"நீங்க தமிழா?நீங்க தமிழா?"மொழி தெரியாத ஊரின்
பேருந்து நிலையத்தில்,
காற்று தத்தெடுத்து என்
காதுக்குள் அனுப்பியது!
வரிசையாய் விசாரித்து வரும்
அந்தக் குரலை!
சொந்த ஊரில் மிதித்துவிட்டு...
வந்த ஊரின் தமிழ்கேட்டு
மெச்சிப்போய்,
தமிழை வரவேற்க ஆயத்தமானேன்.
"ஊருக்குப் போக காசில்லைபணம் தாங்க சார்"- தமிழ் கண்ணீர் சிந்தியது
"க்யா, க்யாதமிழ் நகி மாலும்"- ஏதோ என்னால் தமிழுக்கு முடிந்த உதவி
தமிழ் தலைகுனிந்து சென்றது
- ரசிகவ் ஞானியார்
3 comments:
//தமிழ் தலைகுனிந்து சென்றது//
ரொம்பக் கஷ்டமாக இருந்தது...
அன்புடன் அருணா
selvee said
thamizh ini mellach chaakum
---makakavi.
thmizh ini mellach chaakum
endra mahakaviyin varikalthaan gnabakam varukirathu
Post a Comment