( வலைப்பதிவுகளை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கவிஞர் மதுமிதாவிற்கு ஒரு வேண்டுகோள். தங்களின் விளம்பரப்பதிவினை அந்த நேரத்தில் விழித்துக்கொண்டிருந்தவர்கள் மட்டும்தான் வாசித்திருக்க கூடும். ஆகவே தூங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இந்த தகவல்கள் போய்ச்சேரவேண்டுமென்றால் தமிழ்மண நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு அனைத்து வலைப்பதிவினருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாமே )
வலைப்பதிவர் பெயர்: ரசிகவ் ஞானியார்
வலைப்பூ பெயர் : நிலவு நண்பன்
உர்ல் : www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com
ஊர்: தற்பொழுது - துபாய் , பிறந்தது - தமிழ்நாடு
நாடு: தற்பொழுது - வளைகுடா ( அமீரகம் ) , நிரந்தரமாய் - இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
இணையத்தில் ஊர்சுற்றிக்கொண்டிருந்தபொழுது தற்செயலாக தமிழ்மணம் என்ற பேருந்து நிலையத்தில் வலைப்பதிவர்களின் கூட்டத்தைக் கண்டேன். "என்னடா இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே" என்று வேடிக்கைப் பார்க்கச் சென்றவன் விதவிதமான பேருந்துகளில், விதவிதமான பயணிகள் , விதவிதமான அனுபவங்கள் கண்டு வியந்து நானும் பயணத்தை ஆரம்பித்தேன். பணயம் இன்னமும் முடியவில்லை.
அந்த பேருந்து நிலையத்தில் யார் யாரெல்லாமோ உதவினார்கள். ஆனால் முதலில் உதவியவர்கள் சந்திரவதனா என்பவர்கள் தான்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள் - வருடம் : 19 ஏப்பிரல் மாதம் 2005
இது எத்தனையாவது பதிவு: 262
இப்பதிவின் உர்ல் (URL):
http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
என்னுடைய கல்லூரி நினைவுகளை - என்னைச்சுற்றி நடப்பவற்றை - மனம் கொதித்துப் போகின்ற நிகழ்வுகளை - கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளை காது கொடுத்து கேட்பதற்கு பாலையில் எவருமே இல்லையே என்ற ஆதங்கத்தில் சூட்டியதுதான் இந்த வலைப்பூ மாலை.
உலக நண்பர்களிடமிருந்தும் வருகின்ற விமர்சனங்களிலிருந்து நம்முடைய தனிப்பட்ட எண்ணங்கள் மற்றவர்களின் பார்வையில் எப்படி தோற்றமளிக்கின்றது என்பதை அறிந்து நம்மைத் திருத்திக்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக அதிகமாக எழுத ஆரம்பித்தேன்.
சொந்தப் பத்திரிக்கை நடத்துவது போன்ற உணர்வுடன் என் மனம் போக்கில் எழுதிகொண்டிருக்கின்றேன்.
சந்தித்த அனுபவங்கள்:
நான் படித்த சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் பற்றி எழுதியதை படித்த சில வலை நண்பர்கள் திருநெல்வேலியில் அந்தக்கல்லூரியை கடந்து சென்றபொழுது என்னுடைய ஞாபகம் வந்ததாக கூறியபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
வலைப்பதிவில் நண்பர் ஒருவர் இறந்து போனதைக் கேள்விப்பட்டபொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அந்த நண்பரை நான் இதுவரை கண்டதுமில்லை ஆனாலும் அவர் இறந்த செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது பதிவுகள் புதிப்பிக்கப்படாமல் அனாதையாய் இருக்கும்பொழுது எனக்குள் மிகுந்த மனக்கவலையை கொடுத்தது.
என்னுடைய விதைகள் என்றும் வலைப்பதிவில் ஒரு சிறுவனின் ஆபரேஷனுக்காக உதவிகள் கேட்டு எழுதியயோது சிங்கப்பூரிலிருந்து ஒரு அன்பர் என்மீது உள்ள நம்பிக்கையில் ஆபரேஷனுக்குண்டான பணத்தை உடனே அனுப்பி அந்தச் சிறுவனின் உயிரைக்காப்பாற்றினார்.
ஒரு கல்லூரி மாணவனின் அறுவைச்சிகிச்சைக்காக உதவிகள் கேட்டு எழுதியபொழுது அந்தப்பதிவு எழுதிய 24 மணி நேரத்திற்குள் அது சம்பந்தமாக நிதி திரட்டியவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதாக கூறி எனக்கு அனுப்பின மின்னஞ்சல்.
இணைத்தில் உல்லாசமாய் பொழுதுகள் மட்டுமல்ல உயிரையும் காப்பாற்றலாம் என எண்ண வைத்த தருணங்கள் அவை..
ஊரையே உலகமாய் நினைத்தவனை உலகத்தையே ஊரென்று மாற்றித்தந்தது இந்த அனுபவங்கள்.
அனுபவங்கள் வாழ்க்கையை பக்குவப்படுத்துகின்றது. இன்னமும் தொடரும்.
பெற்ற நண்பர்கள்:
தமிழ்நாட்டுக்குள் சுருங்கி இருந்த நண்பர்கள் வட்டம் தற்பொழுது இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவைத்தாண்டியும் பரவிக்கொண்டிருக்கின்றது.
சில நேரம் பெயர் சொல்லமுடியாத நாடுகளிலிருந்து கூட தமிழ் நண்பர்கள் .
இப்பொழுது நான் தனி மனிதன் இல்லை... உலகம்.
கற்றவை:
கடலில் கால்கள் மட்டுமே நனைத்துக்கொண்டிருந்தவன் உட்புகுந்து முத்தெடுக்கவும் கற்றுக்கொண்டேன். மிதமான அலைகளிலே நீந்திச்செல்லவும் சுனாமி அலைகள் வந்தால் தப்பிக்கவும் கற்றுக்கொண்டேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
தணிக்கைகள் உள்ள கருத்துக்களை எழுதுபவனும் நானே அதனை தணிக்கை செய்பவனும் நானே
கட்டுப்பாடுகள் இல்லாமல் நாம் எதுவேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது தனி மனிதனைத்தாக்குவது போலவும் மற்ற மத உணர்வுகளை கிண்டலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இனி செய்ய நினைப்பவை:
வரலாற்று ஆராய்ச்சி சம்பந்தமான பதிவுகள் போடுவது
நான் தங்கியிருக்கும் இடத்தின் - சூழலின் வித்தியாசமான பதிவுகள்
டெஹல்கா டாட் காம் போன்று இரகசியங்களை வெளிக்கொணரும் பதிவுகள்
நான் வாங்கி எல்லா ஆட்டோகிராப்களையும் இ-ஆட்டோகிராப்பாக மாற்றுவது
துண்டுக்காகிதம் கூட விடாமல் தேடிப்பிடித்து என்னிடம் இருக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் எழுதுவது.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
கட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் பிறந்தவன் இந்த கெட்ட பொம்மன்..
என்னுடைய பெயர் : ரசிகவ் ஞானியார் .
ரசிகவ் என்பது யாரும் தந்தப் பெயர் அல்ல. யாருமே தராததால் நானாகவே வைத்துக்கொண்ட பெயர் .
தாயார் பெயர் : ரசினா
தந்தையின் பெயர் : கவ்பத்துல்லா
இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்றிணைத்து ரசிகவ் ஆக்கிக் கொண்டேன்.. நிறைய ரசிகர்களையும் ஆக்கிக்கொண்டேன்.
படித்தது - வளர்ந்து - விளையாடியது - சண்டையிட்டது -உருண்டது எல்லாம் திருநெல்வேலி மண்ணில்தான்.
கல்லூரி படிப்பு - சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம்
மணோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ
கல்லூரி நேரத்தில் நண்பன் ராஜாவுடன் இணைந்து "பானிபட் இதயங்கள் " என்ற கவிதைப் புத்தகம் வெளியிட்டேன். இன்னமும் தரமாக ஒரு புத்தகம் வெளியிடும் முயற்சியில் தற்பொழுது.
விரும்புபவர்கள் விரும்பும்வரைக்கும் துபாயில் பணி.
விரும்புபவர்கள் விரும்பவில்லையெனில் இந்தியாவில் இனி.
நான் கதாநாயகனா இல்லை காமெடியனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாகச் சொல்லமுடியும் நான் வில்லனல்ல.
பாதிக்கப்பட்டு கவிதை எழுதுவேன். கவிதைகள் எழுதியும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.
என்னையும் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே என் தலையாய பணி.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
இந்த பாலை வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்களை விட்டு பிரிந்து இருந்தாலும் நான் சோகப்பட்டால் ஆறுதல் தந்து, மகிழ்ச்சியடைந்தால் என்னோடு மகிழச்சியடைந்து, எனது பால்ய வயது மொட்டை மாடி நண்பர்களுடன் சுற்றியிருந்து அரட்டை அடிப்பது போன்ற உணர்வுகளை தந்து எனக்கு எப்போதும் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கும் குழும நண்பர்களுக்கும் வலைப்பதிவு வாசகர்களுக்கும் - வலைப்பதிவு வட்டத்தினை புத்தமாக்கும் முயற்சியில் இருக்கும் கவிஞர் மதுமிதாவுக்கும் நன்றி நன்றி நன்றி.
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
22 comments:
அருமையாக கூறி உள்ளீர்க்கள் நண்பரே!
A good way to start your biography!!!
Good wishes to you...
//நாகை சிவா said...
அருமையாக கூறி உள்ளீர்க்கள் நண்பரே! //
நன்றி நாகை சிவா..
//priya said...
A good way to start your biography!!!
Good wishes to you... //
நன்றி ப்ரியா..
சாதித்தவர்களின் சுயசரிதைக்கு மத்தியில்
சாதிக்க முனைபவனின் சுயசரிதை இது
" ஞானியார் பாணியே தனி ".
அன்புடன்,
துபாய் ராஜா.
//Anonymous said...
" ஞானியார் பாணியே தனி ".
//
நன்றி துபாய் ராஜா..
ஆர்வமாய் தருகின்ற விமர்சனத்திற்கு நன்றி
தலைவா! வரலாற்று பதிவு போடுறதுல நமக்கும் கொஞ்சம் ஆசை உண்டுதான். எதுனா தோணுச்சின்னா சொல்லுங்க கண்டிப்பா உதவி பண்ணி பேர் வாங்கிக்குறேன்.
எப்படா ஜூன் 21 வரும்னு காத்துகிட்டு இருக்கேன்.
// விரும்புபவர்கள் விரும்பும்வரைக்கும் துபாயில் பணி.
விரும்புபவர்கள் விரும்பவில்லையெனில் இந்தியாவில் இனி.//
மே(லி)டமா ?
:-)))
//மே(லி)டமா ?
:-))) //
நீங்க துப்பறியும் துறையில இருக்கீங்களா லதா..? :)
//தலைவா! வரலாற்று பதிவு போடுறதுல நமக்கும் கொஞ்சம் ஆசை உண்டுதான். எதுனா தோணுச்சின்னா சொல்லுங்க.எப்படா ஜூன் 21 வரும்னு காத்துகிட்டு இருக்கேன். //
கண்டிப்பா பிரசன்னா..சேர்ந்து கலக்குவோம் போதுமா..?
ஏன் ஜுன் 21 - ஓ நிலவைக்காண காத்திருக்கீங்களா?
நிலவு நண்பன்
ராயல் சல்யூட்-டுங்க உங்களுக்கும்
நிலவைப்பாத்து நிக்கற புகைப்படம் எவ்வளவோ கதை சொல்லுது ரசிகவ்
நூல் கொண்டுவரணும்-னு நினைக்கிறப்ப இல்லாத ஒன்று இப்ப சாத்தியமாயிருக்கு
உங்களைமாதிரி வலைப்பதிவர்களின் ஆர்வத்தாலயும்,ஒத்துழைப்பாலயும்.
ஐந்து வலைப்பூ ஜாம்பவான்கள் கட்டுரைகள்
250 வலைப்பூ பதிவுகளின் பட்டியல்கள்
சேர்க்கலாம் என்று முடிவாகியுள்ளது.
இன்னும் ஜூன் 10க்குள் வேறு முன்னேற்றங்கள் தெரியலாம்
சொல்றேங்க
இன்றுவரை 50 பதிவுகளின் சுட்டிகள் பதிவாகியுள்ளன.
நிலவு நண்பன்
நன்றிங்க
அருமையா செஞ்சிருக்கீங்க
உங்களை ஏமாத்துனா நானே என்னை ஏமாத்துனதா அர்த்தங்க
உங்கள் நல்ல கருத்துக்கும்,நல்லிதயத்துக்கும் மனமார்ந்த நன்றி இன்னொரு முறையா.
அன்புடன்
மதுமிதா
//உங்களை ஏமாத்துனா நானே என்னை ஏமாத்துனதா அர்த்தங்க
உங்கள் நல்ல கருத்துக்கும்,நல்லிதயத்துக்கும் மனமார்ந்த நன்றி இன்னொரு முறையா.
அன்புடன்
மதுமிதா //
நன்றி மதுமிதா. பொறுமையான விமர்சனத்தை பொறாமையாய் பார்க்கின்றேன். :)
தங்களின் முயற்சிக்கு மற்றொருமுறை பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
//விரும்புபவர்கள் விரும்பும்வரைக்கும் துபாயில் பணி.
விரும்புபவர்கள் விரும்பவில்லையெனில் இந்தியாவில் இனி.//
:)
உங்கள் பெயர்க் காரணம் அருமை ரசிகவ்... (சரியாகச் சொல்லிவிட்டேன்) :)
// பொன்ஸ் said...
//உங்கள் பெயர்க் காரணம் அருமை ரசிகவ்... (சரியாகச் சொல்லிவிட்டேன்) :) //
நன்றி பொன்ஸ்..
பெயர்க்காரணத்தை நீங்க எப்போ சொன்னீங்க..?
மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், இரசிக்கும்படி....
-குப்புசாமி செல்லமுத்து
//மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், இரசிக்கும்படி....
-குப்புசாமி செல்லமுத்து //
ரசித்ததற்கும் பாராட்டிதற்கும் நன்றி குப்புசாமி செல்லமுத்து..
//பெயர்க்காரணத்தை நீங்க எப்போ சொன்னீங்க..? //
அட, உங்க பெயரைச் சரியாகச்சொன்னதில் சந்தோஷம்ங்க :)
// அட, உங்க பெயரைச் சரியாகச்சொன்னதில் சந்தோஷம்ங்க :) //
ம் நன்றிங்க.. :)
//ஒரு கல்லூரி மாணவனின் அறுவைச்சிகிச்சைக்காக உதவிகள் கேட்டு எழுதியபொழுது அந்தப்பதிவு எழுதிய 24 மணி நேரத்திற்குள் அது சம்பந்தமாக நிதி திரட்டியவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதாக கூறி எனக்கு அனுப்பின மின்னஞ்சல்//.
உங்களுக்கு நல்ல மனது! நல்ல முயற்சி! உங்கள் எழுத்து மற்றவர்களுக்கு உதவுவது குறித்து மகிழ்ச்சி!! உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன்.
அன்புடன்
சாம்
//உங்களுக்கு நல்ல மனது! நல்ல முயற்சி! உங்கள் எழுத்து மற்றவர்களுக்கு உதவுவது குறித்து மகிழ்ச்சி!! உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன்...//
இந்தப் பாராட்டுகள் எனக்கு கர்வத்தை தந்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்கின்றேன்.
நன்றி சாம்..
//"எங்களை வச்சு காமெடி - கீமெடி பண்ணலையே..?" //
:)
//kettabaiyan said...
:) //
எங்கெங்கும் புன்னகை
நன்றி பையா..
Post a Comment