
அன்பு நண்பர்களுக்கு,
இந்தச் சம்பவம் பெங்களுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது.
4 வயது பெண் குழந்தை ஒன்று கால் முறிவுக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவளுடைய முறிந்த எலும்புகளை இணைத்து வைக்கும் பொருட்டு ஆபரேஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
Lift Supporting System த்தில் வைத்து ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த System தனது சமிக்ஞைகளை இழந்து அணைந்து போனது.
காரணம் என்னவென்றால் அந்த ஆபரேஷன் தியேட்டர் வெளியே யாரோ மொபைல் போனை உபயோகித்து இருக்கிறார்கள். அந்த மொபைல் போனின் அலைவரிசைக் கதிர்களால் தாக்கப்பட்டு அந்த Life Supporting System அணைந்து போனது.
மொபைல் போன் உபயோகித்தவர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் எந்த வித பயனும் இல்லை..அந்தப் பிஞ்சுக் குழந்தை இறந்து விட்டது.
என்ன சோகமென்றால் பெற்றோர்களுக்கு அது ஒரே குழந்தை. எந்த அளவிற்கு துடித்துப் போயிருப்பார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்.
செல்லமாய் வளர்த்த குழந்தை
செல்போனில் ..
செத்துவிட்டது!
ஆகவே நண்பர்களே தயவுசெய்து மருத்துவமனை - விமான நிலையம் - மற்றும் எங்கெல்லாம் செல் போன் உபயோகிக்க கூடாது என்று எச்சரிக்கைச் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் தயவுசெய்து உபயோகிக்க வேண்டாம்.
எச்சரிக்கைகளை மிதித்து விட்டு எத்தனையோ பேர் இப்படி உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்களே அதனால் யாருக்கும் எந்த வித பாதிப்புகளும் இல்லையே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் பாதிப்புகளின் தாக்கம் நீங்கள் உணராமலையே இருக்கக் கூடும். ஆம் உங்களுக்குத் தெரியாமலையே ஒரு உயிரை நீங்கள் கொல்லக்கூடும்.
தயவுசெய்து இந்தத் தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாமல் அலட்சியமாக இருக்கலாம்.
நீ கொடுக்கின்ற
மிஸ்காலில் கூட
சில உயிர்கள்
மிஸ் ஆகக் கூடும்
நம்மால் படைக்க முடியாது. ஆனால் பாதுகாக்கலாம் .
வேண்டுதலுடன்
ரசிகவ் ஞானியார்
21 comments:
A Nice translation from a junk mail
இப்படியான ஒரு செய்தியை நான் எப்போதோ எங்கேயோ வாசித்தேன்.
இது அதுதானா? அல்லது புதிதா?
நல்ல தகவல் தோழா...
பலருக்கு இது போய்ச்சேர வேண்டும்.
நான் இதை கேள்விப்பட வில்லை இதை மருத்துவமனை அலுவலர்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தடுக்க செல்போனை முடக்கிவிட்டு வர பனிக்க வேண்டும். எனக்கு என்னமோ அதுதான் காரணம் என்பதை நம்ப முடியவில்லை வேறு ஏதேனும் காரணமாகக் கூட இருக்கலாம். மயக்க மருந்து அதிகமாக கொடுத்ததால் எனது நண்பரின் உறவினர்கள் இருவர் இறந்து வி்ட்டனர்.
தகவலுக்கு நன்றி
hello makka oru sokamana matteryai nagaisuvai heading il potturikirerkal, thalaipai mathunga makka
கேட்கவே ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஞானியார். இன்றுதான் பெருகிவரும் தகவல் தொழில் நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்/நன்மைகள் பற்றி பெண் கட்டுரை எழுத பாயிண்ட் கேட்டிருந்தாள். இதை எழுதுவதன் மூலம் நாலுபேருக்காவது மெசேஜ் சென்றடையும்.
a good service.....hats off
enna nilavu nanbare,
idu ungalukku naiyandi/nagaichuvaiyaaga therigiratha??
ஞானியார்
இப்போதான் பார்ர்த்தேன். இந்தப் பதிவை நையாண்டி-காமெடி தலைப்பில் போட்டிருக்கீங்களே.
விமர்சித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நீங்கள் அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும். அதுவே என் ஆசை
இந்தப் பகுதி நகைச்சுவை - நையாண்டி பகுதியாக மாறி விட்டது தற்செயலாகத்தான். நான் எதையும் மாற்றவில்லை. வகைப்படுத்துதலில் ஒரு சின்ன பிரச்சனை இருக்கின்றது. அதனை மறுபடியும் எப்படி மாற்ற வேண்டும் எனத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.
சந்திரவதனா அவர்களுக்கு,
இந்தத் தகவலை என்னுடைய நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார் அதுபோல யாரேனும் தங்களுக்கும் அனுப்பியிருக்கலாம்.
// ஆர்த்தி... said...
Thanks for sharing the information, I have read 'Please switch off your cell phone' in diffrent places like hospitals, banks... but have not done them till now. But will not do the same anymore //
நன்றி ஆர்த்தி..இதுதான் எனக்கு ஆத்ம திருப்தி
ஞானி,
இப்பதிவை மீண்டும் 'தமிழ்மணத்தில்' பதிந்து முறையான வகைப்படுத்தலைச் செய்யுங்களேன்
நானுல் இதைக் கேள்விப்படவில்லை. மொபைல் போன் பற்றி பல வதந்திகள். பில்லிங் ஸ்டேசனில் பயன் படுத்தினால் தீ விபத்து ஏற்படும் என்று. ஆனால் இது முற்றிலும் தவறு என discovery channel ல் பார்த்தேன். ஒரு கண்ணாடி அறை முழுவதும் LPG நிரப்பப் பட்டு பின்னர் மொபைல் போன் உபயோகப் படுத்திப் பார்க்கப்பட்டது. பயந்தது போல் ஒன்றும் நிகழவில்லை. பூமிக்கு வெளியில் இருந்தும் மொபைல் போன்கள் பயன்படுத்தும் அலைநீளம் உள்ள ஒளிகதிர்கள்(சூரியனில் இருந்து அல்ல)(வெப்பம் கூட ஒரு ஒளிதான்) வந்து தாக்குகின்றன. மொபைல் போனில்(GSM) உள்ள வடிகட்டி(filter) அதைப் பிரித்து குறிப்பிட்ட encryption உள்ள கதிர்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றன. CDMA தொழில்நுட்பம் பற்றி சரிவரத் தெரியவில்லை.
அன்புள்ள நிலவு நண்பன்
நல்ல பதிவு. இங்குள்ள மருத்துவமனைகளில், (அமெரிக்காவில்) செல் போன்களை வேலை செய்ய
விடாது செய்து விடுகிறார்கள்.
உங்கள் நெல்லைக் குசும்பு பதிவும் நன்றாக இருந்தது.
அன்புடன்
சாம்
தகவலுக்கு நன்றி மகேஸ்.
நல்லதொரு தகவலுக்கு நன்றி நண்பரே!
தற்போது வந்துள்ள புதிய மாடல் மொபைல் போன்களை விமானங்கள் புறப்படும் போதும் இறங்கும் போதும் உபயோகிக்கும் வகையில் 'Flight mode' உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
என்னுடைய புது மொபைலில் இந்த வசதி உள்ளது.
அன்பு நண்பரே
இந்தத் தகவலில் சிறிதும் உண்மையில்லை. இதுபோல நிறைய மின்னஞ்சல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. செல்பேசியிலிருந்து வரும் அலைகள் மற்ற மின்னணுவியல் கருவிகளுடன் ஊடி விடக்கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே விமானம், மருத்துவமனை போன்ற இடங்களில் செல்பேசி பாவிக்கத் தடை இருக்கின்றது. நீங்கள் கூறுவது போல பிற கருவிகளின் இயக்கத்தை நிறுத்தும் அளவுக்கெல்லாம் செல்பேசிக்குத் திறமை இல்லை. செல்பேசித் துறையில் பணி புரிபவன் என்கின்ற முறையில் தங்களுக்கு இதை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அன்பு நண்பரே
இந்தத் தகவலில் சிறிதும் உண்மையில்லை. இதுபோல நிறைய மின்னஞ்சல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. செல்பேசியிலிருந்து வரும் அலைகள் மற்ற மின்னணுவியல் கருவிகளுடன் ஊடி விடக்கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே விமானம், மருத்துவமனை போன்ற இடங்களில் செல்பேசி பாவிக்கத் தடை இருக்கின்றது. நீங்கள் கூறுவது போல பிற கருவிகளின் இயக்கத்தை நிறுத்தும் அளவுக்கெல்லாம் செல்பேசிக்குத் திறமை இல்லை. செல்பேசித் துறையில் பணி புரிபவன் என்கின்ற முறையில் தங்களுக்கு இதை விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
செல்போன் சிக்னல்கள் நிச்சயமாக ஒத்த அலைவரிசை உடைய சிக்னல்களைத் தாக்கும். சாட்டிலைட் ரேடியோ இருக்கிறதா? அதனருகில் செல்போனை வைத்துக் கொண்டு அதில் கால் செய்யுங்கள். சேட்டிலைட் ரேடியோ குடுப்பது வெறும் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓசைதான். காலை நிறுத்துங்கள்..மறுபடியும் பாட்டு கேட்கும்.
ஆனால் மருத்துவமனைக்குள்...அதிலும் life supporting system....வாய்ப்புகள் மிகக்குறைவென்றே நான் கருதுகிறேன். Life supporting system தன்னுடைய செயலையே முழுவதும் இழப்பது என்பது...........பொய்யாக இருப்பதற்கு வாய்ப்புகள் நிறைய என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆனாலும் உயிரிழப்பு மிகப்பெரியதுதான். அதற்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும். அப்படி நடந்திருந்தால் மருத்துவமனை மிக எளிதாக அந்த நபரைக் கண்டு பிடித்து விடலாம். போலீசில் ஒரு புகார் கொடுத்து விட்டு செல்போன் கம்பெனியை அனுகினால்...அவர்கள்..அந்தப் பகுதியில் இருந்த அத்தனை எண்களையும் கொட்டி விடுவார்கள். மிக எளிது.
எனக்கென்னவோ இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பது போல இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற செய்திகள் நிச்சயம் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லையே.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மெயில் எல்லாருக்கும் வந்தது. ஒரு கணிணி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணின் கணவருக்கு ரத்தப் புற்று நோய் இருப்பதாகவும்...அந்தப் பெண் உதவி கேட்பதாகவும்...அதில் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணும் ஈ-மெயில் ஐடியும் சரியானவை. ஆனால் தகவல் பொய். தொடர்ச்சியாக வந்த மெயில்களாலும் தொலைபேசி அழைப்புகளாலும் அந்தப் பெண் பட்டது நாங்கள் அறிந்ததே. இதுவும் அதுபோல இருக்கலாம்.
நல்ல தகவல் தந்த ராகவன் மற்றும் எழிலுக்கு நன்றி
Post a Comment