Monday, October 24, 2005

அந்தர் சே லடுக்கி லேக் ஆவ்

நண்பர்கள் அக்பரும் மற்றும் தற்பொழுதர்ன விசிட் விசாவில் வந்த அவரது நண்பர் அஹ்மதும் மற்றும் சில நண்பர்களும் துபாய் டெய்ரா வில் உள்ள ஒரு மரக்கடைக்குச் சென்று அவர்களது அறைக்குத் தேவையான ஒரு சிறு குச்சியை வாங்கி விட்டு வரும் வழியில் தேநீர் கடைக்குள் நுழைகின்றனர்..

நண்பர் அஹ்மதுக்கு இந்தி அவ்வளவாய் தெரியாது. ஆனாலும் தனக்கும் இந்தி தெரியும் என்று தனக்கு தெரிந்த இந்தியை பேசி மற்றவர்களிடம் சால்ஜாப்பு செய்து கொண்டிருப்பார். கிதரே..ஆப் கா நாம் கியா..? என்று தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து தன்னை இந்தி தெரிந்தவராக மற்ற நண்பர்கள் முன்பு காட்டிக்கொள்வார்

அன்றும் அப்படித்தான் அவர்கள் அந்த குச்சியை அந்த தேநீர் கடைக்குள் வைத்துவிட்டு வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க..

தேநீர் குடித்து முடிந்தவுடன் அஹ்மது அந்த தேநீர் கடை சிப்பந்தியிடம்
உள்ளே இருக்கும் அந்த குச்சியை எடுத்து வாருங்கள் என்று இந்தியில் கூறுவதற்காக,


அந்தர் சே லடுக்கி லேக் ஆவ் என்று கூற அந்த சிப்பந்திக்கு வந்ததே கோவம்..

அவரும் இந்தியில் திட்ட ஆரம்பிக்க..பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிப்பந்தியிடம் அந்த நண்பருக்கு இந்தி அவ்வளவாய் வராது என்று கூறி சமாதானப்படுத்தினார்கள்..

அந்த சிப்பந்திக்கு ஏன் கோவம் வந்தது என்றால்..

இந்தியில் லக்கடி என்றால் குச்சி
லடுக்கி என்றால் பெண்..

அந்தர் சே லக்கடி லேக் ஆவ்
- உள்ளேயிருக்கும் அந்த குச்சியை கொண்டு வா


அந்தர் சே லடுக்கி லேக் ஆவ்
- உள்ளேயிருக்கும் அந்த பெண்ணை கொண்டு வா



-ரசிகவ் ஞானியார்

3 comments:

ILA (a) இளா said...

இதெல்லாம் நம்ம முன்னோர்கள் செய்த பாவம், தமிழ் மட்டுமே படின்னு இன்னும்தான் சொல்றாங்க.

Anonymous said...

thaay moziyoda vaeru 4 moziyum therinthu irunthaal nallathu!

G.Ragavan said...

இங்கு பிரச்சனை இந்தி தெரியாமை அல்ல. இந்தி தெரிவது போல காட்டிக் கொள்ள முயன்றதால்தான்.

ஆனாலும் நாம் பிழைக்கப் போகும் இடங்களுக்குத் தக்க மொழிகளைக் கற்றுக் கொள்வது நன்றே. அது எந்த மொழியாக இருந்தாலும். ஆனால் தாய்மொழியறிவு மிக்கத் தேவை.

தேன் கூடு