Monday, July 07, 2008

பொறாமை சுமந்த பூக்கள்




உனக்கு ப்ரியமானவர்கள்
உன்னை சந்திக்க வரும்பொழுதெல்லாம்
எனது பூக்களில்
பொறாமை முளைத்து விடுகின்றது

விடைபெற்று செல்லும்பொழுது
மீண்டும்
பொறாமை பூக்களாகிறது

உன்னிடம் தேங்கிக்கிடக்கும்
அவர்களுக்குண்டான பூக்களையும்
எனக்கே தந்துவிடேன்

நீ
பொறாமையை வைத்துக்கொள்

- ரசிகவ் ஞானியார்

9 comments:

Anonymous said...

anbu+ paasam+ possessivenes = too good+ too cute... :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

anbu+ paasam+ possessivenes = too good+ too cute... :-)//


நன்றி உங்களின் வேதிச்சமன்பாட்டுக்கு

MyFriend said...

//உன்னிடம் தேங்கிக்கிடக்கும்
அவர்களுக்குண்டான அன்பையும்
எனக்காகவே தந்துவிடேன்///

super touch. ;-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

//உன்னிடம் தேங்கிக்கிடக்கும்
அவர்களுக்குண்டான அன்பையும்
எனக்காகவே தந்துவிடேன்///

super touch. ;-)//


நன்றி

அந்த வரிகளை பின் மாற்றிவிட்டேன் இப்படியாக:

"உன்
பூக்களையெல்லாம்
எனக்கே தந்துவிடு

நீ பொறாமையை வைத்துக்கொள் "

MyFriend said...

இருந்தும் எனாக்கு முதலில் எழுதிய

////உன்னிடம் தேங்கிக்கிடக்கும்
அவர்களுக்குண்டான அன்பையும்
எனக்காகவே தந்துவிடேன்////

இதுதான் பிடித்திருக்க்கிறது. :-)

Aruna said...

பொறாமையும் பூக்களும் ரொம்ப அழகான combination!!!
அன்புடன் அருணா

Preethi Susee said...

Superb one... so touching.... We can feel that real possessiveness in our Love...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பொறாமையும் பூக்களும் ரொம்ப அழகான combination!!!
அன்புடன் அருணா//

nanri aruna

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Preethi Susee said...

Superb one... so touching.... We can feel that real possessiveness in our Love..//


Thanks Preethi.

தேன் கூடு