Wednesday, October 19, 2005
திருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம்
திருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம் என்று ஒரு பழமொழி இருக்கிறது என்று சுஜாதாவின் கட்டுரை ஒன்றில் படித்த ஞாபகம்
அது உண்மைதான் தென்காசி ஆச்சாரம் என்பது பற்றி தெரியாது ஆனால் திருநெல்வேலி உபச்சாரம் பற்றி நன்றாகவே தெரியும்..
திருநெல்வேலியில் யார் வந்தாலும் வாங்க உட்காருங்க சாப்பிடுங்க என்று ஒரு அனிச்சை செயலாக சொல்வது வழக்கம். ஆனா காலப்போக்கில் இன்றைய தலைமுறைகள் அதனை மாற்றி வருகிறார்கள் என்பது ஒரு வேதனைக்குரிய உண்மை
திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம். ஊரில் உள்ள ஒரு இளைஞரை ஏதோ ஒரு வழக்குக்காக கைது பண்ண வந்த காவலர்கள் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்றபொழுது அந்த இளைஞரின் தந்தை அந்த கைது செய்ய வந்த காவலர்களை வீட்டினில் பாயைவிரித்து அமர வைத்து பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநிர் வாங்கி வந்து உபசரித்திருக்கிறார்.
அந்த காவலர் சொல்லிய வார்த்தைகளை எனது நண்பர் கூறுகிறார்:
உங்க ஊர்ல இதுதான்யா எனக்;கு ரொம்ப பிடிச்ச விசயம்..யார் வந்தாலும் நல்லா உபசரிக்கிறீங்க..நான் கைது பண்ணத்தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சும் அவர் அந்த அளவிற்கு உபசரிச்சிருக்காருன்னா பாருங்களேன்..
திருநெல்வேலியில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் உள்ள எனது நண்பரின் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது என்னை அவர்கள் உபசரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
அவர்கள் நான் வந்தவுடன் ஒரு கிழிந்த பாயை விரித்தார்கள். அந்த கிழிந்த பகுதி என் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று என் நண்பரின் தந்தை அந்த பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார்..எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது..பின் அவர்களால் தர முடிந்த கறந்த பசும்பால் மற்றும் மோரினை கொடுத்தார்கள்..
பின் மதிய உணவிற்காக எங்களுக்காக கறிவகைகளை சமைத்துக் கொடுத்த அவர்கள் மட்டும் கஞ்சி குடித்தது எனன்னை மிகவும் பாதித்து விட்டது
அதனை சமாளிக்க எனது நண்பர்,..இல்லைடா அவர்களுக்கு கறி சாப்பிட்டு பழக்கமில்லை..எப்போதும் கஞ்சி சாப்பிட்டுதான் பழக்கம்..அப்பத்தான் வயல்ல நல்லா சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.. என்று கூறி சமாதானப்படுத்தினான்
எனக்கு அந்த ஏழைகளின் உபசரிப்பில் பணக்காரத்தனம் இருந்தது. என்னை மிகவும் பாதித்த உபசரிப்பு அது. திருநெல்வேலி- அல்வாவுக்கு மட்டுமல்ல அன்புக்கு பெயர்போன ஊர்தான். ஆகவே திருநெல்வேலி உபச்சாரம் என்று கூறுவது சரிதான்.
ஆனால் தென்காசி ஆச்சாரம்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியல..யாராவது தென்காசிகாரங்க இருந்தா சொல்லுங்களேன்..
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
என்ன ரொம்ப நாளா கவிதையே காணோம்? விருந்துக்கு நெல்லையே போயிட்டீங்களா?
ennakada nailai ila mattum ubacharam illa tenkasilyum ubacharam iruku... theriyuma.. still tenkasila formalities nerya undu... athenale tenkasila acharamnu soluvanke
rasamby
திருநெல்வேலில "அல்வா" கொடுத்தும் உபசரிப்பாங்களாமே? அதையும் எடுத்து உடலாமிலே?
ஹி..ஹி..
Post a Comment