Monday, November 21, 2005

காலக் களவாடி




குதூகலத்தோடு
வழியனுப்பியவர்கள்
இப்பொழுது
குழந்தைகளோடு
எதிர்கொள்கிறார்கள்


" வாப்பா வாப்பா "
கூப்பிட்டவர்கள்...
கூப்பிடப்படுகிறார்கள்...!


"டேய் வாடா
பேசிக்கொண்டிருப்போம்"

என்றால்
குடும்பம், குழந்தை என
ஒதுங்க ஆரம்பிக்கிறார்கள்


வீட்டிற்கு சாப்பிட அழைத்தால்
பெரிய மனிதர்களாம்.. ..
முறையாக அழைக்க கூறி
முறையிடுகிறார்கள்!

என்னவாயிற்று நண்பர்களே?
நம் நட்பின் கற்பை
காலம் கிழித்துவிட்டதா?


கட்டை வண்டி
பயணத்தை மறந்துவிட்டு...
காலத்தில் பயணிக்கிறோமோ?

நிச்சயமாக
அயல்தேச வாழ்க்கை...
ஒரு
காலக்களவாடிதான்!

- ரசிகவ் ஞானியார் -

1 comment:

Unknown said...

நட்பை,
வலியவன் எளியவன் என்ற எண்ணவோட்டம் சிதைக்கிறது.
நாம்,
வெளிநாட்டிலிருந்து ஊர் மற்றும் நண்பர்களைப் பார்க்கும் ஆசையில்
அவர்களோ,
ஊர் மற்றும் சுற்றத்தைப் பார்த்துப் பார்த்து விரக்தியில்.

தேன் கூடு