Thursday, July 24, 2008

புத்தனுக்கும் இரவு உண்டு







உன் வீட்டை சூறையாடுபவன்
மன்மதனாக இருக்ககூடும்
உன் அல்குல் தைவரலோ
காந்திக்காக

உனக்கு வயிறு
எனக்குப் பசி

பசியில் உழலும் எனக்கு
உன்
வயிறு பற்றிய வருத்தமில்லை.

பழிபோடுவதற்கு
எதுவோ இருக்கையில்
என்
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன

ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்

- ரசிகவ் ஞானியார்

(அல்குல் தைவரல் : காதலனோடு களவு கொள்ள விருப்பப்பட்ட பெண் அதனைத் தெரிவிக்க வெட்கப்பட்டு தனது உடல் மெய்ப்பாடுகளால் தெரிவிக்கும் நிலை.)

2 comments:

ரகசிய சிநேகிதி said...

அருமையான கருத்தைச் சொல்லும் அழகான கவிதை ஞானி.. வாழ்த்துகள்.

"ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்"


நான் ரசித்த வரிகள்.
அதே சமயம் ஆண்கள் மீது எனக்கு கோபம் வர வைத்த வரிகளும் இவையே தான். நல்ல கவிதை!

"அல்குல் தைவரல் : காதலனோடு களவு கொள்ள விருப்பப்பட்ட பெண் அதனைத் தெரிவிக்க வெட்கப்பட்டு தனது உடல் மெய்ப்பாடுகளால் தெரிவிக்கும் நிலை." -

நன்றி தங்களின் விளக்கத்திற்கு.

ஜியா said...

//ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்//

Ultimate

தேன் கூடு