Tuesday, March 20, 2007

இணையத்தில் காசு சம்பாதிக்கலாம்

இணையத்தில் காசு சம்பாதிக்கலாம் என்று எத்தனையோ அறிவிப்புகள். இணையத்தில் உலவுவதற்கு கூட பணம் தருவாங்களா..? எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

ஆனாலும் நண்பர்களின் இமெயில் வேண்டுகோளுக்கிணங்க அந்த இணையதளத்தை கிளிக் செய்தேன்.

கொஞ்சம் நம்பும்படிதான் இருக்கிறது. ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கான சான்றிதழ்களை கூட காட்டுகின்றார். சரி காசா? பணமா? என்று ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்திருக்கின்றேன். நம்பினால் நீங்களும் ஆரம்பியுங்கள்..

இதில் என்னோட சுயநலம் என்ன என்றால் நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வருமாம். நீங்கள் இணைந்து நான் மேலே கொடுத்தது போல ஒரு லிங்கை உங்கள் நண்பர்களுக்கு கொடுத்தால் அவர்கள் இணைய இணைய உங்களுக்கும் பணம் வருமாம். முயற்சி செய்துதான் பாருங்களேன்.இதோ உங்களுக்காக..

நீங்கள் உறுப்பினராக இங்கே தட்டவும்.

www.agloco.com/r/BBCQ3659


- ரசிகவ் ஞானியார்

Tuesday, March 13, 2007

கவிஞர்களுக்கு ஓர் சவால்.

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

http://groups.google.com/group/anbudan/msg/57dea74c316e2126?

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Friday, March 09, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 18 ) நிறைவு

முதலில் சி ஆர் தாஸின் வீட்டிற்குப் போனோம் அவர் அங்கு இல்லை. அங்கிருந்து கிளம்பி ஹேம்சந்திரனின் வழக்கறிஞர் வீட்டுக்குப் போய் உணவு உண்டோம். ஹேம் சந்திரன் அங்கேயே தங்கிவிட்டார். பாரீனும் கிளம்பிவிட்டான்

நான் அன்றிரவு எனது ஊரான சந்தன் நகர் போக தீர்மானித்து விட்டேன்.


ஹெளரா இரயில் நிலையம் சென்று 10.30 இரயிலைப் பிடிக்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் எப்படி செல்வது? கல்கத்தா தெருக்களை மறந்து விட்டேன். சுற்றியலைந்து நான் ஹெளரா ஸ்டேசன் சென்றபொழுது ரயில் போய்விட்டது.


என்ன செய்ய? சியாம் பஜாரில் எனது மாமனார் வீடு இருப்பது ஞாபகம் வந்தது. அங்கு சென்று இரவைக் கழிக்க தீர்மானித்தேன். நான் அங்கு போய் கதவை தட்டியபொழுது மணி 12 ஆகியிருக்கும். வாயிற்கதவை இரண்டு மூன்று முறை தட்டியபிறகும் பலனில்லை. பின் கல்கத்தா தெருக்களில் அலைஞ்சு திரிஞ்சு இராத்திரியை கழிச்சுடலாம் என நினைத்தேன்.


அப்படியே நடந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு மகிழ்ச்சி 12 வருடங்களுக்குப் பிறகு ரஸ்தா தெருக்களில் சுதந்திரமாக நடக்கின்றேன். பக்கத்தில் ஜெயிலர் இல்லை ஆபிஸர் இல்லை சிறை அதிகாரி இல்லை. கடந்த கால பந்தம் அறுந்து விட்டது. புதிய பந்தம் இன்னமும் ஏற்படவில்லை. இன்று உலகத்தில் உண்மையிலையே நான் தனியாக விடப்பட்டிருக்கின்றேன். ஆனால் இந்தத் தனிமையில் வேதனையின் கருமை படிந்திருக்கவில்லை. மனதுள் மகிச்சிதான் பூரித்துப் பொங்குகிறது.

சியாம் பஜாரிலிருந்து சர்க்குலர் சாலை வழியாக சியால்தா ஸ்டேஷன் பக்கம் போனேன். பணிரெண்டு ஆண்டுகள் செருப்பு போடவில்லை. ஆகவே புதுச்செருப்பு காலைக் கடித்தது.

செருப்பை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு நடந்தேன்.


எனது கக்கத்தில் உள்ள பொட்டலம் கண்டு ஒரு பாராக்காரன் நான் எங்கிருந்து வருகிறேன் எங்கே போகிறேன் என விசாரித்தான் நான் அந்தாமானிலிருந்து வந்திருக்கும் மாஜி கைதி என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். நான் எவ்வளவு உண்மையானவன் என்று இப்படி காட்டிக்கொள்ளவேண்டாமே? ஏற்கனவே ஒரு தடவை உண்மை பேசியதற்குத்தான் 12 ஆண்டுகள் அனுபவித்தேன்.


அவனிடம் பொய் சொன்னேன். நான் காளிகாட்டிலிருந்து வருகின்றேன். சியால்தா போய்க்கிட்டு இருக்கேன்.


பாராக்காரன் என் கக்கத்து பொட்டலத்தை பார்த்துவிட்டு கேட்டான் நீ ஒரியாக்காரனா என்று


நான் மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஆம் என்றேன்.


பிறகு அவனது அனுமதி பெற்று அவனுக்கு சலாம் போட்டுவிட்டுமறுபடி நடந்தேன். இரவு 1 மணிக்கு ரயிலைப் பிடித்த நான் சியாம் நகர் ஸ்டேஷனை அடைந்தபொழுது மணி இரண்டாகிவிட்டது.


பின் படகில் அந்த அதிகாலையில் கங்கையைக் கடந்து எங்கள் ஊர் கரைக்கு வந்தபொழுது மணி சுமார் 3. தெருக்கள் ஆள் அரவமற்று சூன்யமாகி இருந்தன.

தெருமுனைகளில் மண்ணெண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. என் வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தால் வீட்டின் தோற்றம் முற்றிலுமாக மாறப்பட்டிருந்தது.


ஜன்னல் கதவுகளைத் தட்டி தம்பிகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். ஜன்னல் கதவு திறந்தது. எனக்கு மிகவும் பரிச்சயமான பெண் குரல் நீ யாரு?

கூடவே இன்னொரு ஜன்னல் கதவும் திறக்கப்பட்டு என் தாயும் இதே கேள்வியைக் கேட்டாள்.


எவன் திரும்பி வருவானென்ற நம்பிக்கையை எல்லோரும் இழந்துவிட்டார்களோ அவன் திரும்பி வந்துவிட்டானென்பதை நம்பத் துணிவு வரவில்லை அவர்களுக்கு .



பின் அடையாளம் காணப்பட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வீட்டுக்குள் ஒரே கலகலப்பு. குழந்தைகளின் கூட்டம் கண்களைக் கசக்கிக் கொண்டு என்னைச் சூழ்ந்து கொண்டது. இவர்கள் யார்? இவர்கள் எவரையும் எனக்குத் தெரியாதே?


ஒரு சிறுபையன் தூரத்தில் நின்றவாறு ஆ என்று வாயைப்பிளந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தான். என் தம்பிப் அந்தப் பையனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.


"இவன் உங்க பிள்ளை "



நான் அப்படியே அதிர்ச்சியடைந்தேன். நான் வீட்டை விட்டு வெளியேறியபோது அவனுக்கு வயது ஒன்றரை இப்பொழுது அவனுக்கு பதிமூன்று


மறுபடியும் புதிதாய் தோன்றும் பழைய உறவுகள் மகிழ்ச்சி என்று குடும்ப வாழ்க்கைக்குள் சாதாரண மனிதனாய் நுழைந்து விட்டேன்.


படகோட்டியே இந்த தடவை எந்தக் கரையில் கொண்டு சேர்க்கப்போகின்றாய்?


நிறைவுரை

மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பிய உபேந்திரநாத் பாரீனுடன் இணைந்து மிகப்பிரபலமான வாரப்பத்திரிக்கையான ஆத்ம சக்தியை வெளியிடத்தொடங்கினார்.

சிறிது காலத்திற்குப்பிறகு ஆத்மசக்தி நின்று விட்டது


பின் பார்வேர்டு லிபர்டி அம்ருதபஜார் பதிரிகா தைனிக் பசுமதி முதலிய பத்திரிக்கைகளில் வௌ;வேறு சமயங்களில் நிருபராக பணியாற்றி தம் இறுதிக்காலம் வரையிலும் பத்திரிக்கை துறையிலேயே இருந்து 1950 ம் ஆண்டு ஏப்பரில் மாதம் உயிர் நீத்தார்.


அடிமைத்தனத்திலிருந்து நாம் இப்பொழுது மீண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு காரணம் இதுபோன்ற போராட்ட வீரர்களால்தான் இதுபோல எத்தனையோ பேர் தமது வாழ்க்கையை இழந்து உறவுகளை இழந்து கஷ்டப்பட்டிருக்கின்றார்கள்.


சிலரின் வரலாறுகள் குறிப்புகள் அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றது. ஆனால் உலகிற்கு தெரியாமலையே எத்தனையோ பேர் நமக்காக சிந்திய இரத்தத்தை நாம் மறந்து விடக் கூடாது.




- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 17 )

இப்படி கைதிகளின் சாவு எண்ணிக்கை அதிகரிப்பது கண்டு அதிகாரிகள் கலகமடைந்தனர். பல கைதிகளுக்கு கயிறு திரிப்பது போன்ற லேசான வேலைகள் கொடுக்கப்பட்டது.
எங்களின் வேலை நிறுத்தம் காரணமாக நிர்வாகம் எங்களுக்கு சில சலுகைகள் செய்ய ஆரம்பித்தது. எங்களது உணவை நாங்களே சமைத்துக் கொள்ளலாம். கடுமையான வேலையிலிருந்து விடுதலையும் கிடைத்தது,

அலிபூர் ஜெயிலிருந்து வரவழைக்கப்பட்ட பாரீனுக்கு பிரம்பு தொழிற்சாலையில் மேற்பார்வைபணி வழங்கப்பட்டது


எனக்கு செக்கிழுக்கும் பகுதியில் மேற்பார்வைப் பணி தரப்பட்டது. கைதிகளுக்கு மாதச்சம்பளமாக 1 ரூபாய் வழங்கப்பட்டது.


நாங்கள் சூபரிண்டெண்;டுடன் இடைஇடையே அரசியல் விவாதத்தில் ஈடுபடவோம் அப்போது அவர் தங்களது அரசாங்கத்தின் பெருமையைப் பற்றி கூறுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.


ஜெர்மனி ஆட்சி கொடுரமான ஆட்சி அவர்கள் நரகத்திற்குதான போவார்கள். இங்கிலாந்துக்கு அருகே அவர்கள் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று கூறினாhர் அவர்


ஆங்கிலேயர்களிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அவர்கள் எந்த விசயத்தையும் குறுகிய தன்மையில் பார்ப்பார்கள். பிறருடைய கருத்தை கவணிக்கவே மாட்டார்கள்.



பின் நாங்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பம் அனுப்பினோம். விதிக்கப்பட்ட சிறைகாலத்தை விடவும் அதிகமாக மொத்தத்தில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டதால் எங்களை விடுதலை செய்யவேண்டுமென்று. ஆனால் அந்த விண்ணப்பம் தலைமை கமிஷனர் குப்பைக்குள் சென்று மறைந்து விட்டது.


இதற்கிடையில் சிறைக்கமிட்டி போர்ட்பிளேர் வந்தபொழுது நான் எல்லா விசயத்தையும் நேரில் விளக்கினேன். அதனைக் கேட்டுவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.


சில நாட்களுக்குப்பின் சூப்பிரண்டெண்ட் வந்த எங்களை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவிடும்படி வங்காள அரசு உத்தரவு அனுப்பியிருக்கிறதாம். அங்கிருந்து நாங்கள் விடுதலை செய்யப்படுவோமாம்.


இதனைக் கேட்ட சிலர் தரையில் கை கால்களை நீட்டிப்படுத்துக்கொண்டு மகிழ்ச்சிப்பெருக்கால் கூக்குரலிட்டார்கள். சிலர் கைகல்களை ஆட்டினார்கள்.

எங்களில் ஓர் அறிவாளி எச்சரித்தார்


கொஞ்சம் அடக்கி வாசிங்க தம்பிங்களா.. கப்பல் நடுக்கடலிலே மூழ்காம இருக்கணுமே


கப்பலில் ஏற இரண்ட நாட்கள்தான் இருந்தன. எங்களுக்கு இரவில் உறக்கமில்லை ,சாப்பிடத் தோன்றவில்லை. எண்ணற்ற கற்பனைச்சித்திரங்கள் மனவெளியில் மிதக்கின்றன.

வெகு நாட்களாக மறந்து போன முகங்கள், பழக்கமான முகங்கள் தென்படுகின்றன. எவரெவருடன் இந்த வாழ்க்கையின் தொடர்புகள் அறுந்த போயிருந்தனவோ அவர்கள் மறுபடியும் தங்கள் அன்புக் கயிற்றால் எங்களைப் பிண்ணத் தொடங்கினார்கள் .


இரண்டு நாட்களும் கழிந்தன. நாங்கள் 26 பேர் மொத்தமாக சிறையை விட்டு வெளிNயு வந்தோம். சில சீக்கிய கைதிகள் மகிழ்ச்சியில் கத்தினார்கள். பிறகு பாட்டு பாடினார்கள்


ஓ தந்தையே பத்தாம் குருவே

குருவியைக் கொண்டு பருந்தை வேட்டையாடினாய்

நீ பேறு பெற்றவன்



என் மனதுக்குள் நானும் சொல்லிக்கொண்டேன். பாரதத்தின் எதிர்கால குருவே கடவுளின் உருவ வெளிப்பாடே சமுத்திரத்தின் மறுகரையிலிருந்து இந்த எளிய பக்தனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்
பிறகு கப்பலில் ஏறிக்கொண்டு போர்ட்ப்ளேரை இறுதியாகப் பார்த்துக் கொண்டோம் மனிதனை மனிதன் என்ன செய்து விட்டான் , வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.


கப்பல் பயணம் 3 நாள். ஆதற்கு முன்னால் ஓடியது உள்ளம். இதோ இதோ சாகர் தீவின் விளக்கு, இதோ இதோ ரூப்நாராயண் ஆறு கடலில் சேருமிடம், இதோ இதோ கிதிர் பூர் கப்பல் துறை


கப்பல் நடுக்கடலில் மூழ்கவில்லை உண்மையில் நாங்கள் கரை வந்து சேர்ந்து விட்டோம். எங்களை அலிப்பூர் சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.


பணிரெண்டு வருடம் கழித்து மறுபடியும் அலிப்பூர் சிறை. ஆனால் அதன் பழைய தோற்றம் இல்லை. எங்கள் வருகை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்ட்டது. எங்களின் பொருட்கள் சோதனையிடப்பட்டன. நான் என்னிடம் வைத்திருந்த புத்தகங்களை புதிய கைதிகளிடம் கொடுத்துவிட்டேன். நாடு திரும்பியவுடன் சரஸ்வதியோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன். சோறு சாப்பிட்டுவிட்டு பேசாமல் படுத்துக் கிடக்கப்போகின்றேன்.


நாங்கள் சிறைக்கு போய் சேர்ந்து 1 மணி நேரத்திலையே எங்களிடம் கேட்கப்பட்டது. நீங்கள் இன்னிக்கே வெளியே போக விரும்புறீங்களா? கல்கத்தாவில் தங்க இடம் இருக்கா?

வெளியே போகும் பேச்சைக் கேட்டு நாங்கள் எம்பிக் குதித்து சொன்னோம் "தங்க நிறைய இடமிருக்கு"

இடமில்லையென்றாலும் சாலையோரத்திலாவது படுத்துக்கிடக்கின்றோம் எங்களை வெளிய விட்டாப்போதும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டோம்.


அன்றிரவே நான் பாரீன் ஹேம்சந்திரன் ஆகியோர் விடுதலையானோம். எங்கே போவது?



(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

Thursday, March 08, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 16 )

எங்கள் வேலை சம்பந்தமாக ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்றால் செக்கிழுத்தே நாங்கள் செத்துவிடுவோம் என்று தோன்றியதால் நாங்கள் செக்கிழுக்க மறுத்து போராடினோம்.

அதிகாரிகள் கொதித்தெழுந்து நான்கு நாள் கஞ்சி - நிற்க வைத்து கை விலங்கிடுவது - என்று தண்டனைக்கு மேல் தண்டனை கொடுத்தார்கள். 12 - 13 நாட்கள் வரையிலும் வெறுங்கஞ்சி கொடுக்கப்பட்டது.


பின் தனிதனித்தனியே சிறையில் அடைத்து வைக்கப்பட்டு யாருடனும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சமயத்தில் பலரது உடல்நலமும் கெட்டுப்போனது.



ஒருநாள் வருந்ததக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆம் இந்துபூஷண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனால் சிறையில் நடக்கின்ற சிறு சிறு அவமானங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் இடைஇடையே சொல்லுவான் இந்த நரகத்தில் பத்து வருடம் தங்கியிருக்க என்னால் முடியாது என்று. அப்படியே செய்துவிட்டான்.


தனது சட்டையை கிழித்து கயிறாக முறுக்கி அறையின் பின்புறமுள்ள ஜன்னலில் தூக்குப்போட்டுக்கொண்டான்.


இதனிடையே உல்லாஸ்கர் கடுமையான வேலை காரணமாக அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவன் வேலை செய்ய மறுத்து எங்களிடம் சொன்னான்

கொடுமைக்கு பயந்து வேலை செய்வது மனித தன்மைக்கு அவமானம் என்று.


அவன் வேலை செய்ய மறுத்ததால் 7 நாட்கள் நின்ற நிலையில் கைவிலங்கு பூட்டப்பட்டான். ஆனால் முதல்நாளே அவன் நினைவிழந்து கை விலங்கோடு தொங்கிக்கொண்டிருந்தான். உடனே அவனை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு கடுமையான காய்ச்சல். 106 டிகிரி காய்ச்சல். மறுநாள் காலை காய்ச்சல் இறங்கி விட்டது. ஆனால் உல்லாஸ்கர் பைத்தியம் பிடித் நிலைக்கு மாறிவிட்டான்.


மனஉறுதியுடன் இருந்த உல்லாஸா இப்படி ஆகிவிட்டான் என்று நினைத்தபொழுது சிறையின் உண்மை உருவம் தெரிய ஆரம்பித்தது எங்களுக்கு. நாங்கள் பிழைத்து ஊர் திரும்ப முடியாது. ஒன்று தூக்கில் சாவோம் அல்லது பைத்தியம் பிடிக்கும் ஆகவே மனஉறுதியுடன் எங்களுக்காக ஏதாவது ஏற்பாடு செய்யப்படும் வரை எந்த வேலையும் செய்யமாட்டோம் என்று தீர்மானத்திற்கு வந்தோம்.


வேலை நிறுத்தத்தை தொடர்ந்தோம். நான்கு நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு அனைவரும் நம்பிக்கை இழந்து வேலைக்கு திரும்பிவிட்டனர் நனிகோபால் மட்டும் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருந்து எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டான். பின் நண்பர்களின் அறிவுரைப்படி வேலை நிறுத்தத்தை கைவிட்டான்.


இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளில் இந்து பூஷண் , உல்லாஸ்கர், நனிகோபால், ஆகியோரின் செய்தி வந்ததால் சிறை நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.ஆகவே விசாரணையின் பலனாக உலஜலாஜ்கர் மனநோய் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டான்.


பின் மறுபடியும் நிர்வாகத்தின் கொடுமைகளை தாங்க முடியாமல் நனிகோபால் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தான். அதற்குத் தண்டனையாக அவனுக்கு சாக்குத்துணியை அணிய கொடுத்தார்கள். அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவனை நிர்வாணமாக்கி அவனை சாக்குத்துணியை அணியச்சொல்லி அறைக்குள் அடைத்தார்கள்.


"அவனோ நாம் அம்மணமாகவே அம்மாவின் வயிற்றிலிருந்து வந்தோம். அம்மணமாகவே திரும்பிப் போகின்றோம்" என்று சொல்லிவிட்டு உள்ளாடைகளைத் தூக்கி எறிந்து விட்டானாம். தலைமைக் கமிஷனர் வந்தால் சலாம் சொல்வதில்லை. "என்ன வேணும்? "என்று கேட்டால் "ஒண்ணும் வேணாம்" என்று பதில் சொல்கிறான் என்கிறானாம்.

அவன் பைத்தியமாகி விட்டானோ என்ற கவலைதான் எங்களுக்குள் எழுந்தது, பின்னர் கேட்டால் அவன் பைத்தியமாகவில்லை பிரிட்டாஷாரின் தண்டனையை நாம் ஏன் ஏற்க வேண்டும் அவர்கள் இஷ்டத்திற்கு சட்டம் இயற்ற அவர்கள் யார் என்று கேட்கின்றான்.


பின் நனிகோபாலுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.


இதற்குப் பின் சிறையில் சில சில சச்சரவுகள் வாக்குவாதங்கள் கைகலப்புகள் தோன்றியது. சிலர் காசநோய் தாக்கப்பட்டு இறந்து போனார்கள். சிலர் இனி விடுதலை கிடைக்காது என்று ஈயத்தை தின்று இறந்து போனார்கள். சிலர் உண்ணாவிரதம் இருந்தே இறந்து போனார்கள். சிலருக்கு பைத்தியம் பிடித்தது.

சிலர் காவலாளிகளோடு மோதி அவர்கள் அடித்து இறந்து போனார்கள்.

இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல பல எவற்றை விடுவது எவற்றை விவரிப்பது?

(தொடரும்)



- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 15 )

ஞாயிற்றுக்கிழமை கூட வேலைக்கு ஓய்வில்லை. தரையை சுத்தமாக தேய்த்துக் கழுவவேண்டும்.

ஒருநாள் வேறு வழியில்லாமல் தெளிவாகச் சொல்லிவிட்டேன்

"நான் செக்கிழுக்க மாட்டேன் உன்னால் முடிஞ்சதைச் செஞ்சிக்கோ "


ஜெயிலருக்கு சரியான கோபம். என்னை தனியறையில் கைவிலங்கு பூட்டி அமர்த்திவிட்டார். மறுநாள் தேங்காய் நார் உரிக்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். ஆனால் அங்கேயும் ஆளுமைச் சக்திகளின் கொடுமைகள் இருந்தன.


ஒருநாள் அறைக்குள் தேங்காய் மட்டையை அடித்துக்கொண்டிருக்கின்றேன். தலை முதல் கால்வரை வியர்வை பெருக்கெடுக்க வாசலில் நின்ற காவலாளியிடம் தேங்காய் மட்டையை நனைக்க தண்ணீர் கேட்டேன்


அவன் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான். தண்ணி தரமாட்டேன் அந்த காய்ஞ்ச மட்டையைத்தான் அடிக்கணும்


எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது

தண்ணி தராவிட்டால் போ ஆனால் எதுக்கு இப்படி பல்லைக் கடிக்கிற


என்ன அதிகப் பிரசங்கித்தனம் செய்யறியா? அவன் உறுமினான்


இனிமேல் பின்வாங்குவது இல்லை என்று எனக்குத் தோன்றியது ஏன் நீ பெரிய நவாபோ என்று கேட்டேன்.


அவன் கோவப்பட்டு ஜன்னல்வழியே என் தiலை இழுத்து கம்பிகளில் மோதினான் அப்போது எனக்கு வந்து கோவத்துக்கு அவன் அறைக்குள் இருந்தால் மட்டையால் மண்டையை பிளந்திருப்பேன். ஆனால் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற ஆத்திரத்தில் அவன் கையை இரத்தம் வரும்வரை கடித்துவிட்டேன்.


அவன் ஆபிஸரிடம் புகார் செய்ய ஓடிச்செல்லும் வழியில் இன்னொரு இந்து காவலாளி அவனை பயமுறுத்தி சமாதானம் செய்து வைத்தான்.



இதில் சிறைக்குள் இந்து முஸ்லிம் வேற்றுமை வேறு வந்தது. முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்ற முயற்சிப்பதும் ஆரிய சமாஜக்காரர்களும் இந்து மதத்தை பிரச்சாரம் செய்வதும் அதிகரித்து விட்டது.

பின் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம்

நாங்கள் இந்துக்களுமில்லை முஸ்லிம்களுமில்லை வங்காளிகள் என்று. பின் அரசியல் கைதிகள் அனைவருக்குமே வங்காளிகள் என்ற பொதுப்பெயர் வந்தது

(தொடரும்)





- ரசிகவ் ஞானியார்

Tuesday, March 06, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 14 )

ஒரு நாள் நான் திட்டு வாங்கிவிட்டு கவலையோடு உட்கார்ந்திருந்தபொழுது ஒரு காவலாளி அறிவுரை சொன்னான். திட்டு வாங்கி மனம் குமுறிப்போறவங்க, ஒண்ணு பைத்திமாயிடுவாங்க இல்லை முரண்டு பிடிச்சிகிட்டு தூக்கிலே சாவாங்க கடவுள் கிருபையால இந்த நாள் எப்போவும் இருக்காது என்று அவன் கூறியது இனிமையாக இருந்தது.

தேங்காய் மட்டைகளை அடித்துக் கொண்டும் சேப்ப இலைக்கறியை சாப்பிட்டுக்கொண்டும் திட்டுக்களை வாங்கிக் கொண்டும் காலம் கடத்தினோம். ஆனால் அவர்களின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.


எதற்கெடுத்தாலும் கைதிகள் துன்புறுத்தப்டுவது வாடிக்கையாகிவிட்டது


வரிசையில் ராம்லால் கோணலா உட்கார்ந்திருக்கான் அவன் கழுத்திலே 2 அடி கொடு,

முஸ்தபாவை கூப்பிட்டதும் அவன் எழுந்திரிக்கல அவனோட மீசையை புடுங்கி எறி,

பகாவுல்லா கழிப்பறையிலேயிருந்து திரும்பி வர நேரமாச்சு அவன் குண்டியில 3 அடி வை.


இப்படி கொடுமைகள் அதிகரித்து வந்தன. காக்க வேண்டியவனே கொடுமை செய்தால் உயிர் பிழைக்க எங்கே போவது?

பின் எங்களுக்கும் செக்கிழுக்கும் வேலை தரப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து பவுண்டு அல்லது முப்பது பவுண்ட் தேங்காய் எண்ணெய் தயாரித்துக் கொடுக்கவேண்டும். முரட்டு பயில்வான்கள் கூட திணறுவார்கள். எங்களால் எப்படி முடியும்? ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆபிசர்கள் வைத்ததுதான் சட்டம்.


செக்கிழுக்கும் அறைக்குள் நுழைந்தவுடனையே அங்குள்ள முரட்டு ஆசாமி முஷ்டியை முகத்திற்கு நேராக வைத்து வேலையைச் சரியா செய்யலைன்னா ஒரு குத்திலே மூக்கை சப்பையாக்கிவிடுவேன் என்று மிரட்டுவான். ஆனால் மூக்கின் எதிர்காலம் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.


அது வேலையில்லை மல்யுத்தம் மாதிரிதான். பத்து நிமிடங்களுக்குள் நாக்கு உலர்ந்து போய்விட்டது. கையும் காலும் களைத்துப் போய்விட்டது.


எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. வாய் விட்டு சத்தம் போட்டு அழுதாலாவது துக்கம் குறையும் என்றால் அழுவதற்கு வெட்கமாக இருந்தது. அழவும் முடியவில்லை.


வேலையை முடிக்கும்பொழுது கையெல்லாம் கொப்புளம். கண் பார்வை மங்கிப் போயிருந்தது.


கொடுமை தாங்காமல் பேசாமல் கழுத்தில் கயிறு மாட்டி தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் எனக்கு துணிவு ஏற்படவில்லை. ஆகையால் முடிந்தவரை சர்க்காரின் எண்ணெய்க்கிடங்கை நிரப்பினோம்.


ஒருநாள் காலையில் செக்கிழுத்தும் முப்பது பவுண்ட் எண்ணெய் ஆட்ட முடியவில்லை. கைகள் அயர்ந்து கண்கள் சொக்கி தலை சுற்றி கீழே விழுந்துவிடுவேன் போல இருந்தது,

சரியாகச் செய்யாததற்கு ஜெயிலரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என்னை கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்டினார். என் குண்டியில் பிரம்பால் அடிப்பதாக மிரட்டினார். என்னால் அவர் திட்டினை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவமானமாக இருந்தது.


நான் திரும்பி வந்து சாப்பிட அமர்ந்தால் சாப்பாடு இறங்கவில்லை அப்போது ஒரு இந்துக் காவலாளி என்னிடம் இரக்கப்பட்டு பாபு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் அவருக்கு நல்லா சாப்பாடு போடு

இதைக் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.இந்த மாதிரி சமயத்தில் அடி உதையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அனுதாபத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 13 )

இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருந்தனர். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையில் கால் பங்குதான். ஆனாலும் இங்கு அவர்கள் சம அளவில் இருந்தது அவர்களின் போராட்டக் குணத்தைக் காட்டியது.

சிறையில் அனைத்து அதிகாரிகளுக்கும் சிறையின் வருமானத்தை எப்படி பெருக்குவது என்பதுதான் கவலை. கைதி செத்தானா? உயிருடன் இருக்கிறானா? என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. கைதிகள் நார் உரிக்கும் வேலை செக்கிழுக்கும் வேலை என ஈடுபடுத்தப்பட்டார்கள்.


சிறையில் ஒருநாள் ஒரு பைத்தியத்தைப் பார்த்தேன். அவன் வர்த்தமான் மாவட்டத்துக்காரன். சிறையில் துப்புறவு பணி செய்து வந்தான். அவனுக்கு தன் சொந்த குடும்பத்தைப் பற்றி தெளிவாக நினைவில்லை.?"நீங்கள் எத்தனை அண்ணன் தம்பிகள்?"என்று கேட்டால் " 7 " என்று சொன்னான்

அவர்களுடைய பெயரைக் கேட்டபொழுது விரல்விட்டு எண்ணி யோசித்து யோசித்து 5 பேரைச் சொன்னான்.. அவன் சோறு ,துணி பற்றி அதிகமாய் கவலைப்படுவதில்லை. சிலநேரம் பேசாமல் உட்கார்ந்திருப்பான்.


அவனைப் ஒருமுறை பார்க்கின்றவர்களே சொல்லிவிடுவார்கள் இவன் பைத்தியக்காரன் என்று. ஆனால் இவனுக்கும் நாடு கடத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான். எந்த புண்ணியவான் தண்டனை கொடுத்தானே?.


சிலர் தந்திரமாய் வேலையிலிருந்து தப்பிப்பதற்காக பைத்தியம் போல் நாடகம் ஆடுவதுண்டு. இப்படிப்பட்ட வங்காளி ஒருவனைப் பார்த்தேன். துணியைக் கட்டிக்கொண்டு பைத்தியம் போல் கத்தினான். சுண்ணாம்புத் தூளை கண்களில் தூவி கண்களை சிவப்பாக்கி உளறினான். சோறு சாப்பிடும் பொழுது முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனை காவலர்கள் ஜெயிலரிடம் இழுத்துச் சென்றார்கள்.


ஜெயிலர் இவனைச் சோதிப்பதற்காக வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். இவன் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலையும் சாப்பிட்டுவிட்டான். உடனே ஜெயிலர் பைத்தியமில்லாவிட்டால் தோலைத்தின்பானா? ஆகவே இவன் பைத்தியம்தான் என முடிவு செய்தார்.


அவன் திரும்பி வந்ததும் அவனிடம் கேட்டேன் "ஏன் தோலைத் தின்றாய்? "


என்ன செய்யுறது பாபு அந்த ஆளை முட்டாளாக்கணுமே கஷ்டமே படாம பைத்தியமாக முடியுமா..?


வங்காளத்தில் ஒரு பழமொழி உண்டு எழுந்திருந்தால் தடியடி உட்கார்ந்திருந்தால் பிரம்படி.

இதன் அர்தத்தை சிறையில் உணர்ந்து கொண்டேன்.


சிறையில் தருகின்ற உணவுமுறைகளைப் பார்த்தால் ரொம்ப கேவலமாக இருக்கும். தண்டு ,இலை, தோல் சீவப்படாத வாழைக்காய், புளிக்கீரை, சிறு கற்கள், எலிப்புழுக்கை, இவற்றை ஒன்றாக வேக வைத்து உணவாக தருவதை எந்த கண்ணியமா வங்காள இளைஞனும் சாப்பிடமாட்டான் பஞ்சகாலத்தில் கூட.


கைதிகளுக்கு கடுமையான வேலைகள் தரப்பட்டன.


தேங்காய் மட்டையை நன்றாகப் பிரித்து கயிறு திரித்தல்

தேங்காய் எண்ணையும் கடுகு எண்ணையும் தயாரித்தல்

தேங்காய் கொட்டாங்குச்சியைக் கொண்டு குடுவை தயாரித்தல்


இவைதவிர சிறையில் உள்ள பிரம்பு தொழிற்சாலையில் வயது குறைந்தவர்கள் மட்டும் வேலை செய்வார்கள்.


செக்கிழுப்பதும் நார் உரிப்பதும்தான் மிகவம் கடுமையான வேலைகள். பாரீனும் அவிநாசும் வலிமையானவர்கள் ஆகவே அவர்களுக்கு கயிறு திரிக்கும் வேலை தரப்பட்டது. மற்றவர்களுக்கு நார் உரிக்கும் வேலை.


காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சிறிது நேரத்துக்குப் பிறகு எல்லோரும் சோறோ கஞ்சியோ விழுங்கிவிட்டுக் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்டு தேங்காய் மட்டையை உரிக்க உட்கார்ந்து விடுவோம்.


ஒவ்வொருவருக்கும் 20 தேங்காய் மட்டைகள் தரப்படும். பலமான கட்டையின் மீது வைத்து அதனை அடிக்க அடிக்க அது மிருதுவாகிவிடும். பின் மட்டையின் மேல்தோலை பிரித்துவிட்டு அதனை தண்ணீரில் நனைத்துவிட்டு மறுபடியும் கட்டையால் அடிக்க வேண்டும். அப்பொது பொடியெல்லாம் உரிந்து நார் மட்டும் எஞ்சியிருக்கும். இந்த நாரை வெயிலில் வைத்து காயவைத்து சுத்தம் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு சேர் எடையுள்ள நார் தயாரிக்க வேண்டும்.



முதல் நாள் மட்டும் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டது. பின் பழகி விட்டது. அடித்து அடித்து கையில் கொப்புளங்கள் வந்துவிட்டன.


நாரை உரித்து பலியிடப்பட வேண்டிய ஆடுகளைப் போல நடுங்கிக் கொண்டே அதிகாரிகளிடம் கொடுக்கச் சென்றால் அதிகாரியோ நற நற வென்று பற்களை கடித்துக்கொண்டு கெட்ட வார்த்தைகளால் எங்களை கண்டபடி திட்டுவார்.


என்னால் எப்போதுமே திட்டுக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அந்த சூழ்நிலையில் பொறுத்துதான் ஆகவேண்டும்.


எல்லா மொழிகளையும் கலந்து அவர்கள் திட்டுவதை கேட்கவேண்டுமே "ஆகா என்னே அருமை". ஒருமுறை அந்த திட்டை கேட்பவன் அதிலே மயங்கிப்போய்விடுவான். பல மொழிகள் அந்த திட்டில் கலந்து காதுகளை குளிர வைக்கும்.

(தொடரும்)



- ரசிகவ் ஞானியார்

Monday, March 05, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின்தன் வரலாறு ( தொடர் 12 )

பின் அரசாங்க ஆணைப்படி 6 வாரங்களுக்குப் பிறகு அந்தமானுக்கு அனுப்பப்பட்டோம் கடைசியாக சிறையிலிருந்து செல்வதற்கு முன் தாய்நாட்டைப் பார்த்துக் கொண்டேன்.

ஒருநாள் அதிகாலையில் எங்களை கைவிலங்கிட்டு ஒரு வண்டியில் ஏற்றினார்கள். இருபுறமும் இரண்டு சார்ஜெண்டுகள் உட்கார்ந்து கொண்டார்கள். வண்டி கிதர்பூர் கப்பல்துறையை நோக்கி விரைந்தது,


எங்களை கப்பலில் ஏற்றிய ஒரு சார்ஜெண்ட் கேலியாகச் சொன்னார்.


"இப்போ சொல்லிடு தாய்நாடே விடைபெறுகிறேன்னு "


நாங்கள் சொன்னோம் " Au Revoir" ( பின்னால் பார்ப்போம்) இப்படிக் கூறினாலும் திரும்பி வருகின்ற நம்பிக்கையே இல்லை எங்களுக்கு.


அந்தக்கப்பலில் நானும் சுதீரும் மட்டும்தான் அரசியல் கைதிகள். கப்பலின் கீழ்தட்டில் நாங்கள் இன்னொரு அறையில் மற்ற கைதிகள் அடைக்கப்பட்டனர்.


கப்பல் ஊழியன் ஒருவன் எங்களை புகைப்படம் எடுத்தான் இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றில் பிரசுரம் செய்வதற்காக. இதைக் கேட்டதும் நான் என் தலைப்பாகையை நன்றாகக் கட்டிக்கொண்டேன். பின்னே செலவில்லாமல் பெரிய மனிதன் ஆகமுடிந்தால் நல்லதுதானே . :)


3 நாள் 3 பகல் அவலைத்தின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டும் என்றதும் சுதீர் கலக்கமடைந்தான். அவனுக்கு யானை போன்ற உடம்பு. ஆகவே அவல் மட்டும் போதாது.


அப்பொழுது ஒரு முஸ்லிம் ஹவில்தார் அவனிடம் சொன்னார். "பாபு உனக்கு நாங்க சமைச்ச சோற்றைச் சாப்பிட ஆட்சேபம் இல்லைனா கொடுக்கிறோம். "


முஸ்லிம்கள் இரக்கமுள்ளவர்கள். தங்கள் சோற்றைக் கொடுத்து இந்துக்களின் சாதித்தூய்மையைக் கெடுக்கும் ஆசையும் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் உண்டு.


நாங்கள் சொன்னோம். "ரொம்ப நல்லது எங்க சாதி ரொம்ப உறுதியானது எவர் கையிலே சொறு தின்னாலும் அது உடைஞ்சு போகாது "


அங்கே சீக்கிய ஹவில்தார்களும் இருந்தனர் நாங்கள் பசிக்கொடுமையால் உயிர்விடவும் துணிந்துவிட்டோம் என்று அனுதாபப்பட்டு எங்களுக்கு சோறு கொடுக்க முன்வந்தார்கள்.


முஸ்லிம்களின் உணவையும் சீக்கியர்களின் உணவையும் தயக்கமின்றி வாங்கிச் சாப்பிட்டு எங்களின் வயிற்றுத் தீயை தணித்துக்கொண்டோம்.


வங்காளி பாபுக்கள் புத்திசாலிகள்தான் ஆனால் அவர்களுக்கு பாவம் புண்ணிம் ஒண்ணும் கொஞ்சம் கூடத் தெரியல என்று சீக்கியர்கள் நினைத்தார்கள்.


எங்கள் மதம் பிழைத்ததோ இல்லையோ என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் இரண்டு பருக்கை சோறுதின்னதால் நாங்கள் பிழைத்துக்கொண்டோம்.


கப்பலில் இருந்த சில முஸ்லிம் மாலுமிகள் சமைத்த பூசணிக்காய் கூட்டு அமிர்தமாக இருந்தது.


எப்படியோ 3 நாள் கப்பலில் கழித்துவிட்டு 4ம் நாள் போர்ட்பிளேர் போய் சேர்ந்தோம். தூரத்தில் இருந்து பார்க்கும்பொழுது அழகாய் தெரிந்தது. வரிசையாய் தென்னை மரங்கள் ஆங்காங்கே துரைமார்களின் பங்களாக்கள் இந்தக் காட்சி ப்ரேம் போடப்பட்ட படம் மாதிரி இருந்தது.


ஒரு சிப்பாய் தொலைவில் இருந்த பிரமாண்டமான 2 மாடி கட்டிடத்தைக் காட்டி "அதுதான் ஜெயில் அங்கேதான் நீங்க இருக்கணும்" என்று சொன்னான்.


கப்பல் துறைமுகத்தில் இறங்கியதும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். நாங்கள் சிறைக்குள் நுழைந்ததுமே கட்டையாய் குட்டையாய் தவளைக்கு பேண்ட் போட்டதுபோல ஒரு அதிகாரி இருந்தார் . அவர் பெயர் ஸ்ரீமான் பேரி முதன்மை அதிகாரி.


பிற்காலத்தில் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். ஏனென்றால் சுமார் 11 ஆண்டுகள் அவர் நிர்வாகத்தின் கீழ் சிறையில் இருந்தேன்.

அவர் ரோமன் கத்தோலிக்கர். வருடம் முழுவதும் பாவம் செய்துவிட்டு கைதிகளைத்துன்புறுத்திவிட்டு பாவத்தின் மூட்டைகளை கிறிஸ்துமஸ் அன்று மாதா கோயிலில் பாதிரியாரின் காலில் இறக்கி வைத்துவிட்டு வந்திடுவார். அன்று மட்டும் ஒரு கைதியையும் துன்புறுத்த மாட்டார். மற்ற 364 நாட்களுடம் யமனே உருவெடுத்து வந்ததுபோல கைதிகளை கொடுமைப்படுத்துவார்.


கைதிகள் ஏதாவது தவறு செய்துவிட்டு கடவுளின் பெயரால் மன்னிப்பு கேட்டால் ஸ்ரீமான் பேரி சொல்லுவார் "இந்த ஜெயில் என்னோட ராஜ்யம் இங்கே கடவுளோட அதிகாரம் செல்லாது நான் முப்பது வருஷமா இந்த போர்ட்ப்ளேரில் இருக்கேன். ஒருநாள் கூட கடவுள் இங்கே வந்து பார்த்ததில்லை."

இது பேரியின் கூற்றுதான் எனினும் முற்றிலும் உண்மை.


கைதிகள் சிறைக்கு நுழைந்ததுமே அவர்கள் பிராமணராக இருந்தால் பூணூல்கள் அறுக்கப்பட்டன. ஆனால் முசல்மானின் தாடியிலோ சீக்கியனின் தலைப்பாகையிலோ அவர்கள் கை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் பிடிவாதக்காரர்கள்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு (11)

எங்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்வது எங்களுக்கு அவமானமாக இல்லை. ஆனால் அரவிந்த் பாபு மட்டும் அவமானமாக உணர்ந்தார். இருப்பினும் சாதுவாக பொறுத்துக் கொண்டார்.


கோர்ட் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமானையும் மறக்க முடியாது. எங்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இராட்சச போலிஸாருக்கு நடுவில் அவர் ஒருவரே கண்ணியமானவராக தெரிந்தார். நாங்கள் நாடு கடத்தப்படலாம் என்று நினைத்து அவர் முகத்தில் தோன்றிய இரக்கம் இன்னமும் நினைவிலிருக்கிறது.



புரட்சிவாதிகள் எல்லாருமே ஒரே கொள்கை கொண்டவர்களல்ல. ஆனால் நாட்டின் விடுதலையை மட்டும் ஒரே கொள்கையாக கொண்டார்கள். அதன்பிறகு என்ன என்ன செய்யவேண்டும் என்று பல வேற்றுமைகள் இருந்தன். அவற்றையெல்லாம் சிறைக்குள்ளையே விவாதித்தோம்.


இந்நிலையில் அமைதியாக இருந்த அரவிந்த பாபு பைத்தியமாகிவிட்டார் என்ற வதந்தி பரவியது. ஆளாளுக்கு ஒவ்வொரு கதைகள் கூறினார்கள்.


அவர் உணவினை பல்லி, கரப்பான், எறும்பு ஆகியவற்றிற்கு தந்து விடுவாராம். இப்படி வதந்திகள் பரவின.


கிட்டத்தட்ட ஒரு சாதுவைப்போல அவர் மாறிக்கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் எங்கள் வழக்கை பற்றி கேட்டபொழுது. தான் விடுதலையாகிவிடுவேன் என்று கூறினார்


அவர் சொன்னது போலவே ஓராண்டுக்குப்பிறகு அவர் விடுதலை பெற்றுவிட்டார்.


உல்லாஸ்கருக்கும் பாரீனுக்கும் தூக்குத்தண்டனை

பத்துப் பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை

மீதியிருந்தவர்களுக்கு 5 - 7 -10 ஆண்டுகள் சிறை


என தீர்ப்பாயிற்று


தூக்குத்தண்டனை தீர்ப்பை கேள்விப்பட்ட உல்லாஸ்கர் சிரித்துக்கொண்டே சொன்னான். "பொறுப்பு தீர்ந்தது" என்று


ஓர் ஐரோப்பிய காவலாளி இதனைக் கண்டு தன் நண்பனிடம் கேட்டான், "பாரு இவன் தூக்கிலே தொங்கப்போறான் ஆனால் சிரிச்சிக்கிட்டு இருக்கான் "

அந்த நண்பன் சொன்னான் "எனக்குத் தெரியும் சாவுங்கிறது இவங்களுக்கெல்லாம் கேலிக்குரிய விசயம். "

1909 ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வெளியாயிற்று. நாங்கள் 15 பேர் சிறையில் தங்கிவிட்டோம் மற்றவர்கள் சிரித்தபடி வெளியேறினர். நாங்களும் சிரித்தபடி விடைகொடுத்தோம். ஆனால் சிரிப்புக்குப் பின்னால் இதயம் வெடிக்கும் அழுகைகள் உறைந்து கிடந்தன . ரிஷிகேஷ் வேதாந்தமே உருவாக சொன்னான் :"ஒண்ணுமில்லை இது வெறும் கெட்ட கனவுதான் "


எல்லாரும் வெளியேறிய பிறகு நாங்கள் மட்டும் இந்த சிறைக்குள்ளையே காலத்தை கழிக்கவேண்டுமா பேசாமல் தூக்குத்தண்டனையில் செத்திருக்கலாம் என்று நினைத்தேன்


எங்களை விலங்கு பூட்டி அறைகளில் அடைத்து வைத்திருந்தார்கள். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது..


சில காவலாளிகள் நல்லவர்களாகவும் சிலர் எங்களை தொந்தரவு செய்வதையே பிறவிப்பயனாகவும் செய்து வந்தார்கள்.


எங்களில் ஹேம் சந்திரன் ஓவியக்கலை நிபுணர் சுவரிலிருந்து சுண்ணாம்பு செங்கல்லை சுரண்டி வர்ணங்கள் தயாரித்து சுவரின் மேல் வர்ணங்கள் வரைவார். காகிதத்தில் நகங்களால் வரைந்து காவலாளிகளிடம் கொடுப்பார். அப்பொழுதுதான் காவலாளிகளின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று.


சிலர் கவிதை எழுதுவார்கள். ஒரு பெயர் தெரியாத கவிஞர் சுவரில் கவிதை எழுதியிருந்தார்


சணலைப்பிய்த்துப் பிய்த்து உடம்பு ஆகிவிட்டது கட்டை

கறுத்துவிட்டது தங்கநிறம்

காவல்காரத்தடியன்கள் ஆட்டு மூளைக்காரர்கள் திட்டுகிறார்கள்

இரவும் பகலும்.



இடையிடையே சில நல்ல கவிதைகளும் கண்ணில் படும். சில கவிதைகள் மனதில் தங்கிவிடும் இதுபோல


ராதையின் இரு சிவந்த பாதங்களில்

அகப்பட்டுக்கொண்டான் அனந்தன்

எத்தனை உலகங்கள் எழுந்து மிதக்கின்றன

சித்தானந்தின் போதை வெறியில்.



சில நாட்கள் கழித்து உல்லாஸ்கருக்கும் பாரீனுக்கும் தூக்குத்தண்டனை குறைக்கப்பட்டு நாடு கடத்தப்படும் தண்டனையாகிவிட்டது. பலருக்கு சிறைத்தண்டனை குறைக்கப்பட்டது.


எனக்கும் ஹேம் சந்திரனுக்கும் நாடு கடத்தப்படும் தண்டனையில் எந்த மாற்றமுமில்லை. நாங்கள் அந்தமான் செல்லும் கப்பலுக்காக காத்திருந்தோம்.


அந்தமானுக்கு அனுப்புவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அதிகாரி வந்து வயிற்றை அமுக்கிப் பார்த்தார் இமைகளை தூக்கிப்பார்த்தார். நானும் சுதீரும் வயிற்றுப்போக்கு காரணமாக அந்தமான் செல்வது ஒத்தி வைக்கப்பட்டது. சுமார் 7 பேர்கள் அந்தமானுக்கு சென்று விட்டார்கள்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

Friday, March 02, 2007

ஒரு பத்தினி காத்திருக்கின்றாள்

Photobucket - Video and Image Hosting

இருட்டு ,ஆசை, தனிமை, பணம்
இவற்றின் உந்துதலில்
எச்சில் இலைகள் நோக்கி ...
எட்டி சென்றேன் !

சிறு மணற்திட்டில் கால் இடற
தடுக்கி திரும்பி
திடுக்கிட்டேன்...
அது
மணற்திட்டா?
மனைவியின் கர்ப்பப்பையா?

கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?

விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!

விலைமாதுவின் பணம் தடவிய
வருடல்கள்.. .
முகம் தடவிய மனைவியின்
மருதாணிக் கைகளுக்கு முன்னால்
நெருடலாகத்தான் இருந்தது!

கலவி கொள்ள முயன்றபொழுது
நேற்று தொலைபேசியில்
"ப்பா..ப.லூ..னு.. "

குழந்தை வாங்கிக் கேட்ட
பலூன் ஞாபகம் வந்தது !

உறுத்தலோடு திரும்பிவிட்டேன்
ஊரில் ஒரு பத்தினி
காத்திருக்கின்றாள்..


- ரசிகவ் ஞானியார்

Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு(தொடர் 10 )

ஒவ்வொருவரும் பொழுதை ஒவ்வொருவிதமாக கழித்தார்கள்.

தேவவிரதன் காலையில் எழுந்ததும் காலுக்கு மேல் கால் போட்டு அசையாமல் உட்கார்ந்துவிடுவான். பத்து மணிவரை அவனை அசைக்க முடியாது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு மறுபடியும் அமர்ந்து விடுவான்.

பாரீன் ஒரு போர்வை கொண்டு பகல் முழுவதும் தன்னை மூடிக்கொள்வான். அவன் இன்னமும் பிடிபட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

அரவிந்த் பாபுவுக்காக ஒரு மூலை. அங்கேயே பஜனை உபதேசம் என்று காலம் கடத்துவார்


கானாயிலால் போன்ற நாலைந்து பேர் சாய்ந்ததுமே தூங்கிவிடுவார்கள். இரவு பத்து பதினொரு மணிக்குப் பிறகு மற்றவர்கள் உறங்கிய பின் , விழித்து ஒவ்வொருவருடைய தலையணை அடியிலும் உள்ள பிஸ்கெட், பழம் என்று திருட ஆரம்பிப்பார்கள். யாருடைய தலையணையிலும் எதுவும் இல்லையென்றால் அவர்களுடைய காலையும் பக்கத்தில் உள்ளவர்கள் காலையும் கட்டி வைத்து விட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் திருடுவதை யாரேனும் பார்த்துவிட்டால் அவர்கள் வாயில் ஒரு பிஸ்கெட்டை திணித்துவிட்டு வந்துவிடுவார்கள்.

ஒவ்வொருவரையும் பார்க்க தந்தை, தாய், உறவினர்கள், நண்பர்கள் என வந்து கொண்டிருப்பார்கள். ஒருநாள் என் பிள்ளையை அழைத்துக்கொண்டு என் உறவினர்கள் வந்திருந்தார்கள். அப்போது அவனுக்கு வயது ஒன்றரைதான். பேசத்தெரியாது. ஒருகால் அவனை மீண்டும் இந்தப்பூமியில் பார்க்க முடியாதோ என்ற நினைப்பில் அவனைத்தூக்கி என் மடியில் வைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் இரும்புக்கம்பிகள் அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள விடவில்லை.


சிறை வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்துகொண்டேன்

இப்படி துன்பமும் இன்பமுமாய் எங்கள் வாழ்க்கை கழிந்து போனது. கோர்ட்டுக்கும் சிறைச்சாலைக்கும் அலைகழிக்கப்பட்டோம். பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியாக கோர்ட்டிலிருந்து சிறைச்சாலை திரும்பொழுது உணர்வோம்.

கோர்ட்டில் குறுக்குவிசாரணை

நார்ட்டன் துரையின் பேண்ட் எங்கே கிழிந்திருந்தது?

எங்கே ஒட்டுப்போட்டிருந்தது?

இன்ஸ்பெக்டரின் மீசை நுனியை எலி கடித்ததா? அல்லது கரப்பான் தின்றதா? என்றெல்லாம் உல்லாஸ்கர் ஆராய்ச்சி செய்து சொல்ல நாங்கள் சிரிப்போம்.

நரேன் அரசுதரப்பு சாட்சியாக மாறியதால் கெடுபிடிகள் இன்னமும் அதிகமாகிற்று. ஒருநாள் கானாயி வயிற்றுவலி என்று சொல்லி மருத்துவமனை சென்றான்.

ஒருநாள் சேதி வந்தது கனாயி, சத்யனுடன் இணைந்து நரேனை சுட்டுக்கொன்றுவிட்டான் என்று. பின் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு கனாயி 44 டிகிரி என்றழைக்கப்படும் சிறைக்கு சென்றுவிட்டான்.


கனாயிடம் பிஸ்டல் எப்படி வந்தது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. எங்களுக்கு வந்த நெய் டப்பாவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன இல்லை வேறு வகையில் வந்தன என் கைதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்


கனாயி சொன்னான் தூக்கு தண்டனை பெற்று உயிர்நீத்த குதிராமின் ஆவியிடம் இருந்து பிஸ்டல் கிடைத்தது என்று.
ஆவி பிஸ்டல் கூட கொடுக்குமா? நம்பமுடியவில்லை சிறைக்குள் வருகின்ற மற்ற பொருட்களைப்போலவே பிஸ்டலும் வந்திருக்கலாம்.


சிறை அதிகாரிகள் சிறைகளை சோதனையிட ஆரம்பித்தார்கள். பத்து இருபது என்று கிடைத்ததை சுருட்டிக் கொண்டார்கள்.


பின் சிறைக்குள் கெடுபிடி அதிகமாகியது. என்னையும் மற்றவர்களையும் 44 டிகிரி சிறையில் அடைத்தார்கள். கனாயியையும், சத்யனையும் தனிச் சிறையில் அடைத்தார்கள். அவர்களோடு பேச அனுமதி இல்லை. நாங்கள் கிசுகிசுத்துக்கொள்வோம்.

நாங்கள் வெளியில் வரும்பொழுது கனாயின் சிறை அடைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் வித்தியாசமாக கனாயின் சிறை திறந்திருக்க நாங்கள் என்னவென்று விசாரித்தோம். கனாயிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.


நாங்கள் கனாயியை பார்க்கும் பொழுது அவன் முகத்தில் கவலை கோடுகள் இல்லை.சோகத்தின் நிழல் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தான்.


அதன்பிறகு ஒருநாள் காலையில் கனாயி தூக்கிலிடப்பட்டான். பிரிட்டிஷார் ஆண்ட இந்தியாவில் அவனுக்கு இடமில்லாமல் போயிற்று. தூக்கிலேற்றும்பொழுது அவனுடைய தைரியத்தை பார்த்து சிறையதிகாரிகள் திகைத்துப்போய்விட்டனர்.

ஒரு சிறைக்காவலாளி பாரீனிடம் வந்து கேட்டான். "இந்த மாதிரி பசங்க உங்ககிட்ட எத்தனை பேர் இருக்காங்க?" என்று.


(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு(தொடர் 9 )

இதில் கடினமான உரைநடை எங்கள் உணவுக்கான ஏற்பாடுதான். முதல்நாள் வந்த உணவைப்பார்த்து சிரிப்பு வந்தது. மறுநாள் கோபம் வந்தது. மூன்றாம் நாள் அழுகை வந்தது.

காலையில் ஒரு பிருமாண்டமான கருப்பு நிற வாலிபன் தட்டில் எதையோ ஊற்றிவிட்டுப் போவான் அதுதான் காலை உணவு. அதன் பெயர் லப்ஸி. பின் பகல் நேரத்தில் ஒரு தகரக்கிண்ணத்தில் அரிசிச் சோறு துவரம் பருப்பு புளிக்கரைசல் கீரை . இதுதான் அந்தி நேரத்திலும்.


நாங்கள் உணவுக்காக எவ்வளவோ போராடியும் சர்க்காரின் விதிப்படி இதுதான் தரப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

நாங்கள் இன்னொரு வழியிம் கண்டுபிடித்தோம். காசு கொடுத்தால் சிறையில் எல்லாமே கிடைக்கும். சிறைக்காவலாளிக்கும் சமையல்காரனுக்கும் காசு கொடுத்துவிட்டால் சோத்துக்குள்ளிருந்து கோழி மீன் வருவலும் தலைப்பாகையிலிருந்து வெற்றிலை சுருட்டும் வெளிவருவதைப் பார்த்திருக்கின்றேன்.


ஒரு அறையில் இருப்பவர்கள் மற்ற அறையில் இருப்பவர்களோடு பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே நாங்கள் சத்தம் போட்டு பேசுவோம் இதனை காவலாளிகள் கண்டு கொள்ளவில்லை பின்னர்தான் காரணம் தெரிந்தது காவலாளிகளின் காதுகளை எங்கள் நண்பர் பணத்தால் அடைத்துவிட்டார் என்று.

அப்பொழுது சிஜடிகளின் தொந்தரவு சிறைக்குள் அதிகரித்து விட்டது. எங்கள் புரட்சி இயக்கம் வங்காளத்தில் மட்டும்தானா அல்லது நாட்டின் மற்ற பகுதிகளிலுமா என்று துளைத்து துளைத்து கேட்டார்கள்.

நாங்கள் உடனே சும்மா ஏதாவது மதராஸி பெயரையும் மராத்திப் பேரை சொல்லிவிட்டால் அவர்கள் அவர்களைத் தேடி நாடு முழவதும் அலையட்டுமே என்று மராத்தி பெயராக புருஷோத்தம் நாட்டோகாரையும் குஜராத் பெயராக கிஷன்ஜி பாவுஜி அல்லது அதுபோன்ற ஒரு பெயரையும் தயார் செய்தோம். பின் மதராஸி பெயருக்கு என்ன செய்வது ?


பத்திரிக்கைகளில் சிதம்பரம் பிள்ளையின் பெயர் அடிபட்டு வந்தது. ஆகவே அந்தப்பெயர் தொடர்பாக விசுவம்பரம் ன்னு ஒரு பெயர் ஏன் இருக்க கூடாது? அதோட பிள்ளைக்குப் பதிலா ஒரு கிள்ளையைச் சேர்த்துட்டாப் போகுது. விசுவம்பரம் கிள்ளை.


எங்களுக்கு திடீரென்று நல்ல காலம் பிறந்து விட்டது. எங்கள் எல்லோரையும் ஒரே அறையில் அடைத்தார்கள். என்னைப்போன்ற அரைவேக்காடுகள் எல்லோரையும் ஒரு அறையிலும் சில சீரியஸ் மனிதர்களை மட்டும் தனியாக இன்னொரு அறையிலும் வைத்தார்கள்.

நாங்கள் ஆட்டம் ,பாட்டம் ,கூத்து, கேலி ஒருவரை ஒருவர் கிள்ளிக்கொள்ளுதல் என்று விளையாட ஆரம்பித்தோம். எங்களுடன் உல்லஸ்கரும் இருந்ததால் மிகவும் ஜாலியாக நாட்கள் கழிந்தன. வீட்டைத் துறந்து வந்து சிறையில் அடைபட்டுகிடக்கின்றோம் என்கிற உணர்வு இல்லாமலையே நாட்கள் நகர்ந்தன .


சிறையின் உணவு கூட எங்களின் போராட்டத்திற்குப் பிறகு பழங்களும் திண்பண்டங்களும் வழங்கப்பட்டது.

எங்களுடன் இருப்பவர்களின் வீடுகளிலிருந்து மாம்பழம் பலாப்பழம் திண்பண்டங்கள் அரிசி நெய் மசாலாப்பொருட்கள் என்று வர ஆரம்பித்தன.

அந்தி நேரமானால் பாட்டுக்கச்சேரி தொடங்கிவிடும். ஹேம்சந்திரன் ,உல்லாஸ்கர் ,தேவவிரதன் ஆகியோர் நன்றாக பாடுவார்கள். ஆனால் தேவவிரதன் சீரியஸ் தன்மை கொண்ட ஆள் என்பதால் அதிகம் பாடமாட்டான்.ஒருநாள் எல்லாரும் வற்புறுத்த அவனே இயற்றிய தேசபக்தி பாடல் பாடினான்.


எழுந்து நின்றாள் தாய்

ஓங்கரித்து நின்றனர் கோடி கோடி மக்கள்

சிவந்த சூரியன் இரத்தத்தில் இருண்டது

சந்திரனும் தாரகைகளும் ரத்தத்தில் சிவந்தன

ரத்த நிறக் காணிக்கை ரத்த நிற ஆரத்தி

வீர ரத்தத்தில் தோய்ந்த பூமி என்ன அழகு ஆகா



பாடல் எங்களுக்குள் வீரத்தை ஊன்றியது. தாழ்வு, பயம், சாவு இவையெல்லாம் எங்களை ஒரு போதும் அணுக முடியாதென்று உண்ர்ந்தோம்.


சுசீன்சென் என்பவன் நன்றாக பாடுவான். சின்ன சின்ன சேட்டைகள் வேறு செய்வான்.


பலமாக கத்துவது

குதிப்பது

பாட்டுப்பாடுவது

பிறர் தோள் மீது ஏறுவது

மாம்பழம், பலாப்பழம் திருடுவது போன்ற செய்கைகளால் எங்களை மட்டுமல்ல சிறை அதிகாரிகளையே தவிக்க செய்துவிட்டான்.


இரவு நெடுநேரம் பாடிக்கொண்டிருப்பதை பார்த்து ஒரு வயதான ஜெயிலர் எங்கள் மீது மிகவும் பரிதாபம் கொண்டார். அவருக்கு நான்காம் தடவையோ ஐந்தாம் தடவையோ திருமணம் செய்திருந்தார்.

அவர் அமைதியாக இருக்கும்படி எங்களிடம் வந்து அமைதியாக சொன்னார். இரவில் மனைவியும் கொசுக்களும் செய்யும் தொந்தரவோடு இவனுடைய தொந்தரவையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம். கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இப்படி கஷ்டப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்காக அனுதாபப்பட்டார்.


ஒவ்வொருவரும் பொழுதை ஒவ்வொருவிதமாக கழித்தார்கள்.

(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 8)

இதனைக்கோட்டு பாரீன் கொதித்து எழுந்து இன்ஸ்பெக்டரிடம்," ஐயா எங்களை தூக்கிலே போடணுமோ வேற என்ன செய்யணுமோ செய்யுங்க ஆனா இந்தப்பசங்கள ஏன் இப்படி வதைக்கிறீங்க "

உடனே இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து இதை வாங்கிட்டு வா அதை வாங்கிட்டு வா என்று ஆணையிட்டார். சப் இன்ஸ்பெக்டரோ, சில போலிஸ்கார்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்து விட்டார். திரும்ப திரும்ப நாங்கள் கேட்ட பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் மட்டும்தான் கிடைத்தது.

பின் போலிஸ் கோர்ட் நாடகம் முடிந்தபிறகு எங்களை அலிபூர் மாஜிஸ்திரேடிடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கு முன்னால் வாக்குமூலம் கொடுக்கு போது மட்டும் அவர்கள் ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் கொடுத்தார்கள் என்பதை தர்ம நியாயப்படி ஒப்புக்கொண்டாக வேண்டும்.

சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட முகம் போல உள்ள நீதிபதி கேட்டார். உங்களாலே இந்தியாவை ஆள முடியும் என்று நினைக்கின்றீர்களா?

இவ்வளவு கஷ்டத்திற்கு நடுவிலும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் கேட்டேன்

துரையே 150 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்க இந்தியாவை ஆண்டுகிட்டிருந்தீங்களா? அல்லது நாங்க எங்களை ஆளுறதுக்கு உங்க நாட்டுல இருந்து ஆட்களை அழைத்து வந்தோமா..?


நான் பேசியது அவருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டோம். அப்பொழுது ஜெயில் பாபு தந்த சோறு கொடுத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அந்த சோற்றுப்பருக்கைகள் அமிர்தமாக இருந்தது.


சிறையில் எனக்கு என்னவெல்லாமோ ஞாபகம் வந்தது. கடந்த கால நினைவுகளை மெல்ல மெல்ல அசை போட்டேன். 4 மாதங்கள் அலைந்து திரிந்து மெலிந்து போய் களைத்து வீடு திரும்பிபொழுது அம்மா சொன்னாள்


என் பிள்ளைக்கு இப்போ என் சமையல் பிடிக்கலை..ஏழை – அனாதை மாதிரி எங்கேப்பா அலைஞ்சு திரியறே? நீ கண்ணியமான குடும்பத்து பையன்.. கடைசியில் போலிசில பிடிச்சி அவமானப்படுத்திடுவாங்கப்பா..


இன்று உண்மையிலேயே போலிஸ் என்னைப் பிடித்து அவமானப்படுத்திவிட்டார்கள். எங்களை பிடிக்க வந்த போலிஸ்காரன் சொன்னது ஞாபகம் வந்தது. நாங்கள் வரும்பொழுது நீங்கள் ரெண்டு மூணு குண்டு வீசியிருந்தால் கூட நாங்கள் ஓடிப்போயிருப்போம் என்று.

ஒரு சார்ஜெண்ட் வேடிக்கையாக கூறினான் "இந்தப்பசங்க அப்பாவிப் பசங்க வாசல்ல கூட காவல் வைக்கல என்று "

இந்த கூற்றுகள் உண்மையென்று உரைத்தது. இந்த வருத்தம் செத்தாலும் போகாது.

எங்கள் மாணிக்தலா தோட்டத்தை கடந்து சென்றவர்கள் நாங்கள் குண்டுகள் மறைத்து வைத்த இடத்தில் தங்கியிருந்தவர்கள் என்று பல அப்பாவிகளை அவர்கள் கைது செய்திருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து எங்கள் இளைஞர்கள் பலரை கைது செய்து கொண்டு வந்திருந்தார்கள். அதில் என்னுடைய பழைய நண்பன் பண்டித் ரிஷிகேசும் வந்து சேர்ந்தான்

அவன் என்னுடன் கல்லூரியில் படித்தவன் நான் இங்கிலிஷ் சரஸ்வதியை வேண்டாமென்று கல்லூரியைவிட்டு வெளியே வந்தபொழுது அவன் என்னுடன் கங்கைத்தண்ணீரை கையில் எடுத்து சபதம் செய்தான் எல்லாக் காரியங்களிலும் என்னுடன் இருக்கப் போவதாக.


கங்கையம்மன் எந்த கெட்ட வேளையில் அப்படியே ஆகட்டும் என்று அவனுக்கு சொன்னாளோ தெரியாது. இப்பொழுது என்னுடனே ஒட்டிவிட்டான்.


விழாக்காலத்தில் ,ஆபத்து நேரும்பொழுது, பஞ்சகாலத்தில், நாட்டுக் கலகத்தில், அரண்மனை வாயிலில், மயானத்தில் கூட இருப்பவனே உண்மையான நண்பன் என்று சாத்திரம் கூறுகின்றது. அதுபோல என்னுடன் எல்லா நிலைகளிலும் இருப்பவன் இந்த ரிஷிகேஷ்.


துறவிகளாக - வாத்தியார் வேலை- பஞ்ச காலத்தில் - அவனுடைய திருமண விழா இப்படி எல்லா நலைகளிலும் மட்டுமல்ல இப்பொழுது துன்ப காலத்திலம் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். மயானத்தை தவிர.

எங்கள் தோட்டத்தில் உள்ள நோட்டுப்புத்தகத்தில் நாங்கள் எழுதி வைத்த பெயரை வைத்து அந்த பெயர் இருப்பவர்களை எங்களுடன் சம்பந்தமில்லாதவர்களாக இருந்தால் கூட கைது செய்துவிட்டார்கள்

சுமார் 7 முழநீளம் 5 ஆழ அகலமுள்ள சிறையில் நாங்கள் 3 ஜீவன்கள் அடைக்கப்பட்டிருந்தோம் என்னுடன் இரண்டு பையன்கள்.

முதலாமவன் நளினி காந்தகுப்தா இவனுக்கு வயது 20 காந்தக்குப்தா மாபஷநிலக் கல்லூரியில் 4ம் ஆண்டு மாணவன்


இரண்டாமவன் சுசீந்திநாத் சென் மிகவம் அமைதியானவன். தேசியக் கல்லூரியிலிருந்து ஓடி வந்தவன். குழந்தை என்று கூடச் சொல்லலாம்

அறையின் மூலையில் சிறுநீர் மற்றும் மலங்கழிக்க இரண்டு தொட்டிகள். அவற்றைதான் நாங்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் உள்ளே செல்லும்பொழுது மற்றவர்கள் கண்களை மூடித்தான் ஆகவேண்டும்.


அறைக்கு முன்னால் ஒரு சிறிய வராந்தா.அங்குதான் குளிக்க கை கால் கழுவ சாப்பிட என்று எல்லாமும்.


வராந்தாவுக்கு முன்னால் ஒரு முற்றம். அதற்குப்பிறகு வானளாவிய சுவர். அந்த சுவரானது, நீங்க கைதிகள் நீங்க கைதிகள் என்கிட்டே மாட்டிக்கிட்டீங்க இனிமேல் உங்களுக்கு விடுதலை இல்லை என்று அது எப்போமு; கத்திக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

அந்தச்சுவருக்குப் பின்னால் ஒரு சிறிய மரம் மற்றும் தெரிகின்ற வானமும்தான் எங்கள் கவிதை தன்மைக்கு ஊற்று. பாக்கியெல்லாம் உரைநடைதான்.


இதில் கடினமான உரைநடை எங்கள் உணவுக்கான ஏற்பாடுதான். முதல்நாள் வந்த உணவைப்பார்த்து சிரிப்பு வந்தது. மறுநாள் கோபம் வந்தது. மூன்றாம் நாள் அழுகை வந்தது.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 7)

இவ்வாறு ஒரு மாதம் கழிந்தது இறுதியில் முஸபர்பூரில் குண்டு வெடித்ததோடு எங்கள் தோட்டத்தின் ஆயுளும் முடிவுற்றது.

அந்த நாள் நெடுங்காலம் நினைவிலிருக்கும் எனக்கு. அது சித்திரை மாதம்.அநியாய வெயில். நாள் முழவதும் அலைந்து திரிந்துவிட்டு தோட்டத்துக்குள் திரும்பியபோது என் கை கால் வயிறு எல்லாம் என்னை ஒரே குரலில் சபிக்கத் தொடங்கிவிட்டன. சாட்ஜாத் எமதர்ம ராஜாவே என்னை விரட்டி வருவது போன்ற உணர்வு. என் கூட்டாளிகளுக்கும் அநேகமாக இதே நிலைதான். வயிற்று பசி வேறு எங்களை களைப்பில் ஆழ்த்தியது. வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் பரிமாறப்பட்ட தட்டுக்கு முன்னால் உட்கார நாங்களென்ன வீட்டிலா இருக்கின்றோம்? நாங்களே சமைக்க வேண்டுமே..

அன்று சனியனின் கோபப்பார்வை எங்கள் மீது விழுந்திருக்க வேண்டும். ஆம் பொங்கிய பானையை வடிகட்டும்பொழுது கை நழுவி பானை கீழே விழுந்து உடைந்து போனது. சோற்றுப்பருக்கைகள் மண்ணில் சிதறி விட்டன. அன்று எங்கள் தலையெழுத்தில் சாப்பாடு இல்லை என்று நினைத்துக்கொண்டு வயிற்றில் 3 குத்து விட்டுவிட்டு குப்புறப்படுத்துக் கொண்டேன்.

ஆனால் பாரீன் விடாமுயற்சிக்காரன் என்பதால் மறுபடியும் சமைக்க முயன்றான்.

விறகு காலியாகிவிட்டதால் பத்திரிக்கைகளை எரித்துச் சோறு சமைக்கத் தொடங்கினான்.

அப்பொழுது கல்கத்தாவிலிருந்து எங்கள் நண்பன் நடனமாடிக்கொண்டே ஓடிவந்து அந்த செய்தியைக் கூறினான். ஆம் எங்கள் தோட்டத்தைச் சோதனையிட வரப்போகிறார்கள் என்று. மறுநாள் காலையில் எல்லாரும் ஆளுக்கொரு திசை சென்றுவிடவேண்டும் என தீர்மானித்து உறங்கச் சென்றோம்.

மணி சுமார் 4 இருக்கும். உடல் புழுக்கத்திலும் கொசுக்கடியிலும் நான் தூக்கம் வராமல் புலம்பிக்கொண்டிருந்தேன். தடதடவென்று கதவு தட்டப்பட்டது. பாரீன் தான் கதவைத்திறந்தான். அறிமுகமற்ற ஓர் ஐரோப்பிய குரல் கேட்டது


"உன் பேரு ?"


"பாரீந்திரக் குமார் கோஷ் "


உடனே உத்தரவு பிறந்தது. "இவனைப்பிடிச்சுக் கட்டு "


பாரதவிடுதலையின் முதல் கட்டத்திற்கு இங்கேயே முற்றுப்புள்ளி எனப் புரிந்துவிட்டது எனக்கு. உள்ளே நுழைந்த போலிஸ்காரர்கள் இருட்டாக இருந்ததால் கைகளில் அகப்பட்டவர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு இருந்தார்கள்.

இப்பொழுது தப்பித்தால்தான் தப்பித்தது என்று இன்னொருகதவு வழியே வராண்டாவிற்கு வந்து சேர்ந்தேன்.நாற்புறமும் கைகளில் விளக்கேந்தி காவல் காக்கிறார்கள்.சமையலறையின் உடைந்த சன்னல் வழியே கீழே குதிக்கலாம். ஆனால் வெளியே எட்டிப்பார்த்ததில் கீழேயும் 2 போலிஸ்காhர்கள் நிற்பது தெரியவந்தது
ஐயோ என்ன கஷ்டம். அதிருஷ்டம்கெட்டவன் பார்க்குமிடமெல்லாம் கடல் கூட வற்றிப்போய்விடும்

வராந்தாவின் ஒரு கோடியில் ஒரு சிறு அறை இருந்தது. அதில் ஓட்டை உடைசல்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன். அதில் ஒரு ஜன்னல்திரையில் ஒரு கிழிந்த சாக்குத் திரை தொங்கிக்கொண்டிருந்தது. அதன் பின்னால் சென்று ஒளிந்து கொண்டேன்.
அதன் பின்னே ஒளிந்துகொண்டேன் . இரவு நீண்டு கொண்டே இருந்தது. கடைசியில் காகம் கரையும் ஒலி கேட்டது. மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். சில அறிமுகமில்லாத முகங்கள் கூட தென்பட்டன.


வெள்ளைக்கார சார்ஜண்டுகள் அங்குமிங்கும் சவுக்குடன் அலைந்து கொண்டிருந்தனர் . அங்கே எனது கூட்டாளிகள் குளத்தங்கரை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அதில் நடுவில் உட்கார்ந்திருக்கும் உல்லாஸ்கர் மட்டும் ,அலைந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் எடை 3 மணு இருக்குமா அல்லது மூன்றரை மணு இருக்குமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான்

மணி 6 அடித்தது. 7 அடித்தது. நான் அப்போதும் திரைக்குப் பின்னால் மறைந்து இருந்தேன் பர்தா அணிந்த முஸ்லிம்பெண்ணைப் போல . அந்த எசமானர்கள் என்னை மறந்துவிட்டனர் என்று நினைத்தேன். ஆனால் இந்த நம்பிக்கை வெகுநேரம் நீடிக்கவில்லை. பூட்ஸ் சப்தங்களின் அறை அதிர அந்த இன்ஸடபெக்டர் நானிருந்த அறையின் கதவைத்திறக்க நான் மூச்சு சப்தம் கூட வெளியே கேட்காமல் மறைந்திருந்தேன்.


ஆனால் துரை என்னருகே வந்து திரையை விலக்கி என்னைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் "Hurra ஹ{ர்ரா" என்று கத்த ஆரம்பித்துவிட்டேன். ஆஹா என்மீது என்ன அன்பு.. :)


அவன் சத்தம் கேட்டவுடன் அவனுடைய காவலாளிகள் 5 பேர் என்னிடம் ஓடிவந்து ஒருவன் கைளை பிடித்தான் ஒருவன் காலைப் பிடித்தான் ஒருவன் தலையைப்பிடித்தான். பிறகு என்னைத் தோளில் சுமந்து என் கூட்டாளிகளுக்கு நடுவே எனக்கொரு இடம் கொடுத்து உட்கார வைத்தார்கள்.


என் கைகளை கட்டிப்போட வந்தான் ஒருவன் .
அட நான் வந்தேமாதரம் அலுவலகத்தில் வேலைபார்த்தபொழுது என்னை , "பாபு ,பாபு" என்று சலாம் போட்டு டீ கொண்டு வந்து கொடுத்தவன்.
பாவம் அவன் என் கைகளைக் கட்டும்பொழுது கூச்சப்பட்டு தலையை திருப்பிக் கொண்டான்.

நள்ளிரவில் நாங்கள் புதைத்து வைத்த துப்பாக்கி குண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன.இன்னும் ஏதேனும் இருக்கிறதா என எங்களது பையன்களை இன்ஸ்பெக்டர் சித்திரவதை செய்வதைக் கண்ட பாரீன், இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிளெடன் துரையிடம் புகார் செய்தான் அவனோ சரித்துக்கொண்டே புகாரை ஊதித் தள்ளிவிட்டு சொன்னான் "நீங்கள் எங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்க கூடாது. "


எங்களை வெவ்வேறு போலிஸ்ஸடேஷன்களில் வைத்திருந்தார்கள். அதிருஷ்டவசமாக 3 பூரி கொடுத்தார்கள்.மறுநாள் சிஐடி ஆபிசுக்கு கொண்டு செல்லும்பொழுதுதான் பார்த்தேன் எங்களோடு தொடர்பில்லாத பலரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

எங்களிடம் வாக்குமூலங்கள் வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலிக்கவில்லை.

கைதானதால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு தணிந்து விட்டது. பையன்கள் முகம் வாடிப்போய் இருந்தது. ஒருவன் என்னிடம் வந்து சொன்னான்.

"அண்ணா பசிக்கொடுமை தாங்க முடியல்ல நேத்துப்பூரா சோறு கிடைக்கல்ல பகல்லே கொஞ்சூண்டு பொரி மட்டும் கொடுத்தாங்க "


(தொடரும்)


- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 6)

இதன்பிறகு நாற்புரமும் பரபரப்பு உண்டாகிற்று. சிறிது சிறிதாகப் புதிய தொண்டர்கள் சேர ஆரம்பித்தனர்.. ஆனால் கூடவே போலிஸ் கண்காணிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

தொண்டர்களை தனித்தனியே பிரித்து வௌ;வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான முயற்சி செய்தோம். ஆனால் அவ்வளவு இடங்களை வாடகைக்கு எடுக்க காசு?

அவர்களுக்கு சாப்போடு போடுவதற்கு உண்டான பணத்தை புரட்டுவதற்கே சிரமப்படுகின்றோம்.


மாணிக்தலா தோட்டத்தை புதிய தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமான ஆக்கிவிட்டு தேவ்கருக்கருகில் ஒரு மைதானத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குண்டு தயாரிக்கும்

தொழிலைக் கொண்டு சென்றோம் குண்டு தயாரிக்கும் தொழிலில் உல்லாஸ்கர் போய் உட்கார்ந்து கொண்டான். நான் கண்ணாம்பூச்சி விளையாட்டில்தாய்ச்சி போல் தோட்டத்தில் தொண்டர்களை கவனித்துக் கொண்டேன்


பாரீன் எப்பொழுதுமே செயல்வீரன். எல்லா இயக்க மையங்களையும் மேற்பார்வை செய்வதற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.


இந்த சமயத்தில் எங்கள் சகாக்களில் ஒருவன் குண்டு வெடித்து இறந்து போனான். ஆவன் மிகுந்த புத்திசாலி. எல்லாரும் அவன் மீது பாசமாய் இருந்தார்கள். அவனுடைய சாவுச் செய்தி கேட்டதும் ஓர் அதிர்ச்சி தலையிலிருந்து முதகெலும்பு வழியே இடுப்பு வழர ஊடுருவிப்போயிற்று.ஒரு குருட்டுக் கோபமும் வருத்தமும் உள்ளத்தை நிறைத்தது. மனம் ஓலமிட்டுக்கொண்டே அரற்றியது எல்லாம் நாசமாய் போகட்டும் எல்லாம் நாசமாய் போகட்டும்



என் மனதுக்குள் பலவீனத்தை உணரத் தொடங்கினேன். முழபட்டினி அரைப்பட்டினி எதிர்நோக்கும் ஆபத்துகள் அன்புக்குரியவர்களின் பயங்கரச்சாவுகள் இவற்றை எதிர்கொண்டு கடினமான பாதையைக் கடக்கத்தான் வேண்டும்


இந்தக் கரையில்லா பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றேனே. இதற்கு முடிவு எங்கே? நாங்கள் எவ்வளவு இளைஞர்களை சாவின் வாயிற்குள் படிப்படியாக தள்ளிக்கொண்டிருக்கின்றோம். மரணபயத்தை எங்கள் உள்ளத்திலிருந்து படிப்படியாக துடைத்தெறிந்து விட்டோமா? இல்லையெனில் குருட்டுத்தனமாக இந்தப்பையன்களை எங்கே தள்ளிக்கொண்டு போகின்றோம். பாதைகள் எங்கள் பார்வைக்கே கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டிக் கொண்டு வந்தது.


எதற்கும் தளர்ந்து போகாத பாரீன் கூட ஆறுதலுக்காக தனக்கு தீட்சையளித்த சாதுவுக்கு கடிதமெழுதினான் ஒரு தடைவ வங்காளத்திற்கு வந்து செல்ல வேண்டுமென்று.


அவரும் 1908 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணிக்தலா தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் எங்களின் செயல்முறைகளை பார்த்துவிட்டு


நீங்க மேற்கொண்டுள்ள வழி சரியில்லை உள்ளத்தை சுத்தப்படுத்திக்காம இந்தக்காரியத்துல ஈடுபட்டால் அனாவசியமாக ரத்தக்களறிதான் ஏற்படும்.

இந்த நிலைமையிலே நாட்டுக்குத் தலைமை அளிக்க விரும்புறவங்க குருட்டுத்தனமாச் செயல்படறதிலே பிரயோசனமில்லை. எதிரி;காலத்தை மறைச்சிட்டிருக்கிற திரை யார் கண்களிலேயிருந்து ஓரளவுக்காவது விலகியிருக்கோ – யார் கடவுள்கிட்டயிரந்து உத்திரவு வாங்கிக்கிட்டிருக்காங்களோ அவங்களாலதான் இந்தக்காரியத்தை சாதிக்க முடியும்.

நாடு சுதந்திரம் அடையறதுக்கு கொஞ்சம் இரத்தம் சிந்தித்தான் ஆகணும்னு நினைக்கிறது தவறாயிருக்கலாம்


ரத்தம் சிந்தாமல் நாட்டை விடுவிக்கலாம் என்பது எங்களுக்கு அரபுக்கதை மாதிரி தோன்றியது. நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல சிரித்துக்கொண்டோம். அவரைக்கேட்டோம் இது நடக்கிற காரியமா?


சாது மீண்டும் உபதேசங்கள் செய்தார்.


பாரீன் கழுத்தை சாய்த்துக்கொண்டு சொன்னான் முடியாது ஒருக்காலும் முடியாது நான் என் வேலையை விடமாட்டேன். ரத்தம் சிந்தாம நாடு விடுதலையாறதா? இது அவரோட நினைப்புதான்.


சாதுவின் பேச்சு எனக்கு பிடித்திருந்ததால் நான் இரண்டொரு பையன்களை அழைத்துக்கொண்டு அவர் பின்னே போக தயாராகிவிட்டேன்


சாது பாரீனுக்கு மீண்டும் அறிவுரை கூறினார். பாருங்க நீங்க இந்த வழியைக் கைவிடாம இருந்தா இன்னும் சில நாளிலே உங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து நிச்சயம் ஏற்படும்


பாரீன் கைகளை ஆட்டிக்கொண்டு சொன்னான் என்ன அயிடும்? பிடிச்த் தூக்கிலே போடவாங்க அவ்வளவுதானே அதுக்கு நான் தயாராகத்தான் இருக்கேன்.


சாது திரும்பி போகும் நாள் வந்தது. ஆனால் என் கால் தோட்டத்தை விட்டு நகர ஆரம்பித்தது. மனைவி, பிள்ளை , விடு, வாசலைத் துறந்து வந்தது கூட அவ்வளவு பெரிய விசயமாகத் தெரியவில்லை எனக்கு. ஆனால் எங்களைப் பார்த்து தங்கள் பெற்றோரின் பரிவு எதிர்பாலம் பற்றி நம்பிக்கை அதோடு உயிரின் மேல் ஆசையைக் கூட துறந்துவிட்டு வந்திருப்பவர்களை விட்டுவிட்டு எங்கே ஓடிப்போவேன்? பல நம்பிக்கைகள் ஆசைகள் அன்புகள் ஆர்வங்கள் இந்தத் தோட்டத்தோடு பிணைந்திருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு எந்த நாட்டுக்கு என் குறிக்கோளைத் தேடிக்கொண்டு போவேன்.


சாது சென்ற பிறகு உடைந்த உள்ளத்தை மீண்டும் ஒட்டி எங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்தோம். ஆனால் தொண்டர்கள் பெருக பெருக பணத்தட்டுப்பாடு வர ஆரம்பித்தது.


தொலைவில் உள்ள ஒரு இலட்சியத்தை குறிவைத்து அவமானத்தையும் கொடுமையையும் மௌனமாக பொறுத்துக்கொண்டிருப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை அதை அனுபவித்தவர்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளமுடியாது.


நிதிச் சேர்ப்பது கடினமாகிவிட்டது. யாராவது ஒரு பணக்கார புரவலரை பிடிக்காவிட்டால் வேலையைத் தொடர்ந்து நடத்த முடியாது.

போக்குவரத்து செலவைக் குறைப்பதற்காக குண்டு தொழிற்சாலையையும் கல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டது. தொண்டர்களை இன்னொரு இடத்தில் தங்கவைத்துவிட்டு புதிய தொண்டர்களை தோட்டத்தில் தங்க வைத்தோம்.


ஆயினும் போலிஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை. தோட்டத்தின் அக்கம் பக்கமெல்லாம் பரிச்சயமில்லாத முகங்கள் தென்பட ஆரம்பித்தன. தெருவில் செல்லும்பொழுது எங்களை சிலர் பின்தொடர்ந்தனர். சட்டென்று பின்னால் திரும்பி பார்த்தால் ஒரு ஜோடி பிருமாண்டமான மீசைக்கு மேல் இரண்டு உருண்டைக்கண்கள் என்னைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. நான் கூட்டத்துக்குள் புகந்து எப்படியோ சனியன் பார்வையிலிருந்து தப்பித்துவிட்டேன்.


இவ்வாறு ஒரு மாதம் கழிந்தது இறுதியில் முஸபர்பூரில் குண்டு வெடித்ததோடு எங்கள் தோட்டத்தின் ஆயுளும் முடிவுற்றது

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

ஒரு நாடு கடத்தப்பட்டவனின்தன் வரலாறு ( தொடர் 5)

அந்த நேரத்தில் பாரீனிடமிருந்து கடிதம் வந்தது. உடனே திரும்புங்கள் என்று.

திரும்பி வந்து பார்த்தால் தோட்டம் பரபரப்பாக இருந்தது. புதிய இளைஞர்கள் பலர் சேர்ந்திருந்தார்கள்.

அதில் உல்லாஸ்கர் என்ற இளைஞன், ரஸ்ஸல் என்ற துரை, வங்காளி இளைஞர்களைத் தரக்குறைவாக பேசிவிட்டான் என்று கக்கத்தில் செருப்பை மறைத்து வைத்துக் கொண்டு ரஸ்ஸலை செருப்பால் அறைந்துவிட்டு கல்லூரியை விட்டு நின்று விட்டான்.

பின் பம்பாய் பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருந்தவன் நாட்டின் சுதந்திர வேட்கை சூடுபிடித்துக் கொண்டதால் இந்த தோட்டம் வந்து சேர்ந்தான்

அப்போது கிங்ஸ்போர்டு என்ற துரை, சுதேசி பத்திரிக்கைகாரர்கள் ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் அடைத்துக்கொண்டிருந்தான். யாரிடம் போனாலும் அவர்கள் சொல்லுவார்கள் : சீ இதை இனிமேல் அனுமதிக்க கூடாது. சில பேரோட தலைiயாவது சுட்டுத்தள்ளவேண்டியதுதான் என்று .


சரி அப்படியே ஆகட்டும் கலந்தாலோசித்து முடிவு செய்தோம். யாரை தீர்த்துக்கட்டலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கையில், இருக்கிற துரைகளிலேயே கொஞ்சம் பெரிய தலை வைசிராய் ஆண்ட்ரு பிரேஸர்தான். ஆகவே இதை முதலில் சுட்டுத்தள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


வைசிராய் வருகின்ற வண்டியின் அடியில் டைனமைட் வைப்பதற்காக ஒரு டைனமைட்டை சோதித்து பார்க்க விரும்பினோம். ஆனால் அது புஸ்வாணமாகப் போனது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அதற்குண்டான வழிமுறைகள் செய்து குண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு இரயில் வருவதற்காக காத்திருந்தோம். ஆனால் வைசிராயின் நல்லநேரம் குண்டு நிபுணருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. மற்றவர்களோ இந்த அறிவில் பூஜ்யம் . ஆகவே குண்டுகள் இயக்கத்தெரியாமல் இயக்கி லேசாக வெடித்து தண்டவாளத்தில் சிறு சேதம் அவ்வளவுதான்.

பின் இரயிலுடைப்பு படலத்திற்காக யாரையோ பிடித்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.


அந்த நேரத்தில் தோட்டத்தில் போலிஸ் கண்காணிப்பு அதிகமாகி விட்டதால் அதிக இளைஞர்கள் இங்கு இருப்பது ஆபத்து என்று நானும், உல்லாஸ் மற்றும் 4 இளைஞர்கள் நாட்டை சுற்றிப்பார்க்கலாமென்று கல்கத்தாவிலிருந்து கயா வழியாக பாங்க்கிபூர் சென்றோம். அங்கே உதாஸி மதப்பிரிசை; சார்ந்த ஒரு துறவியோடு இணைந்து கொண்டோம்.


இவர்கள் தலையில் நீண்ட சடை சாம்பல் பூசிய உடம்பு இடுப்பில் ஒரு கம்பளித்துண்டு. கஞ்சாக்குழல் ஒருவர் மாற்றி ஒருவர் கையில் இருந்துகொண்டேயிருக்கும். இந்தக்குழவின் தலைவர் 108 முறை கஞ்சா இழுத்தபின்தான் இவர்களது வாயிலிருந்து பேச்சு வருமாம். :)


இந்த துறவிகளுக்கிடையே இரண்டு சிறுவர்களை பார்த்தேன். ஒருவருக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கும். இன்னொருவனுக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும்.

இந்த சின்ன வயதில் உலக வாழ்க்கை என்பது கானல் நீர்தான் என்று இவர்கள் புரிந்து கொண்டார்களா என்ற ஆச்சர்யத்தில் அவர்களிடம் கேட்டேன். பிறகு தெரிந்து கொண்டேன் அவர்கள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாம். துறவியாகிவிட்டால் வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் என்று இவர்களுடைய பெற்றோர் துறவியாக்கிவிட்டார்களாம்.


நெய் சொட்டும் பஞ்சாபி சப்பாத்தியும், பரும்பும் சாப்பிட்டு சாப்பிட்டு எனது உடலில் மெருகு ஏறிவிட்டது. மாணிக்தாலா தோட்டம் சென்று புரட்சி செய்வதை விடவும் இங்கேயே இருந்து விடலாமா என்று கூடத் தோன்றியது.


ஆனால் மோசமான தலையெழுத்தோடு பிறந்தவனுக்கு இவ்வளவு சுகம் பொறுக்குமா?


தோட்டத்துக்கே திரும்பி வந்துவிட்டோம்.
நாங்கள் அங்கே சென்ற பொழுது பாரீன் இல்லை. அவன் சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்றுவிட்டான். முpதவாத தீவிரவாத அதி தீவிரவாத எல்லாத் தலைவர்களும் சூரத்தில் கூடியிருந்தனர் பாரீன் அவர்களோடு உரையாடினான்.

திரும்பி வந்த வேகத்தில் சொன்னான்:
" திருடங்க , திருட்டுப்பசங்க "

நாங்கள் எல்லாரும் கேட்டோம் "ஏன் ஏன் ?"


பாரீன் சொன்னான் :

"அந்தக் கூட்டாளிங்க இவ்வளவு நாளா ஜம்பமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. -நாங்க எல்லாரும் தயார் வங்காளத்திற்காக காத்திட்டிருக்கோம்னு-

அங்கே போய் பார்க்குறேன் எல்லாம் வெறுஞ்சவுடால் ஒரு இடத்திலேயும் ஒண்ணும் இல்லை.

தலைவர்கள் சும்மா நாற்காலியிலே உக்காந்துட்டு நாட்டாமை பண்றாங்க. ஒண்ணு ரெண்டு பசங்க உருப்படியா ஏதாவது முயற்சி செய்யறாங்க அதுவும் தலைவர்களுக்குத் தெரியாமே.. தடியன்களை நல்லா திட்டிட்டு வந்துட்டேன் "

பரவாயில்லை அவங்க நம்ம வழிக்கு வந்தால் நல்லது. இல்லாட்டி நாம தனியாவே முன்னேறுவோம். நாம அஞ்சே வருசத்துல வங்காளத்துல கொரில்லாப்போர் தொடங்கிடுவோம் இன்னிலிருந்து தொண்டர்களைச் சேர்க்கத் தொடங்கிடுங்க ..

(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு