Wednesday, June 28, 2006

ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு

வலைப்பதிவு ஆரம்பித்த சென்ற வருடத்திலிருந்து நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன் இந்த நட்சத்திரப்பட்டாளங்களை. ஆனால் நான் எப்பொழுதுதான் நட்சத்திரமாவதாம். ?

தமிழ் மணத்தில் அடிக்கடி எப்படி நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற விதிமுறைகளை கவனித்துக்கொண்டு அதன்படிதான் எழுதுகின்றேன். ஆனாலும்
எனக்குப் பிறகு வந்தவர்கள் எல்லாம் நட்சத்திரமாவதைக்கண்டு பொறாமை கொண்டேன்.

இப்பொழுது என்னையும் தேர்ந்து எடுத்துவிட்டார்கள் என்பதில் மிக்கமகிழ்ச்சி. ஆம் ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது.

என்ன எழுதலாம் என்று தீர்மானிக்கவில்லை. ஆனால் உபயோகமாக எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது.

இந்த நிலவை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கும் எனக்கு தொடர்ந்து விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் விமர்சனம் எழுத முடியாவிட்டாலும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய திருமணத்திற்கும் நட்சத்திரமானதிற்கும் தொலைபேசியிலும் - வலைப்பதிவில் விமர்சனங்கள் தந்தும் வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க ஞானியார்.. நல்லபடியா ஊர் போய்ச் சேர்ந்தீங்களா?

நட்சத்திரத்தைக் காணோமேன்னு தான் தேடிகிட்டு இருக்கோம்.. வந்து கலக்குங்க.. இந்த வாரமே நல்லா பேசிடுங்க.. அதற்கப்புறம் பேச்சு இலர்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே!! :)

கோவி.கண்ணன் said...

அப்பாடா, வந்தீர்களே,
நன்பர் எல்லோரும் 'நிலாவே வா' என்ற மவுனராகம் பாடாத குறைதான்

முத்துகுமரன் said...

பயணம் நல்லபடியாக அமைந்ததா ரசிகவ். இயல்பு நிலைக்கு வந்தாச்சா:-))

இனிய திருமண வாழ்த்துகள்.

Unknown said...

வாங்க ரசிகவ்...

திருமண வேலைகள் எப்படிப் போகின்றன??

திருமணவேலைகளுக்கு இடையே நட்சத்திரப் பணிகளும் பார்ப்பது சுகமான சுமைதான் இல்லையா???

Priya said...

Hats off to you moon for your success!!

நன்மனம் said...

வாங்க ஞானியாரே, வாழ்த்துக்கள்!!!

நாகை சிவா said...

//இந்த வாரமே நல்லா பேசிடுங்க.. அதற்கப்புறம் பேச்சு இலர்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே!! :) //
ஆமாங்க ஞாணியாரே! என்ன சொல்லனும் ஆசைப்படுகின்றீர்க்களோ அதை இப்பவே சொல்லிடுங்க. :))))

சேதுக்கரசி said...

பேச்சிலரா இருந்தா என்ன
பேச்சுஇலரா இருந்தா என்ன
ரசிகவுக்கு எப்பவும் என்சாய் mode தான்! :-)

Unknown said...

ஞானியாருக்கு(!) அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.. இனிமேல தானே நடக்கப்போகுது?

siva gnanamji(#18100882083107547329) said...

நான் வலை தளத்திற்கு சமீபத்தில்தான்
வந்தேன்
ஆனாலும் நீங்கள் இப்பொழுதுதான்
நட்சத்திரமாகின்றீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது
ஒருவேளை இது வரவிருக்கும் வசந்தத்தின் முன் அறிவிப்போ?
திருமண வாழ்த்து முன்னரே அனுப்பிவிட்டேன்
மீண்டும் வாழ்த்துகிறேன்

siva gnanamji(#18100882083107547329) said...

நான் வலை தளத்திற்கு சமீபத்தில்தான்
வந்தேன்
ஆனாலும் நீங்கள் இப்பொழுதுதான்
நட்சத்திரமாகின்றீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது
ஒருவேளை இது வரவிருக்கும் வசந்தத்தின் முன் அறிவிப்போ?
திருமண வாழ்த்து முன்னரே அனுப்பிவிட்டேன்
மீண்டும் வாழ்த்துகிறேன்

தேன் கூடு