Thursday, September 29, 2005

கல்லறைக்கவிதைகள் - II

கவர்மெண்ட் அதிகாரியின் கல்லறை

எமனுக்கு
லஞ்சம் கொடுக்க முடியாமல்
செத்துப்போனான்

என்னவளின் கல்லறை

வேறு எவனையோ
நினைத்தாள்
கொலைசெய்துவிட்டேன்.

இந்தியனின் கல்லறை

இங்குதான் இவன்
மதவெறியில்லாமல்
உறங்குகின்றான்

நிருபரின் கல்லறை

இறைவனிடம்
பேட்டி எடுக்கச்
சென்றுள்ளான்

வீரப்பனின் கல்லறை

தேவாரம் வந்தாலும்
தேட முடியாத காடு


கணிப்பொறி மென்பொருளாளரின் கல்லறை

If Condition முடிக்காமலையே
இறந்து விட்டான்.


கவிஞனின் கல்லறை

கவலைப்படாதீர்கள்
இனி
பொய்சொல்ல மாட்டான்


நகைச்சுவை நடிகரின் கல்லறை

இவனைச்சுற்றி
அழுதுகொண்டே
அத்தனைபேரும்


பெண்சிசுவின் கல்லறை

மனிதர்களே! இனிமேல்
கொசுவைக் கூட
கொல்லாதீர்கள்


எழுத்தாளனின் கல்லறை

முற்றும்


- ரசிகவ் ஞானியார்

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தொடர்ந்து கவிதைகளுக்கு என வலைப்பதிவு இட்டு வருவதை பாராட்டுகிறேன். அந்த விதத்தில் தனித்துவம் உடையது உங்கள் பதிவு. யாராவது உங்கள் கவிதைகளை திருடி விடுவார்கள் என பயமில்லையா? நகைச்சுவை நடிகன் பற்றிய கவிதை மட்டும் பிடித்தது. மற்றதெல்லாம் கல்லறை வாசகங்கள் தான்; கவிதைகள் அன்று. நகைச்சுவை நடிகன் பற்றிய கட்டுரையை பின் வருமாறு வரி மாற்றி எழுதி இருந்தால் suspense கெடாமல் நன்றாக இருந்திருக்கும்

இவனைச்சுற்றி
அத்தனைபேரும்
அழுதுகொண்டே

தறுதலை said...

ஒவ்வொரு தந்திக்கும்
ஊரே கூடி
ஒப்பாரி

(தந்திக்குப் பதிலா கவுஜைன்னும், ஊருக்குப் பதிலா இணையம்னும் மாத்திப் படிச்சா நான் பொறுப்பல்ல)


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரவிசங்கர் said...
தொடர்ந்து கவிதைகளுக்கு என வலைப்பதிவு இட்டு வருவதை பாராட்டுகிறேன். அந்த விதத்தில் தனித்துவம் உடையது உங்கள் பதிவு.//

நன்றி ரவிசங்கர்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Tharuthalai said...
ஒவ்வொரு தந்திக்கும்
ஊரே கூடி
ஒப்பாரி//

அப்படின்னா அதற்கு தலைப்பு குசும்புக் கவிஜைகள்னு மாத்திடலாம்

தேன் கூடு