Tuesday, April 19, 2005

தூக்கம் விற்ற காசுகள்இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளு@ர் உலககோப்பை கிரிக்கெட் !

இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!

" இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

-
ரசிகவ் ஞானியார்
துபாய்

33 comments:

Muthu said...

ரசிகவ்,
அருமையாக எண்ணங்களைக் கவிதையாய் செதுக்குகிறீர்கள், தொடருங்கள்.

விடியலின் கீதம். said...

உங்கள் கவிதையை படித்ததும் ஏதோ ஒரு சோகம் என்னை சு10ழ்ந்து கொண்டது.

"தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?"

Nalayiny Thamaraichselvan

ILA (a) இளா said...

//ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!//

அவ்வளவும் உண்மை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ILA(a)இளா said...
//ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!//

அவ்வளவும் உண்மை. //

எப்போதோ எழுதிய கவிதைக்கு இப்போது விமர்சனம் தந்தைமைக்கு நன்றி விவசாயி

ராம்குமார் அமுதன் said...

நல்ல கவிதை நெல்லை நண்பரே.... கடைசி வரியை படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// அமுதன் said...
நல்ல கவிதை நெல்லை நண்பரே.... கடைசி வரியை படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது.....//

அட முதல் பதிவுக்கு 1 வருசம் கழிச்சி விமர்சனம் தர்றீங்க நன்றி அமுதன்...

மடல்காரன்_MadalKaran said...

அருமையான கவிதை,
அர்த்தமுள்ள கவிதை,
அன்பை சொல்லும் கவிதை,
அழவைத்த கவிதை,
அழகான கவிதை,
ஆழ்மனது கவிதை.

இப்போதாங்க உங்க பதிவு பக்கம் ஒதுங்கறேன்.

ரசிகன் said...

ரொம்பவே யதார்த்தமாயிருக்குங்க ரசிகவ்
நான் என்னோட பதிவுல உங்களுக்கு இணைப்பு கொடுத்துட்டேனுங்க....
நாம் இழந்தவை இதைவிடவும் ஏராளம்ன்னு தோனுது..
அருமையா இருக்கு.. வாழ்த்துகள்.

anbu said...

nice! but this is in the title of"ayal thesatthu ealaigal!"
in vaaramalar!(half of the poem!)
may i correct!
any way!
this is fentastic!
keep it up!

Anonymous said...

nice! but this is in the title of"ayal thesatthu ealaigal!"
in vaaramalar!(half of the poem!)
may i correct!
any way!
this is fentastic!
keep it up!

Anonymous said...

Kadal kadanthu vaazhum OTTU MOTTHA manitharkalin pulungal kalaiyum
vaethanaikalaiyum sollum kavithai
naadipiditthu solvathaipoala..
ithanai anupavitha manithan ithai padikkum pothu kandippaka kalivirakkam pirakkum..oru chottu kanneerum varum
rasikaow.. vunarchipoorvamana manithar ayya neer

Aruna said...

//இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...//

அவ்வளவும் உண்மை !இருத்தாலும் ஒவ்வொரு வருடமும் இந்தியா தொலைக்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதானே போகின்றது???
அன்புடன் அருணா

கீழை ராஸா said...

அருமை நண்பரே... நண்பர் நிலா ரசிகன், நான் எழுதிய "சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்" என்ற சிறுகதைக்கு பின்னூட்டம் இடும் போது தங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்...சகோதரி புதுகை தென்றல் என் கதையை படித்து விட்டு "மெழுகுவர்த்திகள்" என்ற இடுக்கை இட்டு தந்த லிங்க் மூலம் உங்கள் கவிதை காண்கிறேன்...எப்போதோ நீங்கள் எழுதிய கவிதை ஆனாலும்
வரிகளின் வீரியம் அப்படியே உள்ளது...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கீழை ராஸா said...

//

விமர்சனத்திற்கு நன்றி கீழை ராஸா....நிலா ரசிகன் என் நண்பர்தான்... அறிமுகப்படுத்திய அவருக்கும் சகோதரி புதுகைத் தென்றலுக்கும் எனது நன்றிகள்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அவ்வளவும் உண்மை !இருத்தாலும் ஒவ்வொரு வருடமும் இந்தியா தொலைக்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதானே போகின்றது???
அன்புடன் அருணா//

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Kadal kadanthu vaazhum OTTU MOTTHA manitharkalin pulungal kalaiyum
vaethanaikalaiyum sollum kavithai
naadipiditthu solvathaipoala..
ithanai anupavitha manithan ithai padikkum pothu kandippaka kalivirakkam pirakkum..oru chottu kanneerum varum
rasikaow.. vunarchipoorvamana manithar ayya neer
//

விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா....எனக்குப் பிடித்த கவிதைகளுள் இதுவும் ஒன்று... இது அனுபவத்தில் எழுதியது...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
nice! but this is in the title of"ayal thesatthu ealaigal!"
in vaaramalar!(half of the poem!)
may i correct!
any way!
this is fentastic!
keep it up!
//

வாரமலரிலும் வந்திருக்கலாம்..ஆனால் எனக்குத் தெரியவில்லை..ஆனால் அயல் தேசத்து ஏழைகள் என்ற தலைப்பில் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம்..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரசிகன் said...
ரொம்பவே யதார்த்தமாயிருக்குங்க ரசிகவ்
நான் என்னோட பதிவுல உங்களுக்கு இணைப்பு கொடுத்துட்டேனுங்க....
நாம் இழந்தவை இதைவிடவும் ஏராளம்ன்னு தோனுது..
அருமையா இருக்கு.. வாழ்த்துகள்.
//

இணைப்பு கொடுத்ததற்கும் நண்பணாய் இணைந்ததற்கும் நன்றி ரசிகன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மடல்காரன் said...
அருமையான கவிதை,
அர்த்தமுள்ள கவிதை,
அன்பை சொல்லும் கவிதை,
அழவைத்த கவிதை,
அழகான கவிதை,
ஆழ்மனது கவிதை.

இப்போதாங்க உங்க பதிவு பக்கம் ஒதுங்கறேன்.
//

நன்றி மடல்காரன்..வித்தியாசமாக இருக்கிறது இந்த தலைப்பு.."மடல்காரன்"..

Unknown said...

ரசிகவ்...

//எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!//

சத்திய வார்த்தைகள். நாம் கண்ணை விற்று சித்திரம் வாங்குபவர்கள்!!

ILA (a) இளா said...

நண்பா! எத்தனையோ தடவை படிச்சிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனசு பாரமாகிட்டே போவுது.. :(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
நண்பா! எத்தனையோ தடவை படிச்சிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனசு பாரமாகிட்டே போவுது.. :(
//

ஒவ்வொரு விமர்சனமும் எனக்கு உங்கள் நிலைமையைத்தான் தருகின்றது இளா...நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தஞ்சாவூரான் said...
ரசிகவ்...

//எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!//

சத்திய வார்த்தைகள். நாம் கண்ணை விற்று சித்திரம் வாங்குபவர்கள்!!
//

ம் உங்களுக்கும் அனுபவம் இருக்கும் போல தெரியுது..நன்றி நண்பா

RamSubbuRaj said...

உங்கள் கவிதை அருமை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//RamSubbuRaj said...

உங்கள் கவிதை அருமை

//

nanri nanpa

GEETHU said...

இந்த கவிதையை எழுதியவருக்கு பாராட்டுக்கள். நீங்கள் படும் துயரங்களை அப்படியே எழுதியிருந்தீர்கள். உண்மைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஆசைப்பட்டு நிகழ்காலத்தை நிராகரித்து, எதிர்காலத்தை மட்டும் எதிரில் நிறுத்தி என் போன்ற பெண்களை பெற்றோர்கள் உங்கள் போன்ற ஆண்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். ஆனால் எங்களின் நிலைமை? உங்களுக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை என்பதோடு நிறுத்திவிட்டீர்களே! அதுமட்டும்தானா? அதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை!, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ? ஆனால் அத்தனையையும் சமாளித்து கட்டியகணவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் நாடு வந்து சேரவேண்டுமே என்று அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திப்பது எங்களைத்தவிர யார் இருக்கக்கூடும்? எனவே உங்கள்துயரம் என்று தனித்துப் பார்க்காமல் நம் துயரம், நம் ஏக்கம், நம் கடமை என்று உங்கள் அவளையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். மனதில் பட்டதை எழுதியுள்ளேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

//GEETHU said...
அதன்பிறகு நாங்கள்படும் பாடு, நடத்தையில் சந்தேகம், புகுந்தவீட்டின் தனிமை, மாமியார், நாத்தனார், அங்குஇருக்கும் ஆண் வர்க்கம் ஆகியோரினால் ஏற்படும் பிரச்சினை!, கர்ப்பகாலத்தில் கணவனின் பரிவு இல்லாத பிரசவம், அந்த குழந்தையின் அனைத்து தேவைகளுக்கும் தனியாய் நின்று போராடுவது இப்படி எங்களின் துயரங்கள் எத்தனையோ?//
நன்றி தங்களின் விமர்சனத்திற்கு

தங்களின் கருத்தில் தவறு என்று எதுவும் இல்லை.

நிச்சயமாக தாங்கள் சொல்வது போல் பெருன்பான்மையான இடங்களில் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது...

இந்த நிலைமை நிச்சயமாக மாறவேண்டும். வெளிநாட்டுக்கு மனைவியையும் அழைத்துச் செல்லவேண்டும் முடியவில்லையெனில் மனைவியின் தாய்வீட்டில் மனைவியை இருக்கச் சொல்லவேண்டும்கணவன் திரும்பும் வரையிலும். இல்லையெனில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெற்று கொண்டுதானிருக்கும்.

- ரசிகவ்

ILLUMINATI said...

எப்பயும் எனக்கு பிடிச்ச சிலதை மட்டும் பிரதானமா காட்டி கமெண்ட் போட்டுட்டு போவேன்.ஆனா,இந்தக் கவிதை முழுசுமே பிரதானமா தெரியுது.ரொம்பப் பிடித்த வரிகள் கீழே...

//தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!

வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?//

உண்மையான ஏக்கமும்,தன்னுடைய கையாலாகாத தன்மையை நினைத்துக் கோபமும்,மறுகலும் கொண்ட ஒருவனின் வரிகள்!
உண்மையை முகத்தில் அறைந்து சொல்கின்றன.

தேன் கூடு