Wednesday, September 21, 2005

ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்

கடைவீதியில்
கலாச்சாரத்தை விற்கின்ற
ரோமியோக்களே!

உங்களை நோக்கி
ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்

பேருந்தில்
கணக்கு நோட்டை
கொடுக்கும் சாக்கில்
கையைப் பிடித்தும் கிள்ளலாம்

நாங்கள்
நடந்துவரும் வீதியிலே
நக்கலடித்தும் செல்லலாம்

இந்தியா வீசிய
இராக்கெட்டை விடவும் வேகமாக
காகித அம்பும் வீசலாம்

தனியே வரும் பெண்களிடம்
தரக்குறைவாய் பேசலாம்

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்

ஐ லவ் யு சொல்லாதவள் மீது
ஆசிட்டும் ஊற்றலாம்

எங்கள் கூட்டத்தினுள்
பைக்கில் நுழைந்து
பதறவும் வைக்கலாம்

பின்னால் வந்து
ஹாரன் அடித்து அலற வைக்கலாம்.

சிட்டி பெண்ணின் உடையைகண்டு
சீட்டி அடித்து விளையாடலாம்

எது வேண்டுமானாலும் செய்யலாம்

கல்லூரிக்குச் சென்ற உன்
தங்கையின் ஞாபகம்
தலைதூக்காதவரை

நீங்கள்எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

-------

-ரசிகவ் ஞானியார்-

1 comment:

தாணு said...

ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுமையாக இருக்கிறது. உங்க கவிதை நல்லாயிருக்குதேன்னு ரசிக்க வந்தா, கடிக்கிறீங்களே!

தேன் கூடு