Thursday, November 17, 2005

இந்தியர்களின் சார்பில் ஒரு மன்னிப்பு



கருத்துக்குப்பிறகு மன்னிப்பு கேட்டு தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்வது இப்பொழுது பிரபல்யமாகி வருகின்றது.

என்னடா குஷ்புவை பற்றியே எல்லோரும் பேசுகிறார்களே நம்மை மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுகாசினியும் தன்னைப்பற்றி பேசியிருக்கிறார்கள். இது ஒரு தற்புகழ்ச்சிக்கான வழியாகவே எனக்குத் தோன்றுகிறது.

குஷ்பு பேசியது- எதிர்ப்பு வந்தது - மன்னிப்பு கேட்டது - தற்பொழுது நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பது - எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து குஷ்புவின் மன்னிப்பால் அவற்றை மறந்து வருகின்ற சூழ்நிலையில் மறுபடியும் சுகாசினி பேசியது எரிகிற தீயில் மூலிகை பெட்ரோலை ஊற்றியது போல இருக்கிறது.


எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை ஆனால் அவ்வாறு ஒவ்வாத கருத்துக்களை பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரமும் இருக்கிறதல்லவா..?

ஆமாம் நான் கேட்கிறேன்.. தமிழ்ர்கள் ரசிக்கிறார்கள் என்றவுடன் தன்னை தாங்களே தலைக்கு மேலே வைத்துக்கொள்வதா..? தமிழர்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டார்களா..?

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது..? அந்த உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது?


அப்படியென்றால் நானும் சொல்லட்டுமா..?

எவ்வளவோ அவர்கள் மறுத்தும் அணு ஆயுதம் இருப்பதாக ஈராக் மீது வலுக்கட்டாயமாக போர்தொடுத்து அவர்களின் பெட்ரோல் வளத்தை திருடி ஈராக்கை சுடுகாடாக்கிய அமெரிக்காவின் செயல்களுக்காக ஒட்டு மொத்த இந்தியர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்கட்டுமா..?

காசு வாங்கி நடிக்கும் அவர்களுக்கே அந்த உரிமை இருக்கும்போது காசு கொடுத்துப் பார்க்கும் நமக்கு அந்த உரிமை இல்லையா என்ன..?




-ரசிகவ் ஞானியார்

10 comments:

Muthu said...

நண்பா இதையே தான் நானும் கேட்டேன். என்னுடைய பதிவையும் பாருங்களேன்.

இந்த மாதிரியாக சுகாசினியின் பேச்சையும் சப்போர்ட் பண்ற குரூப் இருக்கத்தான் செய்கிறது.

Anonymous said...

very correct. my view is same.

b said...

உங்கள் மனநிலையில்தான் நானும்!

P.V.Sri Rangan said...

அருமையான கருத்து நண்பா!தமிழர்களைக் காட்டுமிராண்டிகளாக்க முனையும் கூத்தாடிக் கூட்டத்துக்கு நெற்றியடி கொடுத்துள்ளீர்கள்.

Anonymous said...

என்பேரில் மன்னிப்பு கேக்க சுகாசினிக்கு முழு உருமையும் உண்டு!!!
தமிழ் மொழியே அங்கு (தமிழ் நாட்டில) சீரழிஞ்சு கொண்டிருக்கு அதைவிட்டுட்டு வெளிக்கிட்டிடாங்களாம் கலாச்சாரம் கத்தரிக்காய்யென்று!
முதல்ல தமிழ் மொழியை காப்பாற்றுக்கப்பா.... பிறகு தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றிக்கலாம்!!!

யாத்ரீகன் said...

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு படிப்பை விட்டு விட்டுக்கிட்டு இருக்காங்க நிறைய குழந்தைகள்.. அங்க போய் இவுங்க சமூக பொறுப்புணர்வை காமிக்கட்டுமே...

-
செந்தில்/Senthil

Anonymous said...

//காசு கொடுத்துப் பார்க்கும் நமக்கு அந்த உரிமை இல்லையா என்ன..?//

இதானே வேணங்கிறது. பாக்குறது திருட்டு வி.சி.டி.யிலே. இதிலே இவ்வளவு பீலாவா?!

Anonymous said...

ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவர் அப்படீன்னு வேலுப்பிள்ளை பிரபாகரனை சொல்ல விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனுக்கு யாரய்யா அதிகாரம் கொடுத்தது? அப்போது நீங்களெல்லாம் எங்கே சென்று இருந்தீர்கள்? உங்களை கேட்டுக் கொண்டா அவர் அப்படி பேசினார்? அவருக்கு ஒரு நியாயம், சுஹாசினிக்கு ஒரு நியாயமா?! நீங்களும் உங்க நியாய தராசும்!

Anonymous said...

ரசிகவ் ஞானியாரே,

அமெரிக்கா இராக் மீது படைஎடுத்தால் இந்தியர்கள் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்?

என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியமாட்டேங்குது.

சரி அதை விடுங்க

சி.பா. ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று சொல்கிறார்களே.தமிழர் எல்லாரையும் கேட்டு கருத்துகணிப்பு நடத்தியா அப்படி சொன்னார்கள்?தமிழர் தளபதி,தமிழின தலைவர் அப்படின்னு எல்லாரும் தான் சொல்லிகினு கீராங்க.சுகாசினியும் அப்படி தான் அடிச்சு விட்டாங்க.

நீங்க எதுக்கு நடுவுல உணர்ச்சி வசப்படறீங்க?

வேணும்னா சுகாசினி சார்பில் நான் மன்னிப்பு கேட்கட்டுமா?.....

Anonymous said...

Ha Ha Ha Anonymous.. adicchu udutheiyaa neeru...Santhukkulay sinthu paaduraa matthiri yaarukko ampu vidureeraiyaa neeru...

Athu ennaiyaa Thiruttu VCD.. athu kooda kaasu kodutthathaanyaa thaaranga... Padam paakuravangalukku TVCD-aalay laabamillay.. TVCD vikkiravangalukkuthaan kollai laabam. So ummoda TVCD concept out here...

Gnaniyaarey umma karutthu sarithaan ooiiiiiii..

America padai yethutthaal indiar saarbil mannippu keppathu Gnaniyaarin ulaga pothu nokku...

ambudutheinnnnn...

தேன் கூடு