Monday, June 12, 2006

என் இனிய தபால்காரிக்கு .....

உன்
கடமையுணர்வுக்கு ஒரு
எல்லையில்லையா?
நீ
தபால்துறையில்
வேலை பார்க்கலாம்...
அதற்காக
தபால்துறைப் போராட்டம் என்றால்
காதல் கடிதத்தையுமா ...
வாங்க மறுப்பது?

Photobucket - Video and Image Hosting
---
உன் நினைவுகளை எனக்கு..
தந்தி அனுப்பினாய்!
ஆனால்
காதலை மட்டும்தானடி
கடிதத்தில் அனுப்பிவிட்டாய்!
பாரேன்
எவ்வளவு
தாமதமாய் கிடைத்திருக்கின்றது?

---

கடிதத்துடன்
பணம் அனுப்பினால்...
நாங்கள் பொறுப்பல்ல!
- தபால்துறை
ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை

---
உன் நினைவுகளை எல்லாம்
அழகாய் மடித்து...
காதல் உறையில்
வைத்துள்ளேன்!
சீக்கிரமாய் ஒட்டு
உன்
இதய அஞ்சல்தலையை!

சொர்க்கத்திற்கு அனுப்புவோம்.


- ரசிகவ் ஞானியார்

9 comments:

கஸ்தூரிப்பெண் said...

தபால் துறையிலிருந்து உங்களுக்கு ஒரு அறிவிப்பு!
ஆமை தபால் என்று எங்கள் துறை தற்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், கடிதப்பளு காரணமாகவும் உங்கள் கடிதங்களை உரிய இடத்தில் கவனமாக சேர்த்து விடுவோம்.
தாமதத்திற்கு வருந்துகிறோம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// உங்கள் கடிதங்களை உரிய இடத்தில் கவனமாக சேர்த்து விடுவோம்.//


தபால் துறைக்கு நன்றி. இனிமேல் தபால்துறையை காதல் துறை என்றும் பெயர்மாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

- காதலர் சங்கம்

ILA (a) இளா said...

ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை
புதிய பார்வை, வித்தியாசமான அணுகுமுறை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//புதிய பார்வை, வித்தியாசமான அணுகுமுறை //

நன்றி இளா..

பார்வைகள் வித்தியாசப்படலாம் காதலும் வித்தியாசப்படலாம்
ஆனால் காதல் ஒருத்தியின் மீதுதான்

ப்ரியன் said...

> உன்
> கடமையுணர்வுக்கு ஒரு
> எல்லையில்லையா?
> நீ
> தபால்துறையில்
> வேலை பார்க்கலாம்...
> அதற்காக
> தபால்துறைப் போராட்டம் என்றால்
> காதல் கடிதத்தையுமா ...
> வாங்க மறுப்பது?
தபால் துறையிலா வேலைப் பார்க்கிறார்கள் சொல்லவே இல்லை ரசிகவ் :)
> உன் நினைவுகளை எனக்கு..
> தந்தி அனுப்பினாய்!
> ஆனால்
> காதலை மட்டும்தானடி
> கடிதத்தில் அனுப்பிவிட்டாய்!
> பாரேன்
> எவ்வளவு
> தாமதமாய் கிடைத்திருக்கின்றது?
தாமதமாய் வந்தாலும் காதல் காதல் தேனே...ச்சீ தானே ரசிகவ்...
> கடிதத்துடன்
> பணம் அனுப்பினால்...
> நாங்கள் பொறுப்பல்ல!
> - தபால்துறை
> ஆனால்
> இதயம் அனுப்பினால்...
> நீதான்டி பொறுப்பு!
> -காதல் துறை
அழகான சிந்தனை காதலைப் போலவே
> உன் நினைவுகளை எல்லாம்
> அழகாய் மடித்து...
> காதல் உறையில்
> வைத்துள்ளேன்!
> சீக்கிரமாய் ஒட்டு
> உன்
> இதய அஞ்சல்தலையை!
>
> சொர்க்கத்திற்கு அனுப்புவோம்.
யாரை உங்கள் இருவரையும்தானே :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தாமதமாய் வந்தாலும் காதல் காதல் தேனே...ச்சீ தானே ரசிகவ்...//



சரிதானேன்னு எழுத வந்து சீன்னு எழுதிட்டீங்களா..?

மாலை என் வேதனை கூட்டுதடி..இப்போ அங்க டைம் என்ன ப்ரியன்.. 4.00 pm

அப்படின்னா நீங்க மயக்கத்தில இருக்கீங்கன்னு அர்த்தம் சரிதானே..



//யாரை உங்கள் இருவரையும்தானே :)//




நன்றி ப்ரியன் மீண்டும் வருக :)

Priya said...

/ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை
/
Hey, Heart beats when you send someone a music card!!!
/சீக்கிரமாய் ஒட்டு
உன்
இதய அஞ்சல்தலையை!
/
Unless its a bluedart/courier, our postal service is just a tortoise....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Unless its a bluedart/courier, our postal service is just a tortoise.... //

காதல் கடிதங்களை மட்டுமாவது சீக்கிரமாய் சேர்த்திடுவதற்காய்
தபால் துறை ஒரு சட்டம் இயற்றினால்..
எத்தனையோ காதல் பிழைத்திருக்கலாம்.
:)
:)

சீனு said...

anaithu kadhal kavithaikalum nanraga ullathu..nandri

தேன் கூடு