Saturday, April 23, 2005

ஞானி

உன் பெயர்

என் இதயம் தவிர நீ வசிக்கும் இடம்

நீ சூடுகின்ற பூவின் வாசைனை

நீ வருகின்ற பேருந்து எண்

எந்த வழியாக உன் பயணம்

உன் அண்ணன்களின் எண்ணிக்கை

உன் நெருங்கிய தோழி

நீ பேசி சிரிப்பவனுடனெல்லாம் உனக்குள்ள உறவு

ஒருநாளைக்குஎத்தனை முறை சிரிப்பாய்

இவற்றிக்கான ஆராய்ச்சியை
படிப்பில் காட்டியிருந்தால்...

விஞ்ஞானியாகியிருப்பேன்!

இப்பொழுது பார்!
வெறும் ஞானியாகியிருக்கிறேன்...

- ரசிகவ் ஞானியார்

1 comment:

Muthu said...

ஓ .. நீங்கள் ஞானியானதன் காரணம் இப்போது புரிகிறது.

தேன் கூடு