Sunday, October 30, 2005

சானியா குறவஞ்சி



செல்வி சானியா மிர்சா பந்தாடும் போது எப்படியிருக்கும் என்ற எனது குறவஞ்சி



அங்கிங் கெனாதபடி எங்கும் சுழன்று
அச்சம் தவிர்த்து - வெற்றி
தங்கும் பொருட்டு தனித்து ஆடி
தன்னிலை மறந்து - சீறிப்
பொங்கும் ஊழிபோல பாய்ந்து ஓடி
பெண்மை அடிமைபேசும் - பழைமைவாதிகள்
மங்கும் பொருட்டு மங்கை நீயவர்
முகத்தில் உமிழ்ந்திடு


அட்டைப் பூச்சியின் இரத்தம் குடித்தலாய்
அழகாய் இதயம் ஒட்டினாய் - சாராயப்
பட்டை அடித்தவன் போதை போல
பருவம் நுழைந்து கொட்டினாய் - தேர்வில்
பிட்டை எடுத்த மாணவன் போல..
புருவம் இரண்டை புரட்டினாய் - கோழி
முட்டை விழியினில் கவனம் சிதைத்து
மூச்சை நிறுத்தி மிரட்டினாய்!


மூக்கோடு மூக்குத்தி ஒட்டி நிற்க
முகத்திலே அழகாட - மரத்
தேக்கோடு சந்தனம் கலந்து செய்த
தேவதையின் காலாட - நேற்று
பூக்காடு வாசமாய் நெஞ்சம் நிறைந்து
புன்னகைத்து போனியா..? - இனி
சாக்காடு வந்தாலும் சிதறி ஓடும்
சின்னவளே சானியா!


குட்டை ஆடை அணிந்த ஒய்யாரி
குமரர் மனம்புடுங்கி - மைதான
வெட்டை வெளிதனில் நடனம் ஆடி
வெகுண்டு எழந்து - மர
மட்டை கொண்டு பந்தை அடித்து
மனசைப் புடுங்கியவளை - சிலர்
நாட்டுக்கட்டை என்று அழைக்கிறார்களே
நாசமாய் போகட்டுமவர்!



- ரசிகவ் ஞானியார்-

11 comments:

Anonymous said...

:-) :-)
no coments :-)

Anonymous said...

//குட்டை ஆடை அணிந்த ஒய்யாரி
குமரர் மனம்புடுங்கி - மைதான
வெட்டை வெளிதனில் நடனம் ஆடி
வெகுண்டு எழந்து - மர
மட்டை கொண்டு பந்தை அடித்து
மனசைப் புடுங்கியவளை - சிலர்
நாட்டுக்கட்டை என்று அழைக்கிறார்களே
நாசமாய் போகட்டுமவர்!//

இவ்வரிகளைப் படித்தப்பின் தோன்றுகிறது: 'குட்டஒப்பாவாடையைத் தவிர்க்கச் சொன்ன அறிவுரை சரிதானெ! என்று!

மிகைஉணர்ச்சி கொண்டு நடிகர்களை 'அரசியலாளர்களாகவும், அரசியலாளர்களை நன்கு நடிப்பவர்களாகவும் நல்ல கலைஞர்களை ஜாதி மத வாதிகளாகவும், அழுக்கு நிரம்பியவர்களை ஆன்மீகத்தூயவர்களாகவும் பார்க்கிற முரண் பார்வை நமது நாட்டில் மிக அதிகம்.
ஆனால் பெண்ணை எப்போதும் 'பெண்ணாக'த்தான் பார்க்கிறோம். அவள் (சானியா போன்ற) தங்கத் தாரகையானாலும் வெள்ளி(த்திரை)தாரகையானாலும்!
Aathavan

சிங். செயகுமார். said...

செந்தமிழிலே செய்யுள்
வந்தமர்ந்த வார்தைகள்
பாந்தமாய் பா நடைகள்
நான் மட்டும் சானியாவாய் இருந்திருந்தால் பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகள்.
தூள் கெளப்பிட்டீங்க சானியார் ரகசிவ்

Anonymous said...

போட்டுத் தாக்கேய்....

மரபு இலக்கணப்படிதானே இயற்றியிருக்கிறீர்கள்?
ஹி ஹி... நமக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நித்தியா said...
:-) :-)
no coments :-) //

:) :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//'பெண்ணாக'த்தான் பார்க்கிறோம். அவள் (சானியா போன்ற) தங்கத் தாரகையானாலும் வெள்ளி(த்திரை)தாரகையானாலும்!
Aathavan //

நிதர்சனமான உண்மை நண்பா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சிங். செயகுமார். said...
செந்தமிழிலே செய்யுள்
வந்தமர்ந்த வார்தைகள்
பாந்தமாய் பா நடைகள்
நான் மட்டும் சானியாவாய் இருந்திருந்தால் பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகள்.
தூள் கெளப்பிட்டீங்க சானியார் ரகசிவ் //

அட என்னங்க பேரையே மாத்திட்டீங்க..

சரி ஒரு 500 பொற்காசாவது கொடுங்களேன் டாலர்ல.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
போட்டுத் தாக்கேய்....

மரபு இலக்கணப்படிதானே இயற்றியிருக்கிறீர்கள்?
ஹி ஹி... நமக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது. //

இது வஞ்சப்புகழ்ச்சி அணிங்கோ

தேன் கூடு