Tuesday, May 03, 2005

காதல் ஒரு பழக்கடை

பார்த்தால் தெரியாது - ஆனால்
புழுக்கள் இருக்கக்கூடும்
காதல் ஒரு கத்தரிக்காய்!

காலம் கடந்தால்...
அழுகக்கூடும்
காதல் ஒரு தக்காளி!

சிலநேரம்
ஒடித்துப்பார்த்தால் தான்...
உண்மை தெரியும்
காதல் ஒரு வெண்டைக்காய்

கசப்பாய் இருந்தாலும்
ஆரோக்கிமானது
காதல் ஒரு பாகற்காய்!

சாப்பிட்ட உன்னையே
வழுக்கி விட்டுவிடும்!
காதல் ஒரு வாழைப்பழம் !

- ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

காதல் ஒரு தலைவிதி
இதையெல்லாம்
படிக்க வைக்கிறது.
- BABU

தேன் கூடு