Wednesday, October 26, 2005

இடைவெளிகள்



உறவுகள் உணர்த்தும்
இடைவெளிகள்


காதலிக்கான இடைவெளிகள்
குறைவதில்
காதலுக்கு ஆபத்து


தோழிகளுக்கான இடைவெளிகள்
அதிகப்படுதலில்
நட்புக்கு வாழ்த்து


காதலிக்கான
இடைவெளிகள்
எல்லைக்கோட்டை தாண்டுவதுதான்
காதலின் சேவை

தோழிகளுக்கான
இடைவெளியினில்
இடையில் வேலிகள்
கண்டிப்பாய் தேவை

உலககெங்கிலும்
காதலிக்கான இடைவெளிகள்
எப்பொழுதுமே
சரிசமயமாய் இருக்கின்றது..

ஆனால்
தோழிகளுக்கான இடைவெளிகள்தான்
குறைக்கப்பட்டும் அதிகப்பட்டும்
ஒரு தடுமாற்றமாய் இருக்கின்றது


ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!

ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்


- ரசிகவ் ஞானியார்

1 comment:

Thats Secret said...

தோழியை காதலியாக
இடைவெளி குறைப்பது
எளிது
காதலியை தோழியாக
இடைவெளி அதிகரிப்பது தான் கடினம்
ஹி ஹி

தேன் கூடு