Thursday, June 15, 2006

ச்சும்மா தமாசு

என்னடா நாலு சங்கிலி பதிவு - ஆறு பதிவுன்னு போய்கிட்டு இருக்கு நாம சும்மா இருக்கலாமா . அதான் எடுத்து வுட்டுறுக்கேன் ஒரு 5 பதிவு. நீங்களும் எடுத்து விடுங்களேன்.

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி -
கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

3.கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட
மறக்கமுடியாத சண்டைகள்?

4.எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

5.இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

*************************

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

கோலி - சீட்டு - பம்பரம் - நாய் வளர்த்தல் - தெல்கா - கிரிக்கெட் என்று பலவிதமான சீசன் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.

கோலி

கோலிக்குண்டுகள் போட்டியில் இரண்டு கோடுகள் கிழித்து ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டின் எல்லைக்கு அப்பால் கோலிக்குண்டுகளை வீசி தூரம் அதிகமாய் இருக்கின்ற கோலியினை இன்னொரு கோலியினால் அடித்து வெற்றிபெறுவோம் .

கோலிக்குண்டுகள் போட்டியில் வெற்றிபெற்றாலும் கோட்டையை வெற்றி பெற்றதுமாதிரியான கர்வத்தில் கோலிக்குண்டுகளின் ஓசையில் சல் சல் என நடந்து வருகின்ற பெருமையே தனிதான்பா..

சீட்டு -

அப்பொழுதே பனாமா - பில்டர் - சிஸர் என்று சிகரெட் அட்டைகளை பொறுக்கி ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு கொடுத்து அவற்றை அழகாய் மடித்து அடுக்கி வைத்து தூரத்தில் இருந்து ஒரு முண்டு என அழைக்கப்படுகின்ற கல்லினால் ஆன துண்டை எடுத்து அவற்றை நோக்கி வீசுவோம். சரியாக அடித்து சிதறுகின்ற சீட்டுகளை பொறுக்கி கொள்வோம்.

சிலநேரம் அந்த முண்டு நடந்து செல்பவர்களின் கால்களில் பட்டு தெருவில் உள்ளவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவார்கள்.

பம்பரம்

பம்பர விளையாட்டில் மிகவும் ஜாலியாகவும் இருக்கும். சண்டைகள் ஆரம்பிக்கும் விளையாட்டும் இதுதான். தோற்றவனின் பம்பரத்தை பறித்து அதனை தரையில் போட்டு எங்களுடைய பம்பரங்களின் முனைகளால் அந்தப் பம்பரத்தில் ஓட்டைகள் இட்டு சேதப்படுத்துவது.

இந்த முறையை ஆக்கர் என்று அழைப்போம். ஆக்கருக்கு மாட்டிய பம்பரத்தின் சொந்தக்காரன் நமக்கு பிடிக்காதவனாக இருந்தால் ஒழிந்தான் அவன்

பம்பரத்தை சின்னாபின்னமாக்கிவிடுவோம். அவன் பம்பரத்தை மட்டும் லேசா ஓட்டை போட்ட..என்னுடைய பம்பரத்தை ஏன்டா அதிகமாக ஓட்டை போடுறீங்க..ன்னு சண்டை ஆரம்பிச்சு கட்டிப்புரண்டு சண்டை நடக்கும். இதில் என்ன வேடிக்கை என்றால் சண்டையை தடுப்பதை விடவும் வேடிக்கை பார்க்க இன்னமும் ஜாலியாக இருக்கும்.


2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி - கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

அதை ஏன் கேட்குறீங்க..பி எஸ் சி படிக்கும்பொழுது ஊட்டி கொடைக்கானல் ஒகேனக்கல் ன்னு திட்டம் போட்டு கிளம்பியாச்சு. போகிற வழியில் கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு இடத்துல போய்கிட்டு இருக்கும்பெழுது நண்பர்களில் சிலர் சுற்றுலாவின் ப்ளானை கொஞ்சம் மாற்ற

அதில் கருத்து வேறுபாடு வர ஒருத்தனை இன்னொருவன் அடித்துவிட இது பெரும் பிரச்சனையாகி நாங்கள் சென்று கொண்டிருந்த வேனை பாதியில் நிறுத்தி சண்டை நடந்தது.

நாங்கள் நடுநிலைவாதிகளாக மாறி சண்டையை தடுக்க அதனையும் மீறி ஒருவனை ஒருவன் துரத்திக்கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்களில் சிலர் மட்டுமே மிச்சம். எங்களுக்கு சிரிப்பதா அழவதா எனத் தெரியவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொருத்தனாக தேடிப்பிடித்து அழைத்து வந்து வேனில் ஏற்றி பயணத்தை தொடர்ந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அதனை மறக்க முடியாது.

பின் எம் சி ஏ நண்பர்களோடு கன்னியாகுமரிக்கு சென்றபொழுது கோயிலின் அருகே நான் ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையை நான் பற்றிக்கொண்டு இன்னொரு முனையை எனக்கு முன்னால் சென்ற அந்த ரகி என்ற மாணவியிடம் கொடுத்து பிடிக்கச்சொல்ல அந்தப்பெண்ணும் அந்தக்குச்சியைப் பிடித்து என்னை வழிநடத்தி செல்ல

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
அன்புடன் ஆதரிக்கும்
தெய்வமும் நீயே
என்று ஒரு பாடல். சின்ன வயசு கமல்ஹாசன் நடித்த படம் .

அந்தப்பாட்டை படித்துக்கொண்டே கண்தெரியாதவன் மாதிரி செல்ல சரியான ஜாலியாக இருந்தது. கடந்து செல்பவர்கள் எல்லாம் இது உண்மையா பொய்யா எனத் தெரியாதவாறு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டு சென்றார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு துண்டையும் விரித்துவிடலாம் என்று நண்பர்கள் திட்டம் போட

எங்களுடன் வந்த ஆசிரியர் சாதிக் என்பவர்..ஞானி காலேஜ் மானத்தை வாங்காதடா..பேசாம வா என்று கண்டித்ததால் அந்த திட்டத்தை விட்டுவிட்டோம்.

மறக்க முடியாத சுற்றுலா நிகழ்வுகள் அவைகள்.

3. கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மறக்கமுடியாத சண்டைகள்?

இதற்கென்று தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

ஒன்றா இரண்டா ஏகப்பட்ட சண்டைகள். ஆனால் பின்னர் சமாதானமாகி விடுவோம்.


நான் யாரிடமும் சண்டை போடமாட்டேன். ஆனால் என்னால் மனவருத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன்.

நெருங்கிய நண்பர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அந்த இருவரும் அவர்களுக்குள் பேசாவிட்டாலும் நான் மட்டும் இருவரிடமும் பேசிக்கொள்வேன்.

அது இப்பொழுது வரை தொடர்கின்றது.

4. எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

மொபைல் போன்

இங்கே ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற இடத்தில் மொபைலைத்தொலைத்து விட்டு கிட்டத்தட்ட அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டேன். மொபைல் போனால் போகின்றது.

ஆனால் அவற்றில் பதிந்து வைத்துள்ள எண்கள் - அடிக்கடி வருகின்ற மிஸ்கால்கள் இவைகளக்காத்தான் அதிகம் கவலைப்பட்டேன். பின் நான் பள்ளிவாசல் வாயிலில் அமர்ந்து நண்பர் ஒருவரின் மொபைலிலிருந்து என்னுடைய மொபைலுக்கு மிஸ்கால் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து உள்ளிருந்து ஒருநபர் வந்து இது உங்க மொபைலா என்று தந்த பொழுதுதான் நிம்மதியே வந்தது.


அடிக்கடி தொலைப்பது பேனாவை. ஆனால் பதற மாட்டேன். பேனாவைத் தொலைப்பது என்பது எனக்கு சுவாசிப்பது - சாப்பிடுவது போல சாதாரண நிகழ்வுகள்.

எந்தப் பேனாவும்
சாகும்வரை என்
சட்டைப்பையில் இருக்க
சம்மதித்ததே இல்லை


இன்னொருமுறை ஒரு பொருளை தொலைத்தேன். ஆனால் தொலைத்துவிட்டு பதறவில்லை. சந்தோஷப்பட்டேன். தொலைத்தது இதயம்.


5. இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

என் மீது

இதனை சங்கிலிப்பதிவா இல்லை உங்கள் சங்கை நெறிக்கும் பதிவான்னு சொல்லமாட்டேன். இதனை வாசிக்கிறவங்க வலைப்பதிலு வச்சிறுந்தீங்கன்னா நீங்களும் இந்த 5 கேள்விக்கு பதிலை சுவாரசியமாக எழுதுங்க. நான் வந்து ரசிக்கின்றேன்.

12 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஞானியார், உங்க கொடைக்கானல் சுற்றுலா நல்லாவே இருக்கு.. அதுவும் ஆளுக்கொரு பக்கம் ஓடிப் போனதெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரே சிரிப்புதான்.. :)

சரி, இந்தப் பக்கத்துல ஏதோ பிரச்சனை இருக்கு.. ஒழுங்கா வர மாட்டேங்குது.. சரி படுத்துங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு ஏதேதோ லிங்கெல்லாம் தட்டித் தான் இங்க வந்து பின்னூட்டம் போடறேன் :)

jansi said...

"இன்னொருமுறை ஒரு பொருளை தொலைத்தேன். ஆனால் தொலைத்துவிட்டு பதறவில்லை. சந்தோஷப்பட்டேன். தொலைத்தது இதயம்."

Nice :-)

நிலவு நண்பன் said...

//சரி, இந்தப் பக்கத்துல ஏதோ பிரச்சனை இருக்கு.. ஒழுங்கா வர மாட்டேங்குது//

நன்றி பொன்ஸ்..

அதான் எனக்கும் புரியல..திறக்கவே ரொம்ப நேரமாகுது.. ம் சரி பண்ண முயற்சி பண்றேன்.

பொன்ஸ்~~Poorna said...

என் பக்கத்திலயும் இந்த பிரச்சனை இருக்கு.. சரியானால் உங்களுக்கும் சொல்கிறேன்.. இன்றைக்கு இந்தப் பக்கம் திறக்கிறது.. என்ன மாயமோ :)

நிலவு நண்பன் said...

//Nice :-) //

நன்றி ஜான்ஸி.. :)

நிலவு நண்பன் said...

//என் பக்கத்திலயும் இந்த பிரச்சனை இருக்கு.. சரியானால் உங்களுக்கும் சொல்கிறேன்.. இன்றைக்கு இந்தப் பக்கம் திறக்கிறது.. என்ன மாயமோ :) //


ஒருவேளை படங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால் வேகம் குறைகின்றதோ..?

priya said...

I just went thru' your "vidhaigal" post and hats off to you moon. I have gone thru' that blog before. Just out of curiosity, I opened to read.
You need a good heart to do that and you have it. Helping should come thru' heart and you have done a great job.
No words to say...

What is thelka game?? I have no clue...
1. My favorite game outdoor: Tennikoit
Indoor: Carrom and Tabletennis
2. I can never my UG holiday trip and the naughty things we (my friends) did.
3. I lost my best friend from school-college after marriage. It is still a big loss.
4. Not really....
5.Just myself

நிலவு நண்பன் said...

//Helping should come thru' heart and you have done a great job.
No words to say...//

நன்றி ப்ரியா..

//What is thelka game?? //


தெல்கா என்பது ஒரு சிறிய கோலி உருண்டை போல ஒரு காய். அதனை அடுக்கி வைத்து சீட்டு கட்டு விளையாட்டு போல அடித்து விளையாடுவோம். இதெல்லாம் கிராமத்து விளையாட்டு//I lost my best friend from school-college after marriage. It is still a big loss.//

இது பெரும்பாலான பெண்களின் இழப்பு..

priya said...

It is not lost friendship but loss of life....

Kuppusamy Chellamuthu said...

//எந்தப் பேனாவும்
சாகும்வரை என்
சட்டைப்பையில் இருக்க
சம்மதித்ததே இல்லை//

சொந்தச் சரக்கா? :-) Pretty good..

நிலவு நண்பன் said...

//சொந்தச் சரக்கா? :-) Pretty good.. //


என்ன தலை இப்படிக் கேட்டுபுட்டீக..

நம்ம சரக்கும் எப்பவுமெ சொந்தம்தான்

மதியழகன் சுப்பையா said...

அன்புடை தமிழ் நெஞ்சங்களுக்கு,
வணக்கம். மும்பையிலிருந்து 'அணி' என்னும் கவிதைக்கான இதழ் வந்து கொண்டிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான். எதிர்வரும் நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வர உள்ளது. தரமான படைப்புகளை அனுப்பி தரவு தருவீர். இந்தக் தகவலை தங்கள் தோழமைகளுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. கவிதையும் கவிதை சார்ந்த எந்த படைப்பாயினும் அனுப்பி வையுங்கள்.

இங்ஙனம்,
அன்பாதவன் (09869481106)
மதியழகன் சுப்பையா (09821847464)

மின்னஞ்சல் முகவரி: anikavi@gmail.com
இணைய முகவரி: www.ani.keetru.com
அஞ்சல் முகவரி:
Madhiyalagan subbiah,
10/1-B, Trivedi & Desai chawl,
D'monte lane, Orlem,
Malad (w), Mumbai-400064.
Phone: 022- 32580618.

தேன் கூடு