அன்புள்ள லங்காசிரி நிர்வாகத்திற்கு
எனது தூக்கம் விற்ற காசுகள் என்ற கவிதைக் குழந்தையை இன்னொரு நண்பர் தனது மனதில் கடத்தி தங்கள் மின்னிதழில் பாதுகாத்து வைத்திருக்கின்றார்.
எனது தூக்கம் விற்ற காசுகள் கவிதையை சவுதியிலிருந்து ஜெஸ்மின் என்ற நண்பர் தான் எழுதியதாக தங்களது விடுப்பு என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக கவிதையை வெளியிடுவதில் இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கின்றது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அனுபவத்தை நான் ஏற்கனவே நிறைய சந்தித்துவிட்டேன்.
தனக்கு மிகவும் பிடித்த கவிதையை தண்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதைகளை தான் எழுதியதாக இருக்ககூடாதா? என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவது இயல்புதான். அதுபோன்ற ஒரு ஆர்வத்தில்தான் நண்பர் ஜெஸ்மின் அக்கவிதையை தான் எழுதியதாக குறிப்பிட்டுளார் என்று நினைக்கின்றேன்.
எனது கவிதைகளை ஒன்றுசேர்த்து புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருப்பதனால் இதுபோன்ற நிகழ்வுகள் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுமோ என்ற குழப்பத்தில் இதனை தெளிவுபடுத்துகின்றேன்.
என்னுடைய கவிதை வேறு ஒருவர் பெயரில் வந்திருப்பதைக் கண்டு மனம் வருந்தி இதனை சிஙகப்பூரிலிருந்து தகவல் கொடுத்த நண்பர் நாச்சியப்பன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாசகர்கள் அனுப்புகின்ற கவிதைகளை உறுதி செய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களில் இந்த விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுப்புகின்ற கவிஞர்களிடமிருந்து படைப்புகள் எந்த மின்னிதழிலும் வெளியிடப்படவில்லை என்றும் சொந்தப்படைப்புதான் என்றும் ஒரு உறுதிமொழியில் அவர்கள் பிரசுரம் செய்கின்றார்கள்.
இதுபோன்று அனைத்து மின்னிதழ்களும் கடைபிடித்தால் அதன் வளர்ச்சியும் மதிப்பும் மற்றும் நம்பகத்தன்மையும் இன்னமும் அதிகரிக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
8 comments:
ஞானியார்!!கடந்த வெள்ளியன்று ஒரு இணையதளத்தில் தங்களது
'அத்தனையும் ஒருநாள் மீறப்படும்' எனும் கவிதையை ஈழத்தமிழன் இரத்தக்கண்ணீருக்கு இந்தியத்தமிழன் எழுதிய கவிதை என யாரோ அனுப்பி
இருந்ததை கண்டு,தெரிவிக்க, உங்கள்
கையடக்கபேசியில் உடனே தொடர்பு
கொண்டேன்.தாங்க்ள் எடுககவில்லை.
அன்புடன்,
துபாய் ராஜா.
நன்றி துபாய் ராஜா..நான் வேலைப்பளுவில் இருந்ததால் எடுக்க முடியவில்லை..
அந்த லிங்க் தற்பொழுது இருக்கிறதா?
கண்டுபிடித்து சொல்கிறேன் ஞானியார்.
அன்புடன்,
துபாய் ராஜா.
நன்றி துபாய் ராஜா
லங்கா சிரிக்கு தனியாய் மடலிட்டு பாருங்கள் ரசிகவ் info@lankasri.com..என் சில கவிதைகளை நண்பர்களுக்கு படங்களாய் அனுப்ப அதில் பெயர் மட்டும் நீக்கிவிட்டு திருப்பி நண்பரின் நண்பர்கள் அவரது நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள் எனக் கேள்விப்பட்டுதான் என் பெயரை வாட்டர்மார்க்காக இட ஆரம்பித்தேன்...இப்போதும் என்கவிதைகளை எங்கு இட்டாலும் என் நண்பர்கள் வட்டத்திற்கு படமாக தேதியுடன் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன் ஒரு வேளை அவை சாட்சியாக அமையும் என்ற நம்பிக்கையில்
//
ப்ரியன் said...
லங்கா சிரிக்கு தனியாய் மடலிட்டு பாருங்கள் ரசிகவ் info@lankasri.com.//
லங்காசிரிக்கும் மடல் அனுப்பிவிட்டேன். பார்ப்போம் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று.
தகவலுக்கு நன்றி ப்ரியன்.
இது எல்லாம்
நல்ல கவிஞருக்கு
அடையாளம்தானே?
இருந்தாலும்
உங்கள் உடைமையை
ஏன் விட்டுக்கொடுப்பான்?
நேசமுடன்..
-நித்தியா
// நித்தியா said...
இது எல்லாம்
நல்ல கவிஞருக்கு
அடையாளம்தானே?//
கற்பனையை திருடலாம் அனால் கவிதையை திருடக்கூடாது அல்லவா..?
Post a Comment