Sunday, May 14, 2006
இப்படிக்கு... மு.க.
அம்மாக்கள் தினமாம் இன்று!
சொந்த அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பும்...
வயது மீறிவிட்டது!
ஆகவே
உனக்கு அனுப்புகின்றேன்
ஒரு வாழ்த்து!
நீ வாழிய ..வாழிய
நீ இல்லையென்றால்
எனக்கு
இத்தனை புகழ் ஏது?
நீ வித்தியாசமான அம்மா..
எல்லா அம்மாக்களும்
உள்ளிருந்து
வெளியே அனுப்புவார்கள்!
என்னை நீ
வெளியேயிருந்து
உள் அனுப்பினாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய
என் மீது
ஆட்சி புரிந்தாய்..
எனக்காக
விட்டுக்கொடுத்திருக்கின்றாய்..
சிலநேரம்
பெட்டியும் கொடுத்திருக்கின்றாய்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய
ஆயிரத்தில் ஒருத்தியாக வந்து
கோடியில் ஒருத்தி ஆனாய்
கொடிகளின் சலசலப்பில்
கோடியை நகர்த்திப் போனாய்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய
நான் எழுதிய வசனத்தில்
கிடைத்த பெருமையை விட
நான் எழுதாத வசனமான
"அய்யோ கொலை பண்றாங்க
அய்யோ கொலை பண்றாங்க "
இதில் கிடைத்த
இரக்கத்தில்தான்
ஆட்சியைப் பிடித்தேன்!
ஆகவே
நீ வாழிய ..வாழிய
நீ இருக்குமிடத்திற்கு
நான் வரத் தெம்பில்லை
நான் இருக்குமிடத்திற்கு
நீ வரத் தைரியமில்லை
சட்டசபையில் நீயும் நானும்
சந்திப்போமா..?
சந்தித்தாலும், முடியாவிடினும்
நீ வாழிய ..வாழிய
என்னை
தாத்தா என்றழைப்பவர்களும்
தாங்கிப்பிடிக்கின்றார்கள்!
அப்பா என்றழைப்பவர்களும்
அருகில் உண்டு!
தலைவா என்றழைக்கும்
தொண்டர்களுமுண்டு!
ஆனால்
உன்னை மட்டும் எப்படி
ஒட்டுமொத்தமாய்
அம்மா என்று
அழைக்கிறார்கள்?
அம்மா..
நீ வாழிய ..வாழிய
சுவரொட்டிகளில்
செல்வியாகின்றாய்
சுற்றியுள்ளவர்களுக்கு
அம்மாவாகின்றாய்..?
செல்வி அம்மாவாகலாம்
அம்மா செல்வியாகமுடியுமா?
அம்மா கொஞ்சம் சொல்லம்மா?
என்னை எப்போதும்
எதிர்த்துக்கொண்டே இரு..
நான் புகழ்பெறவேண்டும்..
ஆகவே
நீ வாழிய ..வாழிய
இப்படிக்கு
மு.க.
-ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நன்றாக உள்ளது. வித்தியாசமான சிந்தனை
அன்புடன்
நாகை சிவா
ஞானியார்,அன்னையர் தினத்தில் அரசியல் கலந்த கவிதை!! வித்தியாசமான சிந்தனை!!
வாழ்த்துக்கள்.
அன்புடன்
துபாய் ராஜா.
ஐந்தாண்டு இரவு
விடியலுக்கு வருகிறது
சொல்கிறது......
முருக்கேறிய
திருக்கை மீன் வாலும்...
சுற்றுலாவிற்று திருப்பப்பட்ட சுமோவும்
சும்மா ஜாலிய திரும்புது
குண்ண்ண்டடடடடாக.......(?)
போட்டுத்தள்ளிய காக்கிகளும்
பொட்டிப்பாம்பாய் குனிய
ஒரு விடியல் வருகிறது....
அம்மா......
அன்பாய்ச் சொன்னால் ஒரு ஒலி
விடியலில்(?)
அரண்டு சொன்னால் ஒரு ஒலி
அம்மாவுக்கு முன்பும் அதே வார்த்தை
அம்மாவுக்கு பின்பும் அதே வார்த்தை
நிலவு நண்பா,
தலைவர் அம்மாவை திருமதி என்று முரசொலியில் கவிபாடியதால் வந்த வினை தான்
"அய்யோ கொலை பண்றாங்க
அய்யோ கொலை பண்றாங்க "
தலைவர் ஆட்சியில் இருப்பதால் எப்படியெல்லாம் எழுதலாம் என்ற தைரியமா?:-))
எதற்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கப்பா...:-))
கவிதைக்கு நன்றி.
படித்தேன்
ரசித்தேன்
சிரித்தேன்
சிந்தித்தேன்
மொத்தத்தில் ஒரு
தேனியிடமிருந்து
தேனடையின் தேன்.
மேலும் நம்மை ஈன்றெடுத்தவரை வாழ்த்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல. எல்லா நாளும் வாழ்த்தியும் வணங்கியும் இருந்தாலும், இந்நாளிலும் நமது தாயை வாழ்த்தலாம்.
உங்களது,எனது மற்றும் அனைவரின் அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்.
// siva said...
நன்றாக உள்ளது. வித்தியாசமான சிந்தனை
அன்புடன்
நாகை சிவா //
நன்றி நாகை சிவா..
தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
//ஞானியார்,அன்னையர் தினத்தில் அரசியல் கலந்த கவிதை!! வித்தியாசமான சிந்தனை!!
வாழ்த்துக்கள்.
அன்புடன்
துபாய் ராஜா. //
நன்றி துபாய் ராஜா..
சீக்கிரமே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருங்க..எத்தனை நாள்தான் அனானிமஸ் -ல பதில் போடுவீங்க..
அன்னையர் தின வாழ்த்துக்கள் ராஜா
//
நாகு said...
ஐந்தாண்டு இரவு
விடியலுக்கு வருகிறது
சொல்கிறது......
முருக்கேறிய
திருக்கை மீன் வாலும்...
சுற்றுலாவிற்று திருப்பப்பட்ட சுமோவும்
சும்மா ஜாலிய திரும்புது
குண்ண்ண்டடடடடாக.......(?)
போட்டுத்தள்ளிய காக்கிகளும்
பொட்டிப்பாம்பாய் குனிய
ஒரு விடியல் வருகிறது....
அம்மா......
அன்பாய்ச் சொன்னால் ஒரு ஒலி
விடியலில்(?)
அரண்டு சொன்னால் ஒரு ஒலி
அம்மாவுக்கு முன்பும் அதே வார்த்தை
அம்மாவுக்கு பின்பும் அதே வார்த்தை //
சும்மா நச்சுன்னு இருக்கு நாகு..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
//நிலவு நண்பா,
தலைவர் அம்மாவை திருமதி என்று முரசொலியில் கவிபாடியதால் வந்த வினை தான்
"அய்யோ கொலை பண்றாங்க
அய்யோ கொலை பண்றாங்க "
தலைவர் ஆட்சியில் இருப்பதால் எப்படியெல்லாம் எழுதலாம் என்ற தைரியமா?:-))
எதற்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கப்பா...:-))//
ஹலோ பொட்டிக்கடை..
அடிக்கறதுக்கு ஆட்டோ அனுப்பிட்டீங்க போல இருக்குது..
அவங்க உங்க பொட்டிக்கடையை துவம்சம் செய்யாம பார்த்துக்கோங்க.. :)
சரி அம்மாவுக்கு போன் பண்ணிணீங்களா..வாழ்த்துச் சொல்லுங்கப்பா..
இப்படிக்கு மு.க தலைப்பைப் பார்த்ததும் ஓ தலை மீண்டும் நகைச்சுவை கவிதை குடுத்துட்டாரு என நினைத்தேன் நினைப்பு சரியாதான் போச்சு :) ம்ம்ம் அன்னையர் தினத்தில் செல்வியான அம்மாவுக்கு ஒரு கவிதை அதுவும் மு.க பெயரில் ரசிகவ் அப்படியே ஒரு காப்பி எடுத்து அம்மாவுக்கும் மு.க வுக்கும் அனுப்பி வையுங்க (ஆட்டோ வந்தா நான் பொறுப்பில்லை)...அடுத்த ஆண்டு அன்னை சோனியா பற்றி எழுதுங்கள் அவரும் அன்னைதானே :)
//ப்ரியன் said...
இப்படிக்கு மு.க தலைப்பைப் பார்த்ததும் ஓ தலை மீண்டும் நகைச்சுவை கவிதை குடுத்துட்டாரு என நினைத்தேன் நினைப்பு சரியாதான் போச்சு :) ம்ம்ம் அன்னையர் தினத்தில் செல்வியான அம்மாவுக்கு ஒரு கவிதை அதுவும் மு.க பெயரில் ரசிகவ் அப்படியே ஒரு காப்பி எடுத்து அம்மாவுக்கும் மு.க வுக்கும் அனுப்பி வையுங்க (ஆட்டோ வந்தா நான் பொறுப்பில்லை)...அடுத்த ஆண்டு அன்னை சோனியா பற்றி எழுதுங்கள் அவரும் அன்னைதானே :) //
நன்றி ப்ரியன்.. அப்படியே எல்லா அம்மாக்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்..
நிறைய எழுதுனேன் பா..ஆனா ஆட்டோ பயத்துலதான் குறைச்சிக்கிட்டேன்..
விட்டா நீங்களே ஆட்டோவை அனுப்பி வச்சிறுவீங்க போலிருக்குது..
நமக்கு ஆட்டோ வராது..ப்ளைட்தான் வரும்.. :)
நல்ல கவிதைங்க ஞானியார்..
"நம்பியார், பி.எஸ்.வீரப்பா மாதிரி வில்லன்கள் இருந்ததால தான் எம்.ஜி.யாரோட பெருமையும் வீரமும் பளிச்சென தெரிந்தது"- ஏதோ ஒரு பேட்டியில் படிச்சது
அதுமாதிரி,
அம்மா இருந்தாத் தான் கலைஞருக்கு மதிப்பு,
கலைஞர் இருந்தாத்தான் அம்மாவுக்குப் பெருமை..
ரெண்டு பேரும் நெஜமாவே ரகசியமா வாழ்த்துச் சொல்லிக்கிட்டாங்களோ என்னவோ :)
என் உடன்பிறப்பே!!!
அம்மாவுக்கு இவன் ஆப்பு வைக்க பார்கிறான்...
ஆட்டோவை எடு.....
கவிதை எழுதும் ஞானியின் கையை எடு...
வித்தியாசமான கவிதை
படித்தேன்..
சிரித்தேன்...
வாழ்த்துக்கள்....
அன்புடன்...
சரவணன்.
பரமக்குடி.
//Saran.C said...
என் உடன்பிறப்பே!!!
அம்மாவுக்கு இவன் ஆப்பு வைக்க பார்கிறான்...
ஆட்டோவை எடு.....
கவிதை எழுதும் ஞானியின் கையை எடு...
வித்தியாசமான கவிதை
படித்தேன்..
சிரித்தேன்...
வாழ்த்துக்கள்....
அன்புடன்...
சரவணன்.
பரமக்குடி. //
வந்து திட்டியதற்கு நன்றி சரண்.. .நான்தான் பரமக்குடி பக்கம் வரமாட்டேனே..
அட ஆப்பு வச்சிறாத மாப்பு...
அன்னையர் தினத்துக்கு மலர்ந்த கவிதை வித்தியாசம இருக்கு. வாழ்த்துக்கள்.
// Rasikai said...
அன்னையர் தினத்துக்கு மலர்ந்த கவிதை வித்தியாசம இருக்கு. வாழ்த்துக்கள். //
நன்றி ரசிகை..
இன்னுமொரு நெல்லை குசும்பு??
:))-
// கைப்புள்ள said...
இன்னுமொரு நெல்லை குசும்பு??
:))- //
நன்றி கைப்புள்ள..
என்னாச்சு ஆளையே காணோம்..பார்த்திபனும் - சரளாக்காவும் வந்திட்டதனால பயந்திட்டீங்களா?
யம்மாடியோவ் :)
// Dev said...
யம்மாடியோவ் :) //
ஏன் இப்படி பயப்படுறீங்க..?
Post a Comment