Thursday, July 24, 2008

வெயில் பிடித்தவள்




சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்

கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்

கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்


- ரசிகவ் ஞானியார்

6 comments:

சந்தனமுல்லை said...

நல்லா இருக்குங்க..கவிதை!!
நல்ல ஃபோட்டோவும்!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger சந்தனமுல்லை said...

நல்லா இருக்குங்க..கவிதை!!
நல்ல ஃபோட்டோவும்!!//

நன்றி சந்தனமுல்லை

ராமலக்ஷ்மி said...

ரசிக்கா விட்டாலும் வாருங்கள் எனச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்ததினால்தான் வந்திருக்கிறேன் மறுபடியும், குறிப்பாக
//எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்// என்கிற இவ்வரிகளை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ராமலக்ஷ்மி said...

ரசிக்கா விட்டாலும் வாருங்கள் எனச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்ததினால்தான் வந்திருக்கிறேன் மறுபடியும், குறிப்பாக
//எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்// என்கிற இவ்வரிகளை!//

மிக்க நன்றி ராமலெஷ்மி

இனிமேல் மாற்றி விடுகின்றேன் "வந்து ரசியுங்கள் ரசித்துவிட்டும் வாருங்கள்" என்று

ராமலக்ஷ்மி said...

//இனிமேல் மாற்றி விடுகின்றேன் "வந்து ரசியுங்கள் ரசித்துவிட்டும் வாருங்கள்" என்று//

நல்லது செய்யுங்கள் அப்படியே. அதுதான் பொருத்தமாக இருக்கும்.

[அட, எங்க ஊர்க்காரரா நீங்க? இப்பதான் profile பார்க்கிறேன்:)!]

செல்வ கருப்பையா said...

மிக நன்றாக இருக்கிறது கவிதை - லயித்து ரசித்தேன். ஆனால் அந்த புகைப்படம் ஒரு compromise ஆகத் தெரிகின்றது. அந்தப் புகைப்படம் இல்லாவிட்டால் இந்தக் கவிதையின் மௌனங்களின் அர்த்தங்கள் இன்னும் கொஞ்சம் விரியும் - இன்னும் சிறந்த வாசிப்பு அனுபவம் கிடைக்குமென்று நம்புகின்றேன். ஆனால் புகைப்படமோ இல்லையோ அற்புதமான கவிதை - நிறைய எழுதுங்கள்.

தேன் கூடு