Saturday, May 14, 2005

பூரி

மனக்கேமிரா மேல்நோக்கி நகன்று கல்லூரியில் வந்து நிற்கிறது.

கல்லூரியில் இரண்டாவது பீரியடின் வேளை காலை பதினொரு மணி...

யாரோ இரண்டு பேர் வராண்டாவில் நடந்து போய்கொண்டிருக்கின்றனர்..யார் அது? உற்று நோக்கினேன்.
அட நான்தான் ..பக்கத்தில் யார்?
ம்ம்ம்ம்...நம்ம மஸ்தான் என் நண்பன்.
பீரியடை கட் அடித்துக்கொண்டு எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்.?
கடைசியில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையை நோக்கி... ஏதோ நடக்கப் போகிறது?
computer class உள்ளே நானும் மஸ்தானும் நுழைகின்றோம்.
"டேய் வேண்டாண்டா! யாராவது பார்த்துட்டாங்கன்னா வம்பு "- நான்
"பயப்படாம வாடா!"
"அவங்களுக்கு இது practical டைம்டா! யாரும் வரமாட்டாங்க!"
உள்ளே நுழைந்து வலது பக்க முதல்பெஞ்சில் உள்ள அந்த பெண்ணின் டிபன் பாக்ஸை திறக்க முயல்கிறோம்.
"ம்ம்ம்ம்ம்ம " திறக்க முயற்சிக்கிறான்
குரங்குகள் நடமாடும் இடம் என்றுதான் அந்தப்பெண் இருக்கமாக மூடியிருக்கிறாள் என நினைக்கிறேன்

"டேய் சீக்கிரம்டா அவங்க க்ளாஸ் பையன்க யாரும் வயித்து வலிக்குதுன்னு பராக்டிகல் கிளாஸ்லயிருந்து வந்துட்டாங்கன்னா..தொலைஞ்சம்டா"
- பயத்தில் ஏதோதோ உளறினேன்.

"ரொம்ப பயப்படாதடா வாடா"
டிபன்பாக்ஸ் திறந்துவிட்டது..உள்ளே இரண்டே இரண்டு பூரி
( இதுதான் ஸ்லிமா இருக்க காரணமோ? )
"டேய் இரண்டுதான்டா இருக்கு"
"சரி ஆளுக்கு ஒண்ணு"
"பாவண்டா ஒண்ணு எடுத்து பாதி பாதி சாப்பிடுவோம்"
( அந்த பெண்ணிற்காய் இரக்கப்பட்டேன் )
ஆளுக்கு பாதி சாப்பிட்டுவிட்டு தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்தோம்
கையில் உள்ள எச்சிலைத் துடைப்பதற்காக ஒரு நோட்டினை எடுத்து ஒரு தாளை கிழித்து துடைத்தோம். அட! நோட்டின் பின்புறம் ஒரு கவிதை!
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மண்கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
அவையாகும் நீயாகுமோ
நீ என்னை அழைக்கின்ற நட்பாகுமோ?
என கிறுக்கிறியருந்தது.
"டேய் அவ கவிதை கூட எழுதுவா போலிருக்குடா.
நம்ம நட்பத்தான் சொல்லியிருக்கிறாளோ?"
"ஆமா படிச்சுட்டு அவ வந்தவுன்ன விமர்சனம் செய்துட்டு வா நான் போறேன்"
காலடிச்சப்தம் கேட்க அவசரஅவசரமாய் கிளம்பினோம்.
எதிரில் பி.காம் நண்பன் பிரபாகரன் வந்துகொண்டிருக்க
"டேய் என்னடா இந்த க்ளாஸ்ல யிருந்து வர்றீங்க"
"அந்த பொண்ணோட டிபனிலிருந்து பூரி எடுத்து தின்னோன்டா.."
அவனோ அன்று மாலை கல்லூரி முடியும் சமயம் அவள் தோழிகளோடு வந்துகொண்டிருக்க

"பூரிரிரிரி... "என கத்தினான்
அந்தப்பெண் திரும்பிபார்த்து முறைத்துகொண்டே சென்றாள். கல்லூரி முடியும்வரை அவள் அந்த பி.காம் மாணவன்தான் பூரி எடுத்து தின்றது என நினைத்துக் கொண்டிருந்தாள்
எட்டு வருடம் முன்பு திருடி தின்ற பூரிக்கு இரண்டு வருடம் முன்புதான் நான் அந்தப்பெண்ணிற்கு மெயில் அனுப்பி உண்மையை கூறி மன்னிப்பு கேட்டேன்.

- ரசிகவ் ஞானியார்

6 comments:

Anonymous said...

Please don't "justify" your posts. Or else it will appear helter-skelter in Firefox browser. Thank you.

meenamuthu said...

இனியென்ன.. தினமும் பூரிதான் :))))

மீனா

meenamuthu said...

இனியென்ன..தினமும் பூரிதான் :))))

மீனா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனியென்ன.. தினமும் பூரிதான் :))))

மீனா //

கரெக்டா நூல் பிடிச்சி வந்திட்டீங்களே.. :)

நன்றி மீனா..

Anonymous said...

நானும் வந்துட்டேன்... ஆமா, மீனா சொல்றது சரிதான்! இனிமே எப்பப் பார்த்தாலும் பூரி தான்! *பூரி*ப்புடன் வாழ்த்துகிறேன்! :-D

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சேதுக்கரசி said...
இனிமே எப்பப் பார்த்தாலும் பூரி தான்! *பூரி*ப்புடன் வாழ்த்துகிறேன்! :-D //



அட நீங்க எப்போ வந்தீங்க..

ஒரு குருப்பா சேர்ந்திருக்கீங்க போலிருக்குது..

தேடி வந்து வாழ்த்தியதற்கு நன்றி..

தேன் கூடு