Monday, May 16, 2005

பெண் பார்க்கும் படலம்

2001 ம் ஆண்டு எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு கல்லூரியின் ஒரு மதிய இடைவேளை.
"டேய் ரொம்ப போரடிக்குதுடா " - நான்

"என்ன பண்ணலாம் ..பாம்பே தியேட்டர்ல படத்துக்கு போலாமாடா "- ரபீக்
"ச்சே மூணுமணி நேரம் வேஷ்டா போயிருண்டா..இங்க இருந்தா யாரையாவது கிண்டலடிச்சுட்டு இருக்கலாம்" - நான்

அந்தநேரம் ஜோசப் உள்ளே வந்தான்.

"டேய் உன் ஆளு எப்படிடா இருக்கா" - நான்

"ஞானியார்! இது சரியில்லைடா ..அவ என்னைய க்ராஸ் பண்ணும்போதெல்லாம் நீ என் பேரை சொல்லி கத்துற.. அவ க்ளாஸ் பொண்ணுங்கலாம் ஒரு மாதிரியா பார்க்குறாங்கடாஎனக்கு வெட்கமா இருக்கு" - ஜோசப்

"நீ ஏண்டா வெட்கப்படுற அவதாண்டா வெட்கப்படணும் "- நான்
உடனே ஒரு ஐடியா.. ? ரபீக்கின் காதில் கிசுகிசுத்தேன்.
இருவரும் பைக்கை எடுத்து கிளம்பினோம் பக்கத்தில் உள்ள பெட்டிகடைக்கு.

வெத்தலை - பாக்கு - தேங்காய் - வாழைப்பழம் என வாங்கிக்கொண்டு பக்கத்து டீ கடையில் தாம்பூலத்தட்டு போல ஒரு தட்டு ஒன்று கடன் வாங்கி அந்த தட்டில் எல்லா பொருட்களையும் வைத்து..ஜோசப்புக்கு பெண்பார்க்க செல்லலாம் என ஏற்பாடு!

எல்லாம் தயார் செய்து கொண்டு வகுப்பறையில் நுழைந்தோம். எல்லோரும் கேட்டார்கள் "எதுக்குடா இது"

"டேய் எல்லோரும் வாங்கடா நாம் இப்ப எம்.சி.ஏ எ குரூப்புக்கு போய் ஜோசப்புக்கு பெண் பார்க்க போவோண்டா" - எல்லோரும் குஷியாகிவிட
"டேய் டேய் வேண்டான்டா ப்ளீஸ்! மானத்தை வாங்கிறாதடா"
- ஜோசப் மட்டும் காலில் விழாத குறையாக கெஞ்சினான்

"நீ வரவேண்டாண்டா நாங்க போறோம் "

மாணவர்களையெல்லாம் திரட்டி ஒரு படையாக கிளம்பினோம். சீனியர் ஜுனியர் என எல்லோரும் பார்த்தார்கள்.எல்லோருடைய கவனமும் எங்கள் பக்கம் திரும்பிற்று.
"என்னடா தட்டோடு இந்த கிறுக்கனுங்க எங்கடா போறாங்க!" - சீனியர் மாணவர்கள்
அந்தப்பெண்ணின் வகுப்பறைக்குள் நுழைந்தோம் . அந்தப்பெண்ணை தேடினோம்.
அதோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்.
"எங்க க்ளர்ஸ் ஜோசப்புக்கு உங்க க்ளாஸ்ல இருந்து பொண்ணு பார்க்க வந்திருக்கிறோம் வரவேற்க மாட்டீங்களா? " - நான்

அந்தப் பெண்ணுக்கு புரிந்துவிட்டது. ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு அப்படியே வெட்கத்தில் பெஞ்சுக்கு அடியில் தலையை குனிந்து கொண்டாள்.

அவங்க க்ளாஸ் லீடர் லட்சுமணன் வந்து,

"சரிடா என்கிட்ட கொடுடா!" என் கேட்க,

'ஓஓஓஓஓஓஓஓ..." என்ற சுற்றியுள்ள நண்பர்களின் கத்தலுக்கிடையே தட்டு கைமாற்றப்பட்டது.

விசில் - கைதட்டல் சப்தம் பலமாய் கேட்டது. அந்தப்பெண்ணும் கொஞ்சம் ஜாலிடைப் என்பதால் கண்டுகொள்ளவில்லை.மிகவும் ஜாலியாய் இருந்தது அந்த நாட்கள்.

அதன்பிறகு அந்தபெண்ணும் - ஜோசப்பும் ,

கடந்து செல்லும்போது...............
எதிரெதிரே வரும்போது.............
சந்திக்கும்போதெல்லாம்......
அந்தப்பெண்பார்க்க - அவன் நோக்க ஒரே ஜாலிதான் போங்க! ஆனா உண்மையிலேயே அவங்களுக்குள்ள காதல் வந்துச்சா..போச்சா..இல்லை வந்திட்டு போச்சா...ன்னு தெரியாதுங்க.

இப்ப ஜோசப் சென்னையில் புரோகிராமரா இருக்கிறான். யாராவது பார்த்தீங்கனா அவன்கிட்ட சொல்லுங்க..அவன் சைட் பற்றி வெப்சைட்ல போட்டிருக்குன்னு..

- ரசிகவ் ஞானியார்

6 comments:

Muthu said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

அட ரசிகவ்,
இப்படியெல்லாம் பண்ணியிருக்கீங்களா ?. எப்படியோ ஈவ் டீசிங் கேசில் மாட்டாமல் தப்பித்தீர்களே என்று சந்தோசப்படுங்கள் :-).

Chandravathanaa said...

பரவாயில்லை நீங்கள்.

நிலவு நண்பன் said...

//எப்படியோ ஈவ் டீசிங் கேசில் மாட்டாமல் தப்பித்தீர்களே என்று சந்தோசப்படுங்கள் :-). //

ஆயிரம் உதடுகள் சிரித்தாலும்
ஒரு இதயமேனும் புண்படக்கூடாது நண்பா..

//பரவாயில்லை நீங்கள். //

நன்றி

mani said...

Hi thats great i will inform joseph da.
Mani.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Hi thats great i will inform joseph da.
Mani.//

டேய் மணி.
ஜோசப்கிட்ட போட்டுக் கொடுத்திறாதடா ப்ளீஸ்..

தேன் கூடு