Sunday, March 30, 2008

காதலிசம்

Wednesday, March 26, 2008

படிக்கட்டா? பாடைக்கட்டா?

கூட்டமான நேரங்களில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட சும்மா வெட்டி பந்தாவிற்காக பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளாக நேரிடுகின்றது

என்னதான் நடத்துனர் வந்து காட்டுக் கத்தாய் கத்தினாலும் இவர்களின் காதுகளில் ஏறாது..யாரோ எவரோ கத்துகிறார் என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்..

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது எனது கல்லூரிப் பேருந்திலும் அப்படித்தான். சீனியர் மாணவர்கள் படிக்கட்டில் தொங்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்கள் பேருந்துக்குள்தான் இருக்கவேண்டும் வெளியே வரக்கூடாது.

படிக்கட்டில் நின்று கொண்டு அவர்கள் போடுகின்ற ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமே... அதனைப் பற்றி ஒரு புத்தகமே போடலாம் அந்த அளவிற்கு சேட்டைகள் - விளையாட்டுகள் - ஓடி வந்து ஏறுதல் - பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் நின்று கொண்டு வருதல் - சில சமயம் பேருந்தின் கூரையின் மீதே ஏறி தாளமடித்துக் கொண்டு வருதல் என்று ஏகப்பட்ட கூத்துக்கள் நடக்கும்.

அதனை விடவும் நான் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கின்ற கூத்தினை கண்டு ரசித்திருக்கின்றேன். இதற்காகவேனும் சென்னையில் படித்திருக்ககூடாதா என்று ஏக்கப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு எங்கிருந்துதான் வருமோ தெரியல கானாப்பாட்டு...கலக்கிடுவானுங்க பசங்க..

இப்படி படிக்கட்டில் தொங்கிகொண்டு அபாயகரமான விளையாட்டுக்களை நடத்தி வருபவர்களை கண்டிக்க வழிதெரியாமல் அரசாங்கம் புதிய முடிவை எடுத்திருக்கின்றது..

அதுதான் இது..


- ரசிகவ் ஞானியார்

Tuesday, March 25, 2008

மறு பரிசீலனை
உன் நிராகரிப்பின் வலியை
நீ உணர்ந்திருந்தால்
என்னை
நேசித்திருக்கக் கூடும்

- ரசிகவ் ஞானியார்

Wednesday, March 19, 2008

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?


செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்

"This is not the valid no. please check the no. u have dialled."

இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..

முத்தமிழ் குழும நண்பர்களில் சிலர் இப்படிக் கூறியிருந்தார்கள்.

நான் நெல்லைத் தமிழில் இருந்து ஆரம்பிக்கின்றேன்..

நெல்லைத் தமிழ்

எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..

- ரசிகவ் ஞானியார்

கன்னியாகுமரி தமிழ்

நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி.....


- செல்வசுரேஷ்

கோவைத் தமிழ் இதுவா?.

ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!

யாழ் தமிழ்

இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே

- சாந்தி


சென்னை தமிழ்:

XXXXXX XXXX

[போடுவேன்.. யாராவது அடிக்க வருவாங்க அதான் போடல.. சாரி..]

- காமேஷ்

அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்

- லாவண்யா

பாலக்காடு தமிழ்

யேய்... நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?

-ஷைலஜா

வடாற்காடு மாவட்டம் தமிழ்

டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு...:)

- சிவ சங்கர்

அப்புறம் நீங்க உங்க தமிழில் சொன்னா எப்பயிருக்கும்னு மண்வாசனை மாறாம சொல்லுங்க:

இப்ப உங்க தமிழில் ஆரம்பியுங்க மக்களே...

- ரசிகவ் ஞானியார்

குறுக்குச் சுவர்ஏறவிடாது வழிமறித்து..
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை..
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது!

வாழ்க்கையிலும் அப்படித்தான்

- ரசிகவ் ஞானியார்

Saturday, March 15, 2008

சுயம்
காறி உமிழ்ந்த
எனது எச்சில்
புனிதம்தான்

சட்டையில் வந்து
தெறிக்கும்பொழுதுதான்
அசிங்கம் உணருகிறேன்.

தெறிப்பதை தடுக்க
துப்புவதை நிறுத்துகிறேன்

- ரசிகவ் ஞானியார்

அடுத்த நிறுத்தம் மனிதநேயம்
இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ....
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை ...
தர்மசங்கடப்படுத்துகிறது !

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!

- ரசிகவ் ஞானியார்

Friday, March 14, 2008

உயிர் < பொருள்


வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்…
பொசுங்கிப் போனது!

எல்லாருமே ...
கசாப்பு கடைக்காரர்கள்தான்!


- ரசிகவ் ஞானியார்

Thursday, March 13, 2008

நிரந்தர வலி
காதலிக்குகல்யாணம்
இவன்
காதல் விதவையானது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, March 12, 2008

குதிரை ஓட்டி
என் முதல் குதிரை
பாதைகளிலிருந்து தாவி..
பயணிகள் மீது மோதியது!

என் இரண்டாம் குதிரையின்
நேரான பாதை ..
வளைவுகளாகிறது!

என்று தணியுமோ
பின் இருக்கை முத்தங்கள்?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, March 11, 2008

மாற்று திறன் கனவு

வீசியெறியப்பட்ட
புணர்தலின் அடையாளங்கள்
புலம்பெயர்ந்தவனுள் கனவுகளாகிறது!

யாரிடம் சொல்லுவதோ.?

புணர்தலின் கனவுகளுக்கு…
கவிதையே வெளிப்பாடு!

- ரசிகவ் ஞானியார்

காயமும் காதலே

Photobucket

பிரியங்களின் ஆளுமை
சிலநேரங்களில்..
காயப்படுத்துகிறது!

காயத்தின் காரணமும்…
காதல்தான்!

காதலை உருக்கி நீ
காயப்படுத்து!
காயத்தை உருக்கி நான்
காதல்படுத்துகின்றேன்.!

- ரசிகவ் ஞானியார்

Saturday, March 08, 2008

புற்று
பிரவேசிக்க வேண்டாம்!
பட்டாம்பூச்சிகளின் காவலில்..
பாம்புகள்
மேய்ந்துகொண்டிருக்கிறது...
என் அறைக்குள்!

பாம்புகள்
பட்டாம்பூச்சிகளாகும்போது...
நான் அழைக்கிறேன்!

அதுவரை
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...
ரசியுங்கள்!

- ரசிகவ் ஞானியார்

Wednesday, March 05, 2008

சுயத்தின் திமிர்

சாதாரண இருக்கைக்காக
என்னுடன்..
சண்டையிடும்
சக பயணியே..
உனக்குத் தெரியுமா?

நேரத்திற்கு மேல்
வேலைப்பளு தருகின்ற...
மேலதிகாரிக்காவது தெரியுமா..?

எனக்கு
தேநீர் தருவதற்கு
தாமதமாக்குகின்ற...
கடைக்காரனுக்குத் தெரியுமா?

என்னிடம் வந்து..
பயணச்சீட்டு சோதிக்கும்
பரிசோதகருக்காவது தெரியுமா?

என்
யதேச்சைப் பார்வைக்குக் கூட,
முறைத்துப்பார்க்கும்..
பெண்டிர்கள் அறிவார்களா?

நான் ஒரு கவிஞன் என்று?

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு