Thursday, May 12, 2005

பூனையோடு ஒரு போட்டி

தினமும் நான் மதிய உணவை என் அலுவலகத்தின் அருகேயுள்ள ஒரு பூங்காவில் சென்று கழிப்பேன். அன்றும் (12.05.05) சுமார் 12.15 மணி அளவில் நான் அங்கு சென்று சாப்பிடுவதற்காக வைத்திருந்த 2 சிக்கன் சாண்ட்விச் எடுத்து சாப்பிட முற்பட்டேன்.

"மியாவ் " - பின்னாலிருந்து ஒரு பூனை பசியில் கத்தியது

"எனக்கும் கொஞ்சம் கொடேன் ப்ளீஸ் " - என்பது போல அதன் பார்வை

எனக்கோ சரியான பசி மறுபடியும் உணவகம் சென்று ஒரு சாண்ட்விச் வாங்கலாமென நினைத்தாலோ நேரம் இல்லை..
சரி கொஞ்சம் கொடுப்போம். கொஞ்சம் பிய்த்து எறிந்தேன்
பாய்ந்து சென்று சாப்பிட்டுவிட்டு மறுபடியும் என்னை இரக்கத்தோடு பார்த்தது. அந்தப்பார்வை.....
பசியில் குழந்தை தாயை ஏறிட்டு பார்க்குமே அந்த பார்வை....
வாசலில் நிற்கின்ற பிச்சைக்காரனின் கண்களில் தெரிகின்ற வலி...
கல்யாண வீட்டு வாசலில் ஒதுங்கி
எச்சில் இலைக்காய் காத்திருக்கும் ஏழைகளின் ஏக்கம்.....
என்று எனக்கு ஏதேதோ ஞாபகம் வந்தது
"மியாவ் " - மறுபடியும்
"உன்னை இறைவன் சம்பாதித்து சாப்பிட வைக்கிறான்
எங்களால் சம்பாதிக்க முடியுமா....?

அதனால் தான் உங்களை போன்றவர்களை அனுப்பி உதவுகிறான்..
சார்ந்து இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லைப்பா "

- பூனை கெஞ்சுவது போல உணர்வு
மறுபடியும் கொஞ்சம் அதிகமாகவே பிய்த்துப்போட்டேன்.
அது சாப்பிடுவதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையென்றால் மறுபடியும் இரக்கத்தோடு பார்த்துவிடும்.. பின்னர் கொடுக்காமல் இருக்கமுடியாது.. என நினைத்து
அவசர அவசரமாய் விழுங்கினேன். நான் முழுவதையும் சாப்பிட்டு தீர்ப்பதற்குள் மறுபடியும் கேட்டுவிடுவது என்ற தீர்மானத்தில் பூனையும் அவசரமாய் விழுங்கியது.
பூனைக்கும் எனக்கும் போட்டி..
ஜெயித்தது பூனை. மீண்டும் பார்த்தது

" மியாயாயாயாவ் " - கொஞ்சம் நீண்டு வந்தது சத்தம்
கையில் ஒரே ஒரு துண்டுதான்! என்ன செய்ய ? எனக்கு வேறு சரியான பசி!
மறுபடியும் - " மியாவ்"

" நீ இதை சாப்பிடாவிட்டால் கூட போகும் வழியில் எங்கேனும் சாப்பிடலாம்
ஆனால் என் பசிக்கு இதுதான் ப்ளீஸ்! "

பின் அந்த கடைசி சிறிய துண்டையும் பிய்த்து
"இந்தா பிடி நீ பாதி நான் பாதி"
கொடுத்துவிட்டு மீண்டும் ஆபிஸ் திரும்பினேன் வயிறு நிரம்பாவிட்டாலும் இதயம் நிரம்பிய சந்தோஷத்தில்.

- ரசிகவ் ஞானியார்

3 comments:

துளசி கோபால் said...

பூனைக்குச் சோறு(!) போட்டுப் புண்ணியம் சேர்த்துட்டீங்க!

இங்கே ந்ங்க வாழ்க்கையிலும் இந்தப் பூனைகள் பங்கெடுத்து, இப்ப வீட்டின் 'எஜமானர்கள்'
ஆகி இருக்காங்க!!!!

ஷாப்பிங் லிஸ்ட்லே எது இருக்கோ இல்லையோ பூனைக்குச் சாப்பாடு இருக்கும்!

நல்லா இருங்க.

இப்படிக்குப் பூனைகளின் அடிமை
துளசி.

Unknown said...

ரசிகவ்!

இந்த பூனை, நாய் எல்லாம் எல்லோரிடமும் கேட்காது தெரியுமா?... நான் எங்கள் கல்லூரி பஸ்டாண்டில் நிற்கும்போது... 500 பேர் கூட நின்னுட்டு இருந்தாலும்... ஒரு அம்மா மஞ்சல் ஆடையுடன் விர்ன்னு நம்மகிட்ட வந்து (எப்பிடி மறைந்து நின்னாலும் கரெக்டா கண்டுபிடிச்சு...) மாரியாயிக்கு முத்து போடு தாயின்னு நிக்கும்....இந்தா! உனக்கு வீடே சமயபுரம்தானா? இனிமே வந்தே...!ன்னு சொல்லிட்டு அள்ளிக் கொடுக்கிறதும் அந்தம்மா மறுநாள் அதே நேரம் அங்க வந்து 'ஐஸ் பாய்' விளையாடத் தேடறதும் தொடர்கதை! பாவம்.. இப்ப யார் முத்து போட்றாங்களோ!!!.

அதுசரி, துளசி அக்காவிற்குப் பிடித்தது யானையில்லயா?... உங்க blog ல எங்க பாத்தாலும் யானைகள்(மேலே, கீழே, பத்தாததுக்கு ஒண்னு சுத்திச் சுத்தி வேற Dance ஆடுது(ச்சோ...சுவீட்)!!)

துளசி கோபால் said...

மரம்,

யானையும் பிடிக்கும் பூனையும் பிடிக்கும்!! ச்சும்மா ஒரு எழுத்துதானே வித்தியாசம்:-)

தேன் கூடு