
- கவிதை
என்
பாதிப்புகளின் ..
பாஞ்சாலிசபதம்!
கோபத்தின் ..
குண்டலகேசி !
என் அழுகையின்
வார்த்தை வடிவ ..
அர்த்தங்கள்
அதிகார மீறல்...
உரிமை இழப்பு...
இதயம் தகர்ப்பு...
வன்முறை...
வர்த்தக மையம் தாக்குதல்...
மசூதி இடிப்பு...
கும்பகோண தீ விபத்து...
குஜராத் கலவரம்...
சுனாமி...
- இப்படி
சமுதாயம் பாதிக்கப்படும்பொழுது மட்டும்தான்
எனக்கு
கவிதை வருகிறது!
அப்படியானால் நான்
கவிதை எழுதாமலிருப்பது
சமூகத்துக்கு நல்லதா...?
இல்லை இல்லை
சமூகம் நன்றாக இருந்தால்
எனக்கு கவிதை வராது!
உலகத்திலேயே
மிகப் பெரிய கவிஞன் நான் ,
என்ற ஆணவம்
எல்லா கவிஞனைப்போலவே..
எனக்கும் உண்டு !
சில நேரம்
காதல் கவிதைகளை
கடன் வாங்குபவர்களை நினைத்து
பரிதாபப்படுவேன்...
அவர்கள்
காதல் தோற்கப்போவதை நினைத்து!
காதல் கவிதை
கடன்வாங்கியவர்களின்
காதல் வெற்றிதான் - எனது
கவிதை வெற்றியும்!
ஆனால் இதுவரை
என்
கவிதைகளை கொடுத்த
யாருடைய
காதலுமே ஜெயித்ததில்லை
அப்படியென்றால்
தோற்றது எது?
கவிதையா...
காதலா....
சில கவிதைகள்
கருத்து எண்ண வைக்கும்!
சில கவிதைகள்
கம்பி எண்ணவும் வைக்கும் !
கவலை இருக்கும்பொழுதும் ...
கவிதை வருகிறது !
சிலநேரம்
கவிதை எழுதியபிறகும் ...
கவலை வருகிறது !
கவிதையை ...
காதலியுங்கள் !
தயவுசெய்து
கவிஞனை ...
விட்டுவிடுங்களேன் ( ? )
சொந்தமாய்
கவிதை எழுதத்தெரியாதவன்
காதலிக்க லாயக்கில்லை!
உண்மையாய்
காதல் கொண்டவனுக்கு
கவிதை ஒரு கைப்பிள்ளை !
தலைப்பு கொடுத்து
கவிதை எழுதச்சொன்னால்
எழுத மறுப்பேன் !
சிலநேரம் அவள்
தலை பூ கிடைத்தால் கூட
கவிதை வடிப்பேன்
சொல்லுங்கள்...நான்
கவிஞனா...?
காதலனா...?
காதல்தோல்வி கவிதை
அதிகம் எழுத காரணம் யாது
காதல்தோல்வியா...?
பால்வினை நோய்க்கு
வைத்தியம் பார்க்க
மருத்துவனுக்கும்
பால்வினை நோய் இருக்கவேண்டிய
அவசியமா என்ன?
கவிதையின்
அர்த்தம் புரிந்தவர்கள்
மௌனமாய் இருக்கிறார்கள்!
கவிதையின்
அரைகுறையாய் புரிந்தவர்கள்
கைதட்டுகிறார்கள்!
நீங்கள் எப்படி..
மௌனமாய் இருப்பீர்களா ..?
கைதட்டுவீர்களா...?
- ரசிகவ் ஞானியார்
20 comments:
kavithaia? auto biography..? rasikav..
Arumai..
"காதல்தோல்வி கவிதை
அதிகம் எழுத காரணம் யாது
காதல்தோல்வியா...?
பால்வினை நோய்க்கு
வைத்தியம் பார்க்க
மருத்துவனுக்கும்
பால்வினை நோய் இருக்கவேண்டிய
அவசியமா என்ன?"
நிச்சயமாக இல்லை ரசிகவ்!
காதலில் காதல் தோற்பதே இல்லை!
கவிதை தோற்பதுண்டு!
கமெண்ட் போடலாம்ங்கிறீங்களா? வேண்டாங்கிறீங்களா? போட்டா எனக்கு சரியா புரியலைன்னு சொல்றீங்களே? இருந்தாலும், இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... யாருக்காக எழுதினீங்களோ அவங்க பதில் சொன்னாங்களா?? ;)
//poons said...
கமெண்ட் போடலாம்ங்கிறீங்களா? வேண்டாங்கிறீங்களா? போட்டா எனக்கு சரியா புரியலைன்னு சொல்றீங்களே? இருந்தாலும், இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... யாருக்காக எழுதினீங்களோ அவங்க பதில் சொன்னாங்களா?? ;) //
யார்கிட்டயிருந்தும் பதில் வரவில்லையென்றால் அவர்கள் என் கவிதையின் அர்த்தம் புரிந்தவர்கள் அதனால்தான் மௌனமாய் இருக்கிறார்கள் என்று கதையடிக்கலாமே அதுக்குத்தான்..
யாருக்கும் தனிப்பட்ட முறையில் எழுதலை..பொதுவாகத்தான் எழுதினேன்..
( அட எப்படிங்க கண்டுபிடிச்சீங்க..)
கவிஞனே,
/சமுதாயம் பாதிக்கப்படும்பொழுது மட்டும்தான்
எனக்கு
கவிதை வருகிறது!/
இந்த கவிதைக்கு சொந்த பாதிப்பு காரணமா??
/கவிதையை ...
காதலியுங்கள் !
தயவுசெய்து
கவிஞனை ...
விட்டுவிடுங்களேன்/
அப்ப நான் முன்ன கேட்டது உண்மைதான் போல :)
/சில கவிதைகள்
கம்பி எண்ணவும் வைக்கும் /
இதென்ன? உண்மையில் நிகழ்ந்ததா என்ன?
மவுனமாக கைதட்டுகிறேன்
அன்புடன்
கீதா
//நிச்சயமாக இல்லை ரசிகவ்!
காதலில் காதல் தோற்பதே இல்லை!
கவிதை தோற்பதுண்டு! //
ம் நன்றி சிங் ஜெயக்குமார்..
அனுபவமா பேசுற மாதிரி இருக்குது..?
//இந்த கவிதைக்கு சொந்த பாதிப்பு காரணமா??//
ம் கண்டிப்பாக..சும்மா நிலவை ரசித்து - கடற்கரையில் அலைகளை பார்த்துக்கொண்டு ஒரு ஜோல்னாப்பையை வைத்துக்கொண்டு - பார்க்கின் பெஞ்சுகளில் உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது.
ஒவ்வொரு கவிதைக்கும் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்..
//அப்ப நான் முன்ன கேட்டது உண்மைதான் போல :)//
என்ன கேட்டீங்கன்னு தெரியல..
ஆனா உண்மையா இருக்கலாம் :)
//இதென்ன? உண்மையில் நிகழ்ந்ததா என்ன?
மவுனமாக கைதட்டுகிறேன்//
ம்..பின்ன..
நன்றி மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கின்றேன்..
/இந்த கவிதைக்கு சொந்த பாதிப்பு காரணமா??/
இந்த கேள்வியைத்தான் சொன்னேன் //அப்ப நான் முன்ன கேட்டது உண்மைதான் போல :)// அப்படின்னு
/சில கவிதைகள்
கம்பி எண்ணவும் வைக்கும்
இதென்ன? உண்மையில் நிகழ்ந்ததா என்ன?
ம்..பின்ன../
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். கவிதை எப்படி கம்பி எண்ண வைக்கும்??
//கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். கவிதை எப்படி கம்பி எண்ண வைக்கும்?? //
கவிதை எழுதி
அவ மனச்சிறையில கம்பி எண்ணிட்டு இருந்தேனே :)
Photo & poem...
A rebel with the heart!
ஓ
கவிதை எழுதி
கவின் மனதினை
கொள்ளை கொண்டீரோ??
தண்டனையாய்
சிறை வாசம்
மனதிலேயா?
மணச்சிறை எப்போ?
பலே பலே..
வாழ்க! வாழ்க!
//Pot"tea" kadai said...
Photo & poem...
A rebel with the heart! //
நன்றி நண்பா
பொட்டிக்கடையில் சரியான வியாபாரம் போல
//சிறை வாசம்
மனதிலேயா?
மணச்சிறை எப்போ?//
வலை நண்பர்களுக்கு விரைவில் தெரியப்படுத்துகிறேன்.
.....
விழி நனைக்கும் மழைபோல்
என் உயிர் நனைக்கும்
உன் கவிதைகள்.
(எங்கோ இருந்தாலும்....எனக்குள்
இருப்பவனுக்கு என் வாழ்த்துக்கள்)
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
//(எங்கோ இருந்தாலும்....எனக்குள்
இருப்பவனுக்கு என் வாழ்த்துக்கள்)
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன். //
எங்கும் இருக்கவில்லை உனக்குள்தான் இருக்கிறேன் நண்பா..
வாழ்த்துக்களுக்கு நன்றி
// முத்துகுமரன் said...
..... //
என்ன முத்துக்குமரன் மௌனம் சாதிக்கின்றீர்களோ..? அப்படியென்றால் கவிதை முழுவதும் புரிந்துவிட்டதா?
//உண்மையாய்
காதல் கொண்டவனுக்கு
கவிதை ஒரு கைப்பிள்ளை !//
அது கைப்பிள்ளையா.. கைப்புள்ளன்னு வருவது தான் சரி...
சங்கத் தல கைப்புவை பற்றி கவி பாடி கலங்கடித்த உங்களுக்கு அண்ணன் கைப்பு கிழ்க்கு ஆப்பிரிக்கா சுற்று பயணம் முடித்து திரும்பியதும் விழா எடுத்து
"வருத்தப் படாத வாலிப கவி "
என்னும் பட்டம் கொடுக்க் ஏற்பாடு செய்யபடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்
//
அது கைப்பிள்ளையா.. கைப்புள்ளன்னு வருவது தான் சரி...
"வருத்தப் படாத வாலிப கவி "
என்னும் பட்டம் கொடுக்க் ஏற்பாடு செய்யபடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் //
கைப்புள்ளையின் ஞாபகமா அப்படிச் சொல்லலிட்டேங்க..
சரி சரி பட்டமெல்லாம் தந்து கௌரவப்படுத்தாதீங்க..அப்புறம் நான் அழுதுறுவேன்.
தன் நாற்றம் பொறுக்காது
வேலை நிறுத்தம் செய்த சாக்கடை
இன்னும் அதிகமாய்
வெறுக்கப்பட்டது
,,,,nice mams....
Post a Comment