீக்கடை பெஞ்ச்.
யாருடைய திருமணத்திலும் அழைப்;பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்
செமினார்கிளாசில் சேட்டைகள்
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்
ஜெராக்ஸ்; வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்.
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு.
பாரீனரோடு எடுத்த போடNடொ.
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்
டூரில் ல் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே.
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்;நிலைகள் எப்படியிருக்குமோ,என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))


- Hide quoted text -
அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
- Hide quoted text -

கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

- Hide quoted text -
கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்;க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்;
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)


உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோஃஃ
நீ தொழிpலதிபராகவோஃஃ
நீ அதிகாரியாகவோஃஃ
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)ரசிகவ் ஞானியார்

Monday, June 20, 2005

என்னவளும் அரசியல்வாதிதான்

வாக்களித்து ஏமாற்றும்...
என்னவளும்
அரசியல்வாதிதான்!

என்னவளை
சட்டசபையில்
சேர்த்துவிடுங்கள்!
ஆம்
என்மீது
செருப்பை வீசுகிறாள்!

என்னவளை
எப்படியாவது
எம் எல் ஏ ஆக்கிவிடுங்கள்!
ஆம்
அவளைப்பார்த்தே
நாளாகிவிட்டது!

என்னவளை
பாராளுமன்றத்திற்குப்
போகச்சொல்லுங்கள்!
ஆம்
திடீரென்று
கவிழ்க்கிறாள்!

என்னவளை
கஷ்டப்பட்டாவது
கவர்னராக்கிவிடுங்கள்!
ஆம் அடிக்கடி
இதயப்பல்கலைக்கழகத்திற்கு...
கிறுக்கன் பட்டம் தருகிறாள்!

லஞ்சஊழல் போலவே
நெஞ்சஊழல் செய்கிறாள்!
இவளுக்கு நன்றாக
நடிக்கவும் தெரிகிறது!

ஆகவே
என்னவளை
அரசியல்வாதி ஆக்கிவிடுங்கள்!


- ரசிகவ் ஞானியார்

Monday, June 06, 2005

கால் நனைத்தவர்கள்- III

மன்சூர் வாப்பா

என் நண்பனின் தந்தை

உன்னை ஞாபகப்படுத்தி பார்க்கையில்

சிங்கப்ப+ர் வேட்டி
எலக்ட்ரானிக் கருவிகள்
வாசற்படிவரை வருகின்ற வாசனைதிரவியம்

இவைகள் தான்
நினைவுகளில் சுற்றுகிறது

தொலைக்காட்சியை
அறிமுகப்படுத்தியது...
மால்கோனி!

எனக்கு
அறிமுகப்படுத்தியது...
மன்சூர் வாப்பா!

என் வயது குழந்தைகளோடு
உன் வீட்டு வாசற்படியில் எடுத்த
ஒரு
சிரித்த புகைப்படம்தான் என்
சின்ன வயது ஞாபகம்

பத்திரப்படுத்த முடிந்தது
ஞாபகம் மட்டும்தான்
புகைப்படம் அல்ல

அந்த
புகைப்படம் தேடி
எத்துணை நாளாய் அலைந்திருக்கிறேன் தெரியுமா?

இன்னும்
தேடிக்கொண்டுதானிருக்கிறேன்
சோகமில்லாமல் சிரிக்கின்ற
அந்த நாட்களை...

நான்
சோகமில்லாமல் சிரத்த
கடைசி சிரிப்பு...
அதுவாகத்தான் இருக்கும்!

------------


குரும்புரம்மா

எங்களுரின்
முதற் பெண்மணி
தொலைக்காட்சி பார்ப்பதற்கு
காசு வசூலிப்பதில்...!


மொழி புரியவிட்டால்கூட
அசைவுகள் கண்டு
கைதட்டுவதற்காக
காசு கொடுத்து பார்த்த நாட்கள்!

ஒரு
காசில்லா மாலைநேரத்தில்
ஜன்னல் கம்பிக்களுக்கிடையே
ஒளியும் ஒலியும்
ஒளிந்து நின்று பார்த்தபொழுது

நீ
விரட்டி விரட்டி விட்டாய்

ஒரு
ஆட்டினைப்போல
நாங்கள்
திரும்பி திரும்பி வந்தோம்

கடைசியில்
வெற்றி எங்களுக்குதான்

ஆம் நீ
ஜன்னல் கம்பிகளுக்கு
திரையிட்டுவிட்டாய்

இப்பொழுது நினைத்துபார்த்தால்
எத்துணை வெட்கமாயிருக்கிறது

இப்பொழுது
நீ இருந்தால்
காசு வாங்காமல்
காட்டியிருப்பேன்!

என் வீட்டிலும்
தலைக்கொம்புகள் போல் முளைத்த...
ஆண்டனா கம்பிகளையும்,...
கலர் டிவியையும்...

-----------------------

மாரி

என்
பால்யவயது
பருவ சிநேகிதன்

அவன் பெயர் இன்னமும்
ஞாபகத்திலிருக்கிறது

ஒரு
மரக்கடையின் ஊழியனா ? முதலாளியா?
ஞாபகத்திலில்லை

அவனுக்கு தெரிந்து சிலமுறை...
தெரியாமல் பல முறை ...
அவன்
கல்லாபெட்டிக் காசுகள்
என் உணவுக்குழாயுக்குள்
தஞ்சம் புகுந்திருக்கிறது

அவன்
பசியாறும் வேளை
நான் சென்றால்
பாதிப்பங்கு எனக்குத்தான்

தினமும் பள்ளிசெல்லுமுன்
எனக்கான இடத்தில்
எப்பொழுதுமே வைத்திருப்பான்
ஒரு பத்துபைசா...
அவன் இல்லாவிட்டாலும் கூட!

ஒருநாள்
பள்ளி செல்லுமுன்
பத்துபைசாவிற்காய் நின்றபோது
வித்தியாசமாய்
அம்பது பைசா கொடுத்தான்...

ஏறிட்டு பார்த்தால்
அழுதபடி முத்தம் தந்தான்

அந்த முத்தத்தின் அர்த்தம்
மாலையில் தெரிந்தது
ஆம்
கடன் தொல்லையால்
தீக்குளித்துக் கொண்டானாம்.!

அந்த மாரி

பள்ளி போகும் வயசில்
அவன் முகமும் - அன்பும் மட்டும்
ஞாபகத்திலிருந்தது

எல்லா கல்வியறிவும் கிடைத்த பிறகு
அவன் மதம் மட்டும்தான்
இப்பொழுது ஞாபகம் வருகிறது

இந்த கல்வியறிவு எனக்கு தேவையா?

-------------------------

- ரசிகவ் ஞானியார்

கால் நனைத்தவர்கள்- II

வாப்மா


என்னைப் பெற்ற
தந்தையைப்பெற்றவள்!


வாப்மா
உப்புமா மாதிரி இருக்கிறதா
அப்படித்தான் கூப்பிடுவோம்


அவள்
உயிர்விட்டுப்போன
கட்டிலருகே
தொட்டுப்பிடித்து
விளையாடிய ஞாபகம்!

ஒவ்வொரு பெருநாளையிலும்
அண்ணனுக்கு 50 பைசா
எனக்கு 25 பைசா
தங்கைக்கு 10 பைசா

சின்னப்பையன் என்பதால்
தம்பியை ஏமாற்றிவிடுவாள்

அவள் கொடுத்தகாசை
சுட்டிக்காட்டி
கிண்டலடித்து சிரித்திருக்கிறோம்

சம்பாத்தியமே இல்லாமல்
அவள் கொடுத்த
25 காசின் மதிப்பு
எத்தனை மதிப்பென்று...

இப்பொழுது
சொந்தமாய்...
சம்பாதிக்கும்போதுதான் தெரிகிறது!

------------ஸலாவுத்தீன்


என் சொந்தக்கார
அம்மாவின் குழந்தை!

தாமரையிலிருந்து
நழுவி நழுவி வருகின்ற
தண்ணீர்த்துளியைப்போலவே...

திண்ணையில் இருந்து
தவழ்ந்து தவழ்ந்து
நுனிக்கு வருகின்ற சமயத்தில்...

விழுந்து விடும்...
என் இதயம்

விளையாட்டையும் மறந்து
அவனை தூக்கி
வீட்டினுள் விட்டுவிட்டு வருவேன்!

மறுபடியும் தொடர்வான்!

நானே
கொஞ்சும் வயதில் இருந்ததால்...
அவனை யாரும் கொஞ்ச விடவில்லை!

அவன் மரணச்செய்தி கேட்டு
வருத்தப்படவில்லை...
ஆச்சரியப்பட்டேன்!

குழந்தையும் இறக்குமோ என்று?

உலகத்தில் மனிதர்களை
வாழவிட்டு ...
அவர்களின்
நன்மை தீமைக்கேற்ப
கூலி கொடுக்கும் இறைiவா!

தவறாயிருந்தால் மன்னித்துக்கொள்!
உன்னிடம் ஒரு கேள்வி

எந்த வாழ்க்கையுமே வாழாமல்
குழந்தைகள் இறப்பதன் காரணம் என்ன?

------------மீரான் மாமா


ஒரு மாலைநேரம்
பள்ளிமுடித்து வருகையில் நீ
கண்மூடிக்கிடந்தாய்
மீரான் மாமா!

கண்ணீர் வரவில்லையென்றால்
தவறாக நினைப்பார்களோ என்று
கண்ணீர் வடித்தேன்
இல்லை நடித்தேன்

சொந்தங்கள்...
கண்ணீர் மட்டும்தான் பார்க்கும்!

ஆனால்
விவரம் தெரிகிறது இப்பொழுது
நிஜமாகவே கண்ணீர் வருகிறது

தந்தை கொடுப்பார் என்ற திமிரில்
ஒரு
வாடிக்கை உணவகத்தில் - நான்
வயிற்றையும் மீறி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்

நீயோ எதிர்மேசையில்
காசை மீறி உண்ணமுடியாமல்
ஒரு அப்பம் ...
ஒரு தேநீரோடு முடித்துக்கொள்கையில்இ

அப்பொழுது
எனக்கு தோணவில்லையே?
உனக்கும்
ஒரு அப்பம் பரிந்துரை செய்யவேண்டுமென்று!அப்பொழுது
காசு இருந்தது
மனசு இல்லை

இப்பொழுது
காசும் இருக்கிறது
மனசும் இருக்கிறது

யாருக்கு கொடுப்பது அப்பத்தை?

உன்
மரணத்திற்கு நான்
மதிப்பு கொடுக்கவில்லை
மீரான் மாமா!
ஆம்
நான்
மரணத்தை மதிக்கத் தவறியன்!

வீட்டுக்குள்ளே நீ
விழிமூடி கிடக்க
சின்னப்பையன் நான்
சீட்டு விளையாடி கொண்டிருந்தேன்!

பக்கத்து வீட்டு பெரிசு ஒன்று
ஆதங்கத்தில் திட்டியது!

" டேய் உங்களுக்கும் ஒரு
நேரம் வரும்டா "

இதோ அந்த நேரம்
உணர்கிறேன்

ஆம்!
நான்
மரணத்தை மதிக்கத் தவறியன்!

ஆகவே
எல்லா மரணத்தொழுகையிலும்...
கலந்து கொள்கிறேன்!
என்
மரணத்திற்கு...
ஆள் சேர்ப்பதற்காக!

------------


- ரசிகவ் ஞானியார்

கால் நனைத்தவர்கள்- I

கென்டிம்மா

என் பால்யவயது
கிராமத்து
ஏழை செவிலித்தாய்!

விவரம் தெரியா வயதில்
உன்னை மதித்ததில்லை
விவரம் தெரிகிறது
மதிக்க நீ இல்லை

அஞ்சு பைசா
அதிகம் செலவழித்ததற்காக
அம்மா அடித்துவிட

நீ அழைத்து
கண்ணீர் துடைத்தாய்!
கையில் காசு கொடுத்தாய்!
உன் தகுதியை மீறிய ஒரு
பத்துபைசா!

புளி ரசம்
பிடிக்குமென்று
உன் வீடு தேடி வருவேன்!

என் வருகை எதிர்பார்த்து
உனக்குண்டான கவளத்தை
எனக்கு கொடுத்தாய்!

நீ
இடம்மாறி போய்விட்டதறிந்து
அடம்பிடித்து அழுதேனாம்
அம்மா சொல்லியிருக்கிறாள்!

மாறிப்போனதோடு...
மரித்துவிட்டது பாசமும்!


உன்
மூத்த மகனால் நீ
வீதிக்கு வந்த செய்தியை
இளையமகன் மூலம்
கேள்விப்பட்டேன்.

உதவ நினைக்கையிலோ...
நாகரீகத்தில் வந்த
நாய்க்குணம் என்னை
தடுத்துவிட்டது கென்டிம்மா!

வேதனையோடு
வேண்டிக்கொண்டேன்

இறைவா!
தாயை விரட்டும்
மகன்களுக்கெல்லாம்
மரண தண்டனை கொடு!

செவிலித்தாயை மறந்த
மகன்களுக்கு
சிறை தண்டனையாவது கொடு!

என்றோ ஒருநாள்
உன் சாவுச்செய்தி
கேள்விபட்டு கூட - நான்
சங்கடப்படவில்லை கென்டிம்மா!

என்
தலைக்கணம் என்னை
தடுத்துவிட்டது


மறுஜென்மத்தில்
நம்பிக்கை இல்லை
முடிந்தால்
மறுமையில்...
மன்னிப்பு கேட்கிறேன்!

எதிர்பார்த்துக்கொண்டிரு!

-------------

மைம்பாத்தும்மா


என்
சொந்தக்கார கிழவி!

ஒருகாலத்தில்
வீட்டுக்குச்
சொந்தக்காரியாயிருந்திருப்பாள்!
இப்பொழுது
திண்ணை மட்டும்தான்...

விட்டம்பார்ப்பதுதான்...
அவளின் பொழுதுபொக்கு!

ஒரு வெத்தலை இடிப்பான்...
கொஞ்சம் அழுக்குத்துணிகள்...
சில காகிதங்கள்...
இதுதான்
அவளின் கடேசி கால சொத்து!

கடந்து செல்லும் எல்லோரையும்
தெருவில் கிடக்கும்
காகிதம் பொறுக்கிதரச் சொல்லுவாள்!

காகிதத்தை பொறுக்கி - என்
இதயம் சேகரித்தாள்!

அவளிடம்
காகிதம் வாங்கி
காசு கொடுத்த கடைக்காரன்தான்...
அவளது மரணத்தில்
முதலில் நின்றான்!

இன்றைய கவிதிறமை
அன்றே இருந்திருந்தால்
பத்திரிக்கையில் இருந்து திரும்பிய
கவிதை காகிதத்தை எல்லாம்
அவளிடமே கொடுத்திருப்பேன்!

ஒரு கவிதை காசாவது ஆகட்டுமே?

--------------

கொழும்பார்


பக்கத்து வீட்டு
வீரர்;

இருட்டை கடந்து செல்ல...
பெரும் கற்களை புரட்ட...
கல்வெடி வெடிக்க...
அவரைத்தான் அழைப்பதுண்டு

ஆகவே
எங்கள் வீதியின்
ஏழை அலெக்ஸாண்டர் அவர்;தான்!


என்மீது
பாசம் வைத்தாரா?
ஞாபகத்திலில்லை...
கிண்டலடித்திருக்கிறார்


மானத்தை டவுசரோடு
முட்செடியில் மாட்டிவிட்டு
கத்தரிக்கா தோட்டத்தை
கழிப்பறையாக்கிவிட்டு...

கால்சட்டை
நனையக்கூடாதென்று
ஒதுக்கிவிட்டபடி வந்த...
பால்ய வயதில்இ

" ஏய்
அரைப்பூலா இ அரைப்பூலா "

என
கிண்டலடிப்பார்!

அப்பொழுதெல்லாம்
அழுகை இ அழுகையாக வரும்
இப்பொழுதுதான்
கவிதை வருகிறது!

நினைத்துப் பார்க்கிறேன்
அப்படியும் வாழ்ந்திருக்கிறோம்

காலங்கள் ஞாபகங்களை
தின்றுகொண்டிருக்கிறது!

---------------

- ரசிகவ் ஞானியார்

கால் நனைத்தவர்கள்

என் வாழ்க்கையின் பல்வேறு காலக்கட்டங்களில் என் வாழ்க்கை நதியில் கால் நனைத்துவிட்டு ஓடியவர்களைப்பற்றி எழுதலாமென நினைத்தேன். இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன். கால் நனைத்துச் சென்றவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுதலாமென ஆசை..ஆனால் காலம் அனுமதிக்க வேண்டும்.இப்பொழுதான் ஆரம்பித்திருக்கிறேன்..
முடிவு ஞாபகத்தின் கைகளில்..

முதலில் என் தாயிடம் காட்டினேன்..ரசித்துவிட்டு கூறினார்கள்..எப்படிடா அந்த வயசில் நடந்தது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறது என்று?
கண்ணாடிக்குத் தெரியாமல் அவர்கள் கண்கலங்கியது எனக்கு மட்டும் தெரிந்தது.
எனக்கு எந்த விருதுமே தேவையில்லை
அந்த கண்ணீர்தான் என் கவிதையின் பரிசு.

கண்ணீரில் எரியும் குத்து விளக்குகள்

ஆணாகப் பிறந்ததாலே
ஆவின் பால் குடிக்காமல்
பெண்ணாகப் பிறந்ததாலே...
சாவின் பால் குடிக்கின்றோம்!

பல்கலைக்கழகப் பட்டங்கள் கூட...
பெயருக்குப் பின்னால்தான்
வாழாவெட்டி
தாசி
மலடி
விதவை
இந்தப் பல்லுடைந்துபோன
பட்டங்களோ
பெயருக்கு முன்னால்
பேரொளி வீசுகிறது!

ஒரு நீர்க்குமிழியை
உடைப்பதைவிடக்
குறைந்த நேரத்திலேயே
எங்கள்
மனதைச் சிதைத்து விடுகின்றனர்

வரதட்சணையுடன் வந்தால்
குளிப்பதற்கு நல்லெண்ணெய்
வெறுங்கையுடன் வந்தால்
எரிப்பதற்கு மண்ணெண்ணெய்

நாங்கள்
வாழ்க்கையென்ற இரயிலிலே
முதல் ஸ்டாப்பிலேயே
இறக்கிவிடப்பட்டவர்கள்

நாங்களும் ஒரு
டைட்டானிக் தான்
முதலிரவன்று
பிரமாண்டமாக வர்ணிக்கப்பட்டாலும்
பின்னாளில்
மூழ்கத்தானே போகிறோம்

நாங்களும் ஒரு
கால்பந்து தான்
பிறந்து வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
அடித்து அடித்து விரட்டினாலும்
தப்பியோட வழியில்லாமல்
மீண்டும் அந்த
மைதானாத்திற்குள்ளேயே
ஓடி வருவோம்

நாங்கள் ராணி என்றால்
நீங்கள் ராஜா
நாங்கள் தேவி என்றால்
நீங்கள் தேவன்
பெருமைப்படும்பொழுது மட்டும்
உங்களுக்குப் பொதுவுடமை

ஆனால்
நாங்கள் தாசி என்றால்
நீங்களென்ன தாசனா?
நாங்கள் மலடி என்றால்
நீங்களென்ன மலடனா?
சிறுமைப்படும்பொழுது மட்டும்
ஏனோ தனியுடமை?

இனியொரு
புரட்சி செய்வோம்

சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
ராமன் தீக்குளிக்கட்டும்

மாதவியைத் தேடிச்சென்றால்
கோவலனுக்கும் டைவர்ஸ் நோட்டிஸ்

வெட்கத்தையும் நாணத்தையும்
விகாரத்து செய்து விட்டுத்
தண்ணீரில் எரியும்
தணலாகக்
கண்ணீரில் எரியும்
குத்துவிளக்காக மாறுவோம்

-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு