Saturday, November 19, 2005

நிம்மதி





"காதல்
வேலையில்லாத் திண்டாட்டம்
பணம்
மதவெறி"

தொந்தரவின்றி நீ
தூங்குகின்ற
முதல் தூக்கமும்
முடிவு தூக்கமும் இதுதான்!
ஆகவே
விழித்துவிடாதே...
அப்படியே தூங்கிக்கொண்டிரு!

***
இறைவா என்னை
வளர்ச்சியடையச் செய்துவிடாதே!
ஒரே வகுப்பில்...
ஒரே வீதியில்...
ஒரே இனமாய்...
வாழ்ந்தவர்கள் எல்லாம்
சாதி-மதம் கண்டு பிரிகின்ற
சாதாரண மனிதனாய்...
வாழ விரும்பவில்லை!
ஆகவே என்னை
குழந்தையாய் இருக்கவைத்து
குழந்தையாகவே இறக்க வை!

-ரசிகவ் ஞானியார்

2 comments:

Ganesh Gopalasubramanian said...

ரசிகவ் !!

தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ரொம்ப விரக்தியா இருக்கீங்களோ....

அழகான சந்தோஷமான விஷயங்கள் நிறைய இருக்கு ..... எழுதுங்க...

காதலிக்க வேண்டாம் என்ற பொருளில் மட்டும் நிறைய எழுதிட்டீங்க....

எழுதுங்க வாழ்க்கை வாழ்வதற்கே என்று.

உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்... come out of the dejection

சிங். செயகுமார். said...

காதல் வேண்டாம்!
காதல் பின்னே கனிந்து
கருவில் நனைந்து
உருவில் உனைகொண்டு
உன் பேர் சொல்ல ஓர் குழந்தை மட்டும் வேண்டும்?
ஊரில் இல்லை இது போல் நியாயம்
வேரில் பழுத்த பலா
சாரல் காற்றில்
கிலோ இன்ன விலை சொல்லும்
காதல் வேண்டும்!
மோதல் இல்லா
உலகு செய்ய!

தேன் கூடு