Wednesday, June 14, 2006

ஒரு சிறிய காதல் சோக கதை

( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். )

தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.

"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்

ஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.

அவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.

காதலன் கேட்டான். "இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று

"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள்.

அந்த காதலனும் கண்ணீரோடு ,

"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.




அன்புடன்

ரசிகவ் ஞானியார்

12 comments:

FunScribbler said...

அருமையான கதை ரசிகவ். ரசித்து படித்தேன். ஆனா அந்த பெண் யார் என்று மட்டும் சொல்லுங்க... அவள்கிட்ட நாலு வார்த்தை நறுக்குன கேட்குறேன்...

Mani said...

ஒரு கண்ணை மட்டும் கொடுத்திருந்தா தனக்கு ஒரு கண்ணும், இன்னொரு கண்ணா அந்த காதலியும் கிடைத்திருக்கும்.

Priya said...

Your poetry has proved
//Love is blind//

A human being can change his/her colors depending on the factors surrounded by them.
//என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்"//
She can see him thru' his eyes....
But,
those eyes of him (can) only make her love him more...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//jansi said...
Nice. //


நன்றி ஜான்ஸி..

வாசிப்பவர்கள் மனதையெல்லாம் சட்டென்று பாதிக்கும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அருமையான கதை ரசிகவ். ரசித்து படித்தேன். ஆனா அந்த பெண் யார் என்று மட்டும் சொல்லுங்க... அவள்கிட்ட நாலு வார்த்தை நறுக்குன கேட்குறேன்... //


நன்றி தமிழ்மாங்கனி..

விட்டா கொன்னுறுவீங்க போலிருக்குது.. :)

தேடிப்பார்க்கணும்..உங்க பக்கத்துல கூட இருக்கலாம்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//She can see him thru' his eyes....
But,
those eyes of him (can) only make her love him more... //


நன்றி ப்ரியா..

காதல் எப்பொழுதும் குருடாகாது.
ஆனால் காதலர்கள்தான்..

அவன் கண்களைக் கொடுத்து
காதல் வாங்கிக் கொண்டான்

அவள் காதலைக் கெடுத்து
கண்கள் வாங்கிக்கொண்டாள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஒரு கண்ணை மட்டும் கொடுத்திருந்தா தனக்கு ஒரு கண்ணும், இன்னொரு கண்ணா அந்த காதலியும் கிடைத்திருக்கும். //


ச்சே இந்த யோசனை அவருக்கு இல்லாம போச்சே மணி..

தாணு said...

அவனுடைய அன்பை அநுபவிக்க அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. புத்திசாலித்தனமற்ற பெண்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அவனுடைய அன்பை அநுபவிக்க அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. புத்திசாலித்தனமற்ற பெண்! //

ம் என்ன செய்ய..சோகமாத்தேன் இருக்கு..அவளுக்கு புரியலையே..

Priya said...

I have trouble opening your blog for sometime. I think someone came up with this issue.
Try to have seperate blogs for poetry and short stories/ personals..

கார்த்திக் பிரபு said...

வணக்கம்...இது கதை போல் தெரிய வில்லை...இதை ஒரு கதை போல இப்போது எல்லாரும் sms-ல் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்..நான் இதை sms படித்த போது...அந்த பெண் தன் கண்களை கொடுப்பது போல அனுப்பி இருந்தார்கள்...உங்களுக்கு அனுப்பியவர்கள் மாற்றி(instead of that girl,the boy is giving his eyes) அனுப்பி இருக்கலாம்..எப்படி இருந்தாலும் கதை மன்னிக்க குட்டி கதை நன்றாகயிருக்கிறது..

அப்புறம் வாழ்த்துக்கள் நிலவு நண்பன்......?????!

உங்கள் பதிவிற்க்கான் Link-i என் பதிவில் உங்கள் அனுமதியோடுக் கொடுக்கிறேன்..

அப்படியே நம்ம பக்கத்திற்க்கும் வந்து பாருங்க ..படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்கிறதென..

சீனு said...

arumaiyenaa kathai nilavu nanbane...muthal muraiyeaa-ga ungal pathivukalai paditthu kondu irukerean...anaithu arumai...

தேன் கூடு