Tuesday, May 03, 2005

குப்பைகள் - II

வினாத்தாள்களை போலவே -உன்
விழிகளுக்கும் ...
அர்த்தம் புரியவில்லை!
வேறு வழியேயில்லை
எடுத்துவிட வேண்டியது தான்
காதல் பிட்டை!
-------------
இன்பத்தை போல
விஷத்தையும்...
விஷத்தை போல
இன்பத்தையும் தருகின்ற...
காதலும் ஒருவஞ்சப்புகழ்ச்சி அணியே!
------------------
காதல் என்பது
கடவுளானால் - உலகில்
நாத்திகனென்று...
எவனுமில்லை!
------------------
அவளை மறந்துவிட்டேன்
என நினைக்கிறேன்!
இமைக்கும்
நேரத்தில் மட்டும்தான்...
இப்பொழுது
அவளை நினைப்பதால்...
அவளை மறந்துவிட்டேன்
என நினைக்கிறேன்!
------------------
இன்று முதல்
அவளை மறந்துவிடப்போகிறேன்!
தயவுசெய்து
யாரும் அவளை...
நினைவுப்படுத்தி விடாதீர்கள்!
அய்யோ நிலவை என்ன செய்வது?
------------------
- ரசிகவ் ஞானியார்

1 comment:

பத்ம ப்ரியா said...

Middle paragraph puriyave illai enakku... so i have to agree this is a very good poem.

Then.. nilavai enna seivathaa?
Remember - amaavaasai is there.

தேன் கூடு