Thursday, June 29, 2006

பழைய மனசு

Photobucket - Video and Image Hosting

( 2000 ம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் எனது நண்பனுக்காக எழுதிய கவிதை ஒன்று. )


அன்று
எதேச்சையாய் சந்தித்தோமே..
எக்மோர் நிலையத்தில்?
ஞாபகமிருக்கிறதா
பழைய காதலியே!

என்னுடைய குடும்பம்
என் தங்கை திருமணம்
கல்லூரி வாழ்க்கை
கிண்டல்கள்
நண்பர்கள் நிலை
சுற்றுலா சென்ற ஞாபகம்
ஸ்டிரைக்கில் ஏற்பட்ட கலாட்டா
இருக்கையை உடைத்து அபராதம் கட்டியது
திட்டிய தமிழ் வாத்தியார்
எல்லாம் விசாரித்துவிட்டு
என்னை விசாரிக்காமல் சென்றவளே
அந்த மௌனம்
சேது பட இறுதிக்காட்சியை விடவும்
கொடுமையாய் இருந்ததடி

எங்கே விசாரித்தால் - உனக்கு
அழுகை வந்துவிடுமென்றா
அமைதியாக இருந்தாய்?
நல்லவேளை விசாரிக்கவில்லை
நானும் அந்த நிலைதான்!

நான் மிகவும்
மெலிந்திருப்பதாய் கூறினாயடி..?
உன் உள்மனசை
உசுப்பிக் கேட்டுப்பார்..
நான் மெலிந்த காரணத்தை!
சத்தியமாய் உனக்குத்
தெரியாதா..?

உன் திருமணத்திற்கு
அழைப்பிதழ் அனுப்பிவிட்டு
நான்
வராமல் போனதற்காக
வாழ்த்து அனுப்பினாயே?
ஞாபகமிருக்கிறதா..?

அதோ!
தேநீர் சாப்பிட்டுவிட்டு வந்த
உன் கணவனை
எனக்கு அறிமுகப்படுத்தினாய்!
ஆனால்
என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீ
எனக்கு
அறிமுகமில்லாமலையே போய்விட்டாயடி!

நான் பைக்மோதி
நீ பட்ட காயம்
இன்னமும் ஆறவேயில்லையோ?
என்
இதயம் போலவே!

கல்லூரி நாட்களில்
என்னைப்போலவே

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

அதோ தூரத்தில்
ரெயில் வரும் சப்தம்
காற்றுக்குத் தெரியாமல் என்
காதில் விழுகின்றது!
கணவனுக்குத் தெரியாமல் உன்
கண்கள் அழுகின்றது!

இதோ! இதோ
இரயில் நின்றுவிட்டது..

என் இதயமோ
ஓட ஆரம்பிக்கின்றது!

இங்கே பார்
உனது குழந்தைகூட எனக்கு
டாட்டா காட்டுகிறது
உன்னைப்போலவே..

நீயோ கிளம்பிவிட்டாய்
இப்பொழுதும் நான்
காத்துக்கொண்டிருக்கின்றேன்..

புரியவில்லையா
புகைவண்டிக்காகத்தான்..

உன்னுடைய பயணம்
எந்த நிறுத்தத்திலாவது
நின்றுவிடும்
ஆனால் நானோ
திசையே தெரியாமல்
பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

நீ கடந்து போன ரெயில்
கண்ணை விட்டு மறையும் வரையிலும்
என் இதயம்
மூன்றாம் பிறை கமல்போல
மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருக்கின்றது

பழைய காதலியே! மீண்டுமா
பாதியில் விட்டுப்போகின்றாய்
பரவாயில்லையடி!

ஏற்கனவே கிடைத்த
அனுபவத்தால்
இந்த இரண்டாம்பிரிவில்
இதயம் திடப்பட்டுக்கொண்டது.


எந்தப் பத்திரிக்கையின்
மூலையிலாவது..
பிரசுரமாகியிருக்கும்
எனது கவிதையைக்கண்டு
அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற
அசட்டு நம்பிக்கையில்தான்
இந்தக்கவிதையையும்
எழுதியிருக்கின்றேன்!

இனியொரு ஜென்மமிருந்தால்
நாம் படித்த ...
அதே கல்லூரியில்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளாமலையே
பிரிந்துவிடுவோம்.


மீண்டும்
எந்தச் சந்திப்பில்
சந்திப்போமோ என்ற
சங்கடத்தோடு பிரிகின்றேன்.
போய்வாடி! டாட்டா..

- ரசிகவ் ஞானியார்

9 comments:

கோவி.கண்ணன் said...

//வராமல் போனதற்காக
வாழ்த்து அனுப்பினாயே?
ஞாபகமிருக்கிறதா..?//
நிலவு,
இந்த வரியில் எனக்கு தெரிவது முழுனிலவு

Mani said...

கவிதையை படித்த உடன் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு (பீலிங்ஸ்).

ஆமாம், திருமணத்திற்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு இன்னும் பதிவு போட்டுக்கிட்டு இருந்தா திருமண வேலைகள் போட்டது போட்ட படியும் போடாதது போடாதபடியும் கிடக்காதா?

ப்ரியமுடன்,
மணி.

பொன்ஸ்~~Poorna said...

//எந்தப் பத்திரிக்கையின்
மூலையிலாவது..
பிரசுரமாகியிருக்கும்
எனது கவிதையைக்கண்டு
அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற
அசட்டு நம்பிக்கையில்தான்
இந்தக்கவிதையையும்
எழுதியிருக்கின்றேன்!
//
- சில சமயங்களில் உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போய் விடுகின்றன..


சரி சரி, ஞானியார், கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி கவிதை எதுக்கு :)))

Sivabalan said...

//அதோ தூரத்தில்
ரெயில் வரும் சப்தம்
காற்றுக்குத் தெரியாமல் என்
காதில் விழுகின்றது!
கணவனுக்குத் தெரியாமல் உன்
கண்கள் அழுகின்றது!//

அகா அருமை!!

நன்றி!!

சேதுக்கரசி said...

//எந்தப் பத்திரிக்கையின்
மூலையிலாவது..
பிரசுரமாகியிருக்கும்
எனது கவிதையைக்கண்டு
அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற
அசட்டு நம்பிக்கையில்தான்
இந்தக்கவிதையையும்
எழுதியிருக்கின்றேன்!//

இப்ப புரியுது எதுக்கு எல்லாரும் இந்த மாதிரிக் கவிதை எழுதறாங்கன்னு ;-)

//சரி சரி, ஞானியார், கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி கவிதை எதுக்கு :)))//

பொன்ஸுடைய கேள்வியையே நானும் கேட்டுவைக்கிறேன் :-)

நிலவு நண்பன் said...

எல்லாருக்கும் திருமணம் முடிந்தவுடன் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா..

நிலவு நண்பன் said...

திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா.. :)

priya said...

/ஆனால்
என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீ
எனக்கு
அறிமுகமில்லாமலையே போய்விட்டாயடி!/

How strange such things differ??

/ஆனால் நானோ
திசையே தெரியாமல்
பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்/

True feelings never die....

சேதுக்கரசி said...

//திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா.. :)//

சரி சரி பாவம் போனாப்போகுதுன்னு லீவ் லெட்டரை அப்ரூவ் பண்றோம்!

தேன் கூடு