
எதிர்வரும் பெண்களில்
எவளாவது
உன்னை ஞாபகப்படுத்தினால்
மறந்திட முயற்சிக்கலாம்!
ஆனால்
எதிர்வரும்
பெண்கள் எல்லாருமே...
உன்னையே ஞாபகப்படுத்தினால்
நான் எப்படியடி மறப்பேன்?
சரி வீட்டிலாவது
அடைந்து கிடக்கலாம்
என நினைத்தால்...
எதிர்வீட்டு ஜன்னல் வேறு
எப்பொழுதாவது
திறந்து திறந்து மூடுகிறது!
நான் எப்படியடி மறப்பேன்?
உன்
வெற்று நேசத்தை மறந்து
வேறு தேசத்திற்குப் போக நினைத்தால் ...
அங்கும் உன்னைப்போல ஒருத்தி
ஏமாற்றி விட்டால் ...
தற்கொலை செய்துகொள்வேனோ? என்று
தன்மானம் தடுக்கிறது!
உன்னை விட்டுவிட்டு
எந்த ஊருக்காவது
பணயப்பட நினைத்தால்...
எல்லா ஊருக்கும்
நிலவு வருகிறதாமே.?
நான் எப்படியடி மறப்பேன்?
மறந்து விட நினைத்த
மறுகணமே
உடலில் உள்ள
ஒவ்வொரு உறுப்பும்..
ஒத்துழையாமை இயக்கம் செய்கிறதே?
நான் எப்படியடி மறப்பேன்?
சரி!
படிப்பிலாவது கவனம் செலுத்தலாம்
என நினைத்தால்...
தமிழ் பாடத்தில் வேறு
"தலைவன் தலைவியோடு ஓடிப்போனான்"
என்று
வயிற்றெரிச்சல் கிளப்புகிறார்கள்
நான் எப்படியடி மறப்பேன்?
ஆகவே உன்னை
மறக்க முடியவில்லையடி
நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறேன்
அவள் ஞாபகத்தோடு ,
ரசிகவ் ஞானியார்
3 comments:
<<< "உன்னை விட்டுவிட்டு
எந்த ஊருக்காவது
பணயப்பட நினைத்தால்...
எல்லா ஊருக்கும்
நிலவு வருகிறதாமே.?
நான் எப்படியடி மறப்பேன்?" >>>
ஞானியரே,
நாலும் நிலவது தேயிது மறையிது நங்கை முகமென யார் அதைச் சொன்னது????? ;)
காதல் கொண்டோருக்கு
நிலவுதான் காதலி
காதல் தோல்வியுறின்
நிலவையே காதலி
Sooper ayyaney sooper
Post a Comment