Saturday, May 14, 2005

சரியான அவமானம்பா


1998 ம் ஆண்டு ரம்சான் நெருங்கி கொண்டிருக்கும் சமயம் ..நான் கல்லூரியின் வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன். எதிரில் அந்த இயற்பியல் மாணவி வசந்தி...

" ஹேப்பி ரம்சான்! ஞானியார்"

"தேங்க்யு! தேங்க்யு!"
( வழிந்துகொண்டே கூறினேன்)

கொஞ்சம் நாள் கழிந்தது; பொங்கல் நெருங்கும் சமயம். அவள் மட்டும் நம் பண்டிகைக்கு வாழ்த்தினாள் ..நாமும் வாழ்த்தவில்லையென்றால் நல்லாயிருக்காது
அவள் வகுப்பறை நோக்கி நடந்தேன்.அவள் தன் தோழிகளோடு வந்து கொண்டிருக்கிறாள்.
அட அவளுக்கு சொல்லும் சாக்கில் எல்லோரிடமும் கடலை போடலாம்
நடையின் வேகத்தை அதிகரித்து சென்றேன்.
"ஹாய் வசந்தி ஹேப்பி பொங்கல்"
உடனே எல்லோரும் மொத்தமாக சிரித்துவிட்டார்கள் அவள் உட்பட.
எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது . என்னடா ஏதாவது தப்பா சொல்லிட்டோமா?
இல்லைனா பேண்ட் கிழிந்திருக்கிறதா... ஏதேதோ நினைத்தேன்
அவளே கூறினாள் "அய்யோ சாரி ஞானி! நான் கிறிஸ்டியன்"
எனக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டுமே
"அதனாலென்ன ... பொங்கல் தமிழர் திருநாள் தானே!
யாருக்கு வேணுமினாலும் சொல்லலாம்"

என்று கூறிவிட்டு அசடு வழிந்துகொண்டே வந்துவிட்டேன். சரியான அவமானம்பா..

- ரசிகவ் ஞானியார்

1 comment:

-L-L-D-a-s-u said...

இதிலென்ன அவமானம் .. நீங்கள் சொல்லியது தான் சரி .. பொங்கல் தமிழர் திருநாள் தானே. கிறிஸ்துவனாயிருந்தாலென்ன முசுலீமாயிருத்தாலென்ன?

தேன் கூடு