Tuesday, May 02, 2006

எய்ட்ஸ் வேணுமா எய்ட்ஸ்

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நாம் போய் மோதினால் தான் விபத்து வருமா..நம் மீது யாரும் மோதினாலும் விபத்துதான். இந்தச் சம்பவமும் அதுபோலத்தான்.

விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக ப்ளாட்பாரத்தில் - சாலையோரங்களில் - சந்து பொந்துகளில் சுத்தமில்லாத உணவினை வாங்கி உண்பவர்களுக்கு ஓர் சிறிய எச்சரிக்கை.
அப்படி உண்பதால் உங்களுக்கு எய்ட்ஸ் கூட வரக்கூடுமோ..?

"என்னடா! எய்ட்ஸ் நோயாளியை முத்தம் கொடுக்கலாம்
அவர்களோடு ஒரே தட்டில் சாப்பிடலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆனால் இவன் என்ன உணவில் கூட எய்ட்ஸ் வரும் என்று சொல்லுகிறானே" என்று அதிர்ச்சியடைய வேண்டாம்.. இங்கே பாருங்கள்..

பெங்களுரில் பத்து வயது சிறுவன் ஒருவன் சுமார் 15 நாட்களுக்கு முன்பாக சாலையோரக்கடையில் பானிபூரி சாப்பிட்டிருக்கின்றான். சாப்பிட்ட நாளிலிருந்து அவன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தான். பின்னர் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதிர்ச்சியாக கூறினார்கள்..

அந்த சிறுவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று.. அந்தச் சிறுவனின் பெற்றோர்களால் இதனை சிறிதும் நம்ப முடியவில்லை..

உதிரிப்பூவாய் உயிரைக் குடிக்கும்
எதிரிக்கு கூட எய்ட்ஸ் வேண்டாம்.


அதன்பிறகு அந்தப்பெற்றோர்கள் தங்களது உடலை சோதனையிட்டார்கள். ஆனால் அவர்களது பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் அறிகுறிகளே கிடையாது.

உடனே மருத்துவர்கள் துருவி துருவி விசாரித்ததில் நோய்வாய்ப்பட்ட நாளில் அந்தச்சிறுவன் தான் இறுதியாக சாப்பிட்ட பானிபூரியைப் பற்றி கூற உடனே பெங்களுர் மல்லையா மருத்துவமனையில் இருந்து ஒரு குழு இந்தச் சிறுவன் பானிபூரி சாப்பிட்ட சாலையாரக்கடையில் விசாரிக்க சென்றனர்.

அந்த பானிபூரி விற்பனை செய்பவன்; வெங்காயம் வெட்டும்போது தவறுதலாய் கைகளில் பட்டு ஒரு சிறு வெட்டுக்காயம் இருந்திருக்கிறது. அவன் பானிபூரி தயார் செய்யும்பொழுது அந்தக் காயத்திலிருந்து இரத்தம் கசிந்து அந்த உணவில் கலந்திருக்கின்றது.

அவனை அந்தக்குழு சோதனையிட்டபொழுது உறுதி செய்தனர்..ஆம் அவனுக்கு எய்ட்ஸ் கிருமிகள் இருந்திருக்கிறது.. இதில் கொடுமை என்ன வென்றால் இந்த விசயம் அவர்கள் கூறித்தான் அந்த விற்பனை செய்வனுக்கே தெரியவந்திருக்கின்றது.

சாலை வியாபாரியிடம்
பூரி சாப்பிட்டுவிட்டு
காசு கொடுத்தவனுக்கு
சில்லறைக்குப் பதிலாக..
எய்ட்ஸ்தான் கிடைத்திருக்கின்றது


இப்பொழுது அந்தச் சிறுவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. அந்த சிறுவனை குணப்படுத்துவதற்காக உங்களிடம் பண உதவிகள் எல்லாம் கேட்கவில்லை.

இந்த தகவலை சாலையோரத்தில் சாப்பிடும் தங்களது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு தங்களின் பிரியமானவர்களுக்கு எல்லாம் பரப்புங்கள். இதனைப்பற்றிய ஒரு விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுங்களேன். அவர்கள் கொஞ்சம் கவனமாய் இருப்பார்கள் அல்லவா..


எய்டஸ் நோயின் பாதிப்பினை பற்றி தெரியாதவர்களுக்காக கென்யாவைச்சேர்ந்த இந்தப்பெண் தவறான தொடர்பு கொண்டு எய்டஸ் நோயால் பாதிக்கப்பட்டாள்.







எய்ட்ஸ் நோய் வந்த பிறகு இவள் எப்படி உயிரோடு செத்துக்கொண்டிருக்கின்றாள் என்பதைப் பாருங்கள் நண்பர்களே..



மண்ணிலே மாதர் பல நாடி வந்தாலும்
கண்ணிலே கண்டவளும் குடி புகுந்தாலும்
விண்ணிலே வெண்ணிலவின் சரசம் போல
என்னிலே நீயிருந்தால் எப்படியடி எய்ட்ஸ் வரும்?


கவனமாய் இருங்கள். உணவும் உணர்வும் சுத்தமாக இருக்கட்டும்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

28 comments:

Anonymous said...

ரசிகவ் நீங்கள் கூறுவது போல் பானிபூரி சாப்பிட்டதால் ஒரு சிறுவனுக்கு எய்ட்ஸ் என்பது சாத்தியமே இல்லை !

அதற்கான காரணங்கள்

1.எய்ட்ஸ் கிருமிகள் வெளிவெப்பசூழழுக்கு உட்படும்போது அதனால் சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது.

2.எய்ட்ஸ் வைரஸ் பாதித்த ஒருவருடன் ஒரே உணவு பாத்திரங்கள், டாய்லெட், ஒரே அறை/ வீடு அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

3. ஏன் முத்தம் கூட கொடுக்கலாம் , முத்தம் கொடுபவரின் வாயினுள் ரத்தக்கசிவு உள்ள காயம் ஏதும் இல்லாதவரை !

4.எய்ட்ஸ் கிருமிகள் 95% பாலியல் தொடர்பினாலேயே பரவுகின்றன.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையின்படி நடக்க சாத்தியமே இல்லை எனலாம்.

எய்ட்ஸ் பற்றி பீதியடைய வேண்டாம். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதுவும் ஆஸ்துமா போன்ற ஒரு நேய்தான்.வாழ்நாள் முழுதும் இருக்கும் ஆனாலும் அவர்களால் நல்ல வாழ்க்கையை வாழமுடியும்.

Anonymous said...

Hi Friend,

It is Shocking! Can you get me the newslink about this affected Bangalore kid?

Cheers,
Sriram

Anonymous said...

நீங்கள் தவறான தகவலைத் கொடுத்துள்ளீர்கள்....எயிட்ஸ் கிருமியால் சாதாரண வெப்ப நிலையில் சிறிது நொடிகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது...தயவு செய்து இப்படி "wrong information" கொடுக்காதீர்கள்..

Anonymous said...

Arumiyaana Pathivu gnaniyar. Sapidura Porulunga moolam AIDS Paravumaannu muthalla Yosichaen. Paan Pooringarathaalae nichayam Nadantha Sampavama thaan irukkum.Udanae Karuthai Therivikka Phone Panninaen.Neenga edukkalai.ValaiPoovil Muthalaam Aandu Niraivu Kandamaikku Vaalthukkal.

Nadpudan
S.Ramu

Thats Secret said...

உண்மையா என விவாதிக்க விரும்பவில்லை பெரும்பாலும் மெயிலில் வரும் விஷயங்கள் டுபாக்கூர் தான் ஃபோட்டோஷாப்பில் வேலை காட்டுவார்கள் (நானே நண்பர்களுக்காக செய்திருக்கிறேன்) எளிதில் நம்ப வேண்டாம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Arumiyaana Pathivu gnaniyar. Sapidura Porulunga moolam AIDS Paravumaannu muthalla Yosichaen. Paan Pooringarathaalae nichayam Nadantha Sampavama thaan irukkum.Udanae Karuthai Therivikka Phone Panninaen.Neenga edukkalai.ValaiPoovil Muthalaam Aandu Niraivu Kandamaikku Vaalthukkal.

Nadpudan
S.Ramu //



ம் நன்றி ராமு..

நான் வேலைப்பளுவில் இருந்ததால் தங்களுடன் பேச முடியவில்லை..

ஆர்வத்தோடு விமர்சிக்க முனைந்ததற்கு நன்றி

நாமக்கல் சிபி said...

ஞானியாரே! எனக்கு சில ஐயங்கள்! தவறிருந்தால் திருத்தவும்.

ஒரு தவறான செய்தி பரவி பீதியைக் கிளப்பி விடலாகாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

நாங்கள் டிப்ளமோ படித்தபோது எய்ட்ஸ் விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்தார்கள். அதில் எயிட்ஸ் இருப்பருடைய ரத்தம் வெளியில் வந்தவுடன் அதாவது காற்றில் பட்டவுடன் எயிட்ஸ் கிருமிகள் இறந்துவிடுமென்று கூறியதாக நினைக்கிறேன். மேலும் அது இன்னொரு ரத்தத்துடன் கலக்கும்போதுதான் தொற்று ஏற்படக் கூடுமென்றும் நினைக்கிறேன்.

உண்மையிலேயே இப்படி உணவின் வழியே உட்செல்லுமா என்று தெரியவில்லை. தயவு செய்து சற்று விசாரித்து கூறவும்.

Radha N said...

உண்மையில் இப்படியொரு கொடுமை நடந்திருப்பதைக்கண்டு வேதனைப்படுகின்றேன். இதனை விதி என்பதா? இல்லை......

எப்படியோ இனிமேல் இப்படிக்கூட நடக்கும் என தெரியவந்துள்ளது. நாம் தான் முன்னெச்சரிக்கையா இருக்கவேண்டும். கூடுமானவரை அனைவரையும் எச்சரிப்போம்.

தங்களது பதிவுக்கு மிக்க நன்றி!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dr.விஜய் said...
ரசிகவ் நீங்கள் கூறுவது போல் பானிபூரி சாப்பிட்டதால் ஒரு சிறுவனுக்கு எய்ட்ஸ் என்பது சாத்தியமே இல்லை ! //




நன்றி விஜய் அவர்களே..கண்டிப்பாக தங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற மருத்துவ கட்டுரைக்கு பதிலளித்தால்தான் சரியான விளக்கம் கிடைக்கும்

பானிபூரி உட்கொண்டது எய்ட்சுக்கு காரணம் என்று கூறவில்லை. அந்த
வியாபாரியின் கைகளில் இருந்து கசிந்த இரத்தம் தான் காரணம் என்று தகவல் எனக்கு அனுப்பபட்டுள்ளது.

எதற்கும் நாம் உணவுப்பொருட்களை சுகாதாரமான இடங்களில் சென்று உட்கொள்ளுவது நல்லதல்லவா..?

தங்களின் விளக்கத்திற்கு நன்றி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
உண்மையில் இப்படியொரு கொடுமை நடந்திருப்பதைக்கண்டு வேதனைப்படுகின்றேன். இதனை விதி என்பதா? இல்லை......

எப்படியோ இனிமேல் இப்படிக்கூட நடக்கும் என தெரியவந்துள்ளது. நாம் தான் முன்னெச்சரிக்கையா இருக்கவேண்டும். கூடுமானவரை அனைவரையும் எச்சரிப்போம்.

தங்களது பதிவுக்கு மிக்க நன்றி!! //



நன்றி நாகு.. முடிந்தவரை சுத்தமான உணவை வாங்கி உண்போமே..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Gokul Kumar said...
உண்மையா என விவாதிக்க விரும்பவில்லை பெரும்பாலும் மெயிலில் வரும் விஷயங்கள் டுபாக்கூர் தான் ஃபோட்டோஷாப்பில் வேலை காட்டுவார்கள் (நானே நண்பர்களுக்காக செய்திருக்கிறேன்) எளிதில் நம்ப வேண்டாம். //



பானிபூரியைப்பற்றி சொல்லுகின்றீர்களா..? இல்லை கீழுள்ள புகைப்படத்தை பற்றிச் சொல்லுகின்றீர்களா..?

இரண்டு நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இ;ல்லை.. இரண்டும் வௌ;வேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டது..

இந்தப்பதிவில் நான் பிரசுரித்த புகைப்படம் கென்யாலைச் சார்ந்த அந்தப்பெண்ணைப்பற்றியது மிக உண்மை..

எய்ட்ஸ் பற்றிய பயத்திற்காக அந்தப்புகைப்படத்தை நான் பிரசுரித்தேன்.. அது கென்யாவில் உள்ள மோய் பல்கலைக்கழகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ( அதற்கென்று தனி பதிவே போடலாம் என்று நினைத்திருந்தேன் ) தவறான உடலுளவு கொள்ளாதீர்கள் .. இதுபோல பாதிக்கப்படுவீர்கள் என்று சொல்லுவதற்கு ஏன் ஏமாற்றி சொல்ல வேண்டும்..

அதுபோல பானிபூரி விசயத்தில் சுகாதாரமாய் சாப்பிடுங்கள் ..இப்படியும் எய்ட்ஸ் வரக்கூடும் என்றுதானே விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது..

நன்றி தங்களின் அக்கறைக்கு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Sriram said...
Hi Friend,

It is Shocking! Can you get me the newslink about this affected Bangalore kid?

Cheers,
Sriram //



நன்றி Sriram..அந்த மின்னஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
நீங்கள் தவறான தகவலைத் கொடுத்துள்ளீர்கள்....எயிட்ஸ் கிருமியால் சாதாரண வெப்ப நிலையில் சிறிது நொடிகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது...தயவு செய்து இப்படி "wrong information" கொடுக்காதீர்கள்.. //



நன்றி நண்பா..தங்களது பெயர் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
டாக்டர் விஜய் அவர்களும் இதைத்தான் கூறினார்கள்.. அதன் பதிலைப் படிக்கவும்.

சிங். செயகுமார். said...

நிலவு நண்பரே அதான் டாக்டர் விஜய் சொல்லிட்டாருல்ல.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சிங். செயகுமார். said...
நிலவு நண்பரே அதான் டாக்டர் விஜய் சொல்லிட்டாருல்ல. //



ஆமாங்க.. அதன் படி விழிப்புணர்வாய் இருப்போம்.

தலைவரு..டாக்டரு விஜய் தானுங்கோ..

Unknown said...

டாக்டர் கூறியுள்ளது போல இம்மாதிரி பரவல் சாத்தியமில்லை. சிறிது காலத்திற்கு முன்பு, நமது ஊரில் 'ஷ்வர்மா' சாப்பிட்ட பையனுக்கு இந்த மாதிரி எய்ட்ஸ் வந்ததாக ஒரு மெயில் பரவிக்கொண்டு இருந்தது. அதன் மறுவடிவமே இது.

அந்தப்பெண்ணின் படம் - நல்ல பயத்தைக் கொடுக்கும். பையனைப்பற்றிய கதையோ சுத்த பேத்தல், பேத்தலைத் தவிர வேறு ஒன்றுமில்லை!

Muse (# 01429798200730556938) said...

>>>>தவறான உடலுளவு கொள்ளாதீர்கள்<<<<

என்னைக் கேட்டால் உடலுறவே கொள்ளாதீர்கள் என்பேன். அது இல்லாமலேயே நிம்மதியாக இருக்க முடியுமே.

எந்த புற்றில் எந்த பாம்போ.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// துபாய்வாசி said...
டாக்டர் கூறியுள்ளது போல இம்மாதிரி பரவல் சாத்தியமில்லை. சிறிது காலத்திற்கு முன்பு, நமது ஊரில் 'ஷ்வர்மா' சாப்பிட்ட பையனுக்கு இந்த மாதிரி எய்ட்ஸ் வந்ததாக ஒரு மெயில் பரவிக்கொண்டு இருந்தது. அதன் மறுவடிவமே இது.

அந்தப்பெண்ணின் படம் - நல்ல பயத்தைக் கொடுக்கும். பையனைப்பற்றிய கதையோ சுத்த பேத்தல், பேத்தலைத் தவிர வேறு ஒன்றுமில்லை! //





ம் நன்றி துபாய் வாசி..

பயம் நமக்கும் பயத்தைக் கொடுக்கும்

பேத்தல் விழிப்புணர்வைக் கொடுக்கும். என்னால் அந்த மின்னஞ்சலை நம்பாமல் இருக்க முடியவில்லை நண்பரே.. சாலையோர சுகாதாரமில்லாத உணவைச் சாப்பிடாதீர்கள் என்று ஏமாற்றுவதனால் அவர்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகின்றது.? சாலையோர வியாபாரிகளின் வியாபாரத்தை சீர்குலைக்க யாரேனும் சதி செய்திருப்பார்களோ..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Muse said...
>>>>தவறான உடலுளவு கொள்ளாதீர்கள்<<<<

என்னைக் கேட்டால் உடலுறவே கொள்ளாதீர்கள் என்பேன். அது இல்லாமலேயே நிம்மதியாக இருக்க முடியுமே.

எந்த புற்றில் எந்த பாம்போ. //



மனித குலமே இருக்காதய்யா..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நண்பரே ஏற்கனவே எய்ட்ஸ் ஊசி என்று பல வேறு வதந்திகள் வந்துள்ள நிலையில் தங்களுடைய பதிவு தவறான கருத்துக்களை பரப்புவது போல் உள்ளது.

ரோட்டோரம் உணவு விடுதி நடத்தி கொண்டு தங்களுடைய வாழ்வைக் களிக்கும் ஏழைகளின் வயிற்றில் இது போன்ற வதந்திகளைப் பரப்பி அடித்து விடாதீர்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//குமரன் எண்ணம் said...
நண்பரே ஏற்கனவே எய்ட்ஸ் ஊசி என்று பல வேறு வதந்திகள் வந்துள்ள நிலையில் தங்களுடைய பதிவு தவறான கருத்துக்களை பரப்புவது போல் உள்ளது.

ரோட்டோரம் உணவு விடுதி நடத்தி கொண்டு தங்களுடைய வாழ்வைக் களிக்கும் ஏழைகளின் வயிற்றில் இது போன்ற வதந்திகளைப் பரப்பி அடித்து விடாதீர்கள் //



நல்லது நண்பரே..நல்ல எண்ணம்தான்..

எங்கு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல..

சுகாதாரமாக சுத்தமாக இருந்தால் சாலை ஓரத்திலும் சாப்பிடலாம்

சுத்தம் இல்லையென்றால் 5 ஸ்டார் ஓட்டலில் கூட சாப்பிடகூடாது

ஸ்ருசல் said...

நிலவு நண்பன்,

டாக்டர் விஜய் போன்றவர்கள் விளக்கமாக பதிலளித்தும் கூட நீங்கள் இன்னும் கட்டுரையில் மாற்றம் செய்யாமல் இருப்பது ஏனோ?

உங்களது கட்டுரையில் குறைந்த பட்சம் அவரது மறுப்புரையாவது வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். வரும் அனைவருமே பின்னூட்டங்களை வாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

சென்ற வாரம் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இளநீருக்காக காரை நிறுத்தினோம். இளநீர் வியாபாரி வெட்டும் போது அவரது கையில் அரிவாள் பட்டுவிட்டது. கையில் கட்டு போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் இளநீர் வெட்டிக் கொடுத்தார்.

விஜய் கூறிய தகவலகளை நான் ஏற்கனவே படித்திருந்தாலும், உங்களது கட்டுரை சிறிது கிலியை ஏற்படுத்த தான் செய்கிறது. :(

நன்றி.

Prasanna said...

>>>>என்னைக் கேட்டால் உடலுறவே கொள்ளாதீர்கள் என்பேன். அது இல்லாமலேயே நிம்மதியாக இருக்க முடியுமே.<<<<<
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? என்னவோ போங்க. இதெல்லம் நடைமுறைக்கு சாதியம்மில்லை.

>>>>>எந்த புற்றில் எந்த பாம்போ<<<<<
ஏய்! இதுக்கு என்ன அர்த்தம். முதல் வாக்கியத்துக்கும் ரெண்டாவது வாக்கியத்துக்கும் பயங்கரமான முரண்பாடு.சும்ம தமாசு. சீரியசா எடுத்துக்க கூடாது.

Prasanna said...

>>>விஜய் கூறிய தகவலகளை நான் ஏற்கனவே படித்திருந்தாலும், உங்களது கட்டுரை சிறிது கிலியை ஏற்படுத்த தான் செய்கிறது. :(<<<
ஒண்ணும் ப்ரச்சின இல்லை தல. அது ஆஸ்த்துமா, சுகர் மாதிரி தான். அது பாட்டுக்கு ஓரமா இருந்திட்டு போகும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஸ்ருசல் said...
நிலவு நண்பன்,

டாக்டர் விஜய் போன்றவர்கள் விளக்கமாக பதிலளித்தும் கூட நீங்கள் இன்னும் கட்டுரையில் மாற்றம் செய்யாமல் இருப்பது ஏனோ?



விஜய் கூறிய தகவலகளை நான் ஏற்கனவே படித்திருந்தாலும், உங்களது கட்டுரை சிறிது கிலியை ஏற்படுத்த தான் செய்கிறது. :(

நன்றி. //



கட்டுரையை மாற்றம் செய்வதில் ஏதும் குழப்பமில்லை நண்பா..

இது தவறான தகவலாக இருப்பதாக..கிட்டத்தட்ட 60 சதவிகித மின்னஞ்சல் வந்துவிட்டன. சில மின்னஞ்சல்கள் திட்டியும் வந்துவிட்டன..

சாலையோரங்களில் சாப்பிடவே கூடாது என்று குறிப்பிடவில்லை.
எய்ட்ஸ் நோயாளிகளின் மீது கருணை காட்டவேண்டாம் என்று கூறவில்லை

சுத்தம் இல்லாமல் கடையோர உணவினை சாப்பிட்டதால் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது என்று கூறுவது விழிப்புணர்வுதானே..?

அது எனது தனிப்பட்ட கட்டுரையும் அல்ல. மின்னஞ்சலில் வந்தது. ஆகவே இப்படியும் நடக்க கூடுமோ என்று அஞ்சி விழிப்புணர்வினைத்தந்தேன். அந்த சம்பவம் நடைபெற்றதா இல்லையா என்பது அடுத்த விசயம்..அப்படி தவறான செய்தியை பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்..?

இனிமேல் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து தகவல் திரட்ட வேண்டும்..


நன்றி


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Prasanna said...
>>>>என்னைக் கேட்டால் உடலுறவே கொள்ளாதீர்கள் என்பேன். அது இல்லாமலேயே நிம்மதியாக இருக்க முடியுமே.<<<<<
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? என்னவோ போங்க. இதெல்லம் நடைமுறைக்கு சாதியம்மில்லை. //



அவர் ஞானி யாகப்போறாருன்னு நினைக்கிறேன்.. அட உண்மையான ஞானியைச் சொன்னேன்பா

நாமக்கல் சிபி said...

ஞானியாரே! நான் போட்ட பின்னூட்டத்தைக் காணவே இல்லையே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
ஞானியாரே! நான் போட்ட பின்னூட்டத்தைக் காணவே இல்லையே! //



இல்லை நண்பா வரவேயில்லையே...

ஏன் என்று தெரியவில்லை ..சில பின்னூட்டங்கள்; Junk Mail -l சென்று அமர்ந்து கொள்கின்றன.

Junk Mail ஐ மொத்தமாக அழித்துவிடுவதால் சில சமயம் தவறி விடுகின்றது நண்பா..மன்னித்துக் கொள்ளுங்கள்..

தேன் கூடு