மரண வீட்டிற்கு
மாறுவேடத்தொடு...
சொந்தங்கள்
யோசித்து யோசித்து அழுதது
இவனுக்கு
இவ்வளவு தூரம் அழுவதா ?
மதியசினிமாவின் டிக்கட்டை...
மறைத்துவைத்துவிட்டு
உயிர் நண்பன் சடலம்காண...
ஓடி வந்தான் ஒருவன்!
கொசுக்கடியாம்
கூட்டம் மெல்ல மெல்ல...
குறைய ஆரம்பிக்கிறது!
சீரியலுக்கு நேரமாச்சோ
சிலரின் முணுமுணுப்புக்கள்
அழுகையின்
அத்தனை அரத்தங்களோடும் ...
ஒரே ஒரு ஜீவன் மட்டும் நினைத்தது!
இறந்துபோன மகன்
இரவுச் சாப்பாட்டுக்கு
என்ன செய்வானோ?
ரசிகவ் ஞானியார்
4 comments:
ரசிகவ் உங்களின் கவிதைகள் யாவும் மிகவும் ரசிக்கும்படி உணர்வு பூர்வமாய் இருக்கிறது!
'அன்புடன்'குழுமத்தில் நீங்கள் இட்ட
'தூக்கம் விற்ற காசுகள்'கவிதை பற்றி தனிமடல் ஒன்று தங்களுக்கு அனுப்பினேன் திரும்பிவந்துவிட்டது.
நிஜத்தை நிஜமாக உணர்த்திய அக்கவிதை படித்து மனது மிகவும் கனமாகிவிட்டது!
அன்புடன்
மீனா.
அன்புள்ள நண்பருக்கு,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.என்னுடைய rasikow@gmail.com
±ýÈ þó¾ Ó¸ÅâìÌ «ÛôÀ×õ.
«ýÒ¼ý ÌØÁò¾¢ø þ¨½Â §ÅñÊÂо¡§É ¿ñÀ§Ã
நன்றி ரசிகவ்
என்னை இணைத்துத்தான் 'அன்புடன்' ஆரம்பிக்கப்பட்டது.
உங்களின் 'காதல் ய்2க்'கவிதை ரசித்து
பதில் சொல்லியிருக்கேனே?
அன்பு
மீனா.
மன்னிக்கவும்
y2k கவிதை
அன்புடன்
மீனா.
Post a Comment