Wednesday, May 24, 2006

சில தூரத்து வேண்டுதல்கள்
ஒரு பயணத்தின்போது
ஏதோ ஒரு பிளாட்பாரத்தில்
இருக்கைகளில்
குத்தவைத்துக்கொண்டு
அமர்ந்திருந்த பெண்ணின்
சோகங்கள் தீர வேண்டும் !

முதல் விமான பயணத்தின் போது
அழகாய் பேசி ...
அன்பாய் உபசரித்த ..
விமானப் பணிப்பெண்
பயணிக்கின்ற ..
எல்லா விமானங்களும்
கோளாறில்லாமல் பறக்கவேண்டும் !


உடன் பயணத்தில்
பேசிக்கொண்டு வந்து
அடுத்த நிலையத்தில்
இறங்க ஆயத்தமாகும்
அழகிய பெண் ..
பத்திரமாய் வீடுபோய் சேரவேண்டும்!

ஆட்டோ கிராப்பில்
மீண்டும் சந்திப்போமென
எழுதிவிட்டு
கணவனோடு செல்கையில்
தலைகுனிந்தபடி கடந்துபோன
கல்லூரித் தோழியின் வாழ்க்கை ...
கஷ்டமில்லாமல் இருக்கவேண்டும் !


அவனை காதலித்து
அவமானப்பட்டு
காதல் தோல்வி கண்ட
அவளுக்கு ...
நல்ல கணவன் அமையவேண்டும் !

அன்று
விபத்தில் அடிபட்டு இறந்த
பெரியவரின் குடும்பம்
அவர் இருப்பின் நிலைபோல...
ஆறுதல் அடைய வேண்டும்!


நேற்று இரவில்
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த
பூனைக்கு
புகலிடம் கிடத்திருக்கவேண்டும் !

கேள்வித்தாளை வெறித்தபடியே
பயத்தோடு
பரிட்சை எழுதிய என்
பின்புற இருக்கைக்காரன் ...
வெற்றி பெற்றிருக்கவேண்டும்..!


இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் !- ரசிகவ் ஞானியார்

35 comments:

Anonymous said...

அப்படியா...வாழ்த்துக்கள்!!!
...aadhi

Anonymous said...

"முதல் விமான பயணத்தின் போது
அழகாய் பேசி ...
அன்பாய் உபசரித்த ..
விமானப் பணிப்பெண்
பயணிக்கின்ற ..
எல்லா விமானங்களும்
கோளாறில்லாமல் பறக்கவேண்டும் !
"

- Endro oru naal Indiavilirundhu parakra namakaaha nam kudumbathinar flight crash aagaama poi seranumenu evlo vendikranga.. Appo air hostess veetla dhinam vendippangannu ninaipadhundu. Hmm Gnaniyar pondra payanigal vendudhalum kooda iruku pola ... !!! Manadhai varudiya idhamaana kavidhai !!!

நிலவு நண்பன் said...

//அப்படியா...வாழ்த்துக்கள்!!!
...aadhi //

நன்றி ஆதி..

நிலவு நண்பன் said...

// Hmm Gnaniyar pondra payanigal vendudhalum kooda iruku pola ... !!! Manadhai varudiya idhamaana kavidhai !!! //


பெயர் சொல்ல மறந்தாலும் விமர்சனத்தில் உங்களது தூய மனம் தெரகின்றது..நன்றி

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வாழ்த்துக்கள்

தேவ் | Dev said...

//இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் //

அப்படியா சேதி???

அந்தக் கணிப்பொறி மாணவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
போனாப் போகுது உங்களுக்கும் வ்ச்சுக்குங்க வாழ்த்துக்கள்:)

நிலவு நண்பன் said...

//'மழை' ஷ்ரேயா said...
வாழ்த்துக்கள் //நன்றி ஷ்ரேயா.. தவைலரு எப்படியிருக்காருங்க.. :)

நிலவு நண்பன் said...

// Dev said...
அந்தக் கணிப்பொறி மாணவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
போனாப் போகுது உங்களுக்கும் வ்ச்சுக்குங்க வாழ்த்துக்கள்:) //நன்றி தேவ்..

கண்பொறிக்குள் மாட்டிய கணிப்பொறியையும் என்னையும் வாழ்த்தியதற்கு நன்றி

Naveen Prakash said...

//இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் //

இப்படியும் கூறமுடியுமா திருமண செய்தியை?? அழகு நண்பனே!!
வாழ்த்துக்கள் நிலவு நண்பனே !1

நிலவு நண்பன் said...

// Naveen Prakash said...
இப்படியும் கூறமுடியுமா திருமண செய்தியை?? அழகு நண்பனே!!
வாழ்த்துக்கள் நிலவு நண்பனே !1 //


நன்றி நவீன்..

கண்டிப்பாக அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டு

Anonymous said...

'வேண்டுதல்கள்' பலிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் ஞானியார்!!.

அன்புடன்,
துபாய் ராஜா.

jansi said...

Hey......Congrats.......!!!!
Eppa dum dum dum.....
Aama Ponnu entha ooru SENGOTTAI......a?

jansi said...

Hey......Congrats.......!!!!
Eppa dum dum dum.....
Aama Ponnu entha ooru SENGOTTAI......a?

நிலவு நண்பன் said...

//'வேண்டுதல்கள்' பலிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் ஞானியார்!!.//


நன்றி துபாய் ராஜா..

நிலவு நண்பன் said...

//jansi said...
Hey......Congrats.......!!!!
Eppa dum dum dum.....
Aama Ponnu entha ooru SENGOTTAI......a? //நன்றி ஜான்ஸி..

டும் டும் டும் க்கான அழைப்பிதழ் சீக்கரமாய் வரும்

பொண்ணு செங்கோட்டை இல்லை இதயக்கோட்டை..
( எதை வச்சு செங்கோட்டையான்னு கேட்டீங்க..?)

தேவ் | Dev said...

ம்ம் நிலவு நண்பன் பெயர் காரணம் புரியுதுங்க பிரதர்...

சரி நிலவுக்கும் நண்பனுக்கும் கல்யாணம்...அங்கே நம்ம கூட்டம் எல்லாம் ஊர்வலம்.

இது நம்ம வீட்டு கல்யாணம்... எப்போப்பா கல்யாணம்?:)))

priya said...

//அவனை காதலித்து
அவமானப்பட்டு ( its not a shame to fall in love and to fail)
காதல் தோல்வி கண்ட
அவளுக்கு ...
நல்ல கணவன் அமையவேண்டும் //

Not many people forgive and appreciate the goodness. But when you have a good thought and heart, it comes within... and shows the real person!!!

நிலவு நண்பன் said...

// Dev said...
இது நம்ம வீட்டு கல்யாணம்... எப்போப்பா கல்யாணம்?:))) //நம்ம வீட்டு கல்யாணத்திற்கு நம்மளையே அழைக்க முடியுமா நண்பா.. :)
தகவல் வலையில் வரும் நாளுக்காக காத்திருங்கள் தேவ்..

நிலவு நண்பன் said...

//its not a shame to fall in love and to fail
//


காதல் தோல்வி என்பது அவமானமல்ல ப்ரியா..ஆனால் காதல் தோல்வியால் அந்த பெண்ணின் வீட்டில் நடந்த அவமானங்களைத்தான் குறிப்பிட்டேன்.
நன்றி

அருட்பெருங்கோ said...

/இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் /

ம்ம்..கணிப்பொறி மாணவி இனி கவிப்பொறியின் மனைவி!!

வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
அருள்.

நிலவு நண்பன் said...

//அருட்பெருங்கோ said...
ம்ம்..கணிப்பொறி மாணவி இனி கவிப்பொறியின் மனைவி!!

வாழ்த்துக்கள்!!//
நன்றி அருட்பெருட்கோ..

உங்க காதல் கதை என்னாச்சு..? அவ்வளவுதானா? தொடரை முடிச்சிட்டீங்க போல இருக்கு..

jansi said...

"நன்றி ஜான்ஸி..

டும் டும் டும் க்கான அழைப்பிதழ் சீக்கரமாய் வரும்

பொண்ணு செங்கோட்டை இல்லை இதயக்கோட்டை..
( எதை வச்சு செங்கோட்டையான்னு கேட்டீங்க..?) "


Feb 13 2006 - Intha Kulathil Kallerindavargal

'இப்படி செங்கோட்டையைச்சுற்றியே நிகழந்துள்ள என் வாழ்க்கையின் காதல் அனுபவங்களுக்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்? ஒருவேளை என்னுடைய வாழ்க்கைத்துணைக்கும் செங்கோட்டைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?

இந்தக்குளத்தில் முகம் பதிக்க வரும் அந்த நிலவுக்காக காத்திருக்கின்றான் இந்த நிலவு நண்பன். கல்லெறிந்து காதல் கலங்குமா இல்லை காதல் எறிந்து கற்கள் ஒடியுமா என்பது காலத்தின் கைகளில்.

இறைவன் நாடினால் ஒருநாள் மிஸ் கால், மிஸஸ் கால் ஆகும்போது திருமண அழைப்பிதழ் வரும் ஆசிர்வதிக்க காத்திருங்கள்.'

Neenga ezhuthiyathu tha...athanala tha ketane.....nijama sengottai illia......

நிலவு நண்பன் said...

//Neenga ezhuthiyathu tha...athanala tha ketane.....nijama sengottai illia...... //

அட இப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க.. உங்க ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட்..

ம் செங்கோட்டை பக்கம்தான்

jansi said...

"அட இப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க.. உங்க ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட்..

ம் செங்கோட்டை பக்கம்தான் "

-- Nandri

Enna irundalum na Vazha pora ooru atha marakka mudiala.....

unga pathivugalla..sengottai nga ra pera pathathukku appuram tha na thodarnthu unga pathivugalai...padikka aarambichane....:-)

நிலவு நண்பன் said...

//Enna irundalum na Vazha pora ooru atha marakka mudiala.....- Jansi//


அட இது என்ன புதுக்கதை..? :)

ஆமா செங்காட்டையை விரும்புவதற்கு காரணமாக அந்த இதயக்கோட்டை யாருடையது?

ம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

"அன்று விபத்தில் அடிபட்டு இறந்த
பெரியவரின் குடும்பம்
அவர் இருப்பின் நிலைபோல...
ஆறுதல் அடைய வேண்டும்!"

இது போல் ஒரு மனது இருக்கும் உங்களுக்கு வரபோகும் கணிப்பொறி மாணவி(மனைவி)

ஒரு நாளும் கண் கலங்க மாட்டார்கள்!
வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
இரா.சரவணன்.

நிலவு நண்பன் said...

//ஒரு நாளும் கண் கலங்க மாட்டார்கள்!
வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
இரா.சரவணன். //


நன்றி சரவணண் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்திற்கும்

கைப்புள்ள said...

வாழ்வின் புதியதொரு அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள்...வாழ்த்துகள் நிலவு நண்பா! விமானப் பணிப்பெண்ணும், பூனையும் நன்றாக இருக்கவேண்டும் என வாழ்த்தும் நல்லிதயத்துக்கு ஒரு சல்யூட்(உங்க பாணியிலேயே)
:)-

நிலவு நண்பன் said...

// கைப்புள்ள said...
விமானப் பணிப்பெண்ணும், பூனையும் நன்றாக இருக்கவேண்டும் என வாழ்த்தும் நல்லிதயத்துக்கு ஒரு சல்யூட்(உங்க பாணியிலேயே)
:)- //நன்றி கைப்புள்ள..


விமானப்பணிப்பெண்யையும் பூனையையும் கவனித்திருக்கின்றீர்கள்
நிலவை விட்டு விட்டீர்களே..

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

நிலவு நண்பன் said...

//gulf-tamilan said...
வாழ்த்துக்கள்!!! //

தமிழா..தமிழா..

நன்றிப்பா..

S. அருள் குமார் said...

//இவள்தான்
மனைவியாகப்போகிறாள் எனத்தெரியாமல்
நண்பர்களோடு கிண்டலடித்த
அந்த
கணிப்பொறி மாணவியை
கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் !//

நண்பரே இது ரொம்ப கிட்டத்து வேண்டுதலா இருக்கே :)

வாழ்த்துக்கள்.

jansi said...

"அட இது என்ன புதுக்கதை..? :)

ஆமா செங்காட்டையை விரும்புவதற்கு காரணமாக அந்த இதயக்கோட்டை யாருடையது?

ம். வாழ்த்துக்கள். "

- Vazhthukkalukku Nandri


"செங்கோட்டையிலிருந்து இவனை
காலம் அழைத்து வந்ததா
காதல் அழைத்து வந்ததா?" - nu neenga ezhuthinathu enga vazhkaikum porundum.....3 varuda porattathirkku pinbu engalin 5 varuda Kathal....iru veettar sammathathudan Kalyanathil mudia pogirathu....Sep 4 Kalyanam......
:-)

நிலவு நண்பன் said...

//நண்பரே இது ரொம்ப கிட்டத்து வேண்டுதலா இருக்கே :)

வாழ்த்துக்கள். //


நன்றி அருள்குமார்..

நான் ரொம்ப தூரத்துல இருந்து வேண்டுவதால் அதுவும் தூரத்து வேண்டுதல்தான் நண்பரே :)

நிலவு நண்பன் said...

// nu neenga ezhuthinathu enga vazhkaikum porundum.....3 varuda porattathirkku pinbu engalin 5 varuda Kathal....iru veettar sammathathudan Kalyanathil mudia pogirathu....Sep 4 Kalyanam......
:-) //


நன்றி ஜான்ஸி..

அட்வான்ஸ்..வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டா..?


நாம் விரும்பியவர்களே வாழ்க்கைத்துணையாக கிடைப்பது நம்முடைய அதிர்ஷ்டம்
ஆனா நம்மை விரும்புனவங்களுக்குத்தான் துரதிஷ்டம்

தேன் கூடு