Friday, June 27, 2008

உலகமயமாக்கல்

Monday, June 23, 2008

பயணிமரணம் சம்பவித்த வீட்டை
கடந்து செல்லும்பொழுது...
கொஞ்சம் சலனப்படுங்கள்!

தெரியுமா?
தெரு முனையில்தான்
மயானம் இருக்கிறது

- ரசிகவ் ஞானியார்

Thursday, June 19, 2008

பாம்பின் வாசனை

தூரமாய் இருக்கும்பொழுது
நீ
அலைபேசி வழியாக அனுப்புகின்ற
பூக்களின் வாசனை,
நெருக்கத்திலிருக்கும்பொழுது
இடையில் ஊர்கின்ற
பாம்புகளின் பயத்தில்
வாடிப்போகின்றது!

என்னை எரிச்சல்படுத்திய
உனது ஆளுமையின் முட்களை
எடுத்தெறிய
நினைத்தபொழுது,
கையில் இடறியது
ஓர்
ஓற்றை ரோஜா!

நமக்குள்ளான
காதல் கடிதங்களை மட்டும்
நான் சேமித்திராவிட்டால்,
உன் மீதான கோபத்தை
எந்தக் காரணியாலும்
தீர்க்க முடியாமல் போயிருக்கும்!

- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 18, 2008

காதலிசம்

விட்டுவரவும் மனமில்லாமல்,
நிற்கவும் அனுமதியின்றி,
தவித்துக்கொண்டிருக்கும்
எல்கேஜி குழந்தையின்
அம்மாவைப்போல,

நீ செல்லும்பொழது
இரண்டு நிலையாய்
என் இதயம்!

- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 17, 2008

நேர்க்கோடு


எதிர்பார்ப்புகளும்,
இயலாமையும்
ஒரே கோட்டில் நிற்கும்பொழுது
வாழ்க்கை கசந்து விடுகின்றது.

சொல்லுங்களேன் நீங்களேனும்
எதிர்பார்ப்புகளை பிய்க்கவா?
இயலாமையை ஒடிக்கவா?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 10, 2008

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்
தோழன்மீர்,

வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்


இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.

பெயர் : மென்தமிழ்


உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.

மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கணிப்பொறி சம்பந்தமான படைப்புகள் மட்டுமல்ல. எந்த படைப்புகளையும் அனுப்பலாம் . கணிப்பொறி உபயோகிக்கும் அல்லது இணையத்தில் உலாவரும் அனைவருமே இதில் அடக்கம்.
படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :
mentamil@gmail.com


படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் :
30/06/2008

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.

நம்பிக்கையுடன்,


- மென் தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

Saturday, June 07, 2008

மரம் பார்க்கின்றான்

பக்கம் வர பயப்படும்
சிறுவர்களைக்
கடுப்போடு பார்க்கின்றான்...
கடவுளான மரம்!

- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 04, 2008

காதலிசம்தெருவில் வருகின்ற
சவ்வு மிட்டாய்காரனிடம் கூட ...
'காதல்' பொம்மை
செய்யச்சொல்லி ...
அடம்பிடிக்கிறது ,
உன் மீதான காதல்!

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு