Thursday, July 10, 2008

வாழ்த்துகள்


எவருமே
திருப்பித் தரஇயலாத
நான் பிறந்த அந்த நாளை

இன்றைய இலக்கம் மட்டும்
போலியாய் நிர்ணயிக்கின்றது

வாழ்த்துகள் பிரதியெடுத்து
பதிப்படுகின்றது
ம்
நான் கொடுத்தது
எனக்கே திருப்பி

ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது

யாராவது
வாழ்த்துங்களேன்

- ரசிகவ் ஞானியார்

9 comments:

கானா பிரபா said...

வாழ்த்துக்கள்

தொடர்ந்து இது மாதிரிப் படைக்கவும் வாழ்த்துக்கள் ;)

MSV Muthu said...

க‌விதை த‌ன்னையே பிற‌ந்த‌நாள் ப‌ரிசாக த‌ந்திருக்கிற‌து க‌விஞ‌ருக்கு!
பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் ர‌சிக‌வ்.

Aruna said...

//ஒவ்வொரு பிறந்தநாளும்
நான் இறப்பதற்கு
ஒரு வருடத்தை குறைக்கிறது..//

இப்படிச் சொல்லிவிட்டு வாழ்த்த வேறு சொல்றீங்களே?
ஆனாலும் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!
அன்புடன் அருணா

நம்பிக்கைபாண்டியன் said...

உங்கள் லட்சியங்கள் நிறைவேற பிறந்தநாள் வாழ்த்துக்கள் ர‌சிகவ்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger கானா பிரபா said...

வாழ்த்துக்கள்

தொடர்ந்து இது மாதிரிப் படைக்கவும் வாழ்த்துக்கள் ;)//

நன்றி கானா பிரபு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger MSV Muthu said...

க‌விதை த‌ன்னையே பிற‌ந்த‌நாள் ப‌ரிசாக த‌ந்திருக்கிற‌து க‌விஞ‌ருக்கு!
பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் ர‌சிக‌வ்.//

கவித்துவமாக சொல்லியிருக்கின்றீர்கள் நண்பா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Aruna said...


இப்படிச் சொல்லிவிட்டு வாழ்த்த வேறு சொல்றீங்களே?
ஆனாலும் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!
அன்புடன் அருணா//

நன்றி அருணா

அவ்வளவுவெல்லாம் வேண்டாம் கொஞ்சநாள் மகிழ்வாய் வாழ்ந்தாலே நலம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger NambikaiPandian said...

உங்கள் லட்சியங்கள் நிறைவேற பிறந்தநாள் வாழ்த்துக்கள் ர‌சிகவ்!//

நன்றி பாண்டியன்

Priya said...

Happy Birthday Rasigav.

தேன் கூடு