Thursday, June 01, 2006

இவனைக் கொன்றால்தான் என்ன?






அழகிய மனைவியை
அருகில் வைத்துக்கொண்டு
பேருந்தில் தூங்குபவன்.

- ரசிகவ் ஞானியார்

31 comments:

கைப்புள்ள said...

பாவங்க! கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்குறாரு அவரு...அது கூட பொறுக்காம கொல்லணும்னு சொல்றீங்களே?

Santhosh said...

ராகவ் நல்லா பாருங்க அழகிய மனைவியா அது. எனக்கு என்னமோ அவரு அந்தம்மா தொல்லை தாங்காமத்தான் இப்படி தூங்குகிறார் என்று தோணுது.
உங்க கவிதை நீ வேண்டாமடி எனக்கு ரொம்ப நல்லா இருந்தது அந்த பதிவில் பின்னூட்டம் இட முயன்றேன் முடியவில்லை. உங்களுடையது என்று தெரியாமல் அதை நான் தனிபதிவாக போட்டு இருக்கிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கைப்புள்ள said...
பாவங்க! கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்குறாரு அவரு...அது கூட பொறுக்காம கொல்லணும்னு சொல்றீங்களே? //



இருங்க இருங்க கைப்புள்ள.. உங்களுக்கு கஷ்டம் வரட்டும் அப்புறம் சொல்றேன்..
அய்யோ (மன்னிச்சுக்கோப்பா.. கல்யாணம்ங்கிற இடத்துல கஷ்டம்னு போட்டுட்டேன் :) )

அருள் குமார் said...

உங்களுக்கு கல்யானம் ஆகி ஒரு வருஷம்(ரொம்ப ஜாஸ்த்தியோ!) ஆகட்டும். அதுக்கப்புறம் இதே நிலமைல நீங்க என்ன செய்யறீங்கன்னு பார்ப்போம் :)

பின் குறிப்பு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை :)

Mani said...

அதுக்காக, சட்டத்த நீங்களே கையில எடுத்துக்கலாமா? தயவு செஞ்சு கீழே வையுங்க.

Nakkiran said...

நிலவு நண்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ????..

Nakkiran said...

நிலவு நண்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ????..

Nakkiran said...

நிலவு நண்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ????..

Prasanna said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இதுல யாருங்க அழகான பொண்டாட்டி. இந்த மனைவிய வெச்சுகிட்டு தூங்காம என்னங்க பண்ணுவாங்க.

பொன்ஸ்~~Poorna said...

மனைவி 'அழகாக' இருந்தால் மட்டும் போதுமா? நயமான பேச்சு இல்லையெனில், தூங்குவது பெட்டர்...

ஒன்ஸ் அகெய்ன் ஞானியார், உங்களிடம் என் எதிர்பார்ப்பு லெவல் ரொம்ப அதிகரித்து விட்டது என்று நினைக்கிறேன்.. அத்தனை திருப்தியாக வரவில்லை இது :(

Radha N said...

மனைவி மீது நம்பிக்கை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Nakkiran said...
நிலவு நண்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ????.. //



ம் எப்படி கண்டு பிடிச்சீங்க..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// பிரசன்னா said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இதுல யாருங்க அழகான பொண்டாட்டி. இந்த மனைவிய வெச்சுகிட்டு தூங்காம என்னங்க பண்ணுவாங்க. //

அழகு என்பது பார்வையில் இல்லைங்க..

நீங்க கல்யாணம் பண்ணுங்க தெரியும்?

:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
மனைவி மீது நம்பிக்கை! //



நம்பிக்கை வீண் போகாது..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
மனைவி மீது நம்பிக்கை! //



நம்பிக்கை வீண் போகாது..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// மனைவி 'அழகாக' இருந்தால் மட்டும் போதுமா? நயமான பேச்சு இல்லையெனில், தூங்குவது பெட்டர்... //


அனுபவம் போல தெரியுது..

/ஒன்ஸ் அகெய்ன் ஞானியார், உங்களிடம் என் எதிர்பார்ப்பு லெவல் ரொம்ப அதிகரித்து விட்டது என்று நினைக்கிறேன்.. அத்தனை திருப்தியாக வரவில்லை இது :( //


எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்துக்கொண்டு ரசித்தால் இன்னும் படைப்புகளின் ரசிப்புத்தன்மை அதிகரிக்கும்.

நன்றி பொன்ஸ்;.. :)

எதிர்பார்ப்பவர்களை திருப்தி படுத்துவதற்காகவாவது நன்றாக எழுதவேண்டும் எனத் தோன்றுகின்றது..

பொன்ஸ்~~Poorna said...

//எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்துக்கொண்டு ரசித்தால் இன்னும் படைப்புகளின் ரசிப்புத்தன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பவர்களை திருப்தி படுத்துவதற்காகவாவது நன்றாக எழுதவேண்டும் எனத் தோன்றுகின்றது.. //
இல்லை இல்லை.. எதிர்பார்ப்பு குறையாது.. நீங்க தான் இன்னும் கொஞ்சம் ஏறி வரவேண்டும்.. உங்களிடம் அதைத் தான் எதிர்பார்க்கிறேன் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சந்தோஷ் said...
ராகவ் நல்லா பாருங்க அழகிய மனைவியா அது. எனக்கு என்னமோ அவரு அந்தம்மா தொல்லை தாங்காமத்தான் இப்படி தூங்குகிறார் என்று தோணுது. //

என்னுடைய பெயர் ராகவ் இல்லைப்பா.. ..ரசிகவ்..


அப்படியா எழுப்பிக் கேட்கட்டுமா..?


//உங்க கவிதை நீ வேண்டாமடி எனக்கு ரொம்ப நல்லா இருந்தது அந்த பதிவில் பின்னூட்டம் இட முயன்றேன் முடியவில்லை//

நன்றி சந்தோஷ்..

நானும் கவனித்தேன். யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் என்ற பகுதியை தேர்வு செய்தால் நீங்களும் பின்னூட்டம் இடலாமே..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// பொன்ஸ் said...
இல்லை இல்லை.. எதிர்பார்ப்பு குறையாது.. நீங்க தான் இன்னும் கொஞ்சம் ஏறி வரவேண்டும்.. உங்களிடம் அதைத் தான் எதிர்பார்க்கிறேன் :) //



நம்பிக்கைக்கு நன்றி பொன்ஸ். கண்டிப்பாய் முயல்கின்றேன்.

உங்க வ.வ. வாலிபர் சங்கத்தின் துபாய் கிளையர் ராஜாவை நேற்று சந்தித்து உங்க சங்க நடவடிக்கைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// பின் குறிப்பு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை :) //


சரி அருள்.. அப்படியே ஆகட்டும்..அந்தநேரத்தில் இதே பதிவை மீண்டும் இடுகின்றேன்..

பின் குறிப்பு ஒரு பெண் குறிப்பாகட்டும் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mani said...அதுக்காக, சட்டத்த நீங்களே கையில எடுத்துக்கலாமா? தயவு செஞ்சு கீழே வையுங்க. //



என்ன செய்யப்பா..நமக்கு கடுப்பா இருக்குதுல..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//.அந்த அம்மா பேசியே கொன்றுவாங்கன்னு தூங்கற மாதிரி
நடிக்கிறாரு!!!!! - (துபாய்)ராஜா.//


ம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. ;)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஆனா ஞானியார் சும்மா ந்ந்நாலு மணிநேரம் கொஞ்சம் கூட அசராம ஈடு கொடுத்தார்.ஏன்னா
அவர் ர்ர்ரொம்ப நல்லவருருருரு.//

அதுல ஒருத்தன்.. ஒருத்தன்.. ஒ..ரு..த்..த..ன்..
என்னைய நல்லவன்னு சொல்லிடான்ப்பா.. :)

கைப்புள்ள said...

//எப்போது போன் செய்தாலும் நேரில் வந்து சந்திக்கும் தங்கள் நல்ல மனதிற்கு நன்றி ஞானியார்!இப்பந்தம்
என்னென்றும் தொடரவேண்டும்.)//

தலைவரு ஞானியார் மட்டன் குருமாவுலயும் வல்லுநர். ராஜா அதையும் சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க...

என்ன சொல்லனுமா..."வரப் போறவங்க குடுத்து வச்சவங்க"ன்னு
:))-

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கைப்புள்ள said...
என்ன சொல்லனுமா..."வரப் போறவங்க குடுத்து வச்சவங்க"ன்னு
:))- //



நன்றி கைப்புள்ள..

மட்டன் குருமா மட்டுமல்ல பிரியாணிக்கும் தயாராகின்றேன்..

என்னங்க செய்ய வாழ்க்கைன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.. :)


ஆசிர்வாதத்திற்கு நன்றி

துபாய் ராஜா said...

//கைப்புள்ள said...
ஞானியார் மட்டன் குருமாவுலயும் வல்லுநர். ராஜா அதையும் சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க...//

// நிலவு நண்பன் said...
மட்டன் குருமா மட்டுமல்ல பிரியாணிக்கும் தயாராகின்றேன்..//

ஆமா கைப்பு!'பிரியாணி' சாப்பிட
ஏற்கனவே பிளானு,புரோக்ராம் எல்லாம் போட்டாச்சு.எல்லாருக்கும் விரைவில் ஞானியார் முறையான
அழை(றிவி)ப்பு விடுப்பார்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//விரைவில் ஞானியார் முறையான
அழை(றிவி)ப்பு விடுப்பார்.//


முன்னறிவிப்புக்கு நன்றி

ஜுலை வரும் முன்னர் ஒரு ஓலை வரும்

நன்றி ராஜா..

பொன்ஸ்~~Poorna said...

கலக்கறீங்க ஞானியார்.. வாழ்த்துக்கள்..

சங்கத்துக்காரங்களைச் சந்திச்சா என்ன மாதிரி ரகசியமா இருந்தாலும் வெளில வந்துடும் பாருங்க :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சங்கத்துக்காரங்களைச் சந்திச்சா என்ன மாதிரி ரகசியமா இருந்தாலும் வெளில வந்துடும் பாருங்க :) //


நன்றி பொன்ஸ்..

அப்படியென்ன ரகசியம்..ஊழல் ஏதாச்சும் பண்ணுறீங்களோ?

துபாய் ராஜா said...

ஞானியார்!'பொன்சு' சொல்ரது உங்க 'ஜுலை ஓலை' ரகசியத்தை!!.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஞானியார்!'பொன்சு' சொல்ரது உங்க 'ஜுலை ஓலை' ரகசியத்தை!!. //



அது ஒன்றும் இரகசியம் இல்லையே..?

இன்னும் சில நாட்களில்.. உங்கள் அபிமான நிலவுநண்பணில்..

தேன் கூடு