
இப்படி
எல்லாமுமே என்னை
எரிச்சல்படுத்துகிறது!
இணைப்பு கிடைக்காமல்...
இழுத்துக்கொண்டிருக்கும் வெப்சைட்
முன்னால் நின்றுகொண்டு - அவள்
முகத்தை மறைக்கின்ற மடையன்!
காதலியோடு பைக்கில்...
கட்டிப்பிடித்தபடி எவனோ?
புதிதாய் வாங்கிய ஜீன்ஸ்...
பார்க்காமல் செல்கின்ற பிகர்கள்!
பரிட்சை நெருங்குகிறது..
டிவியில் புதுப்படம்!
நாளைக்கு காதலர்தினம் - இன்னும்
வாழ்த்து அட்டை வரவில்லை!
ஜன்னலோரசீட்டில் அவள்...
கையில் நோட்டில்லை!
இண்டர்வியுவுக்கு
ஆளுங்கட்சி சிபாரிசு!
ஆட்சி மாறியது..
கவிழ்த்துவிட்ட பைக்..
கண்ணெதிரே காதலி!
ஒயின்ஸ் கடைக்காரர்...
அப்பாவுக்கு நண்பர்!
ஐஸ்கிரீம் சாப்பிடும் நேரம்..
தூரத்தில் தோழி,
பாக்கெட்டில் பணமில்லை!
கையில் சிகரெட்..
எதிரில் அப்பா!
அவளை காதலிக்க ஆசைதான்..
காதலியிடம் கேட்கவேண்டுமே?
"சாரி ராங்கால்"
அவள் அண்ணன்!
புதிதாக வேஷ்டி கட்டியுள்ளேன்
புயல்காற்று அடிக்கிறது!
போகும் வழியில்..
பெண்கள் கல்லலூரி!
பாதையை மாற்றும் அப்பா!
கொஸ்டின் புரியவில்லை..
எதிரில்
நன்றாய் எழுதும் மாணவன்!
ஆட்டோகிராபில் அவள்..
"அண்ணே மறந்துடாதீங்க"
பரிட்சையில் தோல்வி ..
பார்த்து எழுதியவன் பாஸ்!
காதலியோடு இருக்கையில்...
கொடுத்த கடனைக் கேட்பவன்!
கடலை போடும் வேளை...
கூப்பிடுகிறான் உயிர்நண்பன்
இப்படி
எல்லாமுமே என்னை
எரிச்சல்படுத்துகிறது!
எரிச்சல் பற்றி யாராவது
எழுதச்சொல்லும் கவிதைகள்
உட்பட...
--ரசிகவ் ஞானியார்
3 comments:
பயங்கர ரென்சனில் இருந்தேன் உங்கள் ரென்சன் கவிதையை வாசித்ததும் ஒரே சிரிப்பாக வந்தது. ஓ மிக;க நன்றி. இயல்பு நிலைக்கு வந்த விட்டேன்.அப்பா றொம்பத்தான் டாச்சர் பண்ணுறாரோ?
நல்லாயிருக்கு
hi pls add my googlepages in your blog frends list or favorites
its a page for tamil ebooks , free downloads.
thanks for addding
url - http://gkpstar.googlepages.com/
Post a Comment