Monday, June 26, 2006

நிலவுக்கு திருமணம்

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு
புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நிலவுநண்பன் தன்னுடைய திருமண தகவலை தெரிவிக்காமல் இருந்தால் அது துரோகமல்லவா..?


நிலவு துபாயிலிருந்து 21ம் தேதி புறப்பட்டு 22ம் தேதி இந்தியா வந்தடைந்தது.
பயணக்காரன் பைத்தியக்காரன் என்று எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லுவதுண்டு. அதுபோல பயண தேதி முடிவானதிலிருந்து எதுவுமே ஓடவில்லை.

ஷாப்பிங் - லக்கேஜ் - விடைபெறுதல் என்ற பரபரப்பான சூழ்நிலையினில் வலைப்பதிவில் தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஆகவேதான் நண்பர் முத்துக்குமரன் அவர்கள் என்னுடைய சார்பில் அவரது வலைப்பதிவில் தெரியப்படுத்தினார். அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னடா நிலவு நண்பன் சொல்லாமல் சென்றுவிட்டாரே என்று நண்பர்கள் மத்தியில் உள்ள சலசலப்பை நீக்குவதற்காகத்தான் கடுமையான வேலைப்பளுவிலும் வலை நண்பர்களைத் தேடி ஓடோடி வந்திருக்கின்றேன்.

பேச்சிலராக சுற்றிக்கொண்டிருந்த நிலவு நண்பன் வருகின்ற ஜுலைமாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பேச்சு இலராக மாறப்போகின்றான். அதாங்க திருமணம் நடக்கப்போகுதுப்பா..

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அன்னை திருமண மண்டபத்தில் வைத்து எனக்கும் என்னுடைய கல்லூரி தோழி ஜஹான் என்ற பெண்ணிற்கும் திருமணம் இறைவனின் கண்காணிப்பில் நடக்கவிருக்கின்றது.
Photobucket - Video and Image Hosting

நிலவை ரசித்தவன்
நிலவில் வசிக்கப்போகின்றான்

இடங்களின் தூரங்கள்
அதிகமாய் இருந்தாலும்
இதயங்களின் தூரத்தைக்
குறைத்துக் கொண்டு வாருங்கள்.

வெறுப்புகள் - பொறாமைகள் - வஞ்சகங்களை
திருமண மண்டபத்தின்
வாசலில்
செருப்புகளோடு கழட்டிப்போடுங்கள்.

நட்புகள் - பாசங்கள் - அன்புகள் உடன்
மணமேடையில்
எங்கள் மீது
பொறுப்போடு பூக்கள் போடுங்கள்.

மின்னஞ்சலோ
குறுந்தகவலோ
கடிதங்களோ
தந்தியோ
எந்த ஊடகம் வழியேனும்
பூக்கள் வீச அனுமதியுண்டு

மறந்து போச்சு
வேலை அதிகம்
நேரம் இல்லை
முக்கிய திருமணம் என்ற
எந்த அலட்சியம் வழியேனும்
பொய்கள் வீச அனுமதியில்லை.

வாழ்த்துக்கள் வரட்டும் விரைந்து - ஆனால்
நேரில் வந்தால்தான் விருந்து

---


இதோ
தத்தி நடந்த பறவைகளுக்கு
சிறகுகள் முளைக்கின்றது.

குழந்தையை விரல்பிடித்து
வழிநடத்தும் தாய்போல
எங்களை
இதயம் பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்

விண்நோக்கி
பறப்பதற்காய் புறப்படுகின்றோம்

கழுகுகள்
கண்விட்டுத் தப்பிக்கவும்
குருவிகளோடு
கொஞ்சி விளையாடவும்
கற்றுத்தாருங்கள்

கைகள் இணைந்து
கனவுகள் மெய்யாகட்டும்
அன்புகள் கலந்த
ஆசிர்வாதங்களே மொய்யாகட்டும்

இந்த அழைப்பிதழில் எங்கேனும்
வார்த்தைகளில்
பிழையிருந்தால் விட்டு விடுங்கள்.

நாங்கள் வாழும்காலம் முழுவதும்
வாழ்க்கையில்
பிழையிருக்காதென வாழ்த்துக் கொடுங்கள்.

நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் காத்திருக்கின்றாளே என்ற ஒரு எதிர்பார்ப்புகளில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். கமுவில் இருந்ததைப்போல கபியில் இருக்க முடியாதே. என்ன செய்ய..? சுதந்திரம் பறிபோவது போல இருக்கிறதே என்ற பயம் கலந்த மன ஓட்டத்தில் நாட்களை எண்ணுகின்றேன்.

முன்பெல்லாம் வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டே தூங்கிவிடுவேன். மின்சார செலவை பொருட்படுத்தாமல் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு வேடிக்கைப் பார்ப்பேன். ஆனால் இப்போது ஒவ்வொரு விளக்காக தேடி எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க முற்படுகின்றேன். அட நமக்கும் பொறுப்பு வந்துடுச்சுங்க..

எங்கெங்கோ இருந்துகொண்டு முகம் தெரியாமல் நம்முடைய எல்லா உணர்வுகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே என்னுடைய திருமணத்திற்கு தங்களின் வருகை - வாழ்த்து - ஆசிர்வாதங்கள் எல்லாம் மிக அவசியம்.
நாம் வலைகளில் மட்டுமே பழக்கப்பட்டிருந்தாலும் நம்முடைய நட்புகள் விலை கொடுத்து வாங்க முடியாதது.

வாழ்த்து தெரிவிக்க அல்லது நேரில் வர விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். (00919843547888)

திருமணத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு முன்னரே தகவல் தெரிவித்தால் நல்லது என்று எண்ணுகின்றேன்.


என்னை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இது எனக்கு தமிழ்மணம் தந்த கல்யாணப்பரிசாக ஏற்றுக்கொள்கின்றேன். இதனைப்பற்றிய பதிவினை அடுத்த பதிவாக தருகின்றேன்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

69 comments:

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே!
இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமே, கல்யாண வாழ்விலும் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

Nilavuku "THANE NILAVU" Valthukkal

Mansoor

Priya said...

Hearty congrats and wish you a (advance)happy married life !!!!
Atleast you can think your friends when you eat those nice and spicy biriyani at marriage......

Priya said...

Wish you a happy married life moon.

பொன்ஸ்~~Poorna said...

//இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது//

என்னங்க ஞானியார், இப்படிச் சொல்லிட்டீங்க.. அவங்களையும் கூட்டிட்டுப் போவீங்க.. அவ்வளவு தானே?!! நிலவின் ரசிகையாச்சே அவங்க.. நீங்க பயம்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை :))

சிவமுருகன் said...

வாழ்த்துக்கள் நன்பரே.

Unknown said...

வாழ்த்துகள் நண்பரே!!

சிவராமன் கணேசன் said...

இனிய இல்லறத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பர்.

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் திருமணத்திற்கும், நட்சத்திரமானதற்கும்...

நன்றி
குழலி

Anonymous said...

ungal thirumanattirku vaztthukkal

மஞ்சூர் ராசா said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,

ப்ரியன் said...

வாழ்த்துக்கள் நண்பா...

நிலவு திருமண நட்சத்திரமாவதற்கும் , தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கும்...

எனக்கு பிரியாணி சாப்பிட ஆசைதான் ஆனால்,அசைவம் சாப்பிடமாட்டேன்;எனக்காக ஒரு வெஜ் பிரியாணி ரெடி பண்ணிடுங்க வந்துட்டே இருக்கேன்

நாமக்கல் சிபி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஞானியாரே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நிலவு நண்பன் உங்கள் மண வாழ்வு இனிதே அமைய வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் ரசிகவ்!!!

நட்சத்திரம் ஆனதற்கும்...

மணவாழ்க்கை மணக்கவும்...

அன்புடன்,
அருள்.

கைப்புள்ள said...

என் உளங்கனிந்த வாழ்த்துகள் ரசிகவ். தங்கள் இல்லற வாழ்வும் வரும் நாட்களும் எல்லா வகையிலும் இனிதே அமைய என் வாழ்த்துகள்.

மணியன் said...

நிலவுக்கு நட்சத்திரம் கிடைத்த நேரம் தமிழ்மணநட்சத்திரம் ஆனது நல்ல அறிகுறியே. புதுமணமக்கள் இறையருளால் அன்பும் அறனும் உடைத்தாய நல்லறம் நடத்திட வாழ்த்துக்கள் !!

மகேஸ் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஞானியாரே.
உங்க பின்னாடியே நானும் நெருங்கி வந்துக்கிட்டிருக்கேன். :))

ilavanji said...

ரசிகவ்,

நட்சத்திரத் திருமண வாழ்த்துக்கள்!!!

பத்திரிக்கை அருமையா வந்திருக்கு!

gulf-tamilan said...

>>வாழ்த்துக்கள்>>

சிங். செயகுமார். said...

gnaani congrats we meet on ur marriage

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் ரசிகவ்...
இந்த வார நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள்.
அவங்கவங்க சௌகரியத்தைத் தெரிஞ்சுக்காம தான் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக்குவாங்களா? தினம் தினம் ஜஹானைப் பார்க்கப் போவீங்களா இல்ல பிரவுசிங் சென்டர்ல உக்காந்துட்டு நட்சத்திரப் பதிவு போடுவீங்களா?!

Prabu Raja said...

வாழ்த்துக்கள் நிலவு நண்பரே!

Unknown said...

தமிழ்மணத்தில் நட்சத்திரமாவதற்கும்,திருமண வாழ்வில் நட்சத்திரமாவதற்கும் வாழ்த்துக்கள் ரசிகவ்.

Santhosh said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராகவ், காதல் திருமணம் போல இருக்கிறது.. :))

Unknown said...

வாழ்த்துக்கள் ரசிகவ் திருமணத்திற்கும், நட்சத்திரமானதற்கும்.

துளசி கோபால் said...

//இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் ....//

அதான் இந்த வார நட்சத்திரமா இருந்துட்டுப்போயிடறேன்னு சொல்றீங்களா?

இனிமே உங்களுக்குன்னு ஒரு நட்சத்திரம் வந்துருச்சுல்லே?

வாழ்த்து(க்)கள் ரெண்டு இடத்திலும் ஜொலிக்க!

Sivabalan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

Mani said...

இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.

திருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.

எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

ப்ரியமுடன்,
மணி.

தாணு said...

பேச்சிலர் `பேச்சு' இலர் ஆவதுதான் திருமணமா? இத்தனை நாள் தெரியாமல் போச்சுதே! அதான் என்னவர் அநேகமாக மெளனமாகவே இருந்துவிடுகிறாரோ? விசாரிக்கணும்

நெல்லைக் கிறுக்கன் said...

மக்கா,
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். உம்ம நிக்காவுக்கு நேர்ல வந்து வாழ்த்திட்டு, பிரியாணி சாப்டுட்டு போக ஆசயாத் தான் இருக்கு...

Anonymous said...

வாழ்த்துக்கள் நிலவு நண்பா. உங்களுக்கும் உங்கள் நிலாவுக்கும்.

James said...

manamartha vazhthukkal nanbarae..
maha nanadrai ezhthuhireenga...
thirumana vazhkai vetriharamai amaya vazhthukkal

James said...

manamartha vazhthukkal nanbarae..
maha nanadrai ezhthuhireenga...
thirumana vazhkai vetriharamai amaya vazhthukkal

அருள் குமார் said...

வாழ்த்துக்கள் ஞானியார் :)

அழைப்பிதழ் மிக அழகாக இருக்கிறது. இப்படி ஒரு அழைப்பிதழுக்காகவே திருமணம் செய்யதுகொள்ள வேண்டும்போலிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :)

Machi said...

திருமண நல்வாழ்த்துக்கள் நிலவு நண்பரே. இந்த வார நட்ச்சத்திரம் திருமண நட்சத்திரம். அசத்துங்க.

சீனு said...

thirumana valthukkal....kavithai kelapputhu....

Chellamuthu Kuppusamy said...

அழைப்பு அருமை!

இனிய மணவாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

//நீங்க பயம்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை :)) //

பொன்ஸ்.. ஞானியாரை விட நீங்க பெரிய ஞானி போல இருக்கு..

பொன்ஸ்~~Poorna said...

அருள்,

//இப்படி ஒரு அழைப்பிதழுக்காகவே திருமணம் செய்யதுகொள்ள வேண்டும்போலிருக்கிறது //

அப்போ அடுத்த பத்திரிக்கை உங்களுது தானா? :)))

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள்!

VSK said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

//அப்போ அடுத்த பத்திரிக்கை உங்களுது தானா? :)))//

இல்லங்க, நானே லைன் கிளியர் ஆகாதா சோகத்துல இருக்கேன்... நீங்க வேற... :((

வஜ்ரா said...

இரண்டிற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...!

VSK said...

நிலவைக் கண்டு,
நிலவை ரசித்து,
நிலவை அடைய
நிறையக் கனவுடனே
நித்தமும் முனைந்து
நிலவை நோக்கி
நெஞ்சப் பயணமாகி
நிலவை இன்று
நிக்காஹ் செய்யும்
நிலவு நண்பனே!
நினக்கு வாழ்த்துகள்!

நிலவின் அழகினை ரசித்து வந்தாய் இதுவரை!
நிலவில் குளுமை உண்டு, களிப்பும் உண்டு
நிலவில் மேடும் உண்டு, பள்ளங்களும் உண்டு
நிலவை நேசித்து, நிலவு முகம் வாடாமல்
நிலவின் நண்பனாய், நெருங்கிய தோழனாய்
நிலவைப் பேணி, போற்றி,பகிர்ந்து, பணிந்து
நிலவுள்ள வரை, நிலமுள்ள வரை
நிடூழி வாழ வாழ்த்துகிறேன்!

Suka said...

வாழ்த்துக்கள் ரசிகவ்..

ஞானவெட்டியான் said...

அன்பு ஞானி,
இல்லற வாழ்வில் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே நீடூழுவாழ என் இதயங்கனிந்த நல்லாசிகள்.

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மன்னித்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் தனித்தனியாக பதிலளிக்க விருப்பம்தான். ஆனால் நேரமின்மையால் இயலவில்லை.
வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சிவாஜி said...

இனிய திருமண வாழ்த்துக்கள் ..!

சிவாஜி said...

இனிய திருமண வாழ்த்துக்கள் ..!

சிவாஜி said...

இனிய திருமண வாழ்த்துக்கள்

தருமி said...

நீங்கள் வாழும்காலம் முழுவதும்
வாழ்க்கையில்
பிழையிருக்காதிருக்க....

வாழ்த்துக்கள்.

enRenRum-anbudan.BALA said...

இனிய இல்வாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே !
என்றென்றும் அன்புடன்
பாலா

U.P.Tharsan said...

நிலவு நன்பா "வம்பா" ஒரே வாழ்க்கைப்பாதையில் சேர்ந்து பயனிக்கும் இரண்டு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்... திருமண வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

சின்னா (சின்ன ஞானி)
நம்ம பெரிய ஞானி (ஞானவெட்டியான்)
வாழ்த்து வந்துடுச்சு போலிருக்கே :-)

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் நிலவு நண்பரே. சென்னையில் ஏதேனும் வரவேற்பு நிகழ்ச்சி உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ரசிகவ்,

இன்று போல் என்றும் வாழ்த்துக்கள்

Chandravathanaa said...

ரசிகவ் ஞானியார் & ஜகான்

ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதியென்று
இல்லறம் கண்டிடுக இனிதாக

நட்புடன்
சந்திரவதனா

உங்கள் நண்பன்(சரா) said...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..
பின்னுட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி...
என்னடா நிலவு நண்பனுக்கு வாழ்த்து சொன்னால் இவன் நன்றி சொல்கிறானே என்று பார்கின்றீர்களா..?
ரசிகவ் புதுமாப்பிள்ளை so கொஞ்சம் busy ,மாப்பிளை தோழன் தான் வந்தவர்களை வரவேற்க வேண்டும் எனவே தான் நான் உங்களை வரவேற்கிறேன்,
என் வலைப்பூ நண்பன் ரசிகவ் ஞானியாரின் திருமணத்திற்க்கு வாழ்த்து (பின்னூட்டம்)அனுப்பிய பின்வரும் வலைப்பூ நண்பர்கலுக்கு என் நன்றி...
1,நாகை சிவா
2,priya
3,பொன்ஸ்
4,சிவமுருகன்
5,கல்வெட்டு
6,சிவராமன் கணேசன்
7,குழலி / Kuzhali
8,மஞ்சூர் ராசா
9,ப்ரியன்
10,நாமக்கல் சிபி @15516963
11,குமரன் எண்ணம்
12,அருட்பெருங்கோ
13,மணியன்
14,மகேஸ்
15,இளவஞ்சி
16,gulf-tamilan
17,சிங். செயகுமார்
18,சேதுக்கரசி
19,பிரபு ராஜா
20,$elvan
21,கைப்புள்ள
22,சந்தோஷ்
23,அப்டிப்போடு
24,துளசி கோபால்
25,Sivabalan
26,Mani
27,தாணு
28,நெல்லைகிறுக்கன்
29,அன்புத் தோழி தயா
30,James
31,அருள் குமார்
32,குறும்பன்
33,Seenu
34,Kuppusamy Chellamuthu
35,பொன்ஸ்
36,டிசே தமிழன்
37,அருள் குமார்
38,வஜ்ரா ஷங்கர்
39,SK
40,Suka
41,ஞானவெட்டியான்
42,Dev
43,பொறியாளர்
44,Dharumi
45,enRenRum-anbudan.BALA
மற்றும் பெயர் தெரியாத அந்த இரண்டு anonymous க்கும் நன்றி....


அன்புடன்...
சரவணன்.

தனசேகர் said...

இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.

திருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.

எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

நளாயினி said...

ஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய்.

நளாயினி said...

ஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நளாயினி said...
ஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய். //

தாமதமாய் வாழ்த்துக்கள் வந்தாலும் பரவாயில்லை..ஞாபகம் வைத்து வாழ்த்தியதற்கு நன்றி நளாயினி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dhanasekar B said...
இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.

திருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.

எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். //


அதெப்படி விடுவேன் தனசேகர்..நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//என் வலைப்பூ நண்பன் ரசிகவ் ஞானியாரின் திருமணத்திற்க்கு வாழ்த்து (பின்னூட்டம்)அனுப்பிய பின்வரும் வலைப்பூ நண்பர்கலுக்கு என் நன்றி...//

என்னுடைய சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாப்பிள்ளைத் தோழன் உங்கள் நண்பனுக்கு நன்றி நன்றி நன்றி

யாழினி அத்தன் said...

ஞானியாரே,

திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

குடும்பஸ்தன் ஆகிவிட்டால் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் கிடைக்காது. உங்கள் கவிச் சேவையை மறக்காமல் தொடரவும்.

அன்புடன்
யாழினி அத்தன்

Mahe said...

UNGAL THIRUMANA AZHAIPPITHAL, ARUMAI NANBARE !!! ATHILIRUNDHA SILA VARIGALAI, YEN THIRUMANA AZHAIPPITHALIL PATHITHU KONDEN. UNGAL VAAZHTHUKKALUKKAAHA KAATHIRUKUM,

MAHENDRAN B

THIRUMANA NAAL: 8TH, DEC 2008

thirumaha said...

thirumana vallthukkal annpareeee

JEYAN M R said...

http://jeyan-kavithai.blogspot.com/

தேன் கூடு