Saturday, April 23, 2005

மத ஒற்றுமை

நான் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு கவிதைப்போட்டிக்காக மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றிருந்தபொழுதுயாரோ ஒரு மாணவி மதஒற்றுமை சம்பந்தமாக வாசித்த இந்த கவிதை என் மனதை மிகவும் பாதித்தது. நீங்களும் ரசியுங்களேன்.

சூலம் சுமந்த சிவனின் தோள்கள்
சிலுவை சுமக்கட்டும்
ஏசுநாதரும் மாதமிருமுறை
ஏகாதசி விரதம் இருக்கட்டும்
எல்லா உயிரிலும் அல்லா இருப்பதாய்
ஆழ்வார் பாடட்டும்
அரனும் அரியும் சிறந்தவரென்று
அப்துல்லா கூறட்டும்

- பெயர் தெரியா மாணவி

1 comment:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Slice Of Life said...
arputhamana varigal
uma
//


நன்றி உமா..

விமர்சனம் தாமதமாய் வந்திருக்கின்றது
ஆயினும் கருத்துக்கள் சீக்கிரமாய் போய்ச் சேரட்டும்

தேன் கூடு