Wednesday, May 03, 2006

என் கல்லூரி தோழியே

(சென்ற வருடம் எழுதிய ஒரு பதிவினை மறுபடியும் புது வாசகர்களுக்காக பதிவிடுகின்றேன். ரிப்பீட்டு..)நேற்று நானும் கல்லூரி நண்பன் காஜாவும் ஒரு புத்தகம் வாங்குவது சம்பந்தமாக நாங்கள் படித்த கல்லூரி சென்று பைக்கில் திரும்பிகொண்டிருந்தோம்.

தன் மனைவியை பின் சீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான் அந்த கணவன். எங்களை கடந்து செல்ல முற்பட்டது அந்த பைக்..தற்செயலாய் கவனித்தேன் .

அட நம்ம சீமா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எங்கள் கல்லூரி தோழி நன்றாக முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன்..அவளேதான்..புன்சிரிப்பு செய்யலாமா என்று நினைக்கையில்- அவளோ பார்த்துவிட்டு சட்டென்று பயந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டாள்..

எனக்கு சூழ்நிலை புரிந்து கொண்டது.

நான் காஜாவிடம் "டேய் வண்டியை ஸ்லோ பண்ணுடா"

"எதுக்குடா"

"பண்ணுடா சொல்றேன்"

அவன் பைக்கை மெதுவாக்கி "எதுக்குடா " என கேட்டான்

"இல்லடா நம்ம கூட படிச்சாள சீமா ஞாபகமிருக்கா"

"ஆமாடா ஞாபகமிருக்கு..அதுக்கு என்ன?"

"அவதான் அதோபோய்க்கிட்டு இருக்கா அவ புருஷனோட"

"டேய் சொல்லவேண்டியதுதானேடா " என்று கூறி பைக்கை விரட்டினான்

"டேய் டேய் ஸ்லே பண்ணுடா வேண்டாம்டா..பாவம் அவ புருஷனோட போறா..அவ புருஷன் எதையும் சாதாரணமா எடுத்துக்கிற ஆளா இருந்தா நம்மை பார்த்து விஷ் பண்ணியிருப்பா
ஆனா பயந்து பயந்து போறாடா நாம் விஷ் பண்ண அதை அவ புருஷன் பார்க்க..தப்பா நினைச்சுட்டான்னா பாவம்டா அவ லைஃப் வம்பா போயிரும்" - நான்

"ஓ அதான் ஸ்லோ பண்ண சொன்னியாசரி சரி எனக்கு தெரியாதுடா.. சரி பார்த்து சுமார் 6 வருஷம் ஆயிருக்குமே இப்ப எப்படியிருப்பான்னு பார்க்கலாம்னு பார்த்தேன் " - என்று வண்டியின் வேகத்தை குறைத்தான்

"கல்லூரியில் எவ்வளவு கலகல வென்று சிரித்து மாடர்னா இருப்பாள்.இப்பொழுது கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காடா"

அதோ .. எங்களை விட்டு தூரத்தில் சென்று திரும்பிபார்த்தாள் லேசாக...
திரும்பி பார்த்தது அவள் மட்டுமல்ல என் நினைவுகளும்தான்

யாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்து போனது..

நாம் காதலர்களல்ல

ஆனால்

நட்பை காதலித்தோம்

- யாரோ
..நினைவுகள் பின்னோக்கி ஓடியது

அவளது கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை மஸ்தான் எடுத்தான்;.

"டேய் வேண்டான்டா பர்ஸனலா இருக்கம் வச்சுருடா..அவ வந்துற போறாடா " நான்

"டேய் பயப்படாத இந்த இந்த லட்டரை படி..நான் வேற ஏதாவது இருக்கான்னு தேடுறேன்.."
- மஸ்தான்

அது அவளுடைய காதலனால் அவளுக்கு எழுதப்பட்ட கடிதம். காதல் உருக்கத்தில் வழிந்து எழுதப்பட்ட கடிதம் அது..
( அந்த காதலனைத்தான் இப்போது கைப்பிடித்திருக்காளான்னு தெரியாது )

படித்துவிட்டு அப்படியே பிரித்தது தெரியாமல் வைத்தோம்..அவள் வகுப்பறைக்கு வந்து தன் கைப்பையை பார்த்து உடனே எங்கள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்தாள்..வேறு எதுவும் கேட்கவில்லை பின் எனது ஆட்டோகிராப் நோட்டில் எழுதினாள்..

"நீ என்னுடைய பர்ஸனல் விஷயத்தில் தலையிட்டாய்..நான் எதை சொல்ல வருகிறேன் என்று நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன். அந்த விஷயம் மட்டும்தான் உன்மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழது எனக்கு உன்னுடைய நட்பு கடைசிவரை வேண்டும். "

என்று எழுதியிருந்தாள் .இப்படி கடைசிவரை நட்பு வேண்டும் என எழுதியவளா? இப்படி
பாதிவழியில் பைக்கில் செல்லும்போதே கழட்டிவிட்டுவிட்டாள்?

நானும் நண்பன் செய்யதலியும் கடைசி நாளில் அவளது வீட்டிற்கு போனபோது கூட அவள் வருத்தத்தோடு கூறினாள்

"எவ்வளவு ஜாலியா போச்சுது காலேஜ் லைஃப்...? நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்..ம் என்ன செய்ய ? எப்படியும் இந்த ஊருக்குள்ளதானே இருக்கபோறோம். எப்பவாது சந்தித்துக்கொள்ளலாம்.. "

என்று கூறியவள் இப்பொழுது பாருங்கள்.அவள் என்ன செய்வாள் பாவம்?

"என்னடா இப்படி கண்டுக்காம போறா " காஜா

"அவ சூழ்நிலை அப்படி இருக்கலாம்.அவ என்னடா செய்வா " நான்

"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? " நான்

"நாம காலேஜ்ல படிக்கும்போது நமக்கும் எத்தனை கேர்ள்ப்ரண்ட்ஸ் இருந்திருக்கும் அது மாதிரிதான அவளுக்கும் இத ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க ம்ம்"

-ஒரு பெருமூச்சோடு கூறினான் காஜா..

நீ
புன்னகைக்காமல் சென்றாய்
நட்பு அழுதுகொண்டிருக்கிறது

சீமா தூரத்தில் சென்று ஏக்கத்தோடு திரும்பிபார்த்தது என் மனசை ஏதோ செய்தது.

"ஞானி என்னை மன்னிச்சுருடாநாம காலேஜ்ல நட்போட இருந்திருக்கலாம்..ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிருச்சு..இப்ப நான் உன்னய விஷ் பண்ணினா எம் புருஷன் யதேச்சயா பார்த்து..அது யாருடி ரோட்டுல போறவன பார்த்து கை காட்டுற.. அப்படின்னு கேட்டான்னா நான் என்ன சொல்ல முடியும்? "

என்று அவளின் அந்த தூரத்து பார்வை என் இதயத்தில் வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பதுபோல இருந்தது.

இப்படி இந்தியாவில் எத்தனை சீமாக்களோ..? தோழமையை தவறாக நினைக்கும் எத்துணை கணவன்களோ?


என் இனிய தோழியே!
உன்
பிறந்த நாளுக்கு
வாழ்த்து அட்டை அனுப்புவதை
இரண்டு விஷயங்கள் தடுக்கலாம்

ஒன்று உன் திருமணம்
மற்றொன்று என் மரணம்
- ரசிகவ் ஞானியார்

26 comments:

பிரசன்னா said...

இப்படியும் இருக்குறாங்க!!கவிதா கவிதானு ஒரு பொண்ணு. நம்ம ஊர்ல சென்டர்ல இருக்குற ஒரு பொறியியற் கல்லூரில போன வருஷம் பி.இ. முடிச்சாங்க. நம்ம நண்பன் ஒரு பய அவங்ககிட்ட காதல சொல்லி இருக்கான். அதாவது 4 வருஷமா நல்ல நண்பனா இருந்துட்டு கடைசியில சொல்லி இருக்கான். அந்த பொண்ணு க்ளீனா சொல்லிடுச்சு "இங்க பாரு! நான் வீட்டுக்கு மூத்த பொண்ணு. எனக்கு அப்புறம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. நான் என்ன பத்தி மட்டும் யோசிச்சு முடிவு எடுக்க முடியாது"

இவனும் அவ சொன்னதுல இருந்த நியாயத்த புரிஞ்சுகிட்டு நண்பனாவே கன்டினியூ பண்ணான். வீட்டுக்கு போய் மணிக்கணக்கா பேசுவோம். அப்போ தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆச்சு. நான் எவ்வளவோ சொல்லியும் இவன் நிச்சயதார்த்த வீட்டுக்கு போகல. நான் போனேன். மாப்பிள்ளை நல்லா தான் இருந்தார். திரும்புற வழியில நண்பன் வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சுகிட்டு இருக்கேன், இந்த பொண்ணும் அவங்களுக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளயும் வந்தாங்க.

அந்த பொண்ணு நண்பன் காதலை சொன்னத சொன்னதும் கிழிஞ்சது நு நினைச்சேன். அந்த ஆள் சிரிச்சுகிட்டே "நீங்க தப்பிச்சுட்டீங்க நான் மாட்டிகிட்டேன்" அப்படின்னு சொல்றாரு. நான் அப்புறமா அந்த பொண்ணுகிட்ட கேக்கும் போது கல்யாணத்துக்கு அப்புறம் பிரச்சினை வராம இருக்கணும்னு சொன்னேனு சொன்னாங்க. எத்தன ஆம்பளைங்க இப்படி இருப்பாங்க.

ஞானியாரே எனக்கு ஒரு சந்தேகம். நாங்களும் நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்றொம். நீங்களும் நன்றி நன்றினு சொல்றீங்க, போர் அடிக்கல??
மீண்டும் ஒரு கலக்கல் பதிவு. எத்தன பேர் அழப் போறாங்கன்னு தெரியலியே
பிரசன்னா

Anonymous said...

Your words are like beads.but the matter present in it is, not so good-shamsulhaq

Anonymous said...

Your words are like beads.but the matter present,not so good.-shamsulhaq

barathee|பாரதி said...

இரவு நேரத்தில் இதைப் படிக்க வருத்தமாய் இருக்கிறது.
***************
"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? "
*******************
இதை ஒவ்வொருவரும் அவரவர்களே கேட்டுக்கொள்ளவேண்டிய சத்தியமான கேள்வி. படித்தும் பண்பு பெறாத கணவர்கள் இருக்கும் வரை இத்தகு சிந்தனைகள் மனதைக் கனமாக்கிக்கொண்டே இருக்கும்.

தங்களது உணர்வு புரிகிறது. என்ன செய்ய..

நிலவு நண்பன் said...

//barathee|பாரதி said...
இரவு நேரத்தில் இதைப் படிக்க வருத்தமாய் இருக்கிறது.
***************
"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? "
*******************
இதை ஒவ்வொருவரும் அவரவர்களே கேட்டுக்கொள்ளவேண்டிய சத்தியமான கேள்வி. படித்தும் பண்பு பெறாத கணவர்கள் இருக்கும் வரை இத்தகு சிந்தனைகள் மனதைக் கனமாக்கிக்கொண்டே இருக்கும்.

தங்களது உணர்வு புரிகிறது. என்ன செய்ய.. //நன்றி பாரதி..

அது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது நண்பா.. என்ன செய்ய? புரிந்து கொள்ளாதவர்களை..

நிலவு நண்பன் said...

//Anonymous said...
Your words are like beads.but the matter present,not so good.-shamsulhaq //அதுவும் ஒருவகையினில் உண்மைதான் சம்சுல் ஹக்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:-((((

நிலவு நண்பன் said...

// எஸ்.பாலபாரதி said...
:-(((( //என்ன பாலபாரதி இத்தனை சோகமா..?

நாகு said...

//"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? "//

எல்லாத்துக்கும் காரணம் அதீதஅன்பாகக்கூட இருக்கலாம் (பொச்செச்சிவெனெச்ச்).

ஒன்னு சொல்லட்டுங்களா? பக்கத்துவீட்டு பொண்ணு டைட்டா பனியன் போட்டுட்டு போனா, மனசுல பட்டாம்பூச்சி பறக்கற சந்தோசத்தோட பா க்கத்தோனும், ஆனா...அதே மாதிரி பனிய நம்ம சகோதரி அணிந்தால், கன்னத்தில் இரண்டு விடுவோம்....

தமிழ்நாட்டில ரொம்ம்ம்ம்பப பேர்....இப்படி அதீத அன்போட தான் இருக்காங்க.....ஒருவேளை அப்படி இல்லை என்று காட்டிக்கொண்டாலும், வாழ்க்கையின் ஏதாவது தருணத்தில், ஓ! அப்படி இருந்திருக்கலாமோ? என்று நினைக்கத்தோனும்...

ஒன்று பண்ணலாம்....அந்த சீமா மாதிரி ந டந்துக்கனும் அதுதான் சரி. கணவர் அப்படி இருந்தால், மனைவி இப்படி நடந்துக்கணும்; மனைவி அப்படி இருந்தால் கணவன் சீமா மாதி ரி நடந்துக்கனும்.

வாழ்க்கை என்பது இரட்டை மாடு பூட்டின வண்டி....இரண்டும் ஒரே சைடு போனா தான் ஊர்போ ய்ச்சேரும்!!

நிலவு நண்பன் said...

// நாகு said...

எல்லாத்துக்கும் காரணம் அதீதஅன்பாகக்கூட இருக்கலாம் (பொச்செச்சிவெனெச்ச்).


ஒன்று பண்ணலாம்....அந்த சீமா மாதிரி ந டந்துக்கனும் அதுதான் சரி. கணவர் அப்படி இருந்தால், மனைவி இப்படி நடந்துக்கணும்; மனைவி அப்படி இருந்தால் கணவன் சீமா மாதி ரி நடந்துக்கனும்.

வாழ்க்கை என்பது இரட்டை மாடு பூட்டின வண்டி....இரண்டும் ஒரே சைடு போனா தான் ஊர்போ ய்ச்சேரும்!! //நீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )
மனைவியின் மீது கொண்ட அதிகமான பிரியம் கூட அந்த மாதிரி இருக்கச் செய்யலாம். ஆனால் அந்த எல்லை மீறிய பிரியமே சந்தேகத்திற்கு வழிவகுத்து விடக்கூடாது. கண்வன் - மனைவிக்கிடையே சந்தேகம் மற்றும் ஈகோ இவையிரண்டும்தான் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது..

அதனை மட்டும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால் போதும்..

நன்றி நாகு..

Anonymous said...

During our meeting I told u that I got Same Experiance.After a long confusion I talked to that friend thro' Phone.She was talked with me very friendly ( same like our Schooldays )and invited me to her Home.My thinking is how her husband will react?.Anyway I Plan to meet them next week. Regards.Dubai Raja.

நாகு said...

///நீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )///

ஏன் கல்யாணம் ஆனால் தான் இதனை உணரமுடியுமா?

நமக்கு முன்னாடிப்போறவன், சகதியில் கால்தவறி விழப்போனால், பின்னால் போகும் நாமும் அதே சகதியில் கால் வைப்போமா என்ன?

காலச்சுழற்சியில், இப்படித்தான் வாழவேண்டும் எனக்கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளும் பாடம் தான்.

நிலவு நண்பன் said...

//Anonymous said...
During our meeting I told u that I got Same Experiance.After a long confusion I talked to that friend thro' Phone.She was talked with me very friendly ( same like our Schooldays )and invited me to her Home.My thinking is how her husband will react?.Anyway I Plan to meet them next week. Regards.Dubai Raja. //

நன்றி துபாய் ராஜா..

தங்களது தோழியின் கணவர் அதனை தவறாக எடுத்துக்கொள்ளாத மனப்பக்குவம் உள்ளவர்.


ஆனால் அனைவருக்கும் இது வாய்ப்பதில்லை..

நிலவு நண்பன் said...

// நாகு said...
///நீங்க சொல்றது ரொம்பவும் சரிதான் நாகு... ( கல்யாணமாயிருச்சோ )///

ஏன் கல்யாணம் ஆனால் தான் இதனை உணரமுடியுமா?

நமக்கு முன்னாடிப்போறவன், சகதியில் கால்தவறி விழப்போனால், பின்னால் போகும் நாமும் அதே சகதியில் கால் வைப்போமா என்ன?

காலச்சுழற்சியில், இப்படித்தான் வாழவேண்டும் எனக்கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்ளும் பாடம் தான். //அப்படின்னா கல்யாணம்ங்கிறது சகதியில் விழுற மாதிரியா..

பின்னால பாருங்க..கல்யாணமான நம்ம பாலபாரதி முறைக்கிற மாதிரி இருக்குது..

நல்ல பதில் நாகு..

priya said...

It is very difficult to understand why some men and women are over possessive after they get married. If marriage is so insecure, why on earth they get married??
Social change will never come/happen unless people understand the society.
Trust and commitment are not truely valued in our society when it comes to friendship after marriage.
I think if you have real good friends, you can continue and value with strong relationship.
But peoples mind are so strange and works negative most of the times......

நிலவு நண்பன் said...

//priya said...
It is very difficult to understand why some men and women are over possessive after they get married.
If marriage is so insecure, why on earth they get married?
Social change will never come/happen unless people understand the society.
Trust and commitment are not truely valued in our society when it comes to friendship after marriage.
I think if you have real good friends, you can continue and value with strong relationship.
But peoples mind are so strange and works negative most of the times...... //

நன்றி ப்ரியா..என்ன செய்வது சமூகத்தின் சூழ்நிலையும் மனிதர்களின் மனநிலையும் அவ்வாறு இருக்கின்றது..

தேவ் | Dev said...

//என் இனிய தோழியே!
உன்
பிறந்த நாளுக்கு
வாழ்த்து அட்டை அனுப்புவதை
இரண்டு விஷயங்கள் தடுக்கலாம்

ஒன்று உன் திருமணம்
மற்றொன்று என் மரணம்//

என்னச் சொல்லுறது.... போய்யா...

தேவ் | Dev said...

ஞானியாரே... நாட்டில் நல்ல கணவர்களும் இருக்கிறார்கள். பெண் வலைப்பதிவர்கள் யாரேனும் அதை வழி மொழிவார்களா? :)

நிலவு நண்பன் said...

// Dev said...
//என் இனிய தோழியே!

என்னச் சொல்லுறது.... போய்யா... //என்ன தேவ்

உங்க உயிர்தோழி யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புறதை நிறுத்திட்டீங்களா..?
( அட கல்யாணமாயிருச்சாங்கிறததான் இப்படி கேட்டேன் )

நிலவு நண்பன் said...

// Dev said...
ஞானியாரே... நாட்டில் நல்ல கணவர்களும் இருக்கிறார்கள். பெண் வலைப்பதிவர்கள் யாரேனும் அதை வழி மொழிவார்களா? :) //


நான் ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் பெருன்பான்மையானோர் அப்படி இருப்பதில்லை
இந்த விசயத்தில் பெண் வலைப்பதிவர்கள் என்ன சொல்லுகின்றார்கள் பார்ப்போம

Anonymous said...

நிலவு நண்பன்
உங்களை போலவே தோழியினால் வலியை உணர்ந்தவன்,அவள் கல்யாணம் காதல் கல்யாணம் தான் கல்யாணத்திற்க்கு முன்பே அவள் கணவர் வீட்டில் எல்லாருக்கும் என்னை பற்றி தெரியும், கல்யாணத்திற்கு முதல் நாள் சென்றதற்க்கு அவர் மாமியார் முன்பே என்னை காதை திருகி என்ன டா முதல் நாள் யாரோ விருந்தாளி போல் வருகிறாய் என்று அடித்தவள்.. கல்யாணத்திற்க்கு பிறகு ???

அது அவர் சொல்லியா? இல்லை அவளாகவே எடுத்த முடிவா? என்று ஒன்றும் புரியவில்லை,கொஞ்ச நாள் கழித்து வேறு ஒரு தோழி மூலமாக தெரிய வந்தது அவர் ஏதும் சொல்லி விட கூடாது என்று தானாக விலகுவதாக ...:-(அதன் பிறகு நான் எந்த பெண்களையும் தோழியாக நினைப்பது இல்லை...தாமரை இலை மேல் இருக்கும் நீர் போல் தான் பெண்களின் நட்பு...

என்ன செய்வது ? யாரை சொல்வது? இதில் படித்தவற்கள் படிக்காதவற்கள் என்று வித்தியாசம் இல்லை என்று என் கருத்து. நட்பை புரிந்து கொள்ள படிப்பு தேவை இல்லை...பண்பு இருந்தால் போதும் கல்யாணத்திற்க்கு பிறகு பெண்களே தன்னை சுற்றி ஒரு வேலி போட்டு கொள்கிறார்கள்
என்று நினைக்கிறேன்...

சரவணன்.இரா.

நாகு said...

உண்மையில் பெண்கள், தியாகிகள் தான். தன் கணவன் தவறாக நினைத்துவிடக்கூடாதே என்று எண்ணி, தனது நட்பினை தியாகம் செய்கிறாள் அல்லவா? கட்டாயம் அவளைப் பாரா ட்டித்தான் ஆகவேண்டும். சரவணன் இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் தோழி உண்மையில் உயர்ந்தவர்தான்.

நிலவு நண்பன் said...

//நிலவு நண்பன்
கல்யாணத்திற்கு முதல் நாள் சென்றதற்க்கு அவர் மாமியார் முன்பே என்னை காதை திருகி என்ன டா முதல் நாள் யாரோ விருந்தாளி போல் வருகிறாய் என்று அடித்தவள்.. //
தன்னுடைய மனைவி தன்னுடைய ஆண் நண்பனை காதை திருகி விளையாடும்பொழுது சுருக்கென்று ஓர் முள் கணவனின் நெஞ்சில் குத்தாமல் இருக்காது. இது சாதாரண மனிதர்களின் இயல்பு.


உங்களின் காதைப்பிடித்து திருகுவதை அவர்களது கணவனின் வீட்டார்கள் பொது இடங்களில் சாதாரணமாய் எடுத்து விட்டாலும் கண்டிப்பாய் தனிமையில் கண்டிக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்திருக்காது.

////பெண்களே தன்னை சுற்றி ஒரு வேலி போட்டு கொள்கிறார்கள்
என்று நினைக்கிறேன்... //

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு சரவணண்பெண்கள் தங்களைச்சுற்றி வேலியிடவில்லை. அவர்களைச்சுற்றி சமூகம் இட்ட வேலி .

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய சூழலுக்குள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்

இது அவர்களுடைய வாழ்க்கையை எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற விசயம். திருமணத்திற்கு முன்பு உள்ள ஆண்நண்பர்களை திருமணத்திற்கு பிறகும் தொடர்வது என்பது கணவன் - கணவனின்; குடும்பத்தார் - சுற்றம் இவைகளின் புரிதல் உணர்வுகளின் அடிப்படையில்தான் அமைகின்றது.

ஆகவே திருமணத்திற்குப் பிறகு நாமாகவே பெண் நண்பர்களின் நட்பினை முன்பு இருந்தது போல தொடராமல் ஒரு இடைவெளி விட்டு பழகுவது அந்தப் பெண்ணின் எதிர்காலத்திற்கு நல்லதே.

நிலவு நண்பன் said...

// நாகு said...
உண்மையில் பெண்கள், தியாகிகள் தான்.//சரியாச் சொன்னீர்கள் நாகு..நன்றி..

KK said...

பின்னூட்டமிட்டிருக்கும் பெரும்பாலானோர் பட்டும் படாமலும் விமர்சித்திக்கின்றனர். தன் மனைவி பிற ஆண்களோடு பழகுவதை ஏற்றுக்கொள்ளமுடியாததற்கு சமூகம் என்ற ஒன்றை சாக்காகக் கூறுகிறார்கள். மனைவியின் ரத்த பந்தங்களையே தன் பந்தங்களாகக் காணும் மனநிலை முழுதாக வராதபொழுது மனபந்தங்களை ஏற்றுக்கொள்வர் என்று நினைப்பது முயற்கொம்பே!
அதோடு இந்நிலை தோழர்களுக்கு மட்டுமல்ல, தோழிகளுக்கும்தான்.. என்ன, சாலையிலேயே சில நிமிட மேலோட்டமான விசாரிப்புகள் அதிகபட்சம். திருமணம்தான் ஆகிவிட்டதே, இன்னும் என்ன friends, என்றெழும் கேள்விக்கு என்ன பதில்??????!!!!!!!

நிலவு நண்பன் said...

//Unmai said...
மனைவியின் ரத்த பந்தங்களையே தன் பந்தங்களாகக் காணும் மனநிலை முழுதாக வராதபொழுது மனபந்தங்களை ஏற்றுக்கொள்வர் என்று நினைப்பது முயற்கொம்பே! //நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயருக்கு
ஏற்றவாறு நீங்கள் கூறியது உண்மையே நண்பா..

தேன் கூடு