Saturday, April 23, 2005

துரோகம் கவிதைக்கு பதில் கவிதை எழுதிய நண்பி

( ஞானியாரே..(ரசிகவ்)...உங்­கள் கவிதை வாசித்ததும் இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது....அவ்வளவுதான்... "அன்பு' படம் பார்த்தீர்களா? ..காதலோடு இருக்கும் போது மட்டும் கொஞ்சும் கெஞ்சும் வார்த்தைகள் பிறகு இப்படி தேள் கொட்டுவதா?....நேசித்தவனோஇ நேசித்தவளோ எங்கிருந்தாலும் அவள்ஃஅவன் நலம் நாடும் மனமே காதல் மனம்...உங்கள் கவிதைக்காக சொல்லவில்லை!.. காதல் தோற்றுவிட்டதென்று புலம்பி..இப்படி கண்ணீரால் கத்திசெய்யும் அத்தனை பேருக்குமாக சொல்லுகிறேன்.. நன்றி.... என்றென்றும் நட்புடன்உங்கள். விஜி.செ )


உங்கள் பார்வையில் பிரியமில்லாதவளாகிப்போனவள் இதயம் எனக்கேஎனக்கென்று தந்ததால் இன்று இதயம் இல்லாதவனாகி விட்டீர்களா?!..


இதயம் இல்லாதவனா இரங்கற்பா எழுதுவது?எத்தனை உயர்ந்தவன் நீ!
நலமா? என் நல்லவனே நலமா? அன்று வைத்த நேசத்தின் வாசத்தில் தான் இன்றும் தொடர்கிறது என் சுவாசம்


உங்களால் இப்படியேனும் புலம்ப முடிகிறது!..கை அலம்பினாலும் விரலிடுக்கிலும்நகமுடுக்கிலும் சிக்கி கொள்ளும் கீரைபோல இன்னமும் நரைக்காமல் நுரை பொங்கி இருக்கிறது உங்கள் ஞாபகங்கள்!..


உடைந்து போனது முதுகெலும்பா? இப்படி எல்லாம் பேச எப்படி கற்றுக்கொண்டீர்கள்?
வீம்புக்காய் நான் செய்யும் சிணுங்கல் கூட பொறுக்காத உங்கள் மனமா இப்படி பொருமுவது?!..
ஒடிந்து போனது நீங்கள்- அன்றே முடிந்து போனது நான் விரும்பிய அத்தனையும்!


நெருக்கத்தில் இருக்கையில்தான் காதலியா? விலகியிருந்தால் விரோதியா? என்னை நேசித்தவனா! நான் நேசித்தவனா??!!இந்த விஷம் கக்குவது?


கல்லூரியில் தூண் மறைவில் எனை நோக்கும் விழிகளுக்காக நான் ஒதுங்கி கொண்டதுண்டு!.. அந்த விழிகள் கண்டலல்வா என் நாளே விடியும்!..


இதய அறைகள் நான்கிலும் நீங்கள் !.நீங்கள்!..நீங்களேதான்


உங்கள் தடங்கள் ஒவ்வொன்றிலும் அல்லவா சுழல்கிறது என் உயிர் மூச்சு?
எனக்காக எல்லாமே மாற்றினீர்கள் நிஜம்தான்!..ஆனால் உங்களுக்காக நான் என்னை அல்லவா ஏமாற்றிக்கொண்டேன்!?!


காதல்!..என் காதல் இன்னமும் காதலாகதான் இருக்கிறது!..
உங்கள் கைசேரவில்லை என்பதால்!.. நம் காதலை கல்லறைக்கா தள்ளுவது? !..


வெறும் வாசனைக்காகவா வார்த்தைகள் மொழிந்தேன்!..அவையெல்லாம் இதயத்தில் ஓசைகள் அல்லவா?

மடிசாய்ந்ததும் !.. மாலை எல்லாம் உங்களால் சோலை ஆனதும்!... எதையும் நான் மறக்கவில்லையடா!


தீர்மானம் இல்லாமலா?!.அப்படி கேட்டேன் அன்று?
நம் குழந்தை நமக்கே நமக்கான குழந்தை என்று அள்ளிக்கொள்ளூம் காலம் வரும் என்று நினைத்திருக்க!...
அந்த நினைப்பில் நான் திளைத்திருக்க!.. விதியா சதியா? !..சொல்லத்தெரியவில்லை!.


நீ வளர வேண்டுமெனில் நான் தேய்வேன் என்று காதலோடு நாம் பேசுவதுண்டு!..அது நிஜமாகி போனதடா!..


உண்மை சொன்னால் நீ துவண்டு விழுவாய்!..துடித்து எழுவாய்!..நீ வேண்டும்!..வாழ வேண்டும் என்பதற்காய் என்னை மன்னிக்கும் உன்இதயம் என்று நானறிந்து கொண்டதினால்!...


இன்று! இன்று உன் முன் துரோகியாய்!...மன்னித்துவிடு!..
எனக்குத்தெரியும் எனை கீறும் உன் ஒவ்வொரு வார்த்தைகளூம் உன் இதயத்தை கிழித்துக்கொண்டே வரும் என்று!.


.ஓ!..அதனால் தான் இதயம் இல்லாதவன் என்று எழுத தொடங்கினாயா? ... அன்பனே!..என்னை மன்னித்துவிடு!..
உன் பெயரைத்தவிர எதுவும் நினைவில் இல்லை எனக்கு!!!!!!!! என்றென்றும் நட்புடன்

உங்கள்.

விஜி.செ

No comments:

தேன் கூடு