Saturday, May 06, 2006

சொல்லியிருந்தால் செத்திருப்பேனே..


( என்னுடைய நண்பன் கலீல் என்ற கலீல் ஷானின் கவிதை இது. அவன் மனதில் உள்ள ஏதோ ஒரு காதலின் கசப்புணர்வில் அடிக்கடி டைரியின் வெற்றுப் பக்கங்களில் எல்லாம் காதல் கவிதைகளாக எழுதுவான். அப்படி என்னிடம் எழுதிக் கொடுத்து "டேய் என் கவிதையையும் இன்டர்நெட்டுல போடேன்" என்று கேட்டதற்கிணங்க..

தன் காதலை உயிரோடு இருக்கும்போது ஏற்க மறுத்த காதலி இவன் இறந்த செய்தி சேதி ஓடிவந்த கதறுவதைக் கண்டு பிணம் பாடுவது போன்ற ஒரு சூழலில் எழுதியிருக்கின்றான்)



கண்ணீர் சிந்தாதே...
என் கண்மணியே !
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது!

உன்னையே தேடி ...
வந்தபொழுதெல்லாம்
அலையென ஓடி
உள் வாங்கினாய் !

தமிழிலே கோடி ...
வார்த்தைகள் இருந்தும்
காதலை மூடி - என்
உயிர் வாங்கினாய்!

இன்று நாடி
ஒடுங்கிய வேளையிலே
என்னைத் தேடி
வந்தாயோ தேவதையே?

என் காதலை
உன் இதயம் வைக்க
தவறிய நீ..
என் கைகள் எடுத்து
உன் கன்னங்களில் வைக்கின்றாய்!
என் தலையை எடுத்து
உன் மடிமீது வைக்கின்றாய்!


காலம் கடந்து வந்து நீ
காதல் எய்தாய்!
கண்ணீரால் என் முகத்தில் நீ
கோலம் செய்தாய்!


என் கைகளைக் கூட
அசைக்க முடியவில்லையே?
உன் கண்ணீரைக் கூட
துடைக்க முடியவில்லையே ?


கண்ணீர் சிந்தாதே ...
என் கண்மணியே !
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது !

பெண்களில் உன்னைப்
பிடிக்கும் என்றேன்! - நீ
பேசாமல் மௌனமாய் ...
இருந்து கொண்டாய்!

கண்களில் மின்னிய
காதலைக் கூட நீ
இமைகளைக் கொண்டு
மறைத்துக்கொண்டாய்!

கவிதைகள் எழுதிக்
காட்டியபோதும் நீ
காதல் தெரியாதவள் போல ...
ரசித்துக் கொன்றாய்!

இத்தனை காலமாய்
இதழ் பிரிக்காதவள்...
இதயம் பிரிந்தபிறகு
இதயம் தருகின்றாய்!

இறந்தபிறகுதான் நீ
காதல் சொல்வாயென
இப்பொழுதுதானே நான்
தெரிந்து கொண்டேன் !

இதயம் வலித்திட
இருவிழி அழுபவளே! நீ
எப்போதாவது இதை
என்னிடம் சொல்லியிருந்தால் ...

அப்போதே நான்
இறந்திருப்பேனே..!
உனக்காக உயிர்
துறந்திருப்பேனே!

- கலீல் ஷான்

19 comments:

நாமக்கல் சிபி said...

மனசை மிகவும் வலிக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை!

//கண்ணீர் சிந்தாதே...
என் கண்மணியே !
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது!
//

இறந்தபின்னும் கூட அவள் அழுதால் இவன் இதயம் நோகிறது.


//என் காதலை
உன் இதயம் வைக்க
தவறிய நீ..
என் கைகள் எடுத்து
உன் கன்னங்களில் வைக்கின்றாய்!
என் தலையை எடுத்து
உன் மடிமீது வைக்கின்றாய்!
//

அருமையான வரிகள்.

//என் கைகளைக் கூட
அசைக்க முடியவில்லையே?
உன் கண்ணீரைக் கூட
துடைக்க முடியவில்லையே ?
//

:-(

//இத்தனை காலமாய்
இதழ் பிரிக்காதவள்...
இதயம் பிரிந்தபிறகு
இதயம் தருகின்றாய்!

இறந்தபிறகுதான் நீ
காதல் சொல்வாயென
இப்பொழுதுதானே நான்
தெரிந்து கொண்டேன் !

இதயம் வலித்திட
இருவிழி அழுபவளே! நீ
எப்போதாவது இதை
என்னிடம் சொல்லியிருந்தால் ...

அப்போதே நான்
இறந்திருப்பேனே..!
உனக்காக உயிர்
துறந்திருப்பேனே!
//

ம். மனசு மிகவும் கனத்து விட்டது ஞானியாரே!

அது சரி! உங்கள் நண்பரின் காதல் ஜெயித்ததா?

Sivabalan said...

//இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது // Excellent Lines!!

//உன் கண்ணீரைக் கூட
துடைக்க முடியவில்லையே // Wow!!

Very good Mr.கலீல் ஷான்!! Well Done!!

Thanks Mr நிலவு நண்பன்!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
மனசை மிகவும் வலிக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை!


இறந்தபின்னும் கூட அவள் அழுதால் இவன் இதயம் நோகிறது.


ம். மனசு மிகவும் கனத்து விட்டது ஞானியாரே!

அது சரி! உங்கள் நண்பரின் காதல் ஜெயித்ததா? //



ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..

இப்படி உருகி விமர்சித்ததை பார்க்கும்பொழுது எங்கையோ அடிபட்ட மா..திரி இருக்குது ;)

நன்றி விமர்சனத்திற்கு..

நாமக்கல் சிபி said...

//ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..
//

அது ஏங்க! நம்ம விமர்சனத்திற்கு நாகுவிற்கு பதில் சொல்றீங்க!

:-)

நாமக்கல் சிபி said...

//இப்படி உருகி விமர்சித்ததை பார்க்கும்பொழுது எங்கையோ அடிபட்ட மா..திரி இருக்குது ;)//

என்னோட சமீபத்திய மனசு சரியில்லை 1 & 2 பதிவுகளைப் பாருங்கள்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
// நாமக்கல் சிபி said...
//ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..
//

அது ஏங்க! நம்ம விமர்சனத்திற்கு நாகுவிற்கு பதில் சொல்றீங்க!

:-) //



அய்யோ காதல் போதையில குழம்பிட்டேம்பா..

Anonymous said...

ரசிகவ்

பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?

U.P.Tharsan said...

ஆகா மிக அருமையாக இருக்கிறது. ஓவ்வொரு வரியும் அழகாகவும் அற்புதமான கற்பனையாகவும் இருக்கின்றன.

//Kettabayan hat gesagt...
ரசிகவ்

பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?//

காதலுக்கு கண் இல்லையோ இருக்கோ தெரியவில்லை. ஆனால் கவிதைக்கு பொய்தான் அழகு. :-))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// U.P.Tharsan said...
ஆகா மிக அருமையாக இருக்கிறது. ஓவ்வொரு வரியும் அழகாகவும் அற்புதமான கற்பனையாகவும் இருக்கின்றன.

//Kettabayan hat gesagt...
ரசிகவ்

பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?//

காதலுக்கு கண் இல்லையோ இருக்கோ தெரியவில்லை. ஆனால் கவிதைக்கு பொய்தான் அழகு. :-)) //

பாராட்டியதற்கும் கெட்ட பையனுக்கும் சேர்த்து பதில் தந்ததுக்கு நன்றி தர்ஷன்

Anonymous said...

இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது!

Ithu thaan Kaathalin Vali.

( Kaathalin Symbol Ithayathai Kuthi Nirgum Ambu Allavaa ).

Dubai Raasa.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
இறந்து விட்டாபோதிலும் என்
இதயம் நோகின்றது!

Ithu thaan Kaathalin Vali.

( Kaathalin Symbol Ithayathai Kuthi Nirgum Ambu Allavaa ).

Dubai Raasa. //



நன்றி துபாய் ராஜா

நீங்களும் அந்த வலியை அனுபவிச்சிருப்பீங்களோ..

Anonymous said...

நீங்களும் அந்த வலியை அனுபவிச்சிருப்பீங்களோ....

Ivulagil Kaathal Kollaatha vuir undoo ?

( Kollaatha - Thamilil 2 Porul Tharum Padi eluthalaam.Enathu Karuthil 2 Porulumae Porunthum ).

Dubai Raasa.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ivulagil Kaathal Kollaatha vuir undoo ?

//

உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா

நாமக்கல் சிபி said...

//உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா //

காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
//உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா //

காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா?


இரண்டிற்கும் பொருந்தும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப..//

Anonymous said...

நாமக்கல் சிபி said...
காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா?


நாமக்கல் சிபி,

Enathu Karuthil 2 Porulumae Porunthum.

காதல் "கொள்ளாத" உயிரே இல்லை.
Iuvulagil ulla E,Erumpu,Pulu, Poochi, Vilangugal, Paravaigal, Manithargal Matrum Anaithu Vuirgalumae காதல் "கொள்kinrana".

காதல் "கொல்லாத" உயிரே இல்லை.
Avvaaru Kaathalikkum ella Vuirgalaiyum காதல் "கொல்kirathu".

Ithuvae Enathu Karuthu.

Gnaniyar,
Thamil Font illaama evlove KastaPaduraen Paarunga.I am waiting for u. Neenga thaan Help Pannanum.

Dubai Raja.

Radha N said...

என்ன செய்வது
கா....(தல்) என்று சொல்லும் முன்பே
'கா' விட்டு சென்றவள்,
காடு சென்றவனை
வீடு கூட்டியழுகிறாள்! இனி
விழித்தெழப்போவதில்லை
காதலோடு சேர்த்து அவனும்தான்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
என்ன செய்வது
கா....(தல்) என்று சொல்லும் முன்பே
'கா' விட்டு சென்றவள்,
காடு சென்றவனை
வீடு கூட்டியழுகிறாள்! இனி
விழித்தெழப்போவதில்லை
காதலோடு சேர்த்து அவனும்தான்!

//

புது கவிதை..புது கற்பனை..

அட கலக்குற சந்துறு.. ;)

நன்றி நாகு

Anonymous said...

thanks for all to giving comments.
actually it was a nice thought.thats all.
thanks a lot to nilavunanban for publishing my poem.
by
khaleelshaan.

தேன் கூடு