Friday, March 09, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 17 )

இப்படி கைதிகளின் சாவு எண்ணிக்கை அதிகரிப்பது கண்டு அதிகாரிகள் கலகமடைந்தனர். பல கைதிகளுக்கு கயிறு திரிப்பது போன்ற லேசான வேலைகள் கொடுக்கப்பட்டது.
எங்களின் வேலை நிறுத்தம் காரணமாக நிர்வாகம் எங்களுக்கு சில சலுகைகள் செய்ய ஆரம்பித்தது. எங்களது உணவை நாங்களே சமைத்துக் கொள்ளலாம். கடுமையான வேலையிலிருந்து விடுதலையும் கிடைத்தது,

அலிபூர் ஜெயிலிருந்து வரவழைக்கப்பட்ட பாரீனுக்கு பிரம்பு தொழிற்சாலையில் மேற்பார்வைபணி வழங்கப்பட்டது


எனக்கு செக்கிழுக்கும் பகுதியில் மேற்பார்வைப் பணி தரப்பட்டது. கைதிகளுக்கு மாதச்சம்பளமாக 1 ரூபாய் வழங்கப்பட்டது.


நாங்கள் சூபரிண்டெண்;டுடன் இடைஇடையே அரசியல் விவாதத்தில் ஈடுபடவோம் அப்போது அவர் தங்களது அரசாங்கத்தின் பெருமையைப் பற்றி கூறுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.


ஜெர்மனி ஆட்சி கொடுரமான ஆட்சி அவர்கள் நரகத்திற்குதான போவார்கள். இங்கிலாந்துக்கு அருகே அவர்கள் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று கூறினாhர் அவர்


ஆங்கிலேயர்களிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அவர்கள் எந்த விசயத்தையும் குறுகிய தன்மையில் பார்ப்பார்கள். பிறருடைய கருத்தை கவணிக்கவே மாட்டார்கள்.பின் நாங்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பம் அனுப்பினோம். விதிக்கப்பட்ட சிறைகாலத்தை விடவும் அதிகமாக மொத்தத்தில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டதால் எங்களை விடுதலை செய்யவேண்டுமென்று. ஆனால் அந்த விண்ணப்பம் தலைமை கமிஷனர் குப்பைக்குள் சென்று மறைந்து விட்டது.


இதற்கிடையில் சிறைக்கமிட்டி போர்ட்பிளேர் வந்தபொழுது நான் எல்லா விசயத்தையும் நேரில் விளக்கினேன். அதனைக் கேட்டுவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.


சில நாட்களுக்குப்பின் சூப்பிரண்டெண்ட் வந்த எங்களை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவிடும்படி வங்காள அரசு உத்தரவு அனுப்பியிருக்கிறதாம். அங்கிருந்து நாங்கள் விடுதலை செய்யப்படுவோமாம்.


இதனைக் கேட்ட சிலர் தரையில் கை கால்களை நீட்டிப்படுத்துக்கொண்டு மகிழ்ச்சிப்பெருக்கால் கூக்குரலிட்டார்கள். சிலர் கைகல்களை ஆட்டினார்கள்.

எங்களில் ஓர் அறிவாளி எச்சரித்தார்


கொஞ்சம் அடக்கி வாசிங்க தம்பிங்களா.. கப்பல் நடுக்கடலிலே மூழ்காம இருக்கணுமே


கப்பலில் ஏற இரண்ட நாட்கள்தான் இருந்தன. எங்களுக்கு இரவில் உறக்கமில்லை ,சாப்பிடத் தோன்றவில்லை. எண்ணற்ற கற்பனைச்சித்திரங்கள் மனவெளியில் மிதக்கின்றன.

வெகு நாட்களாக மறந்து போன முகங்கள், பழக்கமான முகங்கள் தென்படுகின்றன. எவரெவருடன் இந்த வாழ்க்கையின் தொடர்புகள் அறுந்த போயிருந்தனவோ அவர்கள் மறுபடியும் தங்கள் அன்புக் கயிற்றால் எங்களைப் பிண்ணத் தொடங்கினார்கள் .


இரண்டு நாட்களும் கழிந்தன. நாங்கள் 26 பேர் மொத்தமாக சிறையை விட்டு வெளிNயு வந்தோம். சில சீக்கிய கைதிகள் மகிழ்ச்சியில் கத்தினார்கள். பிறகு பாட்டு பாடினார்கள்


ஓ தந்தையே பத்தாம் குருவே

குருவியைக் கொண்டு பருந்தை வேட்டையாடினாய்

நீ பேறு பெற்றவன்என் மனதுக்குள் நானும் சொல்லிக்கொண்டேன். பாரதத்தின் எதிர்கால குருவே கடவுளின் உருவ வெளிப்பாடே சமுத்திரத்தின் மறுகரையிலிருந்து இந்த எளிய பக்தனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்
பிறகு கப்பலில் ஏறிக்கொண்டு போர்ட்ப்ளேரை இறுதியாகப் பார்த்துக் கொண்டோம் மனிதனை மனிதன் என்ன செய்து விட்டான் , வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.


கப்பல் பயணம் 3 நாள். ஆதற்கு முன்னால் ஓடியது உள்ளம். இதோ இதோ சாகர் தீவின் விளக்கு, இதோ இதோ ரூப்நாராயண் ஆறு கடலில் சேருமிடம், இதோ இதோ கிதிர் பூர் கப்பல் துறை


கப்பல் நடுக்கடலில் மூழ்கவில்லை உண்மையில் நாங்கள் கரை வந்து சேர்ந்து விட்டோம். எங்களை அலிப்பூர் சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.


பணிரெண்டு வருடம் கழித்து மறுபடியும் அலிப்பூர் சிறை. ஆனால் அதன் பழைய தோற்றம் இல்லை. எங்கள் வருகை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்ட்டது. எங்களின் பொருட்கள் சோதனையிடப்பட்டன. நான் என்னிடம் வைத்திருந்த புத்தகங்களை புதிய கைதிகளிடம் கொடுத்துவிட்டேன். நாடு திரும்பியவுடன் சரஸ்வதியோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன். சோறு சாப்பிட்டுவிட்டு பேசாமல் படுத்துக் கிடக்கப்போகின்றேன்.


நாங்கள் சிறைக்கு போய் சேர்ந்து 1 மணி நேரத்திலையே எங்களிடம் கேட்கப்பட்டது. நீங்கள் இன்னிக்கே வெளியே போக விரும்புறீங்களா? கல்கத்தாவில் தங்க இடம் இருக்கா?

வெளியே போகும் பேச்சைக் கேட்டு நாங்கள் எம்பிக் குதித்து சொன்னோம் "தங்க நிறைய இடமிருக்கு"

இடமில்லையென்றாலும் சாலையோரத்திலாவது படுத்துக்கிடக்கின்றோம் எங்களை வெளிய விட்டாப்போதும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டோம்.


அன்றிரவே நான் பாரீன் ஹேம்சந்திரன் ஆகியோர் விடுதலையானோம். எங்கே போவது?(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு